தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
மீகா
1. ஐயோ! நான் கோடைக்காலத்தில் அறுவடை செய்பவன் போலானேன், திராட்சையறுப்புக்குப் பின் பழம் பறிக்கப் போகிறவன் போலானேன். தின்பதற்குத் திராட்சைக் குலை ஒன்று கூட இல்லை, என் உள்ளம் விரும்பும் முதலில் பழுத்த அத்திப் பழமும் இல்லை.
2. நாட்டில் இறைப்பற்றுள்ளவன் அற்றுப் போனான், மனிதர்களில் நேர்மையுள்ளவன் எவனுமில்லை; அவர்கள் அனைவரும் இரத்தப் பழிக்குக் காத்திருக்கின்றனர், ஒவ்வொருவனும் தன் சகோதரனுக்கு வலை கட்டி வேட்டையாடுகிறான்.
3. அவர்கள் கைகள் தீமை செய்வதில் திறமை வாய்ந்தவை; தலைவனும் நீதிபதியும் கையூட்டுக் கேட்கின்றனர், பெரிய மனிதன் தன் உள்ளத்தின் தீய எண்ணத்தைச் சொல்லுகிறான்; அவ்வாறு அவர்கள் நாட்டைக் கெடுத்து விட்டார்கள்.
4. அவர்களுள் தலைசிறந்தவன் முட்செடி போன்றவன், அவர்களுக்குள் மிக்க நேர்மையானவன் முள் வேலி போன்றவன்; சாமக்காவலன் அறிவித்த அவர்களுடைய தண்டனையின் நாள் வந்து விட்டது, இப்பொழுதும் அவர்களுக்குரிய நிந்தை அருகில் உள்ளது.
5. உன்னோடு இருப்பவர்களை நம்ப வேண்டா, நண்பனிடத்தில் நம்பிக்கை வைக்காதே; உன் மார்பில் சாய்ந்திருக்கிற மனைவியிடத்தில் கூட உன் வாய்க்குக் காவல் வை.
6. ஏனெனில் மகன் தந்தையை அவமதிக்கிறான், மகள் தன் தாய்க்கெதிராக எழும்புகிறாள், மருமகள் தன் மாமியாரை எதிர்க்கிறாள், தன் சொந்த வீட்டாரே தனக்குப் பகைவர்.
7. நானோ ஆண்டவரையே நோக்கியிருப்பேன், எனக்கு மீட்பளிக்கும் கடவுளுக்குக் காத்திருப்பேன், என் கடவுள் எனக்குச் செவிசாய்ப்பார்.
8. மாற்றானே, என்னைக் குறித்து அக்களிக்காதே, நான் வீழ்ச்சியுற்றாலும் எழுச்சி பெறுவேன்; நான் இருளில் உட்கார்ந்திருக்கும் போது, ஆண்டவர் எனக்கு ஒளியாயிருப்பார்.
9. நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவஞ்செய்ததால், அவர் எனக்காக வழக்காடி, எனக்கு நீதி வழங்கும் வரை ஆண்டவருடைய கோபத்தை நான் தாங்கிக் கொள்வேன். அவர் என்னை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவார், அவர் அளிக்கும் மீட்பை நான் காண்பேன்.
10. அப்போது என் மேல் பகைமை கொண்டவள் அதைக் காண்பாள், "உன் கடவுளாகிய ஆண்டவர் எங்கே?" என்று என்னிடம் சொன்ன அவள் வெட்கிப் போவாள், என் கண்கள் அவளைக் கண்டு மகிழும்; இனி, தெருக்களில் இருக்கும் சேற்றைப் போல மிதிபடுவாள்.
11. உன் மதில்களைத் திரும்பக் கட்டும் நாள் வருகிறது, அந்நாளில் உன் நாட்டில் எல்லை இன்னும் பரவியிருக்கும்.
12. அந்நாளில், அசீரியாவிலிருந்து எகிப்து வரையில், தீர் நாடு முதல் பேராறு வரையில், ஒரு கடல் முதல் மறு கடல் வரை, ஒரு மலை முதல் எதிர் மலை வரை உள்ள மக்கள் யாவரும் உன்னிடம் வருவார்கள்.
13. ஆனால், மண்ணுலகம் அதன் குடிகளின் செயல்களை முன்னிட்டுப் பாழாகும்.
14. உமது உரிமைச் சொத்தாய் இருக்கும் மந்தையாகிய உம் மக்களை உமது கோலினால் மேய்த்தருளும்; அவர்கள் தோட்டம் நிறைந்த நாட்டின் நடுவில் காட்டில் தனித்து வாழ்கிறார்களே; முற்காலத்தில் செய்தது போலவே அவர்கள் பாசானிலும் கலகாத்திலும் மேயட்டும்.
15. எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய நாட்களில் காட்டியவாறு வியத்தகு செயல்களை எங்களுக்குக் காட்டியருளும்.
16. புறவினத்தார் பார்த்துத் தங்களின் ஆற்றல் அனைத்தையும் குறித்து நாணுவார்கள்; அவர்கள் தங்கள் வாயைக் கையால் பொத்திக்கொள்வர், அவர்களுடைய காதுகள் செவிடாய்ப் போகும்.
17. பாம்பைப் போலவும், நிலத்தில் ஊர்வனவற்றைப் போலவும் அவர்கள் மண்ணை நக்குவார்கள்; தங்கள் அரண்களை விட்டு நடுங்கிக் கொண்டு வெளிப்படுவர், நம் கடவுளாகிய ஆண்டவர் முன் திகிலுறுவர், உமக்கு அஞ்சுவார்கள்.
18. உமது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரின் பாவத்தைப் பொறுத்து, அக்கிரமத்தை மன்னிக்கிற உமக்கு நிகரான கடவுள் உண்டோ? அவர் தம் கோபத்தை என்றென்றுமாய்ப் பாராட்டமாட்டார்; ஏனெனில் நிலையான அன்பில் அவர் விருப்பமுள்ளவர்.
19. திரும்பவும் அவர் நம்மீது இரக்கம் கொள்வார், நம் அக்கிரமங்களைத் தம் காலடியில் மிதித்துப் போடுவார்; நம் பாவங்களையெல்லாம் ஆழ்கடலில் எறிந்து விடுவார்.
20. பண்டை நாளில் நீர் எங்கள் தந்தையர்களுக்கு ஆணையிட்டுச் சொல்லியிருப்பது போல, யாக்கோபுக்குப் பிரமாணிக்கத்தையும் ஆபிரகாமுக்கு நிலையான அன்பையும் காட்டியருளும்!

பதிவுகள்

மொத்தம் 7 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 7 / 7
1 2 3 4 5 6 7
1 ஐயோ! நான் கோடைக்காலத்தில் அறுவடை செய்பவன் போலானேன், திராட்சையறுப்புக்குப் பின் பழம் பறிக்கப் போகிறவன் போலானேன். தின்பதற்குத் திராட்சைக் குலை ஒன்று கூட இல்லை, என் உள்ளம் விரும்பும் முதலில் பழுத்த அத்திப் பழமும் இல்லை. 2 நாட்டில் இறைப்பற்றுள்ளவன் அற்றுப் போனான், மனிதர்களில் நேர்மையுள்ளவன் எவனுமில்லை; அவர்கள் அனைவரும் இரத்தப் பழிக்குக் காத்திருக்கின்றனர், ஒவ்வொருவனும் தன் சகோதரனுக்கு வலை கட்டி வேட்டையாடுகிறான். 3 அவர்கள் கைகள் தீமை செய்வதில் திறமை வாய்ந்தவை; தலைவனும் நீதிபதியும் கையூட்டுக் கேட்கின்றனர், பெரிய மனிதன் தன் உள்ளத்தின் தீய எண்ணத்தைச் சொல்லுகிறான்; அவ்வாறு அவர்கள் நாட்டைக் கெடுத்து விட்டார்கள். 4 அவர்களுள் தலைசிறந்தவன் முட்செடி போன்றவன், அவர்களுக்குள் மிக்க நேர்மையானவன் முள் வேலி போன்றவன்; சாமக்காவலன் அறிவித்த அவர்களுடைய தண்டனையின் நாள் வந்து விட்டது, இப்பொழுதும் அவர்களுக்குரிய நிந்தை அருகில் உள்ளது. 5 உன்னோடு இருப்பவர்களை நம்ப வேண்டா, நண்பனிடத்தில் நம்பிக்கை வைக்காதே; உன் மார்பில் சாய்ந்திருக்கிற மனைவியிடத்தில் கூட உன் வாய்க்குக் காவல் வை. 6 ஏனெனில் மகன் தந்தையை அவமதிக்கிறான், மகள் தன் தாய்க்கெதிராக எழும்புகிறாள், மருமகள் தன் மாமியாரை எதிர்க்கிறாள், தன் சொந்த வீட்டாரே தனக்குப் பகைவர். 7 நானோ ஆண்டவரையே நோக்கியிருப்பேன், எனக்கு மீட்பளிக்கும் கடவுளுக்குக் காத்திருப்பேன், என் கடவுள் எனக்குச் செவிசாய்ப்பார். 8 மாற்றானே, என்னைக் குறித்து அக்களிக்காதே, நான் வீழ்ச்சியுற்றாலும் எழுச்சி பெறுவேன்; நான் இருளில் உட்கார்ந்திருக்கும் போது, ஆண்டவர் எனக்கு ஒளியாயிருப்பார். 9 நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவஞ்செய்ததால், அவர் எனக்காக வழக்காடி, எனக்கு நீதி வழங்கும் வரை ஆண்டவருடைய கோபத்தை நான் தாங்கிக் கொள்வேன். அவர் என்னை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவார், அவர் அளிக்கும் மீட்பை நான் காண்பேன். 10 அப்போது என் மேல் பகைமை கொண்டவள் அதைக் காண்பாள், "உன் கடவுளாகிய ஆண்டவர் எங்கே?" என்று என்னிடம் சொன்ன அவள் வெட்கிப் போவாள், என் கண்கள் அவளைக் கண்டு மகிழும்; இனி, தெருக்களில் இருக்கும் சேற்றைப் போல மிதிபடுவாள். 11 உன் மதில்களைத் திரும்பக் கட்டும் நாள் வருகிறது, அந்நாளில் உன் நாட்டில் எல்லை இன்னும் பரவியிருக்கும். 12 அந்நாளில், அசீரியாவிலிருந்து எகிப்து வரையில், தீர் நாடு முதல் பேராறு வரையில், ஒரு கடல் முதல் மறு கடல் வரை, ஒரு மலை முதல் எதிர் மலை வரை உள்ள மக்கள் யாவரும் உன்னிடம் வருவார்கள். 13 ஆனால், மண்ணுலகம் அதன் குடிகளின் செயல்களை முன்னிட்டுப் பாழாகும். 14 உமது உரிமைச் சொத்தாய் இருக்கும் மந்தையாகிய உம் மக்களை உமது கோலினால் மேய்த்தருளும்; அவர்கள் தோட்டம் நிறைந்த நாட்டின் நடுவில் காட்டில் தனித்து வாழ்கிறார்களே; முற்காலத்தில் செய்தது போலவே அவர்கள் பாசானிலும் கலகாத்திலும் மேயட்டும். 15 எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய நாட்களில் காட்டியவாறு வியத்தகு செயல்களை எங்களுக்குக் காட்டியருளும். 16 புறவினத்தார் பார்த்துத் தங்களின் ஆற்றல் அனைத்தையும் குறித்து நாணுவார்கள்; அவர்கள் தங்கள் வாயைக் கையால் பொத்திக்கொள்வர், அவர்களுடைய காதுகள் செவிடாய்ப் போகும். 17 பாம்பைப் போலவும், நிலத்தில் ஊர்வனவற்றைப் போலவும் அவர்கள் மண்ணை நக்குவார்கள்; தங்கள் அரண்களை விட்டு நடுங்கிக் கொண்டு வெளிப்படுவர், நம் கடவுளாகிய ஆண்டவர் முன் திகிலுறுவர், உமக்கு அஞ்சுவார்கள். 18 உமது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரின் பாவத்தைப் பொறுத்து, அக்கிரமத்தை மன்னிக்கிற உமக்கு நிகரான கடவுள் உண்டோ? அவர் தம் கோபத்தை என்றென்றுமாய்ப் பாராட்டமாட்டார்; ஏனெனில் நிலையான அன்பில் அவர் விருப்பமுள்ளவர். 19 திரும்பவும் அவர் நம்மீது இரக்கம் கொள்வார், நம் அக்கிரமங்களைத் தம் காலடியில் மிதித்துப் போடுவார்; நம் பாவங்களையெல்லாம் ஆழ்கடலில் எறிந்து விடுவார். 20 பண்டை நாளில் நீர் எங்கள் தந்தையர்களுக்கு ஆணையிட்டுச் சொல்லியிருப்பது போல, யாக்கோபுக்குப் பிரமாணிக்கத்தையும் ஆபிரகாமுக்கு நிலையான அன்பையும் காட்டியருளும்!
மொத்தம் 7 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 7 / 7
1 2 3 4 5 6 7
×

Alert

×

Tamil Letters Keypad References