தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
மாற்கு
1. அவர்கள் அக்கரை சேர்ந்து கெரசேனர் நாட்டை அடைந்தனர்.
2. அவர் படகை விட்டு இறங்கியதும் அசுத்த ஆவியேறிய ஒருவன் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தான்.
3. கல்லறைகளே அவன் தங்குமிடம் அவனை யாரும் சங்கிலியால் கூடக் கட்ட முடியவில்லை.
4. ஏனெனில், பலமுறை அவனுக்கு விலங்கும் சங்கிலியும் மாட்டியிருந்தும், சங்கிலிகளை முறித்து விலங்குகளைத் தகர்த்தெறிவான். யாரும் அவனை அடக்க முடியவில்லை.
5. அவன் இரவு பகலாய் எந்நேரமும் கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சலிடுவான். கற்களிலும் தன்னைக் கீறிக்கொள்வான்.
6. அவன் தொலைவிலிருந்து இயேசுவைக் கண்டு ஓடி வந்து அவர்முன் பணிந்து,
7. "இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, என் காரியத்தில் உன்னத கடவுளின் மகனே, என் காரியத்தில் ஏன் தலையிடுகிறீர்? கடவுள் பெயரால் உம்மைக் கேட்கிறேன், என்னை வதைக்க வேண்டாம்" என்று உரக்கக் கத்தினான்.
8. ஏனெனில் அவர், "அசுத்த அவியே, இவனை விட்டுப் போ" என்று சொல்லியிருந்தார்.
9. "உன் பெயர் என்ன?" என்று இயேசு அவனைக் கேட்டார். "என்பெயர் 'படை', ஏனெனில், நாங்கள் பலர்" என்றான்.
10. அவற்றை அந்நாட்டை விட்டு விரட்டாதபடி அவன் அவரை வருந்தி வேண்டினான்.
11. அங்கே மலைச்சாரலில் பன்றிகன் பெருங்கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன.
12. "நாங்கள் பன்றிகளுக்குள் போகும்படி எங்களை அனுப்பும்" என்று ஆவிகள் அவரை வேண்டவே,
13. அவற்றிற்கு அவர் விடை கொடுத்தார். அசுத்த ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. அப்பன்றிக் கூட்டம் மேட்டிலிருந்து கடலில் பாய்ந்து மூழ்கலாயிற்று.
14. அவை ஏறக்குறைய இரண்டாயிரம் இருக்கும். அவற்றை மேய்த்தவர்களோ ஓடிப் போய் நகரிலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தனர். நடந்தது என்னவென்று பார்க்க மக்கள் வந்தனர்.
15. அவர்கள் இயேசுவிடம் வந்து, பேய்பிடித்திருந்தவன் -- முழுப் பேய்ப்படையே பிடித்திருந்த அவன் -- ஆடையணிந்து, தன்னுணர்வுடன் உட்கார்ந்திருப்பதைக் கண்டு அஞ்சினர்.
16. பார்த்தவர்கள் பேய்பிடித்திருந்தவனுக்கு நேர்ந்ததையும் பன்றிகளைப்பற்றிய செய்தியையும் அவர்களுக்குச் சொன்னார்கள்.
17. அப்பொழுது அவர்கள், தம் நாட்டை விட்டுச் செல்லுமாறு அவரை வேண்டத் தொடங்கினர்.
18. அவர் படகேறும்பொழுது, பேய்பிடித்திருந்தவன் தானும் அவருடன் இருக்கவேண்டும் என அவரை வேண்டலானான்.
19. ஆனால் அவர் அதற்கு இசையாமல் அவனைப் பார்த்து, "உன் வீட்டிற்கு உன் உற்றாரிடம் போ. ஆண்டவர் உன்மீது இரங்கி உனக்குச் செய்ததெல்லாம் அவர்களுக்குத் தெரிவி" என்றார்.
20. அவன் சென்று இயேசு தனக்குச் செய்ததெல்லாம் தெக்கப்போலி நாட்டில் அறிவிக்கத் தொடங்கினான். கேட்டவரெல்லாம் வியப்புற்றனர்.
21. இயேசு படகேறி, மீண்டும் கடலைக் கடந்து, இக்கரையை அடைந்ததும் பெருங்கூட்டமாக மக்கள் அவரிடம் வந்தனர். அவர் கடலோரத்தில் இருந்தார்.
22. செபக்கூடத் தலைவர்களுள் ஒருவனான யாயீர் என்பவன் வந்து, அவரைக் கண்டு, காலில் விழுந்து,
23. "என் மகள் சாகக்கிடக்கிறாள். நீர் வந்து அவள் மீது உம் கைகளை வையும், அவள் குணமாகிப் பிழைத்துக்கொள்வாள்" என்று அவரை வருந்தி வேண்டினான்.
24. அவர் அவனுடன் சென்றார். பெருங்கூட்டம் அவரைப் பின்தொடர்ந்து நெருக்கியது.
25. பன்னிரு ஆண்டுகளாய்ப் பெரும்பாட்டினால் வருந்திய பெண் ஒருத்தி அக்கூட்டத்தில் இருந்தாள்.
26. அவள் மருத்துவர் பலரிடம் மிகத் துன்பப்பட்டும், உடைமையெல்லாம் செலவிட்டும் ஒரு பயனும் அடையவில்லை. மாறாக, அவள் நிலைமை இன்னும் மோசமாயிற்று.
27. அவள் இயேசுவைப்பற்றிய செய்தி கேள்வியுற்றுக் கூட்டத்தில் அவருக்குப் பின்னே வந்து அவருடைய போர்வையைத் தொட்டாள்.
28. ஏனெனில், அவள், "நான் அவருடைய ஆடையையாகிலும் தொட்டால் குணம் பெறுவேன்" என்று சொல்லிக்கொண்டாள்.
29. உடனே அவளுடைய உதிரப்பெருக்கு வற்றிப் போயிற்று. அவள் நோயினின்று குணம் பெற்றதைத் தன் உடலில் உணர்ந்தாள்.
30. உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதை உணர்ந்து, கூட்டத்திடையே திரும்பி, "என் ஆடையைத் தொட்டது யார்?" என்று கேட்டார்.
31. அவருடைய சீடர் அவரை நோக்கி, "கூட்டம் உம்மை நெருக்குவதைக் கண்டும், ' என்னைத் தொட்டது யார்?' என்கிறீரே" என்றனர்.
32. அவரோ, இதைச் செய்தவளைக் காணுமாறு சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தார்.
33. அப்போது அந்தப் பெண் தனக்கு நேர்ந்ததை அறிந்தவளாய், அஞ்சி நடுங்கிக்கொண்டு வந்து, அவர் காலில் விழுந்து உண்மையெல்லாம் உரைத்தாள்.
34. அவரோ அவளை நோக்கி, "மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று, சமாதானமாய்ப் போ. நோய் நீங்கி நலமாயிரு" என்றார்.
35. அவர் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே செபக்கூடத் தலைவனது வீட்டிலிருந்து ஆட்கள் வந்து, "உம் மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரை செய்கிறீர்?" என்றனர்.
36. அவர்கள் சொன்னது காதில் விழவே, இயேசு செபக்கூடத் தலைவனிடம், "அஞ்சாதே விசுவாசத்தோடு மட்டும் இரு" எனக் கூறினார்.
37. இராயப்பர், யாகப்பர், யாகப்பரின் சகோதரர் அருளப்பர் இவர்களைத் தவிர வேறெவரையும் தம்முடன் வரவிட வில்லை.
38. அவர்கள் செபக்கூடத் தலைவனின் வீட்டுக்கு வந்தபோது, அவர் சந்தடியையும், ஓலமிட்டு அழுது புலம்புவோரையும் கண்டார்.
39. உள்ளே போய், "ஏன் இந்தச் சந்தடி? ஏன் இந்த அழுகை ? சிறுமி சாகவில்லை, தூங்குகிறாள்" என்றார்.
40. அவர்களோ அவரை ஏளனம் செய்தனர். ஆனால், அவர் அனைவரையும் வெளியே அனுப்பிச் சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் வந்தவரையும் அழைத்துக்கொண்டு, சிறுமி இருந்த இடத்திற்கு வந்தார்.
41. சிறுமியின் கையைப் பிடித்து, "தலித்தாகூம்" -- அதாவது, "சிறுமியே, உனக்குச் சொல்லுகிறேன்: எழுந்திரு" என்றார்.
42. என்றதும், சிறுமி எழுந்து நடக்கலானாள். அவளுக்கு வயது பன்னிரண்டு. மக்கள் பெரிதும் திகைத்துப் போயினர்.
43. இது யாருக்கும் தெரியக்கூடாது என்று அவர்களுக்குக் கண்டிப்பாகக் கட்டளையிட்டார். அவளுக்கு உணவுகொடுக்கச் சொன்னார்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 16 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 5 / 16
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
14 15 16
மாற்கு 5:72
1 அவர்கள் அக்கரை சேர்ந்து கெரசேனர் நாட்டை அடைந்தனர். 2 அவர் படகை விட்டு இறங்கியதும் அசுத்த ஆவியேறிய ஒருவன் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தான். 3 கல்லறைகளே அவன் தங்குமிடம் அவனை யாரும் சங்கிலியால் கூடக் கட்ட முடியவில்லை. 4 ஏனெனில், பலமுறை அவனுக்கு விலங்கும் சங்கிலியும் மாட்டியிருந்தும், சங்கிலிகளை முறித்து விலங்குகளைத் தகர்த்தெறிவான். யாரும் அவனை அடக்க முடியவில்லை. 5 அவன் இரவு பகலாய் எந்நேரமும் கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சலிடுவான். கற்களிலும் தன்னைக் கீறிக்கொள்வான். 6 அவன் தொலைவிலிருந்து இயேசுவைக் கண்டு ஓடி வந்து அவர்முன் பணிந்து, 7 "இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, என் காரியத்தில் உன்னத கடவுளின் மகனே, என் காரியத்தில் ஏன் தலையிடுகிறீர்? கடவுள் பெயரால் உம்மைக் கேட்கிறேன், என்னை வதைக்க வேண்டாம்" என்று உரக்கக் கத்தினான். 8 ஏனெனில் அவர், "அசுத்த அவியே, இவனை விட்டுப் போ" என்று சொல்லியிருந்தார். 9 "உன் பெயர் என்ன?" என்று இயேசு அவனைக் கேட்டார். "என்பெயர் 'படை', ஏனெனில், நாங்கள் பலர்" என்றான். 10 அவற்றை அந்நாட்டை விட்டு விரட்டாதபடி அவன் அவரை வருந்தி வேண்டினான். 11 அங்கே மலைச்சாரலில் பன்றிகன் பெருங்கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன. 12 "நாங்கள் பன்றிகளுக்குள் போகும்படி எங்களை அனுப்பும்" என்று ஆவிகள் அவரை வேண்டவே, 13 அவற்றிற்கு அவர் விடை கொடுத்தார். அசுத்த ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. அப்பன்றிக் கூட்டம் மேட்டிலிருந்து கடலில் பாய்ந்து மூழ்கலாயிற்று. 14 அவை ஏறக்குறைய இரண்டாயிரம் இருக்கும். அவற்றை மேய்த்தவர்களோ ஓடிப் போய் நகரிலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தனர். நடந்தது என்னவென்று பார்க்க மக்கள் வந்தனர். 15 அவர்கள் இயேசுவிடம் வந்து, பேய்பிடித்திருந்தவன் -- முழுப் பேய்ப்படையே பிடித்திருந்த அவன் -- ஆடையணிந்து, தன்னுணர்வுடன் உட்கார்ந்திருப்பதைக் கண்டு அஞ்சினர். 16 பார்த்தவர்கள் பேய்பிடித்திருந்தவனுக்கு நேர்ந்ததையும் பன்றிகளைப்பற்றிய செய்தியையும் அவர்களுக்குச் சொன்னார்கள். 17 அப்பொழுது அவர்கள், தம் நாட்டை விட்டுச் செல்லுமாறு அவரை வேண்டத் தொடங்கினர். 18 அவர் படகேறும்பொழுது, பேய்பிடித்திருந்தவன் தானும் அவருடன் இருக்கவேண்டும் என அவரை வேண்டலானான். 19 ஆனால் அவர் அதற்கு இசையாமல் அவனைப் பார்த்து, "உன் வீட்டிற்கு உன் உற்றாரிடம் போ. ஆண்டவர் உன்மீது இரங்கி உனக்குச் செய்ததெல்லாம் அவர்களுக்குத் தெரிவி" என்றார். 20 அவன் சென்று இயேசு தனக்குச் செய்ததெல்லாம் தெக்கப்போலி நாட்டில் அறிவிக்கத் தொடங்கினான். கேட்டவரெல்லாம் வியப்புற்றனர். 21 இயேசு படகேறி, மீண்டும் கடலைக் கடந்து, இக்கரையை அடைந்ததும் பெருங்கூட்டமாக மக்கள் அவரிடம் வந்தனர். அவர் கடலோரத்தில் இருந்தார். 22 செபக்கூடத் தலைவர்களுள் ஒருவனான யாயீர் என்பவன் வந்து, அவரைக் கண்டு, காலில் விழுந்து, 23 "என் மகள் சாகக்கிடக்கிறாள். நீர் வந்து அவள் மீது உம் கைகளை வையும், அவள் குணமாகிப் பிழைத்துக்கொள்வாள்" என்று அவரை வருந்தி வேண்டினான். 24 அவர் அவனுடன் சென்றார். பெருங்கூட்டம் அவரைப் பின்தொடர்ந்து நெருக்கியது. 25 பன்னிரு ஆண்டுகளாய்ப் பெரும்பாட்டினால் வருந்திய பெண் ஒருத்தி அக்கூட்டத்தில் இருந்தாள். 26 அவள் மருத்துவர் பலரிடம் மிகத் துன்பப்பட்டும், உடைமையெல்லாம் செலவிட்டும் ஒரு பயனும் அடையவில்லை. மாறாக, அவள் நிலைமை இன்னும் மோசமாயிற்று. 27 அவள் இயேசுவைப்பற்றிய செய்தி கேள்வியுற்றுக் கூட்டத்தில் அவருக்குப் பின்னே வந்து அவருடைய போர்வையைத் தொட்டாள். 28 ஏனெனில், அவள், "நான் அவருடைய ஆடையையாகிலும் தொட்டால் குணம் பெறுவேன்" என்று சொல்லிக்கொண்டாள். 29 உடனே அவளுடைய உதிரப்பெருக்கு வற்றிப் போயிற்று. அவள் நோயினின்று குணம் பெற்றதைத் தன் உடலில் உணர்ந்தாள். 30 உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதை உணர்ந்து, கூட்டத்திடையே திரும்பி, "என் ஆடையைத் தொட்டது யார்?" என்று கேட்டார். 31 அவருடைய சீடர் அவரை நோக்கி, "கூட்டம் உம்மை நெருக்குவதைக் கண்டும், ' என்னைத் தொட்டது யார்?' என்கிறீரே" என்றனர். 32 அவரோ, இதைச் செய்தவளைக் காணுமாறு சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தார். 33 அப்போது அந்தப் பெண் தனக்கு நேர்ந்ததை அறிந்தவளாய், அஞ்சி நடுங்கிக்கொண்டு வந்து, அவர் காலில் விழுந்து உண்மையெல்லாம் உரைத்தாள். 34 அவரோ அவளை நோக்கி, "மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று, சமாதானமாய்ப் போ. நோய் நீங்கி நலமாயிரு" என்றார். 35 அவர் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே செபக்கூடத் தலைவனது வீட்டிலிருந்து ஆட்கள் வந்து, "உம் மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரை செய்கிறீர்?" என்றனர். 36 அவர்கள் சொன்னது காதில் விழவே, இயேசு செபக்கூடத் தலைவனிடம், "அஞ்சாதே விசுவாசத்தோடு மட்டும் இரு" எனக் கூறினார். 37 இராயப்பர், யாகப்பர், யாகப்பரின் சகோதரர் அருளப்பர் இவர்களைத் தவிர வேறெவரையும் தம்முடன் வரவிட வில்லை. 38 அவர்கள் செபக்கூடத் தலைவனின் வீட்டுக்கு வந்தபோது, அவர் சந்தடியையும், ஓலமிட்டு அழுது புலம்புவோரையும் கண்டார். 39 உள்ளே போய், "ஏன் இந்தச் சந்தடி? ஏன் இந்த அழுகை ? சிறுமி சாகவில்லை, தூங்குகிறாள்" என்றார். 40 அவர்களோ அவரை ஏளனம் செய்தனர். ஆனால், அவர் அனைவரையும் வெளியே அனுப்பிச் சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் வந்தவரையும் அழைத்துக்கொண்டு, சிறுமி இருந்த இடத்திற்கு வந்தார். 41 சிறுமியின் கையைப் பிடித்து, "தலித்தாகூம்" -- அதாவது, "சிறுமியே, உனக்குச் சொல்லுகிறேன்: எழுந்திரு" என்றார். 42 என்றதும், சிறுமி எழுந்து நடக்கலானாள். அவளுக்கு வயது பன்னிரண்டு. மக்கள் பெரிதும் திகைத்துப் போயினர். 43 இது யாருக்கும் தெரியக்கூடாது என்று அவர்களுக்குக் கண்டிப்பாகக் கட்டளையிட்டார். அவளுக்கு உணவுகொடுக்கச் சொன்னார்.
மொத்தம் 16 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 5 / 16
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
14 15 16
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References