தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
லூக்கா
1. திபேரியு செசார் ஆட்சியேற்ற பதினைந்தாம் ஆண்டில், போன்சியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராகவும், கலிலேயா நாட்டுக்கு ஏரோதும், இத்துரேயா -- திராக்கோனித்து நாட்டுக்கு அவன் சகோதரன் பிலிப்பும், அபிலேனே நாட்டுக்கு லிசானியாவும் சிற்றரசர்களாகவும்,
2. அன்னாஸ், கைப்பாஸ் தலைமைக்குருக்களாகவும் இருக்க,சக்கரியாசின் மகனான அருளப்பருக்குப் பாலைவனத்தில் கடவுளின் வாக்கு அருளப்பட்து.
3. பாவமன்னிப்படைய, மனந்திரும்பி ஞானஸ்நானம் பெறவேண்டுமென்று அவர் யோர்தான் ஆற்றை அடுத்த நாடெல்லாம் சுற்றி அறிவித்தார்.
4. இதைப்பற்றி இசையாஸ் இறைவாக்கினரின் திருச்சொல் ஆகமத்தில், " பாலைவனத்தில் ஒருவன் கூக்குரல் ஒலிக்கிறது: ஆண்டவர்வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவர்தம் பாதைகளைச் செம்மைப்படுத்துங்கள்;
5. பள்ளத்தாக்குகளெல்லாம் நிரவப்படுக, மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படுக, கோணலானவை நேராகவும், கரடுமுரடானவை சமமான வழிகளாகவும் ஆக்கப்படுக.
6. மனிதரெல்லாரும் கடவுளின் மீட்பைக் காண்பர் " என்று எழுதியிருந்தது.
7. தம்மிடம் ஞானஸ்நானம் பெறப் புறப்பட்டு வந்த மக்கட்கூட்டத்தை அவர் நோக்கி, " விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்குச் சொல்லிக்கொடுத்தவர் யார்?
8. எனவே, மனந்திரும்பியவருக்கேற்ற செயல்களைச் செய்துகாட்டுங்கள். 'ஆபிரகாமே எங்களுக்குத் தந்தை' என்று சொல்லிக் கொள்ளத் துணியவேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்கு மக்களை எழுப்பக் கடவுள் வல்லவர் என்று உங்களுக்குக் கூறுகிறேன்.
9. ஏற்கனவே, அடிமரத்தில் கோடரி வைத்தாயிற்று; நற்கனி கெடாத மரமெல்லாம் வெட்டுண்டு தீயில் போடப்படும்" என்றார்.
10. அப்போது, "நாங்கள் செய்யவேண்டியதென்ன?" என்று மக்கள்கூட்டம் அவரைக் கேட்டது.
11. அதற்கு அவர், "இரண்டு அங்கி வைத்திருப்பவன் இல்லாதவனோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவு உடையவனும் அவ்வாறே செய்யட்டும்" என்றார்.
12. ஆயக்காரர் ஞானஸ்நானம் பெற வந்து, "போதகரே, நாங்கள் செய்யவேண்டியதென்ன?" என்று அவரைக் கேட்க,
13. அவர், "உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்குமேல் கேட்கவேண்டாம்" என்று பதிலளித்தார்,
14. "நாங்கள் செய்யவேண்டியதென்ன?" 'என்று படை வீரரும் கேட்டனர். அவரோ, "ஒருவரையும் பயமுறுத்திப் பணம் பறிக்கவேண்டாம். பொய்க் குற்றம் சாட்ட வேண்டாம். கிடைக்கும் சம்பளமே போதுமென்றிருங்கள்" என்றார்.
15. அந்நாட்களில் மக்கள் எதிர்ப்பார்த்த நிலையில் இருக்கவே, ஒருவேளை அருளப்பரே மெசியாவாக இருக்கலாம் என்று எல்லாரும் உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர்.
16. அப்போது அருளப்பர் அவர்களிடம், " நானோ உங்களுக்கு நீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். ஆனால், என்னைவிட வல்லவர் ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்க நான் தகுதியற்றவன். அவர் பரிசுத்த ஆவியாலும் நெருப்பாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
17. அவர் தம் களத்தைத் துப்புரவாக்கிக் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்க்க, சுளகைக் கையில் கொண்டுள்ளார். பதரையோ அவியா நெருப்பில் சுட்டெரிப்பார் " என்றார்.
18. மேலும், பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.
19. சிற்றரசனான ஏரோதை, அவன் சகோதரனின் மனைவியான ஏரோதியாள்பற்றியும், இன்னும் அவன் இழைத்த எல்லாத் தீச்செயல்கள் பற்றியும் அருளப்பர் கண்டிக்கவே,
20. தான் செய்த கொடுமை எல்லாம் போதாதென்று அவரைச் சிறையிலடைக்கவும் செய்தான்.
21. மக்களெல்லாம் ஞானஸ்நானம் பெறும்வேளையில் இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, செபித்துக்கொண்டிருக்க, வானம் திறந்தது.
22. பரிசுத்த ஆவி புலப்படும் வடிவெடுத்து, புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து குரலொலி உண்டாகி, " நீரே என் அன்பார்ந்த மகன். உம்மிடம் நான் பூரிப்படைகிறேன் " என்றது.
23. இயேசு போதிக்கத் தொடங்கும்பொழுது, அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது. அவரை மக்கள் சூசையின் மகன் என்று கருதினர்.
24. சூசை ஏலியின் மகன்; ஏலி மாத்தாத்தின் மகன்; மாத்தாத்து லேவியின் மகன்; லேவி மெல்கியின் மகன்; மெல்கி யன்னாயின் மகன்; யன்னாய் யோசேப்பின் மகன்;
25. யோசேப்பு மத்தத்தியாவின் மகன்; மத்தத்தியா ஆமோசின் மகன்; ஆமோஸ் நாகூமின் மகன்; நாகூம் ஏஸ்லியின் மகன்; ஏஸ்லி நாகாயின் மகன்;
26. நாகாய் மாகாத்தின் மகன்; மாகாத்து மத்தத்தியாவின் மகன்; மத்தத்தியா சேமேயின் மகன்; சேமேய் யோசேக்கின் மகன்; யோசேக்கு யோதாவின் மகன்;
27. யோதா யோவனாவின் மகன்; யோவானா ரேசாவின் மகன்; ரேசா சொரொ பாபேலின் மகன்; சொரொபாபேல் சலாத்தியேலின் மகன்; சலாத்தியேல் நேரியின் மகன்;
28. நேரி மெல்கியின் மகன்; மெல்கி அத்தியின் மகன்; அத்தி கோசாமின் மகன்; கோசாம் எல்மதாமின் மகன்; எல்மதாம் ஏரின் மகன்;
29. ஏர் ஏசுவின் மகன்; ஏசு எலியேசரின் மகன்; எலியேசர் யோரீமின் மகன்; யோரீம் மாத்தாத்தின் மகன்; மாத்தாத்து லேவியின் மகன்;
30. லேவி சிமியோனின் மகன்; சிமியோன் யூதாவின் மகன்; யூதா யோசேப்பின் மகன்; யோசேப்பு யோனாமின் மகன்; யோனாம் எலியாக்கீமின் மகன்;
31. எலியாக்கீம் மெலெயாவின் மகன்; மெலெயா மென்னாவின் மகன்; மென்னா மாத்தாத்தாவின் மகன்; மாத்தாத்தா நாத்தாமின் மகன்; நாத்தாம் தாவீதின் மகன்.
32. தாவீது யெஸ்ஸேயின் மகன்; யெஸ்ஸேய் ஓபேதின் மகன்; ஓபேது போவாசின் மகன்; போவாஸ் சாலாவின் மகன்; சாலா நகசோனின் மகன்;
33. நகசோன் அமினதாபின் மகன்; அமினதாபு அத்மீனின் மகன்; அத்மீன் ஆர்னியின் மகன்; ஆர்னி எஸ்ரோமின் மகன்; எஸ்ரோம் பேரேசின் மகன்; பேரேஸ் யூதாவின் மகன்;
34. யூதா யாக்கோபின் மகன்; யாக்கோபு ஈசாக்கின் மகன்; ஈசாக்கு ஆபிரகாமின் மகன். ஆபிரகாம் தேராகின் மகன்; தேராகு நாகோரின் மகன்;
35. நாகோர் செரூகின் மகன்; செரூகு ரெகூவின் மகன்; ரெகூ பேலேகின் மகன்; பேலேகு ஏபேரின் மகன்; ஏபேர் சாலாவின் மகன்;
36. சாலா காயினானின் மகன்; காயினான் அர்ப்பகசாத்தின் மகன்; அர்ப்பகசாத்து சேமின் மகன்; சேம் நோவாவின் மகன்; நோவா லாமேக்கின் மகன்; லாமேக்கு மெத்துசலாவின் மகன்;
37. மத்துசலா ஏனோக்கின் மகன்; ஏனோக்கு யாரேதின் மகன்; யாரேது மகலாலெயேலின் மகன்; மகலாலெயேல் காயினானின் மகன்;
38. காயினான் ஏனோசின் மகன்; ஏனோஸ் சேத்தின் மகன்; சேத் ஆதாமின் மகன்; ஆதாமோ கடவுளின் மகன்.
மொத்தம் 24 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 3 / 24
1 திபேரியு செசார் ஆட்சியேற்ற பதினைந்தாம் ஆண்டில், போன்சியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராகவும், கலிலேயா நாட்டுக்கு ஏரோதும், இத்துரேயா -- திராக்கோனித்து நாட்டுக்கு அவன் சகோதரன் பிலிப்பும், அபிலேனே நாட்டுக்கு லிசானியாவும் சிற்றரசர்களாகவும், 2 அன்னாஸ், கைப்பாஸ் தலைமைக்குருக்களாகவும் இருக்க,சக்கரியாசின் மகனான அருளப்பருக்குப் பாலைவனத்தில் கடவுளின் வாக்கு அருளப்பட்து. 3 பாவமன்னிப்படைய, மனந்திரும்பி ஞானஸ்நானம் பெறவேண்டுமென்று அவர் யோர்தான் ஆற்றை அடுத்த நாடெல்லாம் சுற்றி அறிவித்தார். 4 இதைப்பற்றி இசையாஸ் இறைவாக்கினரின் திருச்சொல் ஆகமத்தில், " பாலைவனத்தில் ஒருவன் கூக்குரல் ஒலிக்கிறது: ஆண்டவர்வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவர்தம் பாதைகளைச் செம்மைப்படுத்துங்கள்; 5 பள்ளத்தாக்குகளெல்லாம் நிரவப்படுக, மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படுக, கோணலானவை நேராகவும், கரடுமுரடானவை சமமான வழிகளாகவும் ஆக்கப்படுக. 6 மனிதரெல்லாரும் கடவுளின் மீட்பைக் காண்பர் " என்று எழுதியிருந்தது. 7 தம்மிடம் ஞானஸ்நானம் பெறப் புறப்பட்டு வந்த மக்கட்கூட்டத்தை அவர் நோக்கி, " விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்குச் சொல்லிக்கொடுத்தவர் யார்? 8 எனவே, மனந்திரும்பியவருக்கேற்ற செயல்களைச் செய்துகாட்டுங்கள். 'ஆபிரகாமே எங்களுக்குத் தந்தை' என்று சொல்லிக் கொள்ளத் துணியவேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்கு மக்களை எழுப்பக் கடவுள் வல்லவர் என்று உங்களுக்குக் கூறுகிறேன். 9 ஏற்கனவே, அடிமரத்தில் கோடரி வைத்தாயிற்று; நற்கனி கெடாத மரமெல்லாம் வெட்டுண்டு தீயில் போடப்படும்" என்றார். 10 அப்போது, "நாங்கள் செய்யவேண்டியதென்ன?" என்று மக்கள்கூட்டம் அவரைக் கேட்டது. 11 அதற்கு அவர், "இரண்டு அங்கி வைத்திருப்பவன் இல்லாதவனோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவு உடையவனும் அவ்வாறே செய்யட்டும்" என்றார். 12 ஆயக்காரர் ஞானஸ்நானம் பெற வந்து, "போதகரே, நாங்கள் செய்யவேண்டியதென்ன?" என்று அவரைக் கேட்க, 13 அவர், "உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்குமேல் கேட்கவேண்டாம்" என்று பதிலளித்தார், 14 "நாங்கள் செய்யவேண்டியதென்ன?" 'என்று படை வீரரும் கேட்டனர். அவரோ, "ஒருவரையும் பயமுறுத்திப் பணம் பறிக்கவேண்டாம். பொய்க் குற்றம் சாட்ட வேண்டாம். கிடைக்கும் சம்பளமே போதுமென்றிருங்கள்" என்றார். 15 அந்நாட்களில் மக்கள் எதிர்ப்பார்த்த நிலையில் இருக்கவே, ஒருவேளை அருளப்பரே மெசியாவாக இருக்கலாம் என்று எல்லாரும் உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர். 16 அப்போது அருளப்பர் அவர்களிடம், " நானோ உங்களுக்கு நீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். ஆனால், என்னைவிட வல்லவர் ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்க நான் தகுதியற்றவன். அவர் பரிசுத்த ஆவியாலும் நெருப்பாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். 17 அவர் தம் களத்தைத் துப்புரவாக்கிக் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்க்க, சுளகைக் கையில் கொண்டுள்ளார். பதரையோ அவியா நெருப்பில் சுட்டெரிப்பார் " என்றார். 18 மேலும், பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார். 19 சிற்றரசனான ஏரோதை, அவன் சகோதரனின் மனைவியான ஏரோதியாள்பற்றியும், இன்னும் அவன் இழைத்த எல்லாத் தீச்செயல்கள் பற்றியும் அருளப்பர் கண்டிக்கவே, 20 தான் செய்த கொடுமை எல்லாம் போதாதென்று அவரைச் சிறையிலடைக்கவும் செய்தான். 21 மக்களெல்லாம் ஞானஸ்நானம் பெறும்வேளையில் இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, செபித்துக்கொண்டிருக்க, வானம் திறந்தது. 22 பரிசுத்த ஆவி புலப்படும் வடிவெடுத்து, புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து குரலொலி உண்டாகி, " நீரே என் அன்பார்ந்த மகன். உம்மிடம் நான் பூரிப்படைகிறேன் " என்றது. 23 இயேசு போதிக்கத் தொடங்கும்பொழுது, அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது. அவரை மக்கள் சூசையின் மகன் என்று கருதினர். 24 சூசை ஏலியின் மகன்; ஏலி மாத்தாத்தின் மகன்; மாத்தாத்து லேவியின் மகன்; லேவி மெல்கியின் மகன்; மெல்கி யன்னாயின் மகன்; யன்னாய் யோசேப்பின் மகன்; 25 யோசேப்பு மத்தத்தியாவின் மகன்; மத்தத்தியா ஆமோசின் மகன்; ஆமோஸ் நாகூமின் மகன்; நாகூம் ஏஸ்லியின் மகன்; ஏஸ்லி நாகாயின் மகன்; 26 நாகாய் மாகாத்தின் மகன்; மாகாத்து மத்தத்தியாவின் மகன்; மத்தத்தியா சேமேயின் மகன்; சேமேய் யோசேக்கின் மகன்; யோசேக்கு யோதாவின் மகன்; 27 யோதா யோவனாவின் மகன்; யோவானா ரேசாவின் மகன்; ரேசா சொரொ பாபேலின் மகன்; சொரொபாபேல் சலாத்தியேலின் மகன்; சலாத்தியேல் நேரியின் மகன்; 28 நேரி மெல்கியின் மகன்; மெல்கி அத்தியின் மகன்; அத்தி கோசாமின் மகன்; கோசாம் எல்மதாமின் மகன்; எல்மதாம் ஏரின் மகன்; 29 ஏர் ஏசுவின் மகன்; ஏசு எலியேசரின் மகன்; எலியேசர் யோரீமின் மகன்; யோரீம் மாத்தாத்தின் மகன்; மாத்தாத்து லேவியின் மகன்; 30 லேவி சிமியோனின் மகன்; சிமியோன் யூதாவின் மகன்; யூதா யோசேப்பின் மகன்; யோசேப்பு யோனாமின் மகன்; யோனாம் எலியாக்கீமின் மகன்; 31 எலியாக்கீம் மெலெயாவின் மகன்; மெலெயா மென்னாவின் மகன்; மென்னா மாத்தாத்தாவின் மகன்; மாத்தாத்தா நாத்தாமின் மகன்; நாத்தாம் தாவீதின் மகன். 32 தாவீது யெஸ்ஸேயின் மகன்; யெஸ்ஸேய் ஓபேதின் மகன்; ஓபேது போவாசின் மகன்; போவாஸ் சாலாவின் மகன்; சாலா நகசோனின் மகன்; 33 நகசோன் அமினதாபின் மகன்; அமினதாபு அத்மீனின் மகன்; அத்மீன் ஆர்னியின் மகன்; ஆர்னி எஸ்ரோமின் மகன்; எஸ்ரோம் பேரேசின் மகன்; பேரேஸ் யூதாவின் மகன்; 34 யூதா யாக்கோபின் மகன்; யாக்கோபு ஈசாக்கின் மகன்; ஈசாக்கு ஆபிரகாமின் மகன். ஆபிரகாம் தேராகின் மகன்; தேராகு நாகோரின் மகன்; 35 நாகோர் செரூகின் மகன்; செரூகு ரெகூவின் மகன்; ரெகூ பேலேகின் மகன்; பேலேகு ஏபேரின் மகன்; ஏபேர் சாலாவின் மகன்; 36 சாலா காயினானின் மகன்; காயினான் அர்ப்பகசாத்தின் மகன்; அர்ப்பகசாத்து சேமின் மகன்; சேம் நோவாவின் மகன்; நோவா லாமேக்கின் மகன்; லாமேக்கு மெத்துசலாவின் மகன்; 37 மத்துசலா ஏனோக்கின் மகன்; ஏனோக்கு யாரேதின் மகன்; யாரேது மகலாலெயேலின் மகன்; மகலாலெயேல் காயினானின் மகன்; 38 காயினான் ஏனோசின் மகன்; ஏனோஸ் சேத்தின் மகன்; சேத் ஆதாமின் மகன்; ஆதாமோ கடவுளின் மகன்.
மொத்தம் 24 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 3 / 24
×

Alert

×

Tamil Letters Keypad References