தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
மாற்கு
1. பரிசேயரும், யெருசலேமிலிருந்து வந்த மறைநூல் அறிஞர் சிலரும் அவரிடம் வந்து கூடினர்.
2. அவர்கள் அவருடைய சீடரில் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதைக் கண்டனர்.
3. பரிசேயரும் எல்லா யூதரும் முன்னோரின் பரம்பரையைக் கடைப்பிடித்துக் கைகளைத் தேய்த்துக் கழுவாமல் உண்பதில்லை.
4. பொது இடங்களிலிருந்து வரும்பொழுது, குளிக்காமல் உண்பதில்லை. பரம்பரையின்படி கடைப்பிடிக்க வேண்டியவை இன்னும் பல இருந்தன. அதாவது, கிண்ணங்கள், பாத்திரங்கள், செம்புகளைக் கழுவுவது முதலியன.
5. எனவே, "முன்னோர் பரம்பரையின்படி உம் சீடர் நடவாமல் தீட்டான கைகளால் உண்பதேன்?" என்று பரிசேயரும் மறைநூல் அறிரும் அவரைக் கேட்டனர்.
6. அதற்கு அவர், "வெளிவேடக்காரராகிய உங்களைப் பற்றி இசையாஸ் பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார்: 'இம் மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர், அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலைவில் இருக்கின்றது.
7. அவர்கள் என்னை வழிபடுவது வீண், ஏனெனில், அவர்கள் போதிப்பது மனிதர்கற்பனை.' என்று அவர் எழுதியுள்ளார்.
8. கடவுளுடைய கட்டளைகளைக் கைவிட்டு மனிதர்களுடைய பரம்பரையைக் கைப்பிடிக்கிறீர்கள்" என்றார்.
9. மேலும் சொன்னதாவது: "உங்கள் பரம்பரையைக் கடைப்பிடிக்கக் கடவுளுடைய கட்டளையை எவ்வளவு நன்றாக வெறுமையாக்குகிறீர்கள்!
10. ஏனெனில், 'உன் தாய் தந்தையரைப் போற்று' என்றும், 'தாய் தந்தையரைத் தூற்றுகிறவன் செத்தொழியட்டும்' என்றும் மோயீசன் கூறியுள்ளார்.
11. ஆனால், ஒருவன் தன் தந்தையையோ தாயையோ நோக்கி, 'நான் உமக்கு உதவியாகக் கொடுக்கக்கூடிய தெல்லாம் கோர்பான் - அதாவது நேர்த்திக்கடன் - ஆயிற்று' என்பானாகில்,
12. அதன்பின் அவன் தன் தாய் தந்தையர்க்கு எவ்வுதவியும் செய்ய நீங்கள் விடுவதில்லை.
13. இவ்வாறு நீங்கள் சொல்லிக் கொடுத்த பரம்பரையின் பொருட்டு, கடவுளின் வார்த்தையை வீணாக்கிவிடுகிறீர்கள். இவை போன்ற பலவும் செய்கிறீர்கள்."
14. மீண்டும் அவர் கூட்டத்தைத் தம்மிடம் அழைத்து, "அனைவரும் நான் சொல்வதைக் கேட்டு உணர்ந்துகொள்ளுங்கள்.
15. புறத்தேயிருந்து மனிதனுக்குள்ளே சென்று அவனை மாசுபடுத்தக்கூடியது ஒன்றுமில்லை. மனிதனுள்ளிருந்து வெளிவருவதே அவனை மாசுபடுத்தும்.
16. கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்" என்றார்.
17. அவர் கூட்டத்தை விட்டு வீட்டிற்கு வந்தபோது, அவருடைய சீடர் இவ்வுவமையின் பொருளைக் கேட்டனர்.
18. அதற்கு அவர், "உங்களுக்குமா அறிவில்லை? புறத்தேயிருந்து மனிதனுக்குள்ளே செல்வது எதுவும் அவனை மாசுபடுத்த முடியாதென்று உணர வில்லையா?
19. ஏனெனில், அது அவனுடைய உள்ளத்துள் நுழையாமல், அவனுடைய வயிற்றிலே சென்று ஒதுக்கிடத்திற்குப் போய்விடுகிறது" என்றார். இவ்வாறு உணவுகள் எல்லாம் தூயனவென்று குறிப்பிட்டார்.
20. மேலும், "மனிதனுள்ளிருந்து, வருவதே அவனை மாசுபடுத்தும்.
21. ஏனெனில், மனிதர் உள்ளத்தினின்றே தீய எண்ணம், மோகம்,
22. களவு, கொலை, விபசாரம், ஃ பேராசை, தீச்செயல், கபடு, கெட்ட நடத்தை, பொறாமை, பழிச்சொல், செருக்கு, மதிகேடு ஆகியவை வெளிவரும்.
23. இத்தீயவை யாவும் உள்ளத்திலிருந்து வந்து மனிதனை மாசுபடுத்தும்" என்றார்.
24. அங்கிருந்து புறப்பட்டுத் தீர் நாட்டுக்குச் சென்றார். ஒரு வீட்டிற்குள் போனார். அது ஒருவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பினார். ஆனால் அது மறைவாயிருக்க முடியவில்லை.
25. உடனே ஒரு பெண் அவரைப்பற்றிக் கேள்வியுற்று, உள்ளே வந்து அவர் காலில் விழுந்தாள். அவளுடைய மகளை அசுத்த ஆவி பிடித்திருந்தது.
26. அவள் புற இனத்தவள். சீரோபெனீசிய குலத்தைச் சார்ந்தவள். தன் மகளிடமிருந்து பேயை ஓட்டுமாறு அவரைக் கேட்டுக்கொண்டாள்.
27. அவரோ, அவளைப் பார்த்து, "முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்களுக்குப் போடுதல் நல்லதன்று" என்றார்.
28. அவளோ மறுமொழியாக: "ஆமாம் ஆண்டவரே, ஆனால் மேசைக்கடியில் நாய்க்குட்டிகளும் குழந்தைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்கின்றனவே" என்றாள்.
29. அதற்கு அவர், "இவ்வார்த்தையின் நிமித்தம் நீ போகலாம்; பேய் உன் மகளை விட்டுவிட்டது" என்றார்.
30. அவள் வீடு திரும்பியபோது சிறுமி கட்டிலில் கிடப்பதையும், பேய் அகன்று விட்டதையும் கண்டாள்.
31. மீண்டும், தீர் நாட்டை விட்டு, சீதோன் வழியாகத் தெக்கப்போலி நாட்டின் நடுவே கலிலேயாக் கடலை அடைந்தார்.
32. செவிடனும் திக்குவாயனுமாகிய ஒருவனை அவரிடம் கொண்டுவந்து, அவன்மீது கையை வைக்குமாறு அவரை வேண்டினர்.
33. அவர் அவனைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று தம் விரல்களை அவன் காதுகளில் விட்டு, உமிழ் நீரால் அவன் நாவைத் தொட்டார்.
34. பின், வானத்தை அண்ணாந்து பார்த்துப் பெருமூச்சுவிட்டு அவனை நோக்கி, "எப்பெத்தா" -- அதாவது, "திறக்கப்படு" -- என்றார்.
35. உடனே அவன் காதுகள் திறக்கப்பட்டன. நாவின் கட்டு அவிழ்ந்தது. நன்றாகப் பேசினான்.
36. இதை ஒருவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். எவ்வளவுக்கு அவர் கட்டளையிட்டாரோ, அவ்வளவுக்கு அதிகமாய் அவர்கள் அதை விளம்பரப்படுத்தினர்.
37. அவர்கள் மிகவும் மலைத்துப்போய், "எல்லாம் நன்றாகச் செய்திருக்கிறார். செவிடர் கேட்கவும், ஊமைகள் பேசவும் செய்கிறார்" என்று கூறினர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 16 Chapters, Current Chapter 7 of Total Chapters 16
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
16
மாற்கு 7:66

22. களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், கபடு, கெட்ட நடத்தை, பொறாமை, பழிச்சொல், செருக்கு, மதிகேடு ஆகியவை வெளிவரும்.

×

Alert

×

tamil Letters Keypad References