தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
மத்தேயு
1. அவர் மலையினின்று இறங்கியபின் பெருங்கூட்டம் அவரைப் பின்தொடர்ந்தது.
2. இதோ! தொழுநோயாளி ஒருவன் வந்து அவரைப் பணிந்து, "ஆண்டவரே, நீர் விரும்பினால், என்னைக் குணமாக்க உம்மால் கூடும்" என்றான்.
3. இயேசு கையை நீட்டி, "விரும்புகிறேன், குணமாகு" என்று சொல்லி அவனைத் தொட்டார். உடனே தொழுநோய் குணமாயிற்று.
4. இயேசு அவனை நோக்கி, "பார்! ஒருவருக்கும் சொல்லாதே. ஆனால், போய் உன்னைக் குருவிடம் காட்டி, மோயீசன் கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து. அது அவர்களுக்கு அத்தாட்சியாகும்" என்றார்.
5. அவர் கப்பர்நகூம் ஊருக்குள் போனபோது, நூற்றுவர்தலைவன் ஒருவன் அவரிடம் வந்து அவரை வேண்டி,
6. "ஆண்டவரே, என் ஊழியன் திமிர்வாதத்தால் வீட்டில் கிடந்து மிகுந்த வேதனைப்படுகிறான்" என்றான்.
7. இயேசு அவனை நோக்கி, "நான் வந்து அவனைக் குணமாக்குவேன்" என்றார்.
8. நூற்றுவர்தலைவன் மறுமொழியாகக் கூறியதாவது: "ஆண்டவரே, நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன். ஆனால், ஒரு வார்த்தை சொன்னால் போதும்; என் ஊழியன் குணமடைவான்.
9. ஏனெனில், நான் அதிகாரத்திற்கு உட்பட்டவனாயினும், எனக்கு அடியிலும் படைவீரர் உள்ளனர். ஒருவனை நோக்கி, ' போ ' என்றால் போகிறான்; வேறொருவனை நோக்கி, ' வா ' என்றால் வருகிறான். என் ஊழியனைப் பார்த்து, 'இதைச் செய்' என்றால் செய்கிறான்."
10. இதைக் கேட்டு இயேசு வியந்து தம்மைப் பின்தொடர்ந்தவர்களை நோக்கி, "இஸ்ராயேலில் யாரிடமும் இத்துணை விசுவாசத்தை நான் கண்டதில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
11. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து விண்ணரசில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுடன் பந்தி அமர்வார்கள்.
12. அரசின் மக்களோ வெளியிருளில் தள்ளப்படுவர். அங்கே புலம்பலும் பற்கடிப்பும் இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார்.
13. பின்னர் இயேசு நூற்றுவர்தலைவனை நோக்கி, "நீ போகலாம், விசுவசித்தபடியே உனக்கு ஆகட்டும்" என்று சொன்னார். அந்நேரமே ஊழியன் குணமடைந்தான்.
14. இயேசு இராயப்பரின் வீட்டுக்கு வந்து, அவருடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடப்பதைக் கண்டார்.
15. அவர் அவளுடைய கையைத் தொடவே, காய்ச்சல் அவளை விட்டு நீங்கியது. அவள் எழுந்து அவருக்குப் பணிவிடை புரிந்தாள்.
16. மாலையானதும் பேய்பிடித்த பலரை அவரிடம் கொண்டுவந்தனர். அவர் பேய்களை ஒரு வார்த்தையால் ஓட்டினார்; நோயுற்ற அனைவரையும் குணமாக்கினார். இவ்வாறு,
17. ' அவர் நம் பிணிகளை ஏற்றுக்கொண்டார்; நம் நோய்களைச் சுமந்துகொண்டார் ' என்று இசையாஸ் இறைவாக்கினர் கூறியுள்ளது நிறைவேற வேண்டியிருந்தது.
18. பெருங்கூட்டம் தம்மைச் சூழ்ந்திருப்பதை இயேசு கண்டு அக்கரைக்குச் செல்லக் கட்டளையிட்டார்.
19. மறைநூல் அறிஞன் ஒருவன் வந்து, "போதகரே, நீர் எங்குச் சென்றாலும் நானும் உம்மைப் பின்செல்லுவேன்" என்று அவரிடம் சொன்னான்.
20. இயேசு அவனை நோக்கி, "நரிகளுக்கு வளைகள் உண்டு; வானத்துப் பறவைகளுக்குக் கூடுகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை" என்றார்.
21. அவருடைய சீடர்களுள் இன்னொருவன் அவரை நோக்கி, "ஆண்டவரே, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர விடை கொடும்" என்றான்.
22. இயேசு அவனைப் பார்த்து, "என்னைப் பின்செல். இறந்தோர் தங்கள் இறந்தோரை அடக்கம் செய்துகொள்ளட்டும்" என்றார்.
23. அவர் படகில் ஏறவே, அவருடைய சீடர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர்.
24. இதோ! கடலில் மாபெரும் கொந்தளிப்பு ஏற்பட, படகுக்குமேல் அலைகள் எழுந்தன. அவரோ தூங்கிக்கொண்டிருந்தார்.
25. சீடர் அவரிடம் வந்து அவரை எழுப்பி, "ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றும்; மடிந்துபோகிறோம்" என்றனர்.
26. இயேசு அவர்களை நோக்கி, "குறைவான விசுவாசம் உள்ளவர்களே, ஏன் இவ்வளவு பயம் ?" என்று கூறி, எழுந்து காற்றையும் கடலையும் கடியவே, பேரமைதி உண்டாயிற்று.
27. அங்கிருந்தவர்கள் வியந்து, "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே, இவர் யார் ?" என்றனர்.
28. அவர் அக்கரை சேர்ந்து, கதரேனர் நாட்டிற்கு வந்தபோது, பேய்பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வெளியேறி, அவருக்கு எதிரே வந்தனர். அவர்கள் எவ்வளவு கொடியவர்கள் என்றால், அவ்வழியே யாரும் போகமுடியாது.
29. இதோ! அவர்கள், "கடவுளின் மகனே, எங்கள் காரியத்தில் ஏன் தலையிடுகிறீர்? குறித்த காலம் வருமுன்னே எங்களை வதைக்க இங்கே வந்தீரோ?" என்று கத்தினர்.
30. அவர்களுக்குச் சற்றுத் தொலைவில் பன்றிகள் பல கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன.
31. அப்போது பேய்கள் அவரை நோக்கி, "நீர் எங்களை ஓட்டுவதாயிருந்தால் அப்பன்றிக் கூட்டத்திற்குள் அனுப்பும்" என்று வேண்டின.
32. அவர், "போங்கள்" என்றார். அவை வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. உடனே, கூட்டம் முழுவதும் மேட்டிலிருந்து கடலில் பாய்ந்து நீரில் மடிந்தது.
33. பன்றிகளை மேய்த்தவர்களோ ஓடிப்போய் நகருக்குச் சென்று எல்லாவற்றையும், பேய்பிடித்தவர்களைப்பற்றிய செய்தியையும் அறிவித்தார்கள்.
34. இதோ! நகரினர் அனைவரும் இயேசுவை எதிர்கொண்டு போய் அவரைக் கண்டு, தம் நாட்டை விட்டு அகலுமாறு அவரை வேண்டினர்.
மொத்தம் 28 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 8 / 28
1 அவர் மலையினின்று இறங்கியபின் பெருங்கூட்டம் அவரைப் பின்தொடர்ந்தது. 2 இதோ! தொழுநோயாளி ஒருவன் வந்து அவரைப் பணிந்து, "ஆண்டவரே, நீர் விரும்பினால், என்னைக் குணமாக்க உம்மால் கூடும்" என்றான். 3 இயேசு கையை நீட்டி, "விரும்புகிறேன், குணமாகு" என்று சொல்லி அவனைத் தொட்டார். உடனே தொழுநோய் குணமாயிற்று. 4 இயேசு அவனை நோக்கி, "பார்! ஒருவருக்கும் சொல்லாதே. ஆனால், போய் உன்னைக் குருவிடம் காட்டி, மோயீசன் கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து. அது அவர்களுக்கு அத்தாட்சியாகும்" என்றார். 5 அவர் கப்பர்நகூம் ஊருக்குள் போனபோது, நூற்றுவர்தலைவன் ஒருவன் அவரிடம் வந்து அவரை வேண்டி, 6 "ஆண்டவரே, என் ஊழியன் திமிர்வாதத்தால் வீட்டில் கிடந்து மிகுந்த வேதனைப்படுகிறான்" என்றான். 7 இயேசு அவனை நோக்கி, "நான் வந்து அவனைக் குணமாக்குவேன்" என்றார். 8 நூற்றுவர்தலைவன் மறுமொழியாகக் கூறியதாவது: "ஆண்டவரே, நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன். ஆனால், ஒரு வார்த்தை சொன்னால் போதும்; என் ஊழியன் குணமடைவான். 9 ஏனெனில், நான் அதிகாரத்திற்கு உட்பட்டவனாயினும், எனக்கு அடியிலும் படைவீரர் உள்ளனர். ஒருவனை நோக்கி, ' போ ' என்றால் போகிறான்; வேறொருவனை நோக்கி, ' வா ' என்றால் வருகிறான். என் ஊழியனைப் பார்த்து, 'இதைச் செய்' என்றால் செய்கிறான்." 10 இதைக் கேட்டு இயேசு வியந்து தம்மைப் பின்தொடர்ந்தவர்களை நோக்கி, "இஸ்ராயேலில் யாரிடமும் இத்துணை விசுவாசத்தை நான் கண்டதில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். 11 கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து விண்ணரசில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுடன் பந்தி அமர்வார்கள். 12 அரசின் மக்களோ வெளியிருளில் தள்ளப்படுவர். அங்கே புலம்பலும் பற்கடிப்பும் இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார். 13 பின்னர் இயேசு நூற்றுவர்தலைவனை நோக்கி, "நீ போகலாம், விசுவசித்தபடியே உனக்கு ஆகட்டும்" என்று சொன்னார். அந்நேரமே ஊழியன் குணமடைந்தான். 14 இயேசு இராயப்பரின் வீட்டுக்கு வந்து, அவருடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடப்பதைக் கண்டார். 15 அவர் அவளுடைய கையைத் தொடவே, காய்ச்சல் அவளை விட்டு நீங்கியது. அவள் எழுந்து அவருக்குப் பணிவிடை புரிந்தாள். 16 மாலையானதும் பேய்பிடித்த பலரை அவரிடம் கொண்டுவந்தனர். அவர் பேய்களை ஒரு வார்த்தையால் ஓட்டினார்; நோயுற்ற அனைவரையும் குணமாக்கினார். இவ்வாறு, 17 ' அவர் நம் பிணிகளை ஏற்றுக்கொண்டார்; நம் நோய்களைச் சுமந்துகொண்டார் ' என்று இசையாஸ் இறைவாக்கினர் கூறியுள்ளது நிறைவேற வேண்டியிருந்தது. 18 பெருங்கூட்டம் தம்மைச் சூழ்ந்திருப்பதை இயேசு கண்டு அக்கரைக்குச் செல்லக் கட்டளையிட்டார். 19 மறைநூல் அறிஞன் ஒருவன் வந்து, "போதகரே, நீர் எங்குச் சென்றாலும் நானும் உம்மைப் பின்செல்லுவேன்" என்று அவரிடம் சொன்னான். 20 இயேசு அவனை நோக்கி, "நரிகளுக்கு வளைகள் உண்டு; வானத்துப் பறவைகளுக்குக் கூடுகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை" என்றார். 21 அவருடைய சீடர்களுள் இன்னொருவன் அவரை நோக்கி, "ஆண்டவரே, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர விடை கொடும்" என்றான். 22 இயேசு அவனைப் பார்த்து, "என்னைப் பின்செல். இறந்தோர் தங்கள் இறந்தோரை அடக்கம் செய்துகொள்ளட்டும்" என்றார். 23 அவர் படகில் ஏறவே, அவருடைய சீடர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். 24 இதோ! கடலில் மாபெரும் கொந்தளிப்பு ஏற்பட, படகுக்குமேல் அலைகள் எழுந்தன. அவரோ தூங்கிக்கொண்டிருந்தார். 25 சீடர் அவரிடம் வந்து அவரை எழுப்பி, "ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றும்; மடிந்துபோகிறோம்" என்றனர். 26 இயேசு அவர்களை நோக்கி, "குறைவான விசுவாசம் உள்ளவர்களே, ஏன் இவ்வளவு பயம் ?" என்று கூறி, எழுந்து காற்றையும் கடலையும் கடியவே, பேரமைதி உண்டாயிற்று. 27 அங்கிருந்தவர்கள் வியந்து, "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே, இவர் யார் ?" என்றனர். 28 அவர் அக்கரை சேர்ந்து, கதரேனர் நாட்டிற்கு வந்தபோது, பேய்பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வெளியேறி, அவருக்கு எதிரே வந்தனர். அவர்கள் எவ்வளவு கொடியவர்கள் என்றால், அவ்வழியே யாரும் போகமுடியாது. 29 இதோ! அவர்கள், "கடவுளின் மகனே, எங்கள் காரியத்தில் ஏன் தலையிடுகிறீர்? குறித்த காலம் வருமுன்னே எங்களை வதைக்க இங்கே வந்தீரோ?" என்று கத்தினர். 30 அவர்களுக்குச் சற்றுத் தொலைவில் பன்றிகள் பல கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன. 31 அப்போது பேய்கள் அவரை நோக்கி, "நீர் எங்களை ஓட்டுவதாயிருந்தால் அப்பன்றிக் கூட்டத்திற்குள் அனுப்பும்" என்று வேண்டின. 32 அவர், "போங்கள்" என்றார். அவை வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. உடனே, கூட்டம் முழுவதும் மேட்டிலிருந்து கடலில் பாய்ந்து நீரில் மடிந்தது. 33 பன்றிகளை மேய்த்தவர்களோ ஓடிப்போய் நகருக்குச் சென்று எல்லாவற்றையும், பேய்பிடித்தவர்களைப்பற்றிய செய்தியையும் அறிவித்தார்கள். 34 இதோ! நகரினர் அனைவரும் இயேசுவை எதிர்கொண்டு போய் அவரைக் கண்டு, தம் நாட்டை விட்டு அகலுமாறு அவரை வேண்டினர்.
மொத்தம் 28 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 8 / 28
×

Alert

×

Tamil Letters Keypad References