தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
மீகா
1. ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்: நீ எழுந்து மலைகளின் முன்னிலையில் உன் வழக்கைச் சொல், குன்றுகள் உன் சொற்களைக் கேட்கட்டும்.
2. மலைகளே, பூமியின் நிலையான அடிப்படைகளே, ஆண்டவருடைய வழக்கைக் கேளுங்கள்; ஏனெனில் தம் மக்கள் மேல் ஆண்டவர் வழக்குத் தொடுக்கிறார், இஸ்ராயேல் மீது குற்றம் சாட்டுகிறார்:
3. எம் மக்களே, உங்களுக்கு நாம் என்ன செய்தோம்? எதில் நாம் உங்களுக்குத் துயர் தந்தோம்? சொல்லுங்கள்!
4. எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டிவந்தோம், அடிமைத்தன வீட்டிலிருந்து உங்களை மீட்டுவந்தோம்; உங்களுக்கு முன்பாக மோயீசனையும் ஆரோனையும் மீரியாளையும் அனுப்பினோமே.
5. எம் மக்களே, மோவாப் அரசன் பாலாக் செய்த திட்டத்தையும், பேயோரின் மகன் பாலாம் அவனுக்குச் சொன்ன பதிலையும், சேத்தீமுக்கும் கல்கலாவுக்கும் இடையில் நடந்ததையும் எண்ணிப்பார்; அப்போது ஆண்டவருடைய மீட்புச் செயல்களை உணர்வாய்."
6. எதைக் கொணர்ந்து நான் ஆண்டவரின் முன் வந்து, உன்னதரான கடவுள் முன் பணிந்து நிற்பேன்? தகனப் பலிகளோடும், ஒரு வயது கன்றுகளோடும் அவர் முன்னிலையில் வந்து நிற்பேனோ?
7. ஆயிரக்கணக்கான ஆட்டுக்கடாக்கள் மேலும், எண்ணெய் பெருக்கெடுத்தோடும் பத்தாயிரம் ஆறுகள் மேலும் ஆண்டவர் விருப்பங் கொள்வாரோ? என் அக்கிரமத்தைப் போக்க என் தலைப் பேறான பிள்ளையையும், என் ஆன்மாவின் பாவத்துக்காக என் வயிற்றுக்கனியான குழந்தையையும் கொடுப்பேனோ?"
8. மனிதா, நல்லது எது என உனக்கு அவர் காட்டியிருக்கிறாரே! நீதியோடு நடத்தல், அன்பு கூர்தல், உன் கடவுள் முன்னிலையில் தாழ்ச்சியோடிருத்தல், இவையன்றி வேறெதை ஆண்டவர் உன்னிடம் கேட்கிறார்?
9. ஆண்டவரின் குரல் நகரத்தை நோக்கிக் கூவுகிறது: (உமது திருப்பெயருக்கு அஞ்சி நடத்தலே உண்மையான ஞானம்) "இஸ்ராயேல் இனமே, நகரத்தின் சபையே நாம் சொல்வதைக் கேள்:
10. கொடியவர்களின் வீட்டில் குவிந்திருக்கும் அக்கிரமங்களையும், சபிக்கப்பட்ட அந்தக் கள்ள மரக்காலையும் நாம் மறப்போமோ?
11. கள்ளத் தராசையும், கள்ள எடைக்கற்களுள்ள பையையும் வைத்திருப்பவனை நேர்மையானவன் என விட்டு விடுவோமோ?
12. நகரத்தின் பணக்காரர்கள் கொடுமை நிறைந்தவர்கள், அங்கே வாழ்கிறவர்கள் பொய் பேசுகிறார்கள், அவர்கள் வாயிலுள்ள நாக்கு வஞ்சகம் நிறைந்தது.
13. ஆதலால் உன் பாவங்களுக்காக உன்னை அடித்து நொறுக்கத் தொடங்கினோம்.
14. நீ சாப்பிட்டாலும் உனக்குப் பசியடங்காது, பசி உன் வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருக்கும்; நீ எதைப் பத்திரப்படுத்தினாலும், இழந்து விடுவாய்; இழக்காமல் இருப்பதையும் நாம் வாளுக்கு இரையாக்குவோம்.
15. நீ விதைப்பாய், ஆனால் அறுவடை செய்யமாட்டாய்; ஒலீவ கொட்டைகளை ஆட்டுவாய், ஆனால் எண்ணெய் தடவிப் பார்க்க மாட்டாய்; திராட்சைப் பழம் பிழிவாய், ஆனால் இரசம் குடித்துப் பார்க்க மாட்டாய்.
16. அம்ரியின் கட்டளைகளைக் கடைப்பிடித்தாய், ஆக்காபு வீட்டார் செயல்களனைத்தையும் பின்பற்றினாய்; அவர்களுடைய போக்கின்படி நீயும் நடந்தாய்; ஆதலின் உன்னை அழிவுக்குக் கையளிப்போம், உன்னில் வாழ்கிறவர்கள் ஏளனத்துக்கு ஆளாவார்கள், மக்களினங்களின் நிந்தையைத் தாங்குவீர்கள்.
மொத்தம் 7 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 7
1 2 3 4 5 6 7
1 ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்: நீ எழுந்து மலைகளின் முன்னிலையில் உன் வழக்கைச் சொல், குன்றுகள் உன் சொற்களைக் கேட்கட்டும். 2 மலைகளே, பூமியின் நிலையான அடிப்படைகளே, ஆண்டவருடைய வழக்கைக் கேளுங்கள்; ஏனெனில் தம் மக்கள் மேல் ஆண்டவர் வழக்குத் தொடுக்கிறார், இஸ்ராயேல் மீது குற்றம் சாட்டுகிறார்: 3 எம் மக்களே, உங்களுக்கு நாம் என்ன செய்தோம்? எதில் நாம் உங்களுக்குத் துயர் தந்தோம்? சொல்லுங்கள்! 4 எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டிவந்தோம், அடிமைத்தன வீட்டிலிருந்து உங்களை மீட்டுவந்தோம்; உங்களுக்கு முன்பாக மோயீசனையும் ஆரோனையும் மீரியாளையும் அனுப்பினோமே. 5 எம் மக்களே, மோவாப் அரசன் பாலாக் செய்த திட்டத்தையும், பேயோரின் மகன் பாலாம் அவனுக்குச் சொன்ன பதிலையும், சேத்தீமுக்கும் கல்கலாவுக்கும் இடையில் நடந்ததையும் எண்ணிப்பார்; அப்போது ஆண்டவருடைய மீட்புச் செயல்களை உணர்வாய்." 6 எதைக் கொணர்ந்து நான் ஆண்டவரின் முன் வந்து, உன்னதரான கடவுள் முன் பணிந்து நிற்பேன்? தகனப் பலிகளோடும், ஒரு வயது கன்றுகளோடும் அவர் முன்னிலையில் வந்து நிற்பேனோ? 7 ஆயிரக்கணக்கான ஆட்டுக்கடாக்கள் மேலும், எண்ணெய் பெருக்கெடுத்தோடும் பத்தாயிரம் ஆறுகள் மேலும் ஆண்டவர் விருப்பங் கொள்வாரோ? என் அக்கிரமத்தைப் போக்க என் தலைப் பேறான பிள்ளையையும், என் ஆன்மாவின் பாவத்துக்காக என் வயிற்றுக்கனியான குழந்தையையும் கொடுப்பேனோ?" 8 மனிதா, நல்லது எது என உனக்கு அவர் காட்டியிருக்கிறாரே! நீதியோடு நடத்தல், அன்பு கூர்தல், உன் கடவுள் முன்னிலையில் தாழ்ச்சியோடிருத்தல், இவையன்றி வேறெதை ஆண்டவர் உன்னிடம் கேட்கிறார்? 9 ஆண்டவரின் குரல் நகரத்தை நோக்கிக் கூவுகிறது: (உமது திருப்பெயருக்கு அஞ்சி நடத்தலே உண்மையான ஞானம்) "இஸ்ராயேல் இனமே, நகரத்தின் சபையே நாம் சொல்வதைக் கேள்: 10 கொடியவர்களின் வீட்டில் குவிந்திருக்கும் அக்கிரமங்களையும், சபிக்கப்பட்ட அந்தக் கள்ள மரக்காலையும் நாம் மறப்போமோ? 11 கள்ளத் தராசையும், கள்ள எடைக்கற்களுள்ள பையையும் வைத்திருப்பவனை நேர்மையானவன் என விட்டு விடுவோமோ? 12 நகரத்தின் பணக்காரர்கள் கொடுமை நிறைந்தவர்கள், அங்கே வாழ்கிறவர்கள் பொய் பேசுகிறார்கள், அவர்கள் வாயிலுள்ள நாக்கு வஞ்சகம் நிறைந்தது. 13 ஆதலால் உன் பாவங்களுக்காக உன்னை அடித்து நொறுக்கத் தொடங்கினோம். 14 நீ சாப்பிட்டாலும் உனக்குப் பசியடங்காது, பசி உன் வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருக்கும்; நீ எதைப் பத்திரப்படுத்தினாலும், இழந்து விடுவாய்; இழக்காமல் இருப்பதையும் நாம் வாளுக்கு இரையாக்குவோம். 15 நீ விதைப்பாய், ஆனால் அறுவடை செய்யமாட்டாய்; ஒலீவ கொட்டைகளை ஆட்டுவாய், ஆனால் எண்ணெய் தடவிப் பார்க்க மாட்டாய்; திராட்சைப் பழம் பிழிவாய், ஆனால் இரசம் குடித்துப் பார்க்க மாட்டாய். 16 அம்ரியின் கட்டளைகளைக் கடைப்பிடித்தாய், ஆக்காபு வீட்டார் செயல்களனைத்தையும் பின்பற்றினாய்; அவர்களுடைய போக்கின்படி நீயும் நடந்தாய்; ஆதலின் உன்னை அழிவுக்குக் கையளிப்போம், உன்னில் வாழ்கிறவர்கள் ஏளனத்துக்கு ஆளாவார்கள், மக்களினங்களின் நிந்தையைத் தாங்குவீர்கள்.
மொத்தம் 7 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 7
1 2 3 4 5 6 7
×

Alert

×

Tamil Letters Keypad References