தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
மத்தேயு
1. அந்நாளில் இயேசு வீட்டை விட்டு வெளியே போய்க் கடலோரத்தில் உட்கார்ந்திருந்தார்.
2. பெருங்கூட்டம் அவரை நெருக்கவே, அவர் படகிலேறி அமர வேண்டியிருந்தது.
3. கூட்டம் அனைத்தும் கரையில் இருந்தது. அவர், அவர்களுக்கு உவமைகளால் பற்பல எடுத்துரைத்தார். "இதோ, விதைப்பவன் விதைக்கச் சென்றான்.
4. விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரமாய் விழுந்தன. வானத்துப் பறவைகள் வந்து அவற்றைத் தின்றுவிட்டன.
5. சில அதிக மண்ணில்லாத பாறைநிலத்தில் விழுந்தன. அடிமண் இல்லாததால் விரைவில் முளைத்தன.
6. வெயில் ஏறியதும் தீய்ந்து, வேரில்லாமையால் காய்ந்துபோயின.
7. சில முட்செடிகள் நடுவில் விழுந்தன. முட்செடிகள் அவற்றை நெரித்துவிட்டன.
8. சில நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் ஒரு சில நூறு மடங்கு, வேறு சில அறுபது மடங்கு, இன்னும் சில முப்பது மடங்கு பலன் கொடுத்தன.
9. கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்" என்றார்.
10. சீடர் அவரை அணுகி, "அவர்களிடம் நீர் உவமைகளில் பேசுவதேன்?" என்றனர்.
11. அவர் அவர்களுக்கு மறுமொழியாகக் கூறியது: "விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்துவைத்திருக்கிறது. அவர்களுக்கோ கொடுத்துவைக்கவில்லை.
12. ஏனெனில், உள்ளவனுக்குக் கொடுக்கப்படும்; அவனும் நிறைவு பெறுவான். இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்.
13. ஏன் அவர்களிடம் உவமைகளில் பேசுகிறேனெனில், அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; உணர்வதுமில்லை.
14. இசையாஸ் கூறியுள்ள இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது: 'கேட்டுக் கேட்டும் நீங்கள் உணர்வதில்லை, பார்த்துப் பார்த்தும் நீங்கள் காண்பதில்லை.
15. அவர்கள் கண்ணால் காணாமலும் காதால் கேட்காமலும் உளத்தால் உணராமலும் அவர்கள் மனந்திரும்பாமலும் நான் அவர்களைக் குணமாக்காமலும் இருக்கும்படி இம்மக்களின் உள்ளம் மழுங்கிவிட்டது; இவர்கள் காது மந்தமாகிவிட்டது; கண்ணை மூடிக்கொண்டனர். '
16. உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன.
17. நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்லுகிறேன்: இறைவாக்கினர், நீதிமான்கள் பலர் நீங்கள் காண்பதைக் காணவிரும்பியும் காணவில்லை. நீங்கள் கேட்பதைக் கேட்கவிரும்பியும் கேட்கவில்லை.
18. "எனவே, விதைப்பவன் உவமையின் பொருள் என்னவென்று கேளுங்கள்:
19. விண்ணரசைப்பற்றிய வார்த்தையை ஒருவன் கேட்டும் உணராவிட்டால், அவன் உள்ளத்தில் விதைத்ததைத் தீயவன் வந்து பறித்துக்கொள்வான். வழியோரம் விதைக்கப்பட்டவன் இவனே.
20. பாறைநிலத்தில் விதைக்கப்பட்டவன் யாரெனில், வார்த்தையைக் கேட்டு உடனே மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறவனே.
21. ஆனால், அவன் தன்னில் வேரற்றவன்; நிலையற்றவன். வார்த்தையின் பொருட்டு வேதனையுற்றதும் அல்லது துன்புறுத்தப்பட்டதும் இடறல்படுவான்.
22. முட்செடிகள் நடுவில் விதைக்கப்பட்டவன் யாரெனில், வார்த்தையைக் கேட்டு, இவ்வுலகக் கவலையும் செல்வமாயையும் வார்த்தையை நெரிக்க, பயனற்றுப் போகிறவனே.
23. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவன் யாரெனில், வார்த்தையைக் கேட்டு உணர்ந்துகொள்ளுகிறவனே. இவன் நூறு மடங்கோ அறுபது மடங்கோ முப்பது மடங்கோ பலன் கொடுப்பான்."
24. இன்னுமோர் உவமையை அவர்களுக்கு எடுத்துச்சொன்னார்: "விண்ணரசு, தன் வயலில் நல்ல விதை விதைத்தவனுக்கு ஒப்பாகும்.
25. ஆட்கள் தூங்கும்போது அவனுடைய பகைவன் வந்து கோதுமையிடையே களைகளை விதைத்துவிட்டுப் போனான்.
26. பயிர் வளர்ந்து கதிர்விட்டபோது களைகளும் தோன்றின.
27. வீட்டுத்தலைவனிடம் ஊழியர் வந்து, 'ஐயா, உம் வயலில் நல்ல விதையல்லவா விதைத்தீர்? பின் அதில் களைகள் வந்தது எப்படி?' என்று கேட்டனர்.
28. அதற்கு அவன், ' இது பகைவன் செய்த வேலை ' என்றான். ஊழியரோ, 'நாங்கள் போய் அவற்றைப் பிடுங்கிச் சேர்க்க வேண்டுமா ? ' என்றனர்.
29. அவன், 'வேண்டாம்; களைகளைச் சேர்க்கும்போது ஒருவேளை கோதுமைப் பயிரையும் அவற்றுடன் பிடுங்கிவிடக்கூடும்.
30. அறுவடைவரை இரண்டையும் வளரவிடுங்கள். அறுவடைக்காலத்தில் அறுப்போரிடம், முதலில் களைகளை ஒன்றுசேர்த்து, எரிப்பதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்று சொல்வேன் ' என்றான்."
31. இன்னுமோர் உவமையை அவர்களுக்கு எடுத்துச்சொன்னார்: "விண்ணரசு, கடுகு மணிக்கு ஒப்பாகும். அதை ஒருவன் எடுத்துத் தன் வயலில் விதைக்கிறான்.
32. அது விதைகளிலெல்லாம் மிகச் சிறியதாயினும், வளர்ந்ததும் செடிகளிலெல்லாம் மிகப் பெரியதாகி வானத்துப் பறவைகள் வந்து அதன் கிளைகளில் தங்கக்கூடிய மரமாகும்."
33. இன்னுமோர் உவமையும் அவர்களுக்கு எடுத்துச்சொன்னார்: "விண்ணரசு புளிப்பு மாவுக்கு ஒப்பாகும். அதைப் பெண் ஒருத்தி எடுத்து மூன்றுபடி மாவில் பொதிந்து வைக்கிறாள். மாவு முழுதும் புளிப்பேறுகிறது."
34. இவையெல்லாம் இயேசு மக்கட்கூட்டத்திற்கு உவமைகளால் சொன்னார். உவமைகளால் அன்றி அவர் அவர்களிடம் ஒன்றும் பேசியதில்லை.
35. 'உவமைகளில் பேசுவேன்; உலகம் தோன்றியதுமுதல் மறைந்துள்ளதை வெளியாக்குவேன்' என்று இறைவாக்கினர் கூறியது இவ்வாறு நிறைவேற வேண்டியிருந்தது.
36. பின்பு அவர் கூட்டத்தை அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்பொழுது அவருடைய சீடர் அவரை அணுகி, "வயலில் விதைத்த களைகளின் உவமையை எங்களுக்கு விளக்கிக்கூறும்" என்றனர்.
37. அதற்கு அவர், "நல்ல விதை விதைக்கிறவன் மனுமகன்.
38. வயல், இவ்வுலகம்; நல்ல விதை, அரசின் மக்கள்; களைகளோ தீயோனுடைய மக்கள்.
39. அவற்றை விதைத்த பகைவன், அலகை; அறுவடை, உலகின் முடிவு; அறுப்போர், வானதூதர்.
40. எவ்வாறு களைகள் ஒன்றுசேர்த்துத் தீயில் எரிக்கப்படுமோ, அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும்.
41. மனுமகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய அரசில் இடறலாய் உள்ள யாவற்றையும் நெறிகெட்டவர்களையும் ஒன்று சேர்த்து, ஃ தீச்சூளையில் தள்ளுவார்கள்.
42. அங்கே புலம்பலும் பற்கடிப்பும் இருக்கும்.
43. அப்பொழுது நீதிமான்கள் தம் தந்தையின் அரசில் கதிரோனைப்போல் ஒளிர்வர். கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்.
44. "விண்ணரசு, நிலத்தில் மறைந்துள்ள புதையலுக்கு ஒப்பாகும். அதைக் கண்டுபிடித்தவன் அதை மறைத்துவிட்டு, அதைக் கண்ட மகிழ்ச்சியில் போய்த் தனக்குள்ளதெல்லாம் விற்று அந்நிலத்தை வாங்கிக்கொள்கிறான்.
45. பின்னும் விண்ணரசு நல்ல முத்துகளைத் தேடும் வணிகனுக்கு ஒப்பாகும்.
46. விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டதும், போய்த் தனக்குள்ளதெல்லாம் விற்று அதை வாங்கிக்கொள்கிறான்.
47. "மேலும் விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லாவகை மீன்களையும் வாரிவரும் வலைக்கு ஒப்பாகும்.
48. வலை நிறைந்ததும் அதை வெளியில் இழுத்து, கரையில் அமர்ந்து, நல்லவற்றைப் பொறுக்கிக் கூடைகளில் வைத்துக்கொண்டு தீயவற்றை வெளியே எறிந்துவிடுகின்றனர்.
49. இவ்வாறே உலகமுடிவிலும் நடக்கும். வானதூதர் சென்று தீயோரை நீதிமான்களிடையே இருந்து பிரித்து,
50. தீச்சூளையில் தள்ளுவர். அங்கே புலம்பலும் பற்கடிப்பும் இருக்கும்" என்றார்.
51. "இவையெல்லாம் கண்டுணர்ந்தீர்களா ?" என்று இயேசு கேட்க, அவர்கள், "ஆம்" என்றனர்.
52. அவர், "ஆகையால், விண்ணரசில் சீடனான மறைநூல் அறிஞன் எவனும், தன் கருவூலத்தினின்று புதியனவும் பழையனவும் எடுக்கிற வீட்டுத்தலைவனுக்கு ஒப்பாவான்" என்றார்.
53. இந்த உவமைகளை முடித்ததும் இயேசு அவ்விடம் விட்டுச் சென்றார்.
54. தம் சொந்த ஊருக்கு வந்து அவர்களது செபக்கூடத்தில் போதிக்கலானார். அவர்கள் மலைத்துப்போய், "இந்த ஞானமும் புதுமைகளும் இவருக்கு எங்கிருந்து வந்தன ?
55. இவர் தச்சன்மகன் அல்லரோ ? இவருடைய தாய், மரியாள் என்பவள் அல்லளோ ? இவருடைய சகோதரர்: யாகப்பன், சூசை, சீமோன், யூதா அல்லரோ?
56. இவருடைய சகோதரிகள் யாவரும் நம்மிடையே இல்லையா ? பின் இதெல்லாம் இவருக்கு எங்கிருந்து வந்தது ?" என்று சொல்லி, அவரைப்பற்றி இடறல்பட்டனர்.
57. இயேசு அவர்களை நோக்கி, "தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர, மற்றெங்கும் இறைவாக்கினருக்கு மதிப்பு உண்டு" என்றார்.
58. அவர்களிடம் விசுவாசமில்லாமையால் அவர் அங்குப் பல புதுமைகள் செய்யவில்லை.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 28 Chapters, Current Chapter 13 of Total Chapters 28
மத்தேயு 13:38

41. மனுமகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய அரசில் இடறலாய் உள்ள யாவற்றையும் நெறிகெட்டவர்களையும் ஒன்று சேர்த்து, தீச்சூளையில் தள்ளுவார்கள்.
42. அங்கே புலம்பலும் பற்கடிப்பும் இருக்கும்.
43. அப்பொழுது நீதிமான்கள் தம் தந்தையின் அரசில் கதிரோனைப்போல் ஒளிர்வர். கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்.
44. "விண்ணரசு, நிலத்தில் மறைந்துள்ள புதையலுக்கு ஒப்பாகும். அதைக் கண்டுபிடித்தவன் அதை மறைத்துவிட்டு, அதைக் கண்ட மகிழ்ச்சியில் போய்த் தனக்குள்ளதெல்லாம் விற்று அந்நிலத்தை வாங்கிக்கொள்கிறான்.
45. பின்னும் விண்ணரசு நல்ல முத்துகளைத் தேடும் வணிகனுக்கு ஒப்பாகும்.
46. விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டதும், போய்த் தனக்குள்ளதெல்லாம் விற்று அதை வாங்கிக்கொள்கிறான்.
47. "மேலும் விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லாவகை மீன்களையும் வாரிவரும் வலைக்கு ஒப்பாகும்.
48. வலை நிறைந்ததும் அதை வெளியில் இழுத்து, கரையில் அமர்ந்து, நல்லவற்றைப் பொறுக்கிக் கூடைகளில் வைத்துக்கொண்டு தீயவற்றை வெளியே எறிந்துவிடுகின்றனர்.
49. இவ்வாறே உலகமுடிவிலும் நடக்கும். வானதூதர் சென்று தீயோரை நீதிமான்களிடையே இருந்து பிரித்து,
50. தீச்சூளையில் தள்ளுவர். அங்கே புலம்பலும் பற்கடிப்பும் இருக்கும்" என்றார்.
51. "இவையெல்லாம் கண்டுணர்ந்தீர்களா ?" என்று இயேசு கேட்க, அவர்கள், "ஆம்" என்றனர்.
52. அவர், "ஆகையால், விண்ணரசில் சீடனான மறைநூல் அறிஞன் எவனும், தன் கருவூலத்தினின்று புதியனவும் பழையனவும் எடுக்கிற வீட்டுத்தலைவனுக்கு ஒப்பாவான்" என்றார்.
53. இந்த உவமைகளை முடித்ததும் இயேசு அவ்விடம் விட்டுச் சென்றார்.
54. தம் சொந்த ஊருக்கு வந்து அவர்களது செபக்கூடத்தில் போதிக்கலானார். அவர்கள் மலைத்துப்போய், "இந்த ஞானமும் புதுமைகளும் இவருக்கு எங்கிருந்து வந்தன ?
55. இவர் தச்சன்மகன் அல்லரோ ? இவருடைய தாய், மரியாள் என்பவள் அல்லளோ ? இவருடைய சகோதரர்: யாகப்பன், சூசை, சீமோன், யூதா அல்லரோ?
56. இவருடைய சகோதரிகள் யாவரும் நம்மிடையே இல்லையா ? பின் இதெல்லாம் இவருக்கு எங்கிருந்து வந்தது ?" என்று சொல்லி, அவரைப்பற்றி இடறல்பட்டனர்.
57. இயேசு அவர்களை நோக்கி, "தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர, மற்றெங்கும் இறைவாக்கினருக்கு மதிப்பு உண்டு" என்றார்.
58. அவர்களிடம் விசுவாசமில்லாமையால் அவர் அங்குப் பல புதுமைகள் செய்யவில்லை.
Total 28 Chapters, Current Chapter 13 of Total Chapters 28
×

Alert

×

tamil Letters Keypad References