தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
லேவியராகமம்
1. எட்டாம் நாளில் மோயீசன் ஆரோனையும், அவர் புதல்வரையும், இஸ்ராயேலரில் மூப்பரையும் வரவழைத்து, ஆரோனை நோக்கி:
2. நீ பாவ நிவர்த்திப்பலியாக ஓர் இளங்காளையையும் தகனப் பலியாக மறுவற்ற ஓர் ஆட்டுக் கிடாயையும் மந்தையினின்று தெரிந்தெடுத்து ஆண்டவருக்கு முன் கொண்டுவரக் கடவாய் என்றார்.
3. மேலும் இஸ்ராயேல் மக்களை நோக்கி: நீங்கள் பாவ நிவாரணப் பலிக்கென்று ஓர் ஆட்டுக் கிடாயையும், தகனப் பலிக்கென்று ஒரு இளங்காளையையும், ஒரு வயதான மறுவற்ற ஓர் ஆட்டுக்குட்டியையும்,
4. சமாதானப் பலிக்கென்று ஒரு மாடும், ஒரு ஆட்டுக் கிடாயும் கொண்டு வந்து, அவற்றை ஆண்டவர் திருமுன் வெட்டிப் பலியிடுங்கள். ஒவ்வொன்றைப் பலியிட்டு வருகையில் அதனோடுகூட எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவையும் ஒப்புக்கொடுப்பீர்கள். ஏனென்றால், இன்று ஆண்டவர் உங்களுக்குக் காட்சியளிப்பார் என்றார்.
5. அவர்கள் அவ்விதமே மோயீசன் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றையும் கூடார வாயிலண்டை கொண்டு வந்தார்கள். சபையார் எல்லாரும் அவ்விடத்தில் சேர்ந்து நின்று கொண்டிருக்கையில்,
6. மோயீசன் அவர்களை நோக்கி: ஆண்டவர் திருவுளம் பற்றின வாக்காவது: நீங்கள் (இவ்வாறு) செய்யுங்கள்; அவருடைய மாட்சியை நீங்கள் காண்பீர்கள் என்று சொன்னார்.
7. பிறகு ஆரோனை நோக்கி: நீ பலிப்பீடத்தண்டை வந்து, உன் பாவத்திற்குப் பரிகாரமாகப் பலியிட்டு நெருப்பையும் ஒப்புக்கொடுத்து, உனக்காகவும் குடிகளுக்காகவும் மன்றாடு. பிறகு குடிகளின் பலிமிருகத்தை வெட்டி ஒப்புக்கொடுத்து, ஆண்டவர் கட்டளையிட்டபடியே, மக்களுக்காக மன்றாடு என்று சொன்னார்.
8. அப்பொழுது ஆரோன் பலிப்பீடத்தண்டை வந்து, தம் பாவத்திற்குப் பரிகாரமாக இளங்காளையை வெட்டினார்.
9. அவர் புதல்வர் அதன் இரத்தத்தை அவருக்குச் சமர்ப்பிக்க, அவர் அதில் விரலைத் தோய்த்துப் பீடத் கொம்புகளில் தடவி, மீதியானதைப் பீடத்தின் அடியில் ஊற்றினார்.
10. பாவ நிவாரணப் பலியின் கொழுப்பையும், சிறுநீரகங்களையும் ஈரலின் சவ்வையும், ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடி, பீடத்தின் மேல் சுட்டெரித்தார்.
11. அதன் இறைச்சியையும் தோலையும் பாளையத்திற்கு வெளியே சுட்டெரித்தார்.
12. பிறகு தகனப் பலியையும் செலுத்தினார். அவர் புதல்வர்கள் அதன் இரத்தத்தை அவருக்கு வழங்க, அவர் அதைப் பலிப்பீடத்தின் மேல் சுற்றிலும் வார்த்தார்.
13. அவர்கள் பலிப்பொருளை துண்டாக வெட்டி, அதைத் தலையோடும் எல்லா உறுப்புக்களோடும் அவருக்குச் சமர்ப்பித்தனர். அவர் எல்லாவற்றையும் பலிப்பீடத்தின் மேல் நெருப்பில் சுட்டெரித்தார்.
14. முன்னரே குடல்களும் கால்களும் தண்ணீரில் கழுவப்பட்டிருந்தன.
15. மேலும், அவர் குடிகளின் பாவ நிவாரணத்திற்குரிய பலியாகிய ஆட்டுக் கிடாயை ஒப்புக் கொடுத்து, கொன்று, பீடத்தைச் சுத்திகரித்த பின்னர்,
16. அதைத் தகனப் பலியாக ஒப்புக் கொடுத்ததுமன்றி,
17. காலையில் செலுத்தும் தகனப் பலியைப் பற்றிய சடங்குகளை நிறைவேற்றி மேற்சொன்ன பலியுடன் பான போசனப் பலியையும் சேர்த்து பீடத்தின் மேல் எரித்தார்.
18. அன்றியும் குடிகளின் சமாதானப் பலியாகிய மாட்டையும் ஆட்டுக்கிடாயையும் பலியிட்டார். அவர் புதல்வர் அவருக்கு இரத்தத்தைக் கொடுக்க, அவர் அதைப் பீடத்தின் மேல் சுற்றிலும் வார்த்தார்.
19. ஆனால் அவர்கள் மாட்டின் கொழுப்பையும், செம்மறிக் கிடாயின் வாலையும், சிறுநீரகங்களுக்கு அடுத்த கொழுப்பையும்,
20. கல்லீரலைச் சேர்ந்த சவ்வையும், மார்க் கண்டத்தின்மீது போட்டு வைத்தார்கள். கொழுப்புக்கள் பீடத்தின் மேல் சுட்டெரிக்கப்பட்ட பின்,
21. மோயீசன் கட்டளையிட்டிருந்தபடி ஆரோன் சமாதானப் பலிப்பொருளின் மார்க்கண்டங்களையும், வலது முன்னந் தொடைகளையும் பிரித்தெடுத்து, ஆண்டவர் திருமுன் உயர்த்தினார்.
22. இறுதியில் மக்களுக்கு முன் கைகளை விரித்து அவர்களை ஆசீர்வதித்தார். இவ்வாறு அவர் பாவநிவாரணப் பலிகளையும் தகனப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் நிறைவேற்றின பின்னர், இறங்கி வந்தார்.
23. மோயீசனும் ஆரோனும் சாட்சியக் கூடாரத்துக்குள் புகுந்து சிறிது நேரத்திற்குப் பின்னர் வெளியே வந்து மக்களை ஆசீர்வதித்தனர். அந்நேரத்தில் ஆண்டவருடைய மாட்சி எல்லா மக்களுக்கும் தோன்றியது.
24. அதாவது ஆண்டவர் முன்னிலையிலிருந்து நெருப்பு புறப்பட்டு, பீடத்தின் மேலிருந்த தகனப் பலியையும் அதன் கொழுப்புக்களையும் சுட்டெரித்தது. மக்கள் எல்லாரும் அதைக் கண்டபோது முகம் குப்புறவிழுந்து ஆண்டவரைப் போற்றினார்கள்.
மொத்தம் 27 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 9 / 27
1 எட்டாம் நாளில் மோயீசன் ஆரோனையும், அவர் புதல்வரையும், இஸ்ராயேலரில் மூப்பரையும் வரவழைத்து, ஆரோனை நோக்கி: 2 நீ பாவ நிவர்த்திப்பலியாக ஓர் இளங்காளையையும் தகனப் பலியாக மறுவற்ற ஓர் ஆட்டுக் கிடாயையும் மந்தையினின்று தெரிந்தெடுத்து ஆண்டவருக்கு முன் கொண்டுவரக் கடவாய் என்றார். 3 மேலும் இஸ்ராயேல் மக்களை நோக்கி: நீங்கள் பாவ நிவாரணப் பலிக்கென்று ஓர் ஆட்டுக் கிடாயையும், தகனப் பலிக்கென்று ஒரு இளங்காளையையும், ஒரு வயதான மறுவற்ற ஓர் ஆட்டுக்குட்டியையும், 4 சமாதானப் பலிக்கென்று ஒரு மாடும், ஒரு ஆட்டுக் கிடாயும் கொண்டு வந்து, அவற்றை ஆண்டவர் திருமுன் வெட்டிப் பலியிடுங்கள். ஒவ்வொன்றைப் பலியிட்டு வருகையில் அதனோடுகூட எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவையும் ஒப்புக்கொடுப்பீர்கள். ஏனென்றால், இன்று ஆண்டவர் உங்களுக்குக் காட்சியளிப்பார் என்றார். 5 அவர்கள் அவ்விதமே மோயீசன் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றையும் கூடார வாயிலண்டை கொண்டு வந்தார்கள். சபையார் எல்லாரும் அவ்விடத்தில் சேர்ந்து நின்று கொண்டிருக்கையில், 6 மோயீசன் அவர்களை நோக்கி: ஆண்டவர் திருவுளம் பற்றின வாக்காவது: நீங்கள் (இவ்வாறு) செய்யுங்கள்; அவருடைய மாட்சியை நீங்கள் காண்பீர்கள் என்று சொன்னார். 7 பிறகு ஆரோனை நோக்கி: நீ பலிப்பீடத்தண்டை வந்து, உன் பாவத்திற்குப் பரிகாரமாகப் பலியிட்டு நெருப்பையும் ஒப்புக்கொடுத்து, உனக்காகவும் குடிகளுக்காகவும் மன்றாடு. பிறகு குடிகளின் பலிமிருகத்தை வெட்டி ஒப்புக்கொடுத்து, ஆண்டவர் கட்டளையிட்டபடியே, மக்களுக்காக மன்றாடு என்று சொன்னார். 8 அப்பொழுது ஆரோன் பலிப்பீடத்தண்டை வந்து, தம் பாவத்திற்குப் பரிகாரமாக இளங்காளையை வெட்டினார். 9 அவர் புதல்வர் அதன் இரத்தத்தை அவருக்குச் சமர்ப்பிக்க, அவர் அதில் விரலைத் தோய்த்துப் பீடத் கொம்புகளில் தடவி, மீதியானதைப் பீடத்தின் அடியில் ஊற்றினார். 10 பாவ நிவாரணப் பலியின் கொழுப்பையும், சிறுநீரகங்களையும் ஈரலின் சவ்வையும், ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடி, பீடத்தின் மேல் சுட்டெரித்தார். 11 அதன் இறைச்சியையும் தோலையும் பாளையத்திற்கு வெளியே சுட்டெரித்தார். 12 பிறகு தகனப் பலியையும் செலுத்தினார். அவர் புதல்வர்கள் அதன் இரத்தத்தை அவருக்கு வழங்க, அவர் அதைப் பலிப்பீடத்தின் மேல் சுற்றிலும் வார்த்தார். 13 அவர்கள் பலிப்பொருளை துண்டாக வெட்டி, அதைத் தலையோடும் எல்லா உறுப்புக்களோடும் அவருக்குச் சமர்ப்பித்தனர். அவர் எல்லாவற்றையும் பலிப்பீடத்தின் மேல் நெருப்பில் சுட்டெரித்தார். 14 முன்னரே குடல்களும் கால்களும் தண்ணீரில் கழுவப்பட்டிருந்தன. 15 மேலும், அவர் குடிகளின் பாவ நிவாரணத்திற்குரிய பலியாகிய ஆட்டுக் கிடாயை ஒப்புக் கொடுத்து, கொன்று, பீடத்தைச் சுத்திகரித்த பின்னர், 16 அதைத் தகனப் பலியாக ஒப்புக் கொடுத்ததுமன்றி, 17 காலையில் செலுத்தும் தகனப் பலியைப் பற்றிய சடங்குகளை நிறைவேற்றி மேற்சொன்ன பலியுடன் பான போசனப் பலியையும் சேர்த்து பீடத்தின் மேல் எரித்தார். 18 அன்றியும் குடிகளின் சமாதானப் பலியாகிய மாட்டையும் ஆட்டுக்கிடாயையும் பலியிட்டார். அவர் புதல்வர் அவருக்கு இரத்தத்தைக் கொடுக்க, அவர் அதைப் பீடத்தின் மேல் சுற்றிலும் வார்த்தார். 19 ஆனால் அவர்கள் மாட்டின் கொழுப்பையும், செம்மறிக் கிடாயின் வாலையும், சிறுநீரகங்களுக்கு அடுத்த கொழுப்பையும், 20 கல்லீரலைச் சேர்ந்த சவ்வையும், மார்க் கண்டத்தின்மீது போட்டு வைத்தார்கள். கொழுப்புக்கள் பீடத்தின் மேல் சுட்டெரிக்கப்பட்ட பின், 21 மோயீசன் கட்டளையிட்டிருந்தபடி ஆரோன் சமாதானப் பலிப்பொருளின் மார்க்கண்டங்களையும், வலது முன்னந் தொடைகளையும் பிரித்தெடுத்து, ஆண்டவர் திருமுன் உயர்த்தினார். 22 இறுதியில் மக்களுக்கு முன் கைகளை விரித்து அவர்களை ஆசீர்வதித்தார். இவ்வாறு அவர் பாவநிவாரணப் பலிகளையும் தகனப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் நிறைவேற்றின பின்னர், இறங்கி வந்தார். 23 மோயீசனும் ஆரோனும் சாட்சியக் கூடாரத்துக்குள் புகுந்து சிறிது நேரத்திற்குப் பின்னர் வெளியே வந்து மக்களை ஆசீர்வதித்தனர். அந்நேரத்தில் ஆண்டவருடைய மாட்சி எல்லா மக்களுக்கும் தோன்றியது. 24 அதாவது ஆண்டவர் முன்னிலையிலிருந்து நெருப்பு புறப்பட்டு, பீடத்தின் மேலிருந்த தகனப் பலியையும் அதன் கொழுப்புக்களையும் சுட்டெரித்தது. மக்கள் எல்லாரும் அதைக் கண்டபோது முகம் குப்புறவிழுந்து ஆண்டவரைப் போற்றினார்கள்.
மொத்தம் 27 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 9 / 27
×

Alert

×

Tamil Letters Keypad References