தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
மத்தேயு
1. இயேசு இவ்வார்த்தைகளைச் சொல்லி முடித்தபின் கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அப்பாலுள்ள யூதேயா பகுதிக்கு வந்தார்.
2. பெருங்கூட்டம் அவரைப் பின்தொடர்ந்தது. அவர்களை அங்கே குணமாக்கினார்.
3. பரிசேயர் அவரிடம் வந்து, "எக்காரணத்திற்காவது ஒருவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?" என்று அவரைச் சோதிக்கக் கேட்டனர்.
4. அதற்கு அவர், "படைத்தவர் தொடக்கத்திலிருந்தே 'ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்' என்றும்,
5. 'ஆதலால் கணவன் தன் தாய் தந்தையரை விட்டுத் தன் மனைவியோடு கூடி இருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர் எனக் கூறினார்' என்றும் நீங்கள் படித்ததில்லையா?
6. இனி அவர்கள் இருவர் அல்லர், ஒரே உடல். ஆகவே, கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்" என்றார்.
7. அவர்கள், "அப்படியானால் முறிவுச்சீட்டுக் கொடுத்து, மனைவியை விலக்கிவிடும்படி மோயீசன் கட்டளையிட்டது ஏன்?" என்று கேட்டனர்.
8. அவரோ, "உங்கள் முரட்டுத்தனத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கிவிட மோயீசன் அனுமதி அளித்தார். ஆனால் தொடக்கத்திலோ அப்படி இல்லை.
9. நானோ உங்களுக்குச் சொல்லுகிறேன்: கெட்ட நடத்தைக்காக அன்றி, எவனொருவன் தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொருத்தியை மணந்துகொள்கின்றானோ, அவன் விபசாரம் செய்கிறான்" என்று அவர்களுக்குச் சொன்னார்.
10. சீடர்கள் அவரை நோக்கி, "கணவன் மனைவியின் நிலை இப்படியென்றால், மணந்து கொள்ளாதிருப்பதே நலம்" என்று சொன்னார்கள்.
11. அவரோ, "அருள் பெற்றவரன்றி வேறு எவரும் இதை உணர்ந்துகொள்வதில்லை.
12. ஏனெனில், தாய் வயிற்றினின்று அண்ணகராய்ப் பிறந்தவரும் உளர்; மனிதரால் அண்ணகரானவரும் உளர்; விண்ணரசை முன்னிட்டுத் தம்மைத்தாமே அண்ணகராக்கிக் கொண்டவரும் உளர். உணர்ந்துகொள்ள கூடியவன் உணர்ந்துகொள்ளட்டும்" என்றார்.
13. பின்னர், அவர் குழந்தைகள்மேல் தம் கைகளை வைத்துச் செபிக்குமாறு அவர்களை அவரிடம் கொண்டுவந்தனர்.
14. சீடர் அவர்களை அதட்டினர். இயேசுவோ அவர்களிடம், "குழந்தைகள் என்னிடம் வருவதைத் தடுக்க வேண்டாம். வரவிடுங்கள். ஏனெனில், விண்ணரசு இத்தகையோரதே" என்றார்.
15. அவர்கள்மீது கைகளை வைத்தபின் அங்கிருந்து சென்றார்.
16. இதோ, ஒருவன் அவரிடம் வந்து, "போதகரே, முடிவில்லா வாழ்வு பெற நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.
17. அவர் அவனை நோக்கி, "நன்மையைப்பற்றி என்னைக் கேட்பதேன்? நல்லவர் ஒருவரே. வாழ்வு பெற விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி" என்றார்.
18. அவன், "எவற்றை?" என்றான். இயேசு, "கொலை செய்யாதே, விபசாரம் செய்யாதே, களவு செய்யாதே, பொய்ச் சான்று சொல்லாதே.
19. தாய் தந்தையரைப் போற்று. மேலும், உன் மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான் மீதும் அன்பு காட்டுவாயாக" என்று கூறினார்.
20. வாலிபன் அவரிடம், "இவை எல்லாம் கடைப்பிடித்து வருகிறேன், என்னிடத்தில் இன்னும் குறைவாய் இருப்பதென்ன?" என்று கேட்டான்.
21. அதற்கு இயேசு, "நீ நிறைவு பெற விரும்பினால், போய் உன் உடமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடு. வானகத்தில் உனக்குச் செல்வம் கிடைக்கும். பின்னர் வந்து என்னைப் பின்செல்" என்றார்.
22. இவ்வார்த்தையைக் கேட்டு அவ்வாலிபன் வருத்தத்துடன் சென்றான். ஏனெனில், அவனுக்கு ஏராளமான சொத்து இருந்தது.
23. இயேசு தம் சீடரிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: பணக்காரன் விண்ணரசில் நுழைவது அரிது.
24. மீண்டும் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பணக்காரன் விண்ணரசில் நுழைவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்றார்.
25. இவற்றைக் கேட்டு அவருடைய சீடர் மிகவும் மலைத்துப் போய், "அப்படியானால் யார்தான் மீட்புப்பெற முடியும்?" என்று கேட்டனர்.
26. இயேசு அவர்களை உற்றுநோக்கி, "மனிதரால் இது முடியாது. ஆனால், கடவுளால் எல்லாம் முடியும்" என்று சொன்னார்.
27. அப்போது இராயப்பர், "இதோ! நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்சென்றோமே, எங்களுக்கு என்ன கிடைக்கும்?" என்று அவரைக் கேட்டார்.
28. இயேசு அவர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: உலகம் புத்துயிர் பெறும் நாளில் மனுமகன் தமது மாட்சி அரியணையில் வீற்றிருக்கும்போது என்னைப் பின்சென்ற நீங்களும் இஸ்ராயேலின் பன்னிரு கோத்திரங்களுக்கும் நடுவராகப் பன்னிரு அரியணையில் வீற்றிருப்பீர்கள்.
29. மேலும் வீட்டையோ சகோதரர் சகோதரியையோ தாய் தந்தையையோ மக்களையோ நிலபுலங்களையோ என் பெயரின் பொருட்டுத் துறந்துவிடும் எவனும் பன்மடங்கு பெறுவான்; முடிவில்லாத வாழ்வும் பெற்றுக்கொள்வான்.
30. "முதலானோர் பலர் கடைசியாவர்; கடைசியானோர் பலர் முதலாவர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 28 Chapters, Current Chapter 19 of Total Chapters 28
மத்தேயு 19:74

×

Alert

×

tamil Letters Keypad References