தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
லேவியராகமம்
1. மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2. நீ இஸ்ராயேல் மக்களுக்குச் சொல்ல வேண்டியதாவது: ஒரு மனிதன் ஒரு சிறப்பு நேர்ச்சை செய்து தன் உயிரைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்திருந்தால், அவன் பின்வரும் ( மதிப்பின்படி ) விலை செலுத்தக்கடவான்.
3. அதாவது, இருபது வயது முதல் அறுபது வயதுக்கு உட்பட்ட ஆடவனாயின், அவன் பரிசுத்த சீக்கல் கணக்கின்படி ஐம்பது சீக்கல் வெள்ளி கொடுக்கக்கடவான்.
4. பெண்ணானால் முப்பது கொடுப்பாள்.
5. ஐந்து வயது முதல் இருபது வயது வரையிலுமோவென்றால், ஆடவன் இருபது சீக்கலும் பெண் பத்து சீக்கலும் செலுத்துவார்கள்.
6. ஒரு மாதம் முதல் ஐந்து வயது வரையுள்ள ஆண்பிள்ளைக்காக ஐந்து சீக்கல்களையும் பெண்பிள்ளைக்காக மூன்று சீக்கல்களையும் கொடுப்பார்கள்.
7. அறுபதும் அதற்கு மேற்பட்ட ஆடவன் பதினைந்து சீக்கல்களையும், பெண் பத்துச் சீக்கல்களையும் செலுத்தக்கடவார்கள்.
8. மதிப்புக்கேற்றபடி செலுத்த இயலாத வறியவனாயின், அவன் குருவுக்கு முன் வந்து நிற்கக்கடவான். குரு மதிப்பிட்டு, அவன் எவ்வளவு கொடுக்கத் திறனுள்ளவனென்று தீர்ப்புச் சொல்வாரோ அவ்வளவு அவன் கொடுக்கக்கடவான்.
9. ஒருவன் ஆண்டவருக்குப் பலியிடப்படத்தக்க மிருகத்தைக் கொடுப்பதாக நேர்ச்சை செய்திருந்தால் அது பரிசுத்தமானது;
10. அதை இனி மாற்றவே கூடாது. அதாவது நல்லதுக்குப் பதிலாகக் கெட்டதையும், கெட்டதிற்குப் பதிலாக நல்லதையும் கொடுக்கக் கூடாது. ஒருவன் ஒன்றுக்குப் பதிலாக வேறொன்றை மாற்றிக் கொடுக்கும்பொழுது மாற்றப்பட்டதும் எதற்குப் பதிலாக மாற்றப்பட்டதோ அதுவும், ஆக இரண்டுமே ஆண்டவருக்குச் சொந்தம்.
11. ஒருவன் ஆண்டவருக்குப் பலியிடத் தகாத, சுத்தமில்லாத யாதொரு மிருகத்தை நேர்ச்சை செய்திருந்தால், அதைக் குருவுக்கு முன் நிறுத்தக்கடவான்.
12. குரு அதை நல்லதென்றோ கெட்டதென்றோ முடிவு செய்து விலையைத் திட்டம் செய்வார்.
13. நேர்ச்சை செய்தவன் விலையைச் செலுத்த இசைவானாயின், மதிப்புக்குமேல் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக் கொடுக்கக்கடவான்.
14. ஒரு மனிதன் நேர்ச்சை செய்து தன் வீட்டை ஆண்டவருக்கு நேர்ந்திருந்தானாயின், குரு அது நலமானதா என்று பார்த்து எவ்வளவுக்கு மதிப்புச் சொல்வாரோ அவ்வளவுக்கு விற்கப்படும்.
15. ஆனால், நேர்ந்து கொண்டவனே அதை மீட்டுக்கொள்ள மனம் கொண்டிருந்தால், மதிப்புக்கு மேல் ஐந்தில் ஒரு பங்கையும் அவன் சேர்த்துக் கொடுத்தால் வீடு அவனுடையதாகும்.
16. ஒருவன் தனக்குச் சொந்தமான வயலை ஆண்டவருக்கு நேர்ந்திருந்தால் அதன் விதைப்புக்கு ஏற்றபடி விலை இருக்க வேண்டும். ஒரு நிலம் விதைக்க முப்பது கலம் வாற்கோதுமை செல்லுமென்றால், அந்த நிலம் ஜம்பது சீக்கல் வெள்ளி பெறும்.
17. அவன் ஜுபிலி ஆண்டுத் தொடக்க முதல் தன் வயலை நேர்ந்து கொடுத்திருந்தால் அதன் பெறுமதிக்கேற்ப அது மதிக்கப்படும்.
18. ஜுபிலி ஆண்டுக்குப் பின் அது நேர்ச்சையானதென்றால், அடுத்த ஜுபிலி ஆண்டுவரை எத்தனை ஆண்டு செல்லுமென்று பார்த்தே குரு மதிப்புச் சொல்ல வேண்டும். அவற்றிற்கு ஏற்ப விலையைக் குறைக்கக் கடவார்.
19. தன் வயலை நேர்ந்து கொண்டவனே அதை மீட்டுக் கொள்ள மனம் கொண்டிருந்தால், மதிக்கப்பட்ட விலைக்கு மேல் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக் கொடுத்தால் வயல் அவனுடையதாகும்.
20. நேர்ந்து கொண்டவனே தன் வயலை மீட்டுக் கொள்ள மனமில்லாமல் வேறொருவனுக்கு விற்றிருப்பானாயின், அவன் இனிமேல் அதனை மீட்கயியலாது.
21. ஏனென்றால், ஜுபிலி ஆண்டு வரும்போது அந்த வயல் ஆண்டவருக்கு நேர்ச்சை ஆகிவிடும். இப்படிப்பட்ட சொத்து குருக்களின் உடைமையாகி விடும்.
22. ஆயினும், அது தனக்குச் சொந்தமான வயலாய் இராமல், அதைத்தானே விலைக்கு வாங்கி ஒருவன் ஆண்டவருக்கு நேர்ச்சி செய்திருந்தானாயின்,
23. குரு ஜுபிலி ஆண்டு வரையுள்ள ஆண்டுகளைக் கணித்து, அந்தக் கணக்கிற்கு ஏற்றபடி அதன் விலையைக் குறிக்கக் கடவார். அப்போது அதை நேர்ந்தவன் (விலையை) ஆண்டவருக்குச் செலுத்துவான்.
24. ஜுபிலி ஆண்டு வரும்போதோ, எவன் அந்த வயலை முதலிலே தன் சொந்தமென்று அனுபவித்துப் பிறகு விற்றிருந்தானோ அந்த முந்திய உரிமையாளனையே அது சேரும்.
25. எல்லா மதிப்பிலும் பரிசுத்த இடத்துச் சீக்கலே உபயோகிக்கப்படும். ஒரு சீக்கல் என்பது இருபது ஒபோல்.
26. தலையீற்றானவை ஆண்டவருடையவை. ஆகையால், ஒருவரும் தலையீற்றாகிய உயிர்களை நேர்ந்து ( ஆண்டவருக்கு ) அருச்சித்து ஒதுக்கக் கூடாது. மாடெனினும் ஆடெனினும் அவை ஆண்டவருடையவைகளாம்.
27. அசுத்தப் பிராணியின் தலையீற்றை அருச்சித்து ஒதுக்கினவன் அதன் மதிப்புக்கு மேலே ஐந்தில் ஒரு பங்கைக் கூடச் சேர்த்துக் கொடுத்து அதை மீட்டுக் கொள்வான். இப்படி மீட்டுக்கொள்ள அவன் இசையாதிருந்தால், அதன் மதிப்புக்கு ஏற்றபடி வேறொருவனிடம் விற்கப்படும்.
28. ஆண்டவருக்கென்று அருச்சிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட எதுவும் -- மனிதனும் சரி, மிருகமும் சரி, வயலும் சரி -- அது விற்கப்படவும், மீட்கப்படவும் கூடாது. அவ்விதமாக ஆண்டவருக்கு நேர்ச்சை செய்யப்பட்ட பொருட்களெல்லாம் மிகவும் பரிசுத்தமானவை. எனவே, அவை ஆண்டவருக்குச் சொந்தம்.
29. மனிதர்களிடமிருந்து அழிக்கப்படுவதற்காக ஒதுக்கப்பட்ட எந்த மனிதனும் மீட்கப்படக் கூடாது; கொல்லப்படவே வேண்டும்.
30. நிலங்களின் பலனிலும் மரங்களின் பழங்களிலும் பத்தில் ஒரு பங்கு ஆண்டவருக்கு உரியது. அது அவருக்குப் பரிசுத்தமானது.
31. ஆயினும், ஒருவன் தன்னுடைய பத்திலொரு பாகமானவற்றை மீட்டுக்கொள்ள மனமுள்ளவனாயின், அவற்றின் விலையையும் விலையின் ஐந்தில் ஒரு பாகத்தையும் சேர்த்துக் கொடுக்கக் கடவான்.
32. மேய்ப்பனுடைய கோலுக்குக் கீழ்ப்பட்ட ஆடு, மாடு, வெள்ளாடு முதலியவற்றில் பத்தில் ஒன்றாய் இருப்பனவெல்லாம் ஆண்டவருக்குப் பரிசுத்தமாகும்.
33. அவற்றினிடையே நல்லது, கெட்டது பற்றி அவன் ஆராயவும் வேண்டாம்; மாற்றவும் வேண்டாம். மாற்றினால், அதுவும் பதிலுக்குக் கொடுக்கப்பட்டதும் ஆகிய இரண்டுமே ஆண்டவருக்குப் பரிசுத்தம். அது மீட்கப்படலாகாது என்றருளினார்.
34. ஆண்டவர் சீனாய் மலையில் இஸ்ராயேல் மக்களுக்காக மோயீசனுக்குக் கொடுத்த கட்டளைகள் இவைகளேயாம்.
மொத்தம் 27 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 27 / 27
1 மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: 2 நீ இஸ்ராயேல் மக்களுக்குச் சொல்ல வேண்டியதாவது: ஒரு மனிதன் ஒரு சிறப்பு நேர்ச்சை செய்து தன் உயிரைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்திருந்தால், அவன் பின்வரும் ( மதிப்பின்படி ) விலை செலுத்தக்கடவான். 3 அதாவது, இருபது வயது முதல் அறுபது வயதுக்கு உட்பட்ட ஆடவனாயின், அவன் பரிசுத்த சீக்கல் கணக்கின்படி ஐம்பது சீக்கல் வெள்ளி கொடுக்கக்கடவான். 4 பெண்ணானால் முப்பது கொடுப்பாள். 5 ஐந்து வயது முதல் இருபது வயது வரையிலுமோவென்றால், ஆடவன் இருபது சீக்கலும் பெண் பத்து சீக்கலும் செலுத்துவார்கள். 6 ஒரு மாதம் முதல் ஐந்து வயது வரையுள்ள ஆண்பிள்ளைக்காக ஐந்து சீக்கல்களையும் பெண்பிள்ளைக்காக மூன்று சீக்கல்களையும் கொடுப்பார்கள். 7 அறுபதும் அதற்கு மேற்பட்ட ஆடவன் பதினைந்து சீக்கல்களையும், பெண் பத்துச் சீக்கல்களையும் செலுத்தக்கடவார்கள். 8 மதிப்புக்கேற்றபடி செலுத்த இயலாத வறியவனாயின், அவன் குருவுக்கு முன் வந்து நிற்கக்கடவான். குரு மதிப்பிட்டு, அவன் எவ்வளவு கொடுக்கத் திறனுள்ளவனென்று தீர்ப்புச் சொல்வாரோ அவ்வளவு அவன் கொடுக்கக்கடவான். 9 ஒருவன் ஆண்டவருக்குப் பலியிடப்படத்தக்க மிருகத்தைக் கொடுப்பதாக நேர்ச்சை செய்திருந்தால் அது பரிசுத்தமானது; 10 அதை இனி மாற்றவே கூடாது. அதாவது நல்லதுக்குப் பதிலாகக் கெட்டதையும், கெட்டதிற்குப் பதிலாக நல்லதையும் கொடுக்கக் கூடாது. ஒருவன் ஒன்றுக்குப் பதிலாக வேறொன்றை மாற்றிக் கொடுக்கும்பொழுது மாற்றப்பட்டதும் எதற்குப் பதிலாக மாற்றப்பட்டதோ அதுவும், ஆக இரண்டுமே ஆண்டவருக்குச் சொந்தம். 11 ஒருவன் ஆண்டவருக்குப் பலியிடத் தகாத, சுத்தமில்லாத யாதொரு மிருகத்தை நேர்ச்சை செய்திருந்தால், அதைக் குருவுக்கு முன் நிறுத்தக்கடவான். 12 குரு அதை நல்லதென்றோ கெட்டதென்றோ முடிவு செய்து விலையைத் திட்டம் செய்வார். 13 நேர்ச்சை செய்தவன் விலையைச் செலுத்த இசைவானாயின், மதிப்புக்குமேல் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக் கொடுக்கக்கடவான். 14 ஒரு மனிதன் நேர்ச்சை செய்து தன் வீட்டை ஆண்டவருக்கு நேர்ந்திருந்தானாயின், குரு அது நலமானதா என்று பார்த்து எவ்வளவுக்கு மதிப்புச் சொல்வாரோ அவ்வளவுக்கு விற்கப்படும். 15 ஆனால், நேர்ந்து கொண்டவனே அதை மீட்டுக்கொள்ள மனம் கொண்டிருந்தால், மதிப்புக்கு மேல் ஐந்தில் ஒரு பங்கையும் அவன் சேர்த்துக் கொடுத்தால் வீடு அவனுடையதாகும். 16 ஒருவன் தனக்குச் சொந்தமான வயலை ஆண்டவருக்கு நேர்ந்திருந்தால் அதன் விதைப்புக்கு ஏற்றபடி விலை இருக்க வேண்டும். ஒரு நிலம் விதைக்க முப்பது கலம் வாற்கோதுமை செல்லுமென்றால், அந்த நிலம் ஜம்பது சீக்கல் வெள்ளி பெறும். 17 அவன் ஜுபிலி ஆண்டுத் தொடக்க முதல் தன் வயலை நேர்ந்து கொடுத்திருந்தால் அதன் பெறுமதிக்கேற்ப அது மதிக்கப்படும். 18 ஜுபிலி ஆண்டுக்குப் பின் அது நேர்ச்சையானதென்றால், அடுத்த ஜுபிலி ஆண்டுவரை எத்தனை ஆண்டு செல்லுமென்று பார்த்தே குரு மதிப்புச் சொல்ல வேண்டும். அவற்றிற்கு ஏற்ப விலையைக் குறைக்கக் கடவார். 19 தன் வயலை நேர்ந்து கொண்டவனே அதை மீட்டுக் கொள்ள மனம் கொண்டிருந்தால், மதிக்கப்பட்ட விலைக்கு மேல் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக் கொடுத்தால் வயல் அவனுடையதாகும். 20 நேர்ந்து கொண்டவனே தன் வயலை மீட்டுக் கொள்ள மனமில்லாமல் வேறொருவனுக்கு விற்றிருப்பானாயின், அவன் இனிமேல் அதனை மீட்கயியலாது. 21 ஏனென்றால், ஜுபிலி ஆண்டு வரும்போது அந்த வயல் ஆண்டவருக்கு நேர்ச்சை ஆகிவிடும். இப்படிப்பட்ட சொத்து குருக்களின் உடைமையாகி விடும். 22 ஆயினும், அது தனக்குச் சொந்தமான வயலாய் இராமல், அதைத்தானே விலைக்கு வாங்கி ஒருவன் ஆண்டவருக்கு நேர்ச்சி செய்திருந்தானாயின், 23 குரு ஜுபிலி ஆண்டு வரையுள்ள ஆண்டுகளைக் கணித்து, அந்தக் கணக்கிற்கு ஏற்றபடி அதன் விலையைக் குறிக்கக் கடவார். அப்போது அதை நேர்ந்தவன் (விலையை) ஆண்டவருக்குச் செலுத்துவான். 24 ஜுபிலி ஆண்டு வரும்போதோ, எவன் அந்த வயலை முதலிலே தன் சொந்தமென்று அனுபவித்துப் பிறகு விற்றிருந்தானோ அந்த முந்திய உரிமையாளனையே அது சேரும். 25 எல்லா மதிப்பிலும் பரிசுத்த இடத்துச் சீக்கலே உபயோகிக்கப்படும். ஒரு சீக்கல் என்பது இருபது ஒபோல். 26 தலையீற்றானவை ஆண்டவருடையவை. ஆகையால், ஒருவரும் தலையீற்றாகிய உயிர்களை நேர்ந்து ( ஆண்டவருக்கு ) அருச்சித்து ஒதுக்கக் கூடாது. மாடெனினும் ஆடெனினும் அவை ஆண்டவருடையவைகளாம். 27 அசுத்தப் பிராணியின் தலையீற்றை அருச்சித்து ஒதுக்கினவன் அதன் மதிப்புக்கு மேலே ஐந்தில் ஒரு பங்கைக் கூடச் சேர்த்துக் கொடுத்து அதை மீட்டுக் கொள்வான். இப்படி மீட்டுக்கொள்ள அவன் இசையாதிருந்தால், அதன் மதிப்புக்கு ஏற்றபடி வேறொருவனிடம் விற்கப்படும். 28 ஆண்டவருக்கென்று அருச்சிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட எதுவும் -- மனிதனும் சரி, மிருகமும் சரி, வயலும் சரி -- அது விற்கப்படவும், மீட்கப்படவும் கூடாது. அவ்விதமாக ஆண்டவருக்கு நேர்ச்சை செய்யப்பட்ட பொருட்களெல்லாம் மிகவும் பரிசுத்தமானவை. எனவே, அவை ஆண்டவருக்குச் சொந்தம். 29 மனிதர்களிடமிருந்து அழிக்கப்படுவதற்காக ஒதுக்கப்பட்ட எந்த மனிதனும் மீட்கப்படக் கூடாது; கொல்லப்படவே வேண்டும். 30 நிலங்களின் பலனிலும் மரங்களின் பழங்களிலும் பத்தில் ஒரு பங்கு ஆண்டவருக்கு உரியது. அது அவருக்குப் பரிசுத்தமானது. 31 ஆயினும், ஒருவன் தன்னுடைய பத்திலொரு பாகமானவற்றை மீட்டுக்கொள்ள மனமுள்ளவனாயின், அவற்றின் விலையையும் விலையின் ஐந்தில் ஒரு பாகத்தையும் சேர்த்துக் கொடுக்கக் கடவான். 32 மேய்ப்பனுடைய கோலுக்குக் கீழ்ப்பட்ட ஆடு, மாடு, வெள்ளாடு முதலியவற்றில் பத்தில் ஒன்றாய் இருப்பனவெல்லாம் ஆண்டவருக்குப் பரிசுத்தமாகும். 33 அவற்றினிடையே நல்லது, கெட்டது பற்றி அவன் ஆராயவும் வேண்டாம்; மாற்றவும் வேண்டாம். மாற்றினால், அதுவும் பதிலுக்குக் கொடுக்கப்பட்டதும் ஆகிய இரண்டுமே ஆண்டவருக்குப் பரிசுத்தம். அது மீட்கப்படலாகாது என்றருளினார். 34 ஆண்டவர் சீனாய் மலையில் இஸ்ராயேல் மக்களுக்காக மோயீசனுக்குக் கொடுத்த கட்டளைகள் இவைகளேயாம்.
மொத்தம் 27 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 27 / 27
×

Alert

×

Tamil Letters Keypad References