தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
மத்தேயு
1. ஏரோது அரசன்காலத்தில், யூதேயாவிலுள்ள பெத்லெகேமில் இயேசு பிறந்திருக்க, இதோ! ஞானிகள் கீழ்த்திசையிலிருந்து யெருசலேமுக்கு வந்து,
2. "யூதர்களின் அரசர் பிறந்திருக்கின்றாரே, அவர் எங்கே ? அவருடைய விண்மீன் எழுதலைக் கண்டு, அவரை வணங்க வந்தோம்" என்றார்கள்.
3. இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவ்வாறே யெருசலேம் முழுவதும் கலங்கிற்று.
4. அப்பொழுது அவன், தலைமைக் குருக்கள், மக்களுள் மறைநூல் அறிஞர் அனைவரையும் கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று விசாரித்தான்.
5. அவர்கள் அவனிடம், "யூதேயாவிலுள்ள பெத்லெகேமிலே பிறப்பார்;
6. ஏனெனில், 'யூதா நாட்டுப் பெத்லெகேமே, யூதாவின் நகரங்களிலே நீ சிறியதே அல்லை. ஏனெனில், என் மக்கள் இஸ்ராயேலை மேய்க்கவேண்டிய தலைவர் உன்னிடமிருந்தே தோன்றுவார் ' என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்" என்றார்கள்.
7. அப்போது, ஏரோது அந்த ஞானிகளை மறைவாக அழைத்து, அவர்களுக்கு விண்மீன் தோன்றியது எப்பொழுது என்று அவர்களிடம் கருத்தாய்க் கேட்டு அறிந்துகொண்டான்.
8. பின்பு அவர்களைப் பெத்லெகேமுக்குப் போகச் சொல்லி, "நீங்கள் சென்று குழந்தையைப்பற்றிக் கருத்தாய் ஆராய்ந்து பாருங்கள்; அவரைக் கண்டபின் எனக்குத் தெரிவியுங்கள். நானும் போய் அவரை வணங்கவேண்டும்" என்றான்.
9. அவர்கள் அரசன் கூறியதைக் கேட்டுப் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழக்கண்ட அந்த விண்மீன், குழந்தை இருந்த இடத்திற்குமேல் வந்து நிற்கும்வரை, அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.
10. விண்மீனைக் கண்டதும் அவர்கள் அளவில்லா மகிழ்ச்சியுற்றனர்.
11. வீட்டிற்குள் போய், பிள்ளையை அதன் தாய் மரியாளுடன் கண்டு, தெண்டனிட்டு வணங்கினர். தம் பேழைகளைத் திறந்து பொன்னும் தூபமும் வெள்ளைப்போளமும் அவருக்குக் காணிக்கையாகச் செலுத்தினர்.
12. ' ஏரோதிடம் மீண்டும் செல்லவேண்டாம் ' என்று கனவில் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினர்.
13. அவர்கள் சென்றபின், இதோ! ஆண்டவரின் தூதர் சூசைக்குக் கனவில் தோன்றி, "எழுந்து பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்திற்கு ஓடிப்போம். நான் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையைத் தொலைக்க ஏரோது தேடப்போகிறான்" என்றார்.
14. அவர் எழுந்து பிள்ளையையும் தாயையும் இரவிலேயே கூட்டிக்கொண்டு, எகிப்துக்குச் சென்றார்.
15. ஏரோது இறக்கும் வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, ' எகிப்திலிருந்து என் மகனை அழைத்தேன் ' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் கூறியது நிறைவேற வேண்டியிருந்தது.
16. பின்னர் ஏரோது, ஞானிகள் தன்னை ஏமாற்றியதைக் கண்டு, கடுங்கோபமுற்று, ஆட்களை அனுப்பி, ஞானிகளிடம் கருத்தாய்க் கேட்டறிந்த காலத்தின்படி பெத்லெகேமிலும், அதன் சுற்றுப்புறமெங்கும் இரண்டு வயதும் அதற்கு உட்பட்டதுமான ஆண்குழந்தைகளையெல்லாம் கொன்றான்.
17. ' ராமாவிலே கூக்குரல் கேட்டது. பேரழுகையும் ஒப்பாரியுமாக இருந்தது.
18. ராக்கேல் தன் குழந்தைகளுக்காக அழுதுகொண்டு, அவை இல்லாமையால் ஆறுதல் பெறவிரும்பவில்லை ' என்று எரேமியாஸ் இறைவாக்கினர் கூறியது அப்பொழுது நிறைவேறிற்று.
19. ஏரோது இறந்ததும், இதோ! ஆண்டவரின் தூதர் எகிப்தில் சூசைக்குக் கனவில் தோன்றி,
20. "எழுந்து, பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ராயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில், குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடினவர்கள் இறந்துவிட்டனர்" என்றார்.
21. அவர் எழுந்து பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ராயேல் நாட்டுக்கு வந்தார்.
22. ஆனால் யூதேயாவிலே, அர்கெலாவு தன் தந்தை ஏரோதிற்குப் பதிலாக அரசாள்வதாகக் கேள்வியுற்று அங்குச் செல்ல அஞ்சினார். கனவில் எச்சரிக்கப்பட்டு கலிலேயா நாட்டுக்குச் சென்றார்.
23. சென்று, நாசரேத்து என்னும் ஊரில் குடியிருந்தார். இவ்வாறு, ' நாசரேயன் எனப்படுவார் ' என்று இறைவாக்கினர்கள் கூறியது நிறைவேற வேண்டியிருந்தது.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 28 Chapters, Current Chapter 2 of Total Chapters 28
மத்தேயு 2:1

×

Alert

×

tamil Letters Keypad References