தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
மத்தேயு
1. பின்னர் இயேசு அலகையினால் சோதிக்கப்படுமாறு பாலைவனத்திற்கு ஆவியானவரால் அழைத்துச் செல்லப்பெற்றார்.
2. அங்கு நாற்பது பகலும் நாற்பது இரவும் நோன்பிருந்தபின் பசியுற்றார்.
3. சோதிப்பவன் அவரை அணுகி, "நீர் கடவுளின் மகனானால் இந்தக் கற்கள் அப்பம் ஆகும்படி கட்டளையிடும்" என்றான்.
4. அவரோ மறுமொழியாக: " ' மனிதன் அப்பத்தினால் மட்டும் அன்று, கடவுள் வாயினின்று வரும் ஒவ்வொரு சொல்லினாலும் உயிர்வாழ்கிறான் ' என எழுதியிருக்கின்றதே" என்றார்.
5. பின்னர் அலகை, அவரைத் திருநகரத்திற்குக் கொண்டுபோய்க் கோவில் முகட்டில் நிறுத்தி,
6. "நீர் கடவுளின் மகனானால் கீழே குதியும்; ஏனெனில், ' தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார், உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள் ' என எழுதியுள்ளது" என்று சொல்ல,
7. இயேசு அதனிடம், " ' உன் கடவுளாகிய ஆண்டவரை நீ சோதியாதே ' எனவும் எழுதியிருக்கின்றது" என்றார்.
8. மீண்டும் அலகை அவரை மிக உயர்ந்த மலைக்குக் கொண்டுபோய் உலக அரசுகள் அனைத்தையும் அவற்றின் மாட்சியையும் காட்டி,
9. "நீர் என்னைத் தெண்டனிட்டு வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குக் கொடுப்பேன்" என்றது.
10. அப்பொழுது இயேசு அதனை நோக்கி, "போ அப்பாலே, சாத்தானே, ஏனெனில், ' உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவரை மட்டுமே ஆராதிப்பாயாக ' என எழுதியிருக்கின்றது" என்றார்.
11. பின்னர் அலகை அவரை விட்டகன்றது. அப்போது வானதூதர் அணுகி, அவருக்குப் பணிவிடை புரிந்தனர்.
12. அருளப்பர் சிறைப்பட்டதைக் கேள்வியுற்று இயேசு கலிலேயாவுக்குத் திரும்பினார்.
13. அவர் நாசரேத்தூரை விட்டு, செபுலோன், நப்தலி நாட்டில் கடலோரமாயுள்ள கப்பர்நகூமுக்கு வந்து குடியிருந்தார்.
14. இசையாஸ் இறைவாக்கினர் பின்வருமாறு கூறியது இப்படி நிறைவேற வேண்டியிருந்தது:
15. ' செபுலோன் நாடே! நப்தலி நாடே! கடல் நோக்கும் வழியே! யோர்தான் அக்கரைப் பகுதியே! புறவினத்தார் வாழும் கலிலேயாவே!
16. இருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டனர். மரண நிழல் படும் நாட்டில் உள்ளோர்க்கு ஒளி உதித்தது. '
17. அதுமுதல் இயேசு, "மனந்திரும்புங்கள், ஏனெனில், விண்ணரசு நெருங்கிவிட்டது" என்று அறிவிக்கத் தொடங்கினார்.
18. கலிலேயாக் கடலோரமாய் இயேசு நடந்து செல்லுகையில், இராயப்பர் என்னும் சீமோனும், அவர் சகோதரர் பெலவேந்திரருமாகிய இரு சகோதரரைக் கண்டார். அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தனர். ஏனெனில், அவர்கள் மீன் பிடிப்போர்.
19. அவர்களைப் பார்த்து, "என் பின்னே வாருங்கள்; உங்களை, மனிதரைப் பிடிப்போராக்குவேன்" என்றார்.
20. உடனே அவர்களும் வலைகளை விட்டுவிட்டு, அவரைப் பின்சென்றனர்.
21. அங்கிருந்து அப்பால் சென்று, செபெதேயுவின் மகன் யாகப்பரும், அவர் சகோதரர் அருளப்பருமாகிய வேறு இரு சகோதரர், தம் தந்தை செபெதேயுவோடு படகில் வலைகளைப் பழுதுபார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு, அவர்களை அழைத்தார்.
22. உடனே அவர்கள் தம் படகையும் தந்தையையும் விட்டுவிட்டு, அவரைப் பின்சென்றனர்.
23. அவர் கலிலேயா எங்கும் சுற்றி, அவர்களுடைய செபக்கூடங்களில் போதித்து, விண்ணரசைப்பற்றிய நற்செய்தியை அறிவித்து, மக்களிடையே எல்லா நோயையும் பிணியையும் குணமாக்கிவந்தார்.
24. அவரைப்பற்றிய பேச்சு சீரியாநாடு முழுவதும் பரவியது. பல்வேறு நோய் நோக்காட்டினால் வருந்தும் பிணியாளர் அனைவரையும், பேய்பிடித்தோரையும் பைத்தியக்காரரையும் திமிர்வாதக்காரரையும் அவரிடம் கொண்டுவந்தனர். அவர் அவர்களைக் குணப்படுத்தினார்.
25. கலிலேயா, தெக்கப்போலி, யெருசலேம், யூதேயா, யோர்தானுக்கு அக்கரைப் பகுதியாகிய இடங்களிலிருந்து, மக்கள் கூட்டங் கூட்டமாய் அவரைப் பின்தொடர்ந்தனர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 28 Chapters, Current Chapter 4 of Total Chapters 28
மத்தேயு 4:41

×

Alert

×

tamil Letters Keypad References