தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
லேவியராகமம்
1. ஆணையிடுகிறவனுடைய குரலைக் கேட்டுச் சாட்சி சொல்ல வந்தவன் தான் கண்டதையும் நிச்சயமாய் அறிந்ததையும் தெரிவிக்காமல் போவானாயின், அவன் குற்றவாளியாகிறான். தன் அக்கிரமத்தைத் தன்மேல் சுமந்து கொள்வான்.
2. காட்டு மிருகத்தால் கொல்லப்பட்ட உடலையோ, தானாகச் செத்ததையோ, ஊர்வனவற்றையோ வேறெந்த அசுத்தமான பொருளையோ தொட்டவன் தான் தீட்டுப்பட்டவன் என்பதை மறந்திருந்தாலும், தீட்டும் குற்றமும் உள்ளவனாய் இருக்கிறான்.
3. அல்லது, மனிதர் எவ்வித அசுத்தத்தினால் வழக்கமாய்த் தீட்டுப்படுவார்களோ அவ்விதமாய்த் தீட்டுப்பட்ட மனிதரில் யாரேனும் ஒருவனைத் தொட்டவன் முதலில் மறந்து பிறகு அதனை அறிய வந்தால் அவன் குற்றத்திற்கு உட்படுவான்.
4. நன்மையோ தீமையோ தான் செய்வதாக ஆணையிட்டும் வாயினால் சொல்லியும் சத்தியம் செய்தவன் முதலிலே மறந்தும் பிறகு தான் செய்தது பாவமென்று அறிக்கையிட்டால்,
5. தான் செய்த குற்றத்துக்காகத் தவம் செய்யவும்,
6. மந்தையினின்று ஒரு பெண் செம்மறியாட்டுக் குட்டியையோ, பெண் வெள்ளாட்டுக் குட்டியையோ ஒப்புக்கொடுக்கவும் கடவான். அப்போது குரு அவனுக்காகவும் அவன் குற்றத்துக்காகவும் வேண்டிக்கொள்வார்.
7. ஆனால், அவன் மிருகத்தை ஒப்புக்கொடுக்க வசதியில்லாதவனாயிருப்பின் அவன் இரண்டு புறக்களையோ இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளையோ எடுத்துக் குற்றத்திற்காக ஒன்றையும், தகனப் பலிக்காகப் பிறிதொன்றையும் ஆண்டவர் திருமுன் கொண்டுவரக்கடவான்.
8. பின் அவைகளைக் குருவிடம் கொடுப்பான். இவர் பாவ நிவாரணப் பலிக்கு உரியதை முதலில் செலுத்தி, அதன் தலையை அதன் கழுத்தின்பால் வளைத்து அதை முழுவதும் ஒடிக்காமலும் இரண்டாக்காமலும் கொன்று,
9. அவன் இரத்தத்தைப் பலிப்பீடத்தின் புறத்தே தெளிப்பார். பிறகு, அது குற்றத்திற்குரிய பலியாகையால், மிஞ்சும் இரத்தமெல்லாவற்றையும் அதன் அடியில் ஒழுக விடுவார்.
10. மற்றதையோ வழக்கப்படி தகனப் பலியாகச் சுட்டெரிப்பார். பின் அவனுக்காகவும் அவன் குற்றத்திற்காகவும் அவர் வேண்ட அவனுக்கு மன்னிப்புக் கிடைக்கும்.
11. மேற்சொன்ன இரண்டு புறாக்களையோ, இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளையோ கொண்டு வரக் கூடாதவனாயிருப்பின், தனது குற்றத்திற்காக எப்பி ( என்ற அளவில்) பத்தில் ஒரு பங்கு மிருதுவான மாவை ஒப்புக்கொடுப்பான். அது பாவநிவாரணப் ( பலி ) யாகையால், அதன்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூப வகைகள் இடாமலும்,
12. அதைக் குருவிடத்தில் கொண்டு வருவான். இவர் அதினின்று ஒரு கைப்பிடி எடுத்து, ஒப்புக்கொடுத்தவனுடைய நினைவாகப் பீடத்தின் மீது சுட்டெரித்து, அவனுக்காக மன்றாடிப் பரிகாரம் செய்வார்.
13. எஞ்சியதோ நன் கொடையாகக் குருவைச் சேரும் என்றருளினார்.
14. மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
15. ஒருவன் அறியாமையால் ஆண்டவருக்கு அர்ச்சித்து ஒதுக்கப்பட்டவற்றின் காரியத்திலே மறைச் சடங்குகளைச் சரியாய் அனுசரியாததின் மூலம் பாவத்திற்கு ஆளானால், அவன் தன் குற்றத்திற்காகப் பரிசுத்த இடத்து நிறையின்படி இரண்டு சீக்கல் விலை பெறுமான ஒரு மறுவற்ற ஆட்டுக்கிடாயை மந்தையினின்று கொண்டுவந்து ஒப்புக் கொடுப்பான்.
16. தன்னால் உண்டான இழப்பிற்கு ஈடு செய்யக்கடவான். அதனோடு ஜந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் குருவின் கையில் கொடுக்கக்கடவான். குருவோ, ஆட்டுக்கிடாயை ஒப்புக்கொடுத்து அவனுக்காக மன்றாட, அவனுக்கு மன்னிப்புக் கிடைக்கும்.
17. ஒருவன் ஆண்டவருடைய சட்டத்தால் விலக்கப்பட்டவைகளில் எதையேனும் தெரியாமல் செய்து பாவத்திற்கு ஆளானால், அவன் தன் அக்கிரமத்தைக் கண்டறிந்தவுடனே,
18. தன் பாவத்தின் கனத்துக்கும் அளவுக்கும் தக்கபடி மந்தையினின்று தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு மறுவற்ற ஆட்டுக்கிடாயைக் குருவிடம் கொண்டு வருவான். இவரோ, அறியாமல் செய்தான் என்று அவனுக்காக வேண்டவே, அவனுக்கு மன்னிப்புக் கிடைக்கும்.
19. ஏனென்றால் அவன் அறியாமையாலேயே ஆண்டவருக்கு விரோதமாய்க் குற்றஞ் செய்தான் என்றருளினார்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 27 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 5 / 27
லேவியராகமம் 5:39
1 ஆணையிடுகிறவனுடைய குரலைக் கேட்டுச் சாட்சி சொல்ல வந்தவன் தான் கண்டதையும் நிச்சயமாய் அறிந்ததையும் தெரிவிக்காமல் போவானாயின், அவன் குற்றவாளியாகிறான். தன் அக்கிரமத்தைத் தன்மேல் சுமந்து கொள்வான். 2 காட்டு மிருகத்தால் கொல்லப்பட்ட உடலையோ, தானாகச் செத்ததையோ, ஊர்வனவற்றையோ வேறெந்த அசுத்தமான பொருளையோ தொட்டவன் தான் தீட்டுப்பட்டவன் என்பதை மறந்திருந்தாலும், தீட்டும் குற்றமும் உள்ளவனாய் இருக்கிறான். 3 அல்லது, மனிதர் எவ்வித அசுத்தத்தினால் வழக்கமாய்த் தீட்டுப்படுவார்களோ அவ்விதமாய்த் தீட்டுப்பட்ட மனிதரில் யாரேனும் ஒருவனைத் தொட்டவன் முதலில் மறந்து பிறகு அதனை அறிய வந்தால் அவன் குற்றத்திற்கு உட்படுவான். 4 நன்மையோ தீமையோ தான் செய்வதாக ஆணையிட்டும் வாயினால் சொல்லியும் சத்தியம் செய்தவன் முதலிலே மறந்தும் பிறகு தான் செய்தது பாவமென்று அறிக்கையிட்டால், 5 தான் செய்த குற்றத்துக்காகத் தவம் செய்யவும், 6 மந்தையினின்று ஒரு பெண் செம்மறியாட்டுக் குட்டியையோ, பெண் வெள்ளாட்டுக் குட்டியையோ ஒப்புக்கொடுக்கவும் கடவான். அப்போது குரு அவனுக்காகவும் அவன் குற்றத்துக்காகவும் வேண்டிக்கொள்வார். 7 ஆனால், அவன் மிருகத்தை ஒப்புக்கொடுக்க வசதியில்லாதவனாயிருப்பின் அவன் இரண்டு புறக்களையோ இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளையோ எடுத்துக் குற்றத்திற்காக ஒன்றையும், தகனப் பலிக்காகப் பிறிதொன்றையும் ஆண்டவர் திருமுன் கொண்டுவரக்கடவான். 8 பின் அவைகளைக் குருவிடம் கொடுப்பான். இவர் பாவ நிவாரணப் பலிக்கு உரியதை முதலில் செலுத்தி, அதன் தலையை அதன் கழுத்தின்பால் வளைத்து அதை முழுவதும் ஒடிக்காமலும் இரண்டாக்காமலும் கொன்று, 9 அவன் இரத்தத்தைப் பலிப்பீடத்தின் புறத்தே தெளிப்பார். பிறகு, அது குற்றத்திற்குரிய பலியாகையால், மிஞ்சும் இரத்தமெல்லாவற்றையும் அதன் அடியில் ஒழுக விடுவார். 10 மற்றதையோ வழக்கப்படி தகனப் பலியாகச் சுட்டெரிப்பார். பின் அவனுக்காகவும் அவன் குற்றத்திற்காகவும் அவர் வேண்ட அவனுக்கு மன்னிப்புக் கிடைக்கும். 11 மேற்சொன்ன இரண்டு புறாக்களையோ, இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளையோ கொண்டு வரக் கூடாதவனாயிருப்பின், தனது குற்றத்திற்காக எப்பி ( என்ற அளவில்) பத்தில் ஒரு பங்கு மிருதுவான மாவை ஒப்புக்கொடுப்பான். அது பாவநிவாரணப் ( பலி ) யாகையால், அதன்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூப வகைகள் இடாமலும், 12 அதைக் குருவிடத்தில் கொண்டு வருவான். இவர் அதினின்று ஒரு கைப்பிடி எடுத்து, ஒப்புக்கொடுத்தவனுடைய நினைவாகப் பீடத்தின் மீது சுட்டெரித்து, அவனுக்காக மன்றாடிப் பரிகாரம் செய்வார். 13 எஞ்சியதோ நன் கொடையாகக் குருவைச் சேரும் என்றருளினார். 14 மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: 15 ஒருவன் அறியாமையால் ஆண்டவருக்கு அர்ச்சித்து ஒதுக்கப்பட்டவற்றின் காரியத்திலே மறைச் சடங்குகளைச் சரியாய் அனுசரியாததின் மூலம் பாவத்திற்கு ஆளானால், அவன் தன் குற்றத்திற்காகப் பரிசுத்த இடத்து நிறையின்படி இரண்டு சீக்கல் விலை பெறுமான ஒரு மறுவற்ற ஆட்டுக்கிடாயை மந்தையினின்று கொண்டுவந்து ஒப்புக் கொடுப்பான். 16 தன்னால் உண்டான இழப்பிற்கு ஈடு செய்யக்கடவான். அதனோடு ஜந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் குருவின் கையில் கொடுக்கக்கடவான். குருவோ, ஆட்டுக்கிடாயை ஒப்புக்கொடுத்து அவனுக்காக மன்றாட, அவனுக்கு மன்னிப்புக் கிடைக்கும். 17 ஒருவன் ஆண்டவருடைய சட்டத்தால் விலக்கப்பட்டவைகளில் எதையேனும் தெரியாமல் செய்து பாவத்திற்கு ஆளானால், அவன் தன் அக்கிரமத்தைக் கண்டறிந்தவுடனே, 18 தன் பாவத்தின் கனத்துக்கும் அளவுக்கும் தக்கபடி மந்தையினின்று தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு மறுவற்ற ஆட்டுக்கிடாயைக் குருவிடம் கொண்டு வருவான். இவரோ, அறியாமல் செய்தான் என்று அவனுக்காக வேண்டவே, அவனுக்கு மன்னிப்புக் கிடைக்கும். 19 ஏனென்றால் அவன் அறியாமையாலேயே ஆண்டவருக்கு விரோதமாய்க் குற்றஞ் செய்தான் என்றருளினார்.
மொத்தம் 27 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 5 / 27
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References