தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
லூக்கா
1. இதற்குப்பின், ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் அவர்களை இருவர் இருவராகத் தமக்குமுன்னால் அனுப்பினார்.
2. அப்போது அவர்களைப் பார்த்துக் கூறினதாவது: "அறுவடையோ மிகுதி; வேலையாட்களோ குறைவு ஆதலால் தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்.
3. செல்லுங்கள், ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளைப்போல் உங்களை அனுப்புகிறேன்.
4. பணப்பையோ கைப்பையோ மிதியடியோ எதுவும் எடுத்துச் செல்லவேண்டாம். வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்தவேண்டாம்.
5. நீங்கள் எந்த வீட்டுக்குப் போனாலும், முதலில், 'இவ்வீட்டுக்குச் சமாதானம்' என்று வாழ்த்துங்கள்.
6. சமாதானத்துக்குரியவன்அங்கு இருந்தால், உங்கள் சமாதானம் அவனிடம் தங்கும்; இல்லையேல் உங்களிடம் திரும்பிவிடும்.
7. அவர்களிடம் உள்ளதை உண்டு குடித்து அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில், வேலையாள் கூலிக்கு உரிமை உடையவன். வீடு வீடாய்ச் செல்லவேண்டாம்.
8. நீங்கள் போகும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுகிறதை உண்டு,
9. அங்குள்ள பணியாளரைக் குணமாக்கி, கடவுளின் அரசு உங்களை நெருங்கியுள்ளது' என்று மக்களுக்குத் தெரிவியுங்கள்.
10. மாறாக, நீங்களும் போகும் ஊரில் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தெருவில் சென்று,
11. 'எங்கள் காலில் ஒட்டிய உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிப்போடுகிறோம்; இருப்பினும் கடவுளின் அரசு நெருங்கியுள்ளது என்று அறிந்துகொள்ளுங்கள்' எனச் சொல்லுங்கள்.
12. அந்நாளில் சோதோமுக்கு நேரிடுவது அவ்வூருக்கு நேரிடுவதைப்போல் அவ்வளவு கடினமாயிராது என உங்களுக்குக் கூறுகிறேன்.
13. " கொராசின் நகரே, உனக்கு ஐயோ கேடு! பெத்சாயிதா நகரே, உனக்கு ஐயோ கேடு! ஏனெனில், உங்களிடம் செய்த புதுமைகள் தீர், சீதோனில் செய்யப்பட்டிருப்பின், முன்பே கோணி உடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பர்.
14. ஆனால், தீர்வைநாளில் தீர், சீதோனுக்கு நேரிடுவது உங்களுக்கு நேரிடுவதைப்போல் அவ்வளவு கடினமாயிராது.
15. கப்பர்நகூமே, வானளாவ உயர்வாயோ ? பாதாளம்வரை தாழ்ந்திடுவாய்.
16. " உங்களுக்குச் செவிசாய்ப்பவன் எனக்குச் செவிசாய்க்கிறான். உங்களைப் புறக்கணிப்பவன் என்னைப் புறக்கணிக்கிறான். என்னைப் புறக்கணிப்பவனோ என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறான்."
17. பின்பு, எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் வந்து, "ஆண்டவரே, உம் பெயரால் பேய்கள்கூட எங்களுக்கு அடங்குகின்றன" என்றனர்.
18. அதற்கு அவர், " வானத்தினின்று மின்னலைப்போலச் சாத்தான் விழக் கண்டேன்.
19. இதோ! பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வலிமையை வெல்லவும் உங்களுக்கு வல்லமை அளித்தேன்.
20. எதுவும் உங்களுக்குத் தீங்கு இழைக்காது. ஆயினும் ஆவிகள் உங்களுக்கு அடங்கி இருக்கின்றன என்று மகிழவேண்டாம். ஆனால் உங்கள் பெயர் வானகத்தில் எழுதியுள்ளது என்றே மகிழுங்கள்" என்றார்.
21. அந்நேரத்தில் இயேசு பரிசுத்த ஆவியினால் அக்களிப்புற்றுக் கூறியதாவது: " தந்தையே, விண்ணிற்கும் மண்ணிற்கும் ஆண்டவரே, ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் இவற்றை மறைத்துச் சிறுவருக்கு வெளிப்படுத்தியதால் உம்மைப் புகழ்கிறேன். ஆம், தந்தாய், இதுவே உமது திருவுள்ம்.
22. என் தந்தை எல்லாவற்றையும் எனக்குக் கையளித்துள்ளார். மகன் யாரென்று தந்தையன்றி வேறெவனும் அறியான். தந்தை யாரென்று மகனும், மகன் எவனுக்கு வெளிப்படுத்துவாரோ அவனுமன்றி வேறெவனும் அறியான்."
23. அவர் தம் சீடர்பக்கம் திரும்பி அவர்களுக்கு மட்டும் தனிமையாகக் கூறியதாவது: "நீங்கள் காண்பதைக் காணும் கண்கள் பேறுபெற்றவை.
24. ஏனெனில், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: இறைவாக்கினர், அரசர் பலர் நீங்கள் காண்பதைக் காணவிரும்பியும் காணவில்லை. நீங்கள் கேட்பதைக் கேட்கவிரும்பியும் கேட்கவில்லை."
25. சட்ட வல்லுநர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்க, "போதகரே, முடிவில்லாத வாழ்வு பெற, நான் செய்யவேண்டிய தென்ன?" என்று வினவினார்.
26. அதற்கு அவர், " திருச் சட்ட நூலில் என்ன எழுதியுள்ளது? அதில் என்ன வாசிக்கிறீர் ?" என்றார்.
27. அவர் மறுமொழியாக, "உன் கடவுளாகிய ஆண்டவருக்கு உன் முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் முழு வலிமையோடும் முழு மனத்தோடும் அன்புசெய்வாயாக. உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல், உன் அயலான்மீதும் நீ அன்புகாட்டுவாயாக" என்றார்.
28. அவரோ, "சரியாய்ப் பதில்சொன்னீர்; இப்படியே செய்யும்; வாழ்வீர் " என்றார்.
29. அவர், தாம் கேட்டது சரியான கேள்வி என்று காட்ட விரும்பி, " என் அயலான் யார்?" என்று இயேசுவை வினவினார்.
30. அதற்கு இயேசு, "யெருசலேமிலிருந்து யெரிக்கோவுக்கு ஒருவன் இறங்கிச் செல்லுகையில், கள்வர்கையில் அகப்பட்டான். அவர்கள் அவன் ஆடைகளைப் பறித்துக்கொண்டு அவனைக் காயப்படுத்திக் குற்றுயிராய் விட்டுச் சென்றார்கள்.
31. அதே வழியாக ஒரு குருவும் இறங்கிச் செல்ல நேர்ந்தது. அவர் அவனைக் கண்டும் விலகிச்சென்றார்.
32. அவ்வாறே லேவியன் ஒருவனும் அவ்விடத்துக்கு வந்து அவனைக் கண்டு விலகிச்சென்றான்.
33. ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியன் ஒருவன் அவனருகில் வந்து, அவனைக் கண்டு, மனமிரங்கினான்.
34. அவனை அணுகி எண்ணெயும் திராட்சை இரசமும் வார்த்து, அவன் காயங்களைக் கட்டித் தன் சொந்த வாகனத்தில் ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவனைக் கண்காணித்தான்.
35. மறுநாள் இரு வெள்ளிக்காசுகளை எடுத்துச் சாவடிக்காரனிடம் கொடுத்து, 'இவனைக் கண்காணித்துக் கொள். இதற்குமேல் செலவானால் திரும்பி வரும்போது கொடுத்துவிடுவேன்' என்றான்.
36. கள்வர்கையில் அகப்பட்டவனுக்கு இம்மூவருள் எவன் அயலான் என்று உமக்குத் தோன்றுகிறது ?" என்றார்.
37. அதற்கு அவர், "அவனுக்கு இரக்கம் காட்டியவன்தான்" என்றார். இயேசு, " நீரும் போய் அவ்வாறே செய்யும்" என்று கூறினார்.
38. அவர்கள் போகும்பொழுது ஓர் ஊருக்குள் வர, மார்த்தாள் என்னும் பெண் ஒருத்தி தன் வீட்டில் அவரை வரவேற்றாள்.
39. அவளுக்கு மரியாள் என்னும் சகோதரி இருந்தாள். அவள் ஆண்டவருடைய காலடியில் அமர்ந்து, அவருடைய வார்த்தையைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
40. மார்த்தாளோ பலவகையாய்ப் பணிவிடை புரிவதில் பரபரப்பாயிருந்தாள். அவள் வந்து, "ஆண்டவரே, நான் உமக்குப் பணிபுரிய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா ? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும்" என்றாள்.
41. அதற்கு ஆண்டவர், " மார்த்தா, மார்த்தா, நீ பல காரியங்களைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.
42. ஆனால், தேவையானது ஒன்றே. மரியாள் நல்ல பங்கைத் தேர்ந்துகொண்டாள். அது அவளிடமிருந்து எடுக்கப்படாது " என்றார்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 24 Chapters, Current Chapter 10 of Total Chapters 24
லூக்கா 10:29

×

Alert

×

tamil Letters Keypad References