தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
லேவியராகமம்
1. மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2. நீ இஸ்ராயேல் மக்களுக்குச் சொல்லவேண்டியதாவது: செய்ய வேண்டாமென்று ஆண்டவர் கட்டளை இட்டவைகளில் ஒன்றைத் தெரியாமல் மீறி ஒருவன் பாவம் செய்யும் போது,
3. அல்லது அபிசேகம் செய்யப் பெற்ற ஒரு குரு பாவம் செய்து அதனால் மக்களையும் பாவத்திற்கு உட்படுத்தும் போது, அவன் தன் பாவத்திற்கு பரிகாரமாக மறுவற்ற ஒரு இளங்காளையை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுப்பானாக.
4. ( எவ்வாறெனில் ) சாட்சியக் கூடாரவாயிலிலே ஆண்டவர் திருமுன் அதைக் கொணர்ந்து அதன் தலையின்மீது கையை வைத்து, அதைக் கொன்று ஆண்டவருக்குப் பலியிடுவான்.
5. பிறகு அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துச் சாட்சியக் கூடாரத்தினுள் கொண்டு வந்து,
6. அவ்விரத்தத்தில் விரலைத் தோய்த்து, அதைக் கொண்டு ஏழுமுறை ஆண்டவர் திருமுன் பரிசுத்த இடத்தின் திரைக்கெதிரே தெளிப்பான்.
7. மேலும், அவன் அதில் கொஞ்சம் எடுத்துச் சாட்சியக் கூடாரத்தின் உள்ளேயிருக்கும் ஆண்டவருக்கு மிக விருப்பமானதாகவும் நறுமணமுள்ளதாகவும் இருக்கும்படி பீடக் கொம்புகளின் மேல் பூசுவான். மீதியை எல்லாம் கூடார வாயிலிலுள்ள தகனப்பலி பீடத்தின் அடியில் ஊற்றிவிடக்கடவான்.
8. பிறகு அவன் பாவத்திற்குப் பரிகாரமாகச் செலுத்தப்படும் பலிப் பொருளின் கொழுப்பு முழுவதையும், குடல்களை மூடியிருக்கும் கொழுப்பையும், உள்ளே இருக்கிற எல்லாவற்றையும் எடுத்து,
9. இரண்டு சிறு நீரகங்களையும், அவற்றின் மேலிருக்கும் விலாவை அடுத்த சவ்வையும், சிறுநீரகங்களோடு இருக்கும் ஈரலின் கொழுப்பையும் எடுத்து,
10. சமாதானப்பலிக்குரிய காளைக்குச் செய்கிற வழக்கப்படி, அவற்றையெல்லாம் தகனப் பலிபீடத்தின் மேல் சுட்டெரிக்கக் கடவான்.
11. ஆனால், தோலையும், இறைச்சி முழுவதையும்,
12. தலை, கால், குடல், சாணம், முதலிய மற்ற உடலுறுப்புக்களையும் பாளையத்திற்கு வெளியே சாம்பல் கொட்டுவதற்குக் குறிக்கப்பட்ட சுத்தமான இடத்திற்குக் கொண்டு போய், அவ்விடத்திலே விறகுக் கட்டைகளின் மேல் இட்டுச் சுட்டெரிக்கக் கடவான்.
13. இஸ்ராயேலின் மக்கள் எல்லாரும் அறியாமையினால் தவறி ஆண்டவருடைய கட்டளைக்கு விரோதமானதைச் செய்து,
14. பிறகு, தாங்கள் செய்தது பாவமென்று கண்டுபிடித்தால், அவர்கள் தங்கள் பாவப் பரிகாரமாக ஒரு இளங்காளையை ஒப்புக் கொடுக்க வேண்டும். அதற்காகக் கூடார வாயிலுக்கு அதைக் கொண்டு வரவேண்டும்.
15. அப்போது மக்களில் மூப்பர்கள் ஆண்டவர் திருமுன் அதன் தலை மீது கையை வைப்பார்கள். அந்த இளங்காளை ஆண்டவர் திருமுன் பலியிடப்பட்ட பின்,
16. அபிசேகம் செய்யப் பெற்ற குரு அதன் இரத்தத்தில் சிறிது எடுத்துச் சாட்சியக் கூடாரத்தினுள் கொண்டு வந்து,
17. அதிலே தன் விரலைத் தோய்த்து ஏழுமுறை திரைக்கு முன் தெளிப்பார்.
18. பிறகு சாட்சியக் கூடாரத்திலே ஆண்டவர் திருமுன் அமைந்திருக்கும் பீடத்தின் கொம்புகளிலும் அந்த இரத்தத்தில் கொஞ்சம் பூசி, எஞ்சிய இரத்தத்தைச் சாட்சியக் கூடார வாயிலிலுள்ள தகனப் பீடத்தின் அடியில் ஊற்றி விடுவார்.
19. மேலும் அதனுடைய கொழுப்பெல்லாவற்றையும் பீடத்தின்மீது சுட்டெரிப்பார்.
20. முன்பு செய்தது போலவே இந்தக் காளைக்கும் செய்து குரு அவர்களுக்காக வேண்டவே, ஆண்டவர், அவர்கள் மீது இரக்கம் கொள்வார்.
21. முன்பு செய்தது போலவே இக்காளையையும் பாளையத்திற்கு வெளியே கொண்டுபோய்ச் சுட்டெரிக்கக்கடவார். இவ்வாறு மக்களின் பாவத்திற்குப் பரிகாரம் செய்யப்படும்.
22. அரசன் ஆண்டவருடைய சட்டத்தால் விலக்கப்பட்டவற்றில் ஒன்றைத் தெரியாமல் செய்து பாவத்திற்கு ஆளாகி,
23. பின் தனது பாவத்தை அறிய வந்தால், மறுவற்ற வெள்ளாட்டுக்கிடாய் ஒன்றை ஆண்டவருக்குப் பலியாக ஒப்புக்கொடுத்து,
24. தனது கையை அதன் தலை மீது வைத்து அது பாவ விமோசனப் பலியாய் இருப்பதனால், ஆண்டவர் திருமுன் தகனப்பலியிடுவதற்குக் குறித்திருக்கும் இடத்திலே அதைப் பலியிடுவான்.
25. பின்னர் குரு பாவத்துக்கான பலிப்பொருளின் இரத்தத்திலே விரலைத் தோய்த்துத் தகனப் பலிபீடத்தின் கொம்புகளில் தடவி, எஞ்சிய இரத்தத்தை அதன் பாதத்திலே ஊற்றி விடுவார்.
26. கொழுப்பையோ, சமாதானப் பலிகளில் செய்யப்படுகிற வழக்கப்படி, (பீடத்தின்மீது ) சுட்டெரித்த பிறகு, குரு அவனுக்காகவும் அவன் பாவத்துக்காகவும் மன்றாடவே அவன் மன்னிப்படைவான்.
27. நாட்டு மக்களில் யாரேனும் அறியாமையினால் ஆண்டவருடைய கட்டளைகளால் விலக்கப்பட்டவைகளில் யாதொன்றையும் மீறிப் பாவம் செய்தால்,
28. அவன் தன் பாவத்தைக் கண்டுணர்ந்த பின் மறுவற்ற ஒரு வெள்ளாட்டை ஒப்புக்கொடுத்து,
29. பாவப்பொறுத்தலுக்கான அந்தப் பலிமிருகத்தின் தலைமீது கையை வைத்து, அதைத் தகனப் பலியிடும் இடத்திலே வெட்டிக் கொல்லக்கடவான்.
30. குருவும் தம் விரலில் இரத்தத்தை எடுத்துத் தகனப் பலிபீடத்தின் கொம்புகளில் தடவி, எஞ்சிய இரத்தத்தை அதன் அடியிலே ஊற்றிவிடுவார்.
31. சமாதானப் பலிகளில் செய்யப்படுவதுபோல்,( குரு ) கொழுப்பெல்லாம் எடுத்துக்கொண்டு போய்ப் பீடத்தின் மீது ஆண்டவருக்கு நறுமணமாய்ச் சுட்டெரித்து, அவனுக்காக மன்றாடுவார். அப்போது அவனுக்கு மன்னிப்புக் கிடைக்கும்.
32. ஆனால், அவன் மந்தையினின்று மறுவற்ற ஒரு பெண் ஆட்டைப் பாவ விமோசனப் பலியாக ஒப்புக்கொடுப்பானாயின்,
33. அவன் அதன் தலைமீது தன் கையை வைத்துத் தகனப்பலி மிருகங்கள் கொல்லப்படும் இடத்திலே அதைக் கொல்லக்கடவான்.
34. குருவோ தம் விரலில் அதன் இரத்தத்தை எடுத்துத் தகனப் பலி பீடத்தின் கொம்புகளில் தடவி, எஞ்சிய இரத்தத்தை அதன் அடியில் ஊற்றி விடுவார்.
35. பிறகு, சமாதானப் பலியாக வெட்டப்படும் செம்மறிக் கிடாயிக்குச் செய்கிற வழக்கப்படி, அதனுடைய கொழுப்பெல்லாம் எடுத்துப் பீடத்தின் மீது ஆண்டவருக்கு உரித்தான தூபவகைகளாகச் சுட்டெரித்து, அவனுக்காகவும் அவன் பாவத்துக்காகவும் மன்றாடுவாராக. அதனால் அவனுக்கு மன்னிப்புக் கிடைக்கும்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 27 Chapters, Current Chapter 4 of Total Chapters 27
லேவியராகமம் 4:37

×

Alert

×

tamil Letters Keypad References