தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
லேவியராகமம்
1. மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2. யாரேனும் ஒருவன் பாவியாகி ஆண்டவரைப் பழித்து, அயலான் தன்னை நம்பித் தன் பொறுப்பில் ஒப்புவித்த பொருளைத் தான் வாங்கவில்லை என்று மறுத்தோ, ஏதேனும் பொருளை வலக்காரமாய்ப் பறித்தோ தன் அயலானுக்கு ஆள் மாறாட்டம் செய்தோ,
3. காணாமற்போன பொருளைக் கண்டடைந்தும், 'இல்லை' என மறுத்து அதைக் குறித்துப் பொய்யுரைத்தோ அல்லது மனிதர் வழக்கமாய்ச் செய்யும் பற்பல பாவங்களில் யாதொன்றையோ செய்திருப்பானாயின்,
4. அவன் குற்றவாளியென்று நிரூபிக்கப்பட்ட பின்,
5. அவன் வஞ்சகமாய்க் கைக்கொள்ளத் தேடியவற்றையெல்லாம் முழுதுமே திருப்பிக் கொடுக்க வேண்டியது. அன்றியும், அதனோடு ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகக் கூட்டி, நட்டம் அடைந்த உரிமையாளனுக்கும் கொடுத்து ஈடு செய்யக்கடவான்.
6. மேலும் தனது பாவ மன்னிப்புக்காகச் செய்த குற்றத்தின் கனத்துக்கும் அளவுக்கும் தக்கபடி மந்தையினின்று மறுவற்ற ஆட்டுக்கிடாயைக் கொண்டு வந்து, அதைக் குருவிடம் ஒப்புக் கொடுப்பான்.
7. இவர் ஆண்டவர் திருமுன் அவனுக்காக மன்றாட, அவன் குற்றமெல்லாம் மன்னிக்கப்படும் என்றார்.
8. ஆண்டவர் மேலும் மோயீசனை நோக்கி:
9. நீ ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் கட்டளையிட வேண்டியதாவது: தகனபலிக்கடுத்த ஒழுங்கு ஏனென்றால்: தகனப்பலி இரவு முழுவதும் விடியற்காலை வரையிலும் பீடத்தின் மேல் எரிய வேண்டியதுமன்றி, அதன் நெருப்பு அதே பீடத்தின் நெருப்பாய் இருக்கவும் வேண்டும்.
10. குரு, மெல்லிய சணல் நூலால் நெய்யப்பட்ட அங்கியையும் சல்லடத்தையும் அணிந்தவராய் நெருப்பில் எரிந்த தகனப் பலியின் சாம்பலை எடுத்துப் பீடத்தண்டையில் கொட்டக்கடவார்.
11. பின், முந்தின உடைகளைக் கழற்றி வேறு ( உடைகளை ) அணிந்து கொண்டு, அந்தச் சாம்பலைப் பாளையத்துக்கு வெளியே கொண்டு போய், மிகத் தூய்மையான இடத்திலே ( கொட்டி ), அது புழுதியாய் மாறிப்போக விடுவார்.
12. நெருப்போ எப்பொழுதும் பீடத்தில் எரிந்து கொண்டிருக்கும். குரு நாள் தோறும் காலையில் விறகுகளை இட்டு, அதன் மீது தகனப் பலியையும் சமாதானப் பலிகளின் கொழுப்பையும் வைத்து எரிக்கக்கடவார்.
13. அந்நெருப்போ, ஒருபொழுதும் அணைந்து போகாமல், எப்பொழுதும் பீடத்தின் மேல் இருக்க வேண்டியதாம்.
14. ஆரோனின் புதல்வர்கள் ஆண்டவருக்கு முன்னும் பலி பீடத்திற்கு முன்னும் படைக்க வேண்டிய பலிக்கும், பானபோசனப் பலிகளுக்குமடுத்த சட்டமாவது:
15. குரு, எண்ணெய் தெளிக்கப்பட்ட மிருதுவான மாவில் ஒரு கைப்பிடி எடுத்து, அதையும், மாவின் மேல் வைக்கப்பட்டிருக்கும் தூப வகைகள் யாவையும் பீடத்தின் மேல் ஆண்டவருக்கு மிக்க நறுமணத்தின் அடையாளமாக எரிக்கக்கடவான்.
16. மாவில் மீதியானதையோ ஆரோனும் அவன் புதல்வர்களும் புளிப்பில்லாமல் உண்பார்கள். கூடார மண்டபமாகிய பரிசுத்த இடத்திலே அதை உண்பார்கள்.
17. அது புளிப்பில்லாதிருக்க வேண்டியது. அதில் ஒரு பாகம் ஆண்டவருக்குத் தகனப்பலியாகப் படைக்கப்படுகின்றதினாலே, அது பாவ நிவாரணப் பலியைப் போலும், குற்ற நிவாரணப் பலியைப் போலும், மிகப் புனிதமானது.
18. ஆரோன் குலத்தைச் சேர்ந்த ஆடவர் மட்டுமே அதை உண்பார்கள். ஆண்டவருக்குப் பலி செலுத்தும்போது நீங்கள் என்றும் தலைமுறை தலைமுறையாய் அனுசரிக்க வேண்டிய விதி இதுவாம். அதைத் தொடுகிற எவனும் புனிதமடைவான் என்றருளினார்.
19. மேலும், ஆண்டவர் மோயீசனை நோக்கி:
20. ஆரோனும் அவன் புதல்வர்களும் தங்கள் அபிசேக நாளில் ஆண்டவருக்குப் படைக்க வேண்டிய காணிக்கை என்னவென்றால், ஏப்பி அளவில் பத்தில் ஒரு பங்கு மிருதுவான மாவைக் காலையில் பாதியாகவும் மாலையில் பாதியாகவும் தொடர்ந்த பலியாய்ச் செலுத்தக் கடவார்கள்.
21. அது எண்ணெய் தெளிக்கப்பட்டுச் சட்டியிலே பொரிக்கப்படும். அதை ஆண்டவருக்கு மிக்க நறுமணமாகப் படைக்க வேண்டியவன்,
22. தன் தகப்பனின் இடத்திலே உரிமையோடு அபிசேகம் செய்யப் பட்ட குருவேயாம். மேற்சொன்ன காணிக்கையோ பீடத்தின்மேல் முழுவதும் எரிக்கப்படக்கடவது.
23. ஏனென்றால் குருக்களின் பலியெல்லாம் நெருப்பிலே எரிபடுமே தவிர, அவை எவனாலும் உண்ணப்பட மாட்டாது என்றருளினார்.
24. மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
25. நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்ல வேண்டியதாவது: பாவநிவாரணப் பலியின் ஒழுங்கு முறையாவது; தகனப்பலி ஒப்புக்கொடுக்கப்படும் இடத்திலேயே பாவநிவாரணப் பலியும் ஒப்புக்கொடுக்கப்படும்.
26. இது மிகவும் பரிசுத்தமானது, ஒப்புக்கொடுக்கிற குரு கூடார மண்டபத்தில் பரிசுத்த இடத்தில் இதை உண்பார்.
27. இதன் இறைச்சியைத் தொடுவன எல்லாம் பரிசுத்தமுள்ளதாகும். இதன் இரத்தத்தில் சிறிது ஒர் ஆடையில் தெறித்ததாயின் அந்த ஆடை ஒரு பரிசுத்தமான இடத்தில் கழுவப்பட வேண்டும்.
28. இது சமைக்கப்பட்ட மட்பாண்டம் உடைக்கப்பட வேண்டும். வெண்கலப் பாத்திரத்தில் சமைக்கப்பட்டதாயின் அது விளக்கப்பட்டுத் தண்ணீரால் கழுவப்பட வேண்டும்.
29. குருகுலத்தைச் சேர்ந்த ஆடவர் யாவரும் இதன் இறைச்சியை உண்பார்கள். ஏனென்றால், இது மிகவும் பரிசுத்தமானது.
30. ஆனால் பாவ நிவாரணப் பலியின் இரத்தத்திலே சிறிது, பாவப் பரிகாரத்தின் பொருட்டுப் பரிசுத்த இடத்தினுள் சாட்சியக் கூடாரத்தில் கொண்டு வரப்படும். அந்தப் பலிப்பொருள் உண்ணப்படலாகாது; மாறாக நெருப்பிலே எரிக்கப்பட வேண்டும்
மொத்தம் 27 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 27
1 மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: 2 யாரேனும் ஒருவன் பாவியாகி ஆண்டவரைப் பழித்து, அயலான் தன்னை நம்பித் தன் பொறுப்பில் ஒப்புவித்த பொருளைத் தான் வாங்கவில்லை என்று மறுத்தோ, ஏதேனும் பொருளை வலக்காரமாய்ப் பறித்தோ தன் அயலானுக்கு ஆள் மாறாட்டம் செய்தோ, 3 காணாமற்போன பொருளைக் கண்டடைந்தும், 'இல்லை' என மறுத்து அதைக் குறித்துப் பொய்யுரைத்தோ அல்லது மனிதர் வழக்கமாய்ச் செய்யும் பற்பல பாவங்களில் யாதொன்றையோ செய்திருப்பானாயின், 4 அவன் குற்றவாளியென்று நிரூபிக்கப்பட்ட பின், 5 அவன் வஞ்சகமாய்க் கைக்கொள்ளத் தேடியவற்றையெல்லாம் முழுதுமே திருப்பிக் கொடுக்க வேண்டியது. அன்றியும், அதனோடு ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகக் கூட்டி, நட்டம் அடைந்த உரிமையாளனுக்கும் கொடுத்து ஈடு செய்யக்கடவான். 6 மேலும் தனது பாவ மன்னிப்புக்காகச் செய்த குற்றத்தின் கனத்துக்கும் அளவுக்கும் தக்கபடி மந்தையினின்று மறுவற்ற ஆட்டுக்கிடாயைக் கொண்டு வந்து, அதைக் குருவிடம் ஒப்புக் கொடுப்பான். 7 இவர் ஆண்டவர் திருமுன் அவனுக்காக மன்றாட, அவன் குற்றமெல்லாம் மன்னிக்கப்படும் என்றார். 8 ஆண்டவர் மேலும் மோயீசனை நோக்கி: 9 நீ ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் கட்டளையிட வேண்டியதாவது: தகனபலிக்கடுத்த ஒழுங்கு ஏனென்றால்: தகனப்பலி இரவு முழுவதும் விடியற்காலை வரையிலும் பீடத்தின் மேல் எரிய வேண்டியதுமன்றி, அதன் நெருப்பு அதே பீடத்தின் நெருப்பாய் இருக்கவும் வேண்டும். 10 குரு, மெல்லிய சணல் நூலால் நெய்யப்பட்ட அங்கியையும் சல்லடத்தையும் அணிந்தவராய் நெருப்பில் எரிந்த தகனப் பலியின் சாம்பலை எடுத்துப் பீடத்தண்டையில் கொட்டக்கடவார். 11 பின், முந்தின உடைகளைக் கழற்றி வேறு ( உடைகளை ) அணிந்து கொண்டு, அந்தச் சாம்பலைப் பாளையத்துக்கு வெளியே கொண்டு போய், மிகத் தூய்மையான இடத்திலே ( கொட்டி ), அது புழுதியாய் மாறிப்போக விடுவார். 12 நெருப்போ எப்பொழுதும் பீடத்தில் எரிந்து கொண்டிருக்கும். குரு நாள் தோறும் காலையில் விறகுகளை இட்டு, அதன் மீது தகனப் பலியையும் சமாதானப் பலிகளின் கொழுப்பையும் வைத்து எரிக்கக்கடவார். 13 அந்நெருப்போ, ஒருபொழுதும் அணைந்து போகாமல், எப்பொழுதும் பீடத்தின் மேல் இருக்க வேண்டியதாம். 14 ஆரோனின் புதல்வர்கள் ஆண்டவருக்கு முன்னும் பலி பீடத்திற்கு முன்னும் படைக்க வேண்டிய பலிக்கும், பானபோசனப் பலிகளுக்குமடுத்த சட்டமாவது: 15 குரு, எண்ணெய் தெளிக்கப்பட்ட மிருதுவான மாவில் ஒரு கைப்பிடி எடுத்து, அதையும், மாவின் மேல் வைக்கப்பட்டிருக்கும் தூப வகைகள் யாவையும் பீடத்தின் மேல் ஆண்டவருக்கு மிக்க நறுமணத்தின் அடையாளமாக எரிக்கக்கடவான். 16 மாவில் மீதியானதையோ ஆரோனும் அவன் புதல்வர்களும் புளிப்பில்லாமல் உண்பார்கள். கூடார மண்டபமாகிய பரிசுத்த இடத்திலே அதை உண்பார்கள். 17 அது புளிப்பில்லாதிருக்க வேண்டியது. அதில் ஒரு பாகம் ஆண்டவருக்குத் தகனப்பலியாகப் படைக்கப்படுகின்றதினாலே, அது பாவ நிவாரணப் பலியைப் போலும், குற்ற நிவாரணப் பலியைப் போலும், மிகப் புனிதமானது. 18 ஆரோன் குலத்தைச் சேர்ந்த ஆடவர் மட்டுமே அதை உண்பார்கள். ஆண்டவருக்குப் பலி செலுத்தும்போது நீங்கள் என்றும் தலைமுறை தலைமுறையாய் அனுசரிக்க வேண்டிய விதி இதுவாம். அதைத் தொடுகிற எவனும் புனிதமடைவான் என்றருளினார். 19 மேலும், ஆண்டவர் மோயீசனை நோக்கி: 20 ஆரோனும் அவன் புதல்வர்களும் தங்கள் அபிசேக நாளில் ஆண்டவருக்குப் படைக்க வேண்டிய காணிக்கை என்னவென்றால், ஏப்பி அளவில் பத்தில் ஒரு பங்கு மிருதுவான மாவைக் காலையில் பாதியாகவும் மாலையில் பாதியாகவும் தொடர்ந்த பலியாய்ச் செலுத்தக் கடவார்கள். 21 அது எண்ணெய் தெளிக்கப்பட்டுச் சட்டியிலே பொரிக்கப்படும். அதை ஆண்டவருக்கு மிக்க நறுமணமாகப் படைக்க வேண்டியவன், 22 தன் தகப்பனின் இடத்திலே உரிமையோடு அபிசேகம் செய்யப் பட்ட குருவேயாம். மேற்சொன்ன காணிக்கையோ பீடத்தின்மேல் முழுவதும் எரிக்கப்படக்கடவது. 23 ஏனென்றால் குருக்களின் பலியெல்லாம் நெருப்பிலே எரிபடுமே தவிர, அவை எவனாலும் உண்ணப்பட மாட்டாது என்றருளினார். 24 மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: 25 நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்ல வேண்டியதாவது: பாவநிவாரணப் பலியின் ஒழுங்கு முறையாவது; தகனப்பலி ஒப்புக்கொடுக்கப்படும் இடத்திலேயே பாவநிவாரணப் பலியும் ஒப்புக்கொடுக்கப்படும். 26 இது மிகவும் பரிசுத்தமானது, ஒப்புக்கொடுக்கிற குரு கூடார மண்டபத்தில் பரிசுத்த இடத்தில் இதை உண்பார். 27 இதன் இறைச்சியைத் தொடுவன எல்லாம் பரிசுத்தமுள்ளதாகும். இதன் இரத்தத்தில் சிறிது ஒர் ஆடையில் தெறித்ததாயின் அந்த ஆடை ஒரு பரிசுத்தமான இடத்தில் கழுவப்பட வேண்டும். 28 இது சமைக்கப்பட்ட மட்பாண்டம் உடைக்கப்பட வேண்டும். வெண்கலப் பாத்திரத்தில் சமைக்கப்பட்டதாயின் அது விளக்கப்பட்டுத் தண்ணீரால் கழுவப்பட வேண்டும். 29 குருகுலத்தைச் சேர்ந்த ஆடவர் யாவரும் இதன் இறைச்சியை உண்பார்கள். ஏனென்றால், இது மிகவும் பரிசுத்தமானது. 30 ஆனால் பாவ நிவாரணப் பலியின் இரத்தத்திலே சிறிது, பாவப் பரிகாரத்தின் பொருட்டுப் பரிசுத்த இடத்தினுள் சாட்சியக் கூடாரத்தில் கொண்டு வரப்படும். அந்தப் பலிப்பொருள் உண்ணப்படலாகாது; மாறாக நெருப்பிலே எரிக்கப்பட வேண்டும்
மொத்தம் 27 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 27
×

Alert

×

Tamil Letters Keypad References