தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
மாற்கு
1. அவர்கள் யெருசலேமை அணுகி ஒலிவமலைக்கு அருகில் இருந்த பெத்பகே, பெத்தானியா என்ற ஊர்களை அடுத்து வந்தபொழுது, அவர் தம் சீடர்களுள் இருவரை அழைத்து,
2. "உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குப் போங்கள். அதில் நுழைந்தவுடன் இதுவரை யாரும் ஏறாத கழுதைக்குட்டி ஒன்று கட்டியிருக்கக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்.
3. ' என்ன செய்கிறீர்கள்?' என்று யாராவது உங்களைக் கேட்டால், 'இது ஆண்டவருக்குத் தேவை. உடனே திருப்பி இங்கே அனுப்பிவிடுவார்' என்றும் கூறுங்கள்" எனச் சொல்லி அனுப்பினார்.
4. அவர்கள் சென்று தெருவில் ஒரு வாசலருகே கழுதைக்குட்டியொன்று கட்டியிருக்கக் கண்டு, அதை அவிழ்த்தார்கள்.
5. அங்கே நின்றவர்களில் சிலர் அவர்களிடம், "என்ன செய்கிறீர்கள்? குட்டியை அவிழ்க்கிறீர்களே" என்றார்கள்.
6. இயேசு சொன்னபடி சீடர் சொல்லவே, அவர்கள் விட்டுவிட்டார்கள்.
7. குட்டியை இயேசுவிடம் கொண்டுவந்து, தங்கள் போர்வைகளை அதன்மேல் போட, அவர் அதன்மேல் அமர்ந்தார்.
8. பலர் தங்கள் போர்வைகளை வழியில் விரித்தனர். வேறு சிலர் வயல் வெளிகளில் இலைத்தழைகளை வெட்டி வழியில் பரப்பினர்.
9. முன்னே சென்றவர்களும் பின்னே வந்தவர்களும், "ஓசான்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் வாழி! நம் தந்தையாம் தாவீதின் அரசு வருகிறது.
10. அது வாழ்க! உன்னதங்களில் ஓசான்னா!" என்று ஆர்ப்பரித்தனர்.
11. அவர் யெருசலேமிற்கு வந்து கோவிலுக்குள் சென்றார். எல்லாம் சுற்றிப்பார்த்தார். ஏற்கெனவே பொழுது போய்விட்டதால் பன்னிருவருடன் பெத்தானியாவுக்குச் சென்றார்.
12. மறுநாள் பெத்தானியாவிலிருந்து போகும்பொழுது அவருக்குப் பசித்தது.
13. இலைகள் நிறைந்த ஓர் அத்திமரத்தைத் தொலைவிலே கண்டு, அதில் ஏதாவது அகப்படுமாவென்று பார்க்கப்போனார். அதன் அருகே வந்தபோது இலைகள் தவிர வேறொன்றும் காணவில்லை. ஏனெனில், அது அத்திப்பழக் காலமன்று.
14. அவர் அதை நோக்கி, "இனி ஒருவனும் ஒருகாலும் உன் பழத்தை உண்ணாதிருக்கட்டும்" என்றார். அவருடைய சீடர்கள் இதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
15. அவர்கள் யெருசலேமிற்கு வந்தார்கள். அவர் கோயிலுக்குள் சென்று அங்கே விற்பவர்களையும் வாங்குபவர்களையும் துரத்தத் தொடங்கி, நாணயம் மாற்றுபவர்களின் பலகைகளையும், புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துவிட்டார்.
16. யாதொரு பண்டத்தையும் கோயில்வழியாகக் கொண்டுபோக எவனையும் விடவில்லை.
17. என் வீடு எனப்படும் என்று எழுதியிருக்கிறதல்லவா? நீங்களோ அதைக் கள்வர் குகை யாக்கிவிட்டீர்கள்" என்று அவர்களுக்குப் போதிக்கலானார்.
18. இதைக் கேட்டுத் தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞரும் அவரை எப்படித் தொலைக்கலாம் என்று வழித்தேடினார்கள். ஏனெனில், மக்கள்கூட்டம் அனைத்தும் அவருடைய போதனையைப்பற்றி மலைத்துப்போனதால் அவர்கள் அவருக்கு அஞ்சியிருந்தார்கள்.
19. மாலையானதும் பட்டணத்தை விட்டு வெளியேறினார்.
20. காலையில் அவர்கள் அவ்வழியோரமாய்ப் போகும்பொழுது அந்த அத்திமரம் வேரோடு பட்டுப்போயிருக்கக் கண்டார்கள்.
21. இராயப்பர் நிகழ்ந்ததை நினைவுகூர்ந்து, அவரை நோக்கி, "ராபி, நீர் சபித்த அத்திமரம் இதோ! பட்டுப்போயிற்று" என்றார்.
22. இயேசு மறமொழியாக, "கடவுள்மீது விசுவாசம் கொண்டிருங்கள்.
23. உறுதியாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்: இம்மலையைப் பார்த்து, 'நீ பெயர்ந்து கடலில் விழு' என்று சொல்லி, தான் சொல்லியதெல்லாம் நிறைவேறும் என்று தன்னுளத்தில் தயங்காது விசுவசிப்பவன் எவனோ, அவனுக்கு அது கைகூடும்.
24. ஆதலால் நான் உங்களுக்குக் கூறுகிறேன்: நீங்கள் செபத்தில் எதெதைக் கேட்பீர்களோ, அதையெல்லாம் பெற்றுக்கொண்டோம் என்று விசுவசியுங்கள், உங்களுக்குக் கைகூடும்.
25. நீங்கள் செபம் செய்ய நிற்கும்போது யார்மேலாவது உங்களுக்கு மனத்தாங்கல் ஏதேனும் இருந்தால், மன்னித்துவிடுங்கள்.
26. அவ்வாறே வானகத்திலிருக்கும் உங்கள் தந்தையும் உங்களுடைய குற்றங்களை மன்னித்துவிடுவார்" என்றார்.
27. மீண்டும் அவர்கள் யெருசலேமிற்கு வந்தார்கள். அவர் கோயிலின் முற்றத்தில் உலாவிக்கொண்டிருக்கும்பொழுது, தலைமைக்குருக்களும், மறைநூல் அறிஞரும் மூப்பரும் அவரிடம் வந்து,
28. "எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறீர் ? அல்லது, இப்படிச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தது யார்?" என்றார்கள்.
29. அதற்கு இயேசு, "நானும் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன், பதில் சொல்லுங்கள். எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறுவேன்.
30. அருளப்பருடைய ஞானஸ்நானம் வானகத்திலிருந்து வந்ததா? மனிதரிடமிருந்து வந்ததா? பதில் சொல்லுங்கள்" என்றார்.
31. அவர்கள் தங்களுக்குள் ஆலோசித்ததாவது: " 'வானகத்திலிருந்து வந்தது' என்போமாகில், 'பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை?' என்று கேட்பார்.
32. இல்லை, 'மனிதரிடமிருந்து வந்தது' என்று சொல்லலாமா?" -- பொதுமக்களுக்கு அஞ்சினார்கள். ஏனெனில், எல்லாரும் அருளப்பரை உண்மையான இறைவாக்கினர் என்று கருதிவந்தனர்.
33. எனவே, அவர்கள் இயேசுவுக்கு மறுமொழியாக, "எங்களுக்குத் தெரியாது" என்றார்கள். அதற்கு இயேசு, "நானும் எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறேன் என உங்களுக்குச் சொல்லேன்" என்றார்.

பதிவுகள்

மொத்தம் 16 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 11 / 16
1 2
3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
1 அவர்கள் யெருசலேமை அணுகி ஒலிவமலைக்கு அருகில் இருந்த பெத்பகே, பெத்தானியா என்ற ஊர்களை அடுத்து வந்தபொழுது, அவர் தம் சீடர்களுள் இருவரை அழைத்து, 2 "உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குப் போங்கள். அதில் நுழைந்தவுடன் இதுவரை யாரும் ஏறாத கழுதைக்குட்டி ஒன்று கட்டியிருக்கக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். 3 ' என்ன செய்கிறீர்கள்?' என்று யாராவது உங்களைக் கேட்டால், 'இது ஆண்டவருக்குத் தேவை. உடனே திருப்பி இங்கே அனுப்பிவிடுவார்' என்றும் கூறுங்கள்" எனச் சொல்லி அனுப்பினார். 4 அவர்கள் சென்று தெருவில் ஒரு வாசலருகே கழுதைக்குட்டியொன்று கட்டியிருக்கக் கண்டு, அதை அவிழ்த்தார்கள். 5 அங்கே நின்றவர்களில் சிலர் அவர்களிடம், "என்ன செய்கிறீர்கள்? குட்டியை அவிழ்க்கிறீர்களே" என்றார்கள். 6 இயேசு சொன்னபடி சீடர் சொல்லவே, அவர்கள் விட்டுவிட்டார்கள். 7 குட்டியை இயேசுவிடம் கொண்டுவந்து, தங்கள் போர்வைகளை அதன்மேல் போட, அவர் அதன்மேல் அமர்ந்தார். 8 பலர் தங்கள் போர்வைகளை வழியில் விரித்தனர். வேறு சிலர் வயல் வெளிகளில் இலைத்தழைகளை வெட்டி வழியில் பரப்பினர். 9 முன்னே சென்றவர்களும் பின்னே வந்தவர்களும், "ஓசான்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் வாழி! நம் தந்தையாம் தாவீதின் அரசு வருகிறது. 10 அது வாழ்க! உன்னதங்களில் ஓசான்னா!" என்று ஆர்ப்பரித்தனர். 11 அவர் யெருசலேமிற்கு வந்து கோவிலுக்குள் சென்றார். எல்லாம் சுற்றிப்பார்த்தார். ஏற்கெனவே பொழுது போய்விட்டதால் பன்னிருவருடன் பெத்தானியாவுக்குச் சென்றார். 12 மறுநாள் பெத்தானியாவிலிருந்து போகும்பொழுது அவருக்குப் பசித்தது. 13 இலைகள் நிறைந்த ஓர் அத்திமரத்தைத் தொலைவிலே கண்டு, அதில் ஏதாவது அகப்படுமாவென்று பார்க்கப்போனார். அதன் அருகே வந்தபோது இலைகள் தவிர வேறொன்றும் காணவில்லை. ஏனெனில், அது அத்திப்பழக் காலமன்று. 14 அவர் அதை நோக்கி, "இனி ஒருவனும் ஒருகாலும் உன் பழத்தை உண்ணாதிருக்கட்டும்" என்றார். அவருடைய சீடர்கள் இதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். 15 அவர்கள் யெருசலேமிற்கு வந்தார்கள். அவர் கோயிலுக்குள் சென்று அங்கே விற்பவர்களையும் வாங்குபவர்களையும் துரத்தத் தொடங்கி, நாணயம் மாற்றுபவர்களின் பலகைகளையும், புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துவிட்டார். 16 யாதொரு பண்டத்தையும் கோயில்வழியாகக் கொண்டுபோக எவனையும் விடவில்லை. 17 என் வீடு எனப்படும் என்று எழுதியிருக்கிறதல்லவா? நீங்களோ அதைக் கள்வர் குகை யாக்கிவிட்டீர்கள்" என்று அவர்களுக்குப் போதிக்கலானார். 18 இதைக் கேட்டுத் தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞரும் அவரை எப்படித் தொலைக்கலாம் என்று வழித்தேடினார்கள். ஏனெனில், மக்கள்கூட்டம் அனைத்தும் அவருடைய போதனையைப்பற்றி மலைத்துப்போனதால் அவர்கள் அவருக்கு அஞ்சியிருந்தார்கள். 19 மாலையானதும் பட்டணத்தை விட்டு வெளியேறினார். 20 காலையில் அவர்கள் அவ்வழியோரமாய்ப் போகும்பொழுது அந்த அத்திமரம் வேரோடு பட்டுப்போயிருக்கக் கண்டார்கள். 21 இராயப்பர் நிகழ்ந்ததை நினைவுகூர்ந்து, அவரை நோக்கி, "ராபி, நீர் சபித்த அத்திமரம் இதோ! பட்டுப்போயிற்று" என்றார். 22 இயேசு மறமொழியாக, "கடவுள்மீது விசுவாசம் கொண்டிருங்கள். 23 உறுதியாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்: இம்மலையைப் பார்த்து, 'நீ பெயர்ந்து கடலில் விழு' என்று சொல்லி, தான் சொல்லியதெல்லாம் நிறைவேறும் என்று தன்னுளத்தில் தயங்காது விசுவசிப்பவன் எவனோ, அவனுக்கு அது கைகூடும். 24 ஆதலால் நான் உங்களுக்குக் கூறுகிறேன்: நீங்கள் செபத்தில் எதெதைக் கேட்பீர்களோ, அதையெல்லாம் பெற்றுக்கொண்டோம் என்று விசுவசியுங்கள், உங்களுக்குக் கைகூடும். 25 நீங்கள் செபம் செய்ய நிற்கும்போது யார்மேலாவது உங்களுக்கு மனத்தாங்கல் ஏதேனும் இருந்தால், மன்னித்துவிடுங்கள். 26 அவ்வாறே வானகத்திலிருக்கும் உங்கள் தந்தையும் உங்களுடைய குற்றங்களை மன்னித்துவிடுவார்" என்றார். 27 மீண்டும் அவர்கள் யெருசலேமிற்கு வந்தார்கள். அவர் கோயிலின் முற்றத்தில் உலாவிக்கொண்டிருக்கும்பொழுது, தலைமைக்குருக்களும், மறைநூல் அறிஞரும் மூப்பரும் அவரிடம் வந்து, 28 "எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறீர் ? அல்லது, இப்படிச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தது யார்?" என்றார்கள். 29 அதற்கு இயேசு, "நானும் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன், பதில் சொல்லுங்கள். எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறுவேன். 30 அருளப்பருடைய ஞானஸ்நானம் வானகத்திலிருந்து வந்ததா? மனிதரிடமிருந்து வந்ததா? பதில் சொல்லுங்கள்" என்றார். 31 அவர்கள் தங்களுக்குள் ஆலோசித்ததாவது: " 'வானகத்திலிருந்து வந்தது' என்போமாகில், 'பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை?' என்று கேட்பார். 32 இல்லை, 'மனிதரிடமிருந்து வந்தது' என்று சொல்லலாமா?" -- பொதுமக்களுக்கு அஞ்சினார்கள். ஏனெனில், எல்லாரும் அருளப்பரை உண்மையான இறைவாக்கினர் என்று கருதிவந்தனர். 33 எனவே, அவர்கள் இயேசுவுக்கு மறுமொழியாக, "எங்களுக்குத் தெரியாது" என்றார்கள். அதற்கு இயேசு, "நானும் எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறேன் என உங்களுக்குச் சொல்லேன்" என்றார்.
மொத்தம் 16 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 11 / 16
1 2
3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
×

Alert

×

Tamil Letters Keypad References