தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
மாற்கு
1. ஓய்வுநாள் கழிந்ததும் மதலேன்மரியாளும் யாகப்பரின் தாய் மரியாளும் சலோமேயும் இயேசுவின் உடலில் பூசுவதற்காகப் பரிமளப் பொருட்கள் வாங்கினர்.
2. வாரத்தின் முதல்நாள் அதிகாலையில் கதிரவன் எழுந்தபின் கல்லறைக்கு வந்தனர்.
3. "கல்லறை வாயிலிலிருந்து, யார் நமக்குக் கல்லைப் புரட்டிவிடுவார்?" என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டனர்.
4. நிமிர்ந்து பார்க்கும்பொழுது கல் புரண்டிருப்பதைக் கண்டனர். அதுவோ மிகப் பெரிய கல்.
5. அவர்கள் கல்லறைக்குள் நுழைந்தபொழுது, வெண்ணாடை அணிந்து வலப்பக்கத்தில் அமர்ந்திருந்த ஓர் இளைஞனைக் கண்டு திகிலுற்றனர். அவன் அவர்களை நோக்கி, "திகிலுறவேண்டாம்.
6. சிலுவையிலறையுண்ட நாசரேத்தூர் இயேசுவைத் தேடுகிறீர்கள். அவர் உயிர்த்துவிட்டார். இங்கே இல்லை. இதோ! அவரை வைத்த இடம்.
7. நீங்கள் போய் அவருடைய சீடர்களிடமும் இராயப்பரிடமும், "உங்களுக்குமுன் அவர் கலிலேயாவிற்குப் போகிறார். அவர் உங்களுக்குக் கூறியவாறு நீங்கள் அவரை அங்கே காண்பீர்கள்' என்று சொல்லுங்கள்" என்றான்.
8. அவர்கள் வெளியே வந்து கல்லறையை விட்டு ஓடினார்கள். ஏனெனில், திகைப்பும் நடுக்கமும் அவர்களை ஆட்கொணடது. அச்சம் மேலிட அவர்கள் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லவில்லை.
9. வாரத்தின் முதல்நாள் காலையில், அவர் உயிர்த்தெழுந்து முதலில் மதலேன்மரியாளுக்குத் தேன்றினார். இவளிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களைத் துரத்தியிருந்தார்.
10. முன்பு இயேசுவோடு இருந்தவர்களிடம் அவள் போய் இதை அறிவித்தாள். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தனர்.
11. இயேசு உயிருடனிருக்கிறார், அவள் அவரைக் கண்டாள் என்பதை அவர்கள் கேட்டபோது நம்பவில்லை.
12. அதன்பின் அவர்களுள் இருவர் நாட்டுப்புறத்திற்கு நடந்துபோகையில், அவர்களுக்கு வேற்றுருவில் தோன்றினார்.
13. அவர்களும் வந்து மற்றவர்களுக்கு அறிவித்தார்கள். அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை.
14. இறுதியாக, பதினொருவரும் உண்ணும்பொழுது அவர் தோன்றி, உயிர்த்தெழுந்த தம்மைக் கண்டவர்கள் சொன்னதை நம்பாத அவர்களுடைய விசுவாசமின்மையும் பிடிவாதத்தையும் கடிந்துகொண்டார்.
15. மேலும் அவர்களை நோக்கி, "உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.
16. விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான், விசுவசியாதவனுக்குத் தண்டனை கிடைக்கும்.
17. விசுவசிப்பவர்களிடம் இவ்வருங்குறிகள் காணப்படும்; என் பெயரால் பேய்களை ஓட்டுவர், புதிய மொழிகளைப் பேசுவர்,
18. பாம்புகளைக் கையால் பிடிப்பர். 'கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கிழைக்காது. பிணியாளிகள் மேல் கைகளை வைப்பர், அவர்களும் நலமடைவர்" என்றுரைத்தார்.
19. இவ்வாறு அவர்களோடு பேசி முடித்தபின், ஆண்டவர் இயேசு விண்ணேற்படைந்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்தார்.
20. அவர்கள் புறப்பட்டுப் போய் எங்கும் தூதுரைத்தனர். ஆண்டவரும் அவர்களோடு செயல்புரிந்து, உடனிகழ்ந்த அருங்குறிகளால் தேவ வார்த்தையை உறுதிப்படுத்தினார்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 16 Chapters, Current Chapter 16 of Total Chapters 16
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14 15 16
மாற்கு 16:47

×

Alert

×

tamil Letters Keypad References