தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
மல்கியா
1. இதோ, நமக்கு முன்பாக நம் தூதரை அனுப்புவோம்; அவர் நமக்குமுன் வழியை ஆயத்தம் செய்வார்; நீங்கள் தேடுகின்ற ஆண்டவர் தீடீரெனத் தம் கோயிலுக்கு வருவார்; நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
2. ஆனால் அவர் வரும் நாளைத் தாங்க வல்லவன் எவன்? அவர் தோன்றும்போது அவர் முன் நிற்கக்கூடியவன் யார்? ஏனெனில் அவர் புடமிடுகிறவனின் நெருப்புப்போலும், வண்ணாரின் காரம் போலும் இருப்பார்.
3. புடமிடுபவன் போலவும் வெள்ளியைச் சுத்தம் செய்பவன் போலவும் உட்காருவார்; லேவியின் மக்களைத் தூய்மையாக்கிப் பொன், வெள்ளியைப்போலப் புடம்போடுவார்; அவர்களும் ஆண்டவருக்கு ஏற்புடைய முறையில் காணிக்கையும் செலுத்துவர்.
4. அதன்பிறகு யூதாவின் காணிக்கையும் யெருசலேமின் காணிக்கையும், பண்டை நாட்களில்- முற்காலத்தில்- இருந்தது போல் ஆண்டவருக்கு உகந்தவையாயிருக்கும்.
5. அப்போது, மந்திர வித்தைக்காரர், விபசாரிகள், பொய்யாணையிடுபவர்கள், கூலிக்காரர்க்குக் கூலி கொடுக்காத வம்பர்கள், கைம்பெண்களையும் திக்கற்றவர்களையும் கொடுமைப்படுத்துகிறவர்கள், அந்நியரை விருந்தோம்பாமல் புறக்கணிக்கிறவர்கள், நமக்கு அஞ்சி நடக்காதவர்கள் ஆகியவர்களுக்கு எதிராக நாமே சாட்சியாய் நின்று தீர்ப்பு வழங்க விரைந்து வருவோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
6. யாக்கோபின் மக்களே, ஆண்டவராகிய நாம் மாறாதவராய் இருப்பதால் தான், நீங்கள் இன்னும் அழியாமல் இருக்கிறீர்கள்.
7. உங்கள் தந்தையரின் நாள் முதலே நம் கற்பனைகளை விட்டகன்று போனீர்கள்; அவற்றைக் கடைப்பிடிக்கவுமில்லை. நம்மிடம் திரும்பி வாருங்கள், நாமும் உங்களிடம் திரும்பி வருவோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர். ஆனால், 'நாங்கள் எவ்வாறு திரும்பி வருவோம்?' என்கிறீர்கள்.
8. மனிதன் கடவுளைக் கொள்ளையடிக்க முடியுமா? ஆனால் நீங்கள் நம்மைக் கொள்ளையடிக்கிறீர்களே! 'எவ்வகையில் உம்மை நாங்கள் கொள்ளையடிக்கிறோம் 'என்று கேட்கிறீர்களா? நீங்கள் தரவேண்டிய பத்திலொரு பங்கிலும் காணிக்கைகளிலுந்தான்.
9. நீங்கள் அனைவரும் நம்மையே கொள்ளையடிப்பதால், நீங்கள் பெருஞ் சாபனைக்கு உள்ளானவர்கள்.
10. பத்திலொரு பங்கு முழுவதையும் கொண்டு வந்து களஞ்சியத்தில் கொட்டுங்கள்; அப்பொழுது நம் கோயிலில் உணவு இருக்கும்; அவ்வாறு செய்த பின், வானத்தின் பலகணிகளைத் திறந்து உங்கள் மீது பொங்கி வழியும்படி ஆசீரைப் பொழிகிறோமா இல்லையா என்று சோதித்துப் பாருங்கள், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
11. அழிவு விளைவிப்பனவற்றை உங்களை முன்னிட்டு நாம் கண்டிப்போம்; அவை உங்கள் நிலத்தின் விளைவை அழிக்கமாட்டா; உங்கள் தோட்டத்தில் உள்ள திராட்சைக் கொடிகள் கனிகொடுக்கத் தவறமாட்டா, என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
12. அப்போது மக்களினங்கள் யாவும் உங்களைப் பேறுபெற்றவர்கள் என்பார்கள்; ஏனெனில் உங்கள் நாடு இனிமையின் இருப்பிடமாய் இருக்கும், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
13. நம்மைப் புண்படுத்தும் சொற்களையே சொல்லி வந்திருக்கிறீர்கள், என்கிறார் ஆண்டவர். ஆயினும், 'உமக்கு எதிராய் என்ன பேசினோம்?' என்று கேட்கிறீர்கள்.
14. கடவுளுக்கு ஊழியம் செய்வது வீண்; அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்தும், சேனைகளின் ஆண்டவர் முன்னிலையில் மன உருக்கத்தோடு நடந்தும் நமக்கு என்ன பயன்?
15. ஆணவங்கொண்டவர்களே பேறுபெற்றவர்கள் என்பது தான் இனி எங்கள் கருத்து; தீமை செய்கிறவர்கள் முன்னேறுவது மட்டுமல்ல; கடவுளை அவர்கள் சோதிக்கும் போது அவர்கள் தப்பித்துக் கொள்ளுகிறார்கள் 'என்றெல்லாம் நீங்கள் சொல்லவில்லையா?"
16. அப்போது, ஆண்டவருக்கு அஞ்சி நடந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசினர்; ஆண்டவர் கவனித்துக் கேட்டார்; ஆண்டவருக்கு அஞ்சி நடந்து அவர் பெயரைச் சிந்திக்கிறவர்களைக் குறித்துவைக்கும் நினைவுநூல் ஒன்று அவர் முன்னிலையில் எழுதப்பட்டது.
17. நாம் செயலாற்றும் அந்த நாளில் அவர்கள் நம் உரிமைமக்களாய், தனிப்பெரும் சொத்தாய் இருப்பர், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்; தந்தை தமக்கு ஊழியம் செய்யும் மகனுக்கு இரக்கம் காட்டுவதுபோல நாம் அவர்களுக்கு இரக்கம் காட்டுவோம்.
18. அப்போது, மறுபடியும் நேர்மையானவனுக்கும் தீயவனுக்கும், கடவுளுக்கு ஊழியம் செய்கிறவனுக்கும், அவருக்கு ஊழியம் செய்யாதவனுக்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டுணர்வீர்கள்.
மொத்தம் 4 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 3 / 4
1 2 3 4
1 இதோ, நமக்கு முன்பாக நம் தூதரை அனுப்புவோம்; அவர் நமக்குமுன் வழியை ஆயத்தம் செய்வார்; நீங்கள் தேடுகின்ற ஆண்டவர் தீடீரெனத் தம் கோயிலுக்கு வருவார்; நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார், என்கிறார் சேனைகளின் ஆண்டவர். 2 ஆனால் அவர் வரும் நாளைத் தாங்க வல்லவன் எவன்? அவர் தோன்றும்போது அவர் முன் நிற்கக்கூடியவன் யார்? ஏனெனில் அவர் புடமிடுகிறவனின் நெருப்புப்போலும், வண்ணாரின் காரம் போலும் இருப்பார். 3 புடமிடுபவன் போலவும் வெள்ளியைச் சுத்தம் செய்பவன் போலவும் உட்காருவார்; லேவியின் மக்களைத் தூய்மையாக்கிப் பொன், வெள்ளியைப்போலப் புடம்போடுவார்; அவர்களும் ஆண்டவருக்கு ஏற்புடைய முறையில் காணிக்கையும் செலுத்துவர். 4 அதன்பிறகு யூதாவின் காணிக்கையும் யெருசலேமின் காணிக்கையும், பண்டை நாட்களில்- முற்காலத்தில்- இருந்தது போல் ஆண்டவருக்கு உகந்தவையாயிருக்கும். 5 அப்போது, மந்திர வித்தைக்காரர், விபசாரிகள், பொய்யாணையிடுபவர்கள், கூலிக்காரர்க்குக் கூலி கொடுக்காத வம்பர்கள், கைம்பெண்களையும் திக்கற்றவர்களையும் கொடுமைப்படுத்துகிறவர்கள், அந்நியரை விருந்தோம்பாமல் புறக்கணிக்கிறவர்கள், நமக்கு அஞ்சி நடக்காதவர்கள் ஆகியவர்களுக்கு எதிராக நாமே சாட்சியாய் நின்று தீர்ப்பு வழங்க விரைந்து வருவோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர். 6 யாக்கோபின் மக்களே, ஆண்டவராகிய நாம் மாறாதவராய் இருப்பதால் தான், நீங்கள் இன்னும் அழியாமல் இருக்கிறீர்கள். 7 உங்கள் தந்தையரின் நாள் முதலே நம் கற்பனைகளை விட்டகன்று போனீர்கள்; அவற்றைக் கடைப்பிடிக்கவுமில்லை. நம்மிடம் திரும்பி வாருங்கள், நாமும் உங்களிடம் திரும்பி வருவோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர். ஆனால், 'நாங்கள் எவ்வாறு திரும்பி வருவோம்?' என்கிறீர்கள். 8 மனிதன் கடவுளைக் கொள்ளையடிக்க முடியுமா? ஆனால் நீங்கள் நம்மைக் கொள்ளையடிக்கிறீர்களே! 'எவ்வகையில் உம்மை நாங்கள் கொள்ளையடிக்கிறோம் 'என்று கேட்கிறீர்களா? நீங்கள் தரவேண்டிய பத்திலொரு பங்கிலும் காணிக்கைகளிலுந்தான். 9 நீங்கள் அனைவரும் நம்மையே கொள்ளையடிப்பதால், நீங்கள் பெருஞ் சாபனைக்கு உள்ளானவர்கள். 10 பத்திலொரு பங்கு முழுவதையும் கொண்டு வந்து களஞ்சியத்தில் கொட்டுங்கள்; அப்பொழுது நம் கோயிலில் உணவு இருக்கும்; அவ்வாறு செய்த பின், வானத்தின் பலகணிகளைத் திறந்து உங்கள் மீது பொங்கி வழியும்படி ஆசீரைப் பொழிகிறோமா இல்லையா என்று சோதித்துப் பாருங்கள், என்கிறார் சேனைகளின் ஆண்டவர். 11 அழிவு விளைவிப்பனவற்றை உங்களை முன்னிட்டு நாம் கண்டிப்போம்; அவை உங்கள் நிலத்தின் விளைவை அழிக்கமாட்டா; உங்கள் தோட்டத்தில் உள்ள திராட்சைக் கொடிகள் கனிகொடுக்கத் தவறமாட்டா, என்கிறார் சேனைகளின் ஆண்டவர். 12 அப்போது மக்களினங்கள் யாவும் உங்களைப் பேறுபெற்றவர்கள் என்பார்கள்; ஏனெனில் உங்கள் நாடு இனிமையின் இருப்பிடமாய் இருக்கும், என்கிறார் சேனைகளின் ஆண்டவர். 13 நம்மைப் புண்படுத்தும் சொற்களையே சொல்லி வந்திருக்கிறீர்கள், என்கிறார் ஆண்டவர். ஆயினும், 'உமக்கு எதிராய் என்ன பேசினோம்?' என்று கேட்கிறீர்கள். 14 கடவுளுக்கு ஊழியம் செய்வது வீண்; அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்தும், சேனைகளின் ஆண்டவர் முன்னிலையில் மன உருக்கத்தோடு நடந்தும் நமக்கு என்ன பயன்? 15 ஆணவங்கொண்டவர்களே பேறுபெற்றவர்கள் என்பது தான் இனி எங்கள் கருத்து; தீமை செய்கிறவர்கள் முன்னேறுவது மட்டுமல்ல; கடவுளை அவர்கள் சோதிக்கும் போது அவர்கள் தப்பித்துக் கொள்ளுகிறார்கள் 'என்றெல்லாம் நீங்கள் சொல்லவில்லையா?" 16 அப்போது, ஆண்டவருக்கு அஞ்சி நடந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசினர்; ஆண்டவர் கவனித்துக் கேட்டார்; ஆண்டவருக்கு அஞ்சி நடந்து அவர் பெயரைச் சிந்திக்கிறவர்களைக் குறித்துவைக்கும் நினைவுநூல் ஒன்று அவர் முன்னிலையில் எழுதப்பட்டது. 17 நாம் செயலாற்றும் அந்த நாளில் அவர்கள் நம் உரிமைமக்களாய், தனிப்பெரும் சொத்தாய் இருப்பர், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்; தந்தை தமக்கு ஊழியம் செய்யும் மகனுக்கு இரக்கம் காட்டுவதுபோல நாம் அவர்களுக்கு இரக்கம் காட்டுவோம். 18 அப்போது, மறுபடியும் நேர்மையானவனுக்கும் தீயவனுக்கும், கடவுளுக்கு ஊழியம் செய்கிறவனுக்கும், அவருக்கு ஊழியம் செய்யாதவனுக்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டுணர்வீர்கள்.
மொத்தம் 4 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 3 / 4
1 2 3 4
×

Alert

×

Tamil Letters Keypad References