தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
லேவியராகமம்
1. மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2. நீ ஆரோனோடும் அவன் புதல்வரோடும் பேசி, இஸ்ராயேல் மக்களால் நமக்கு நேர்ந்து விடப்பட்ட காணிக்கைகளை அவர்கள் தொடவேண்டாமென்றும், அவர்களே நமக்குச் செலுத்திவருகிற பரிசுத்த மாக்கப்பட்டவைகளின் பெயரை இழிவுபடுத்த வேண்டாமென்றும் சொல். நாம் ஆண்டவர்.
3. நீ அவர்களையும் அவர்களின் சந்ததியாரையும் நோக்கி: உங்கள் வம்ச சந்ததியாரில் எவனேனும் தீட்டுப்பட்டவனாயிருந்து, இஸ்ராயேல் மக்களால் ஆண்டவருக்குக் காணிக்கையாக, ஒப்புக் கொடுக்கப்பட்டவைகளின் அண்டையில் சென்றானாயின், அவன் ஆண்டவர் முன்னிலையில் கொலை செய்யப்படுவான்.
4. நாம் ஆண்டவர். ஆரோனின் சந்ததியாரில் தொழுநோய் அல்லது மேகவெட்டை உள்ளவன் தான் குணமடையும் வரை நமக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட காணிக்கைகளில் ஒன்றையும் உண்ணலாகாது. பிணத்தைத் தொட்டதினால் தீட்டுள்ளவனையும், இந்திரியக் கழிவு உள்ளவனையும்,
5. தீட்டுப்படுத்தும் ஊர், விலங்கு மற்றமுள்ள தொடத்தகாத பொருள் முதலியவற்றைத் தொட்டவன்,
6. மாலைவரை அசுத்தனாய் இருந்து, ஆண்டவருக்கு அருச்சித்து ஒதுக்கப்பட்டவைகளை உண்ணலாகாது. ஆனால் அவன் தன் உடலைத் தண்ணீரால் கழுவி,
7. சூரியன் மறைந்த பின் சுத்திகரம் அடைவானாயின், அப்பொழுது, தனக்குச் சொந்த உணவாகிய காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டவைகளை உண்ணலாம்.
8. குருக்கள், தானாய்ச் செத்ததையோ கொடிய விலங்கால் கொல்லப்பட்டதையோ உண்ணாமலும், அவைகளால் தீட்டுப்படாமலும் இருப்பார்களாக. நாம் ஆண்டவர்.
9. அவர்கள் பாவத்துக்கு உட்படாதபடிக்கும், பரிசுத்த இடத்தைத் தீட்டுப்படுத்தின பின் அவர்கள் அதிலே சாகாதபடிக்கும் நம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளக் கடவார்கள். நாம் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற ஆண்டவர்.
10. அந்நியன் ஒருவனும் பரிசுத்தமானவற்றை உண்ணலாகாது. குருவின் வீட்டில் குடியிருக்கிறவனும், கூலி வேலை செய்கிறவனும் அவற்றை உண்ணலாகாது.
11. ஆயினும், குருவினால் பணத்துக்கு வாங்கப்பட்டவனும், அவன் வீட்டிலே பிறந்திருப்பவனும் அவற்றை உண்ணலாம்.
12. குருவின் புதல்வி அந்நியனுக்கு வாழ்க்கைப்பட்டால், அவள் பரிசுத்த மானவற்றையும் படைக்கப்பட்ட புதுப் பலன்களையும் உண்ணலாகாது.
13. ஆனால், அவள் விதவையாகி அல்லது பிள்ளையில்லாது, தள்ளுபடி யானவளாகித் தந்தை வீட்டிற்குத் திரும்பி வந்தவளானால், அவள் சிறு பெண்ணாயிருந்த நாளிலே உண்டு வந்ததுபோல் இப்பொழுதும் தந்தையின் உணவை உண்ணலாம். அந்நியரில் ஒருவனும் அதை உண்ணலாகாது.
14. அறியாமல் பரிசுத்தமானதை உண்டவன் அதிலே ஐந்தில் ஒரு பங்கு அதிகமாய்க் கூட்டிப் பரிசுத்தமானவைகளோடு கூட ஆலயத்திற்காகக் குருவிடம் கொடுத்து விடக் கடவான்.
15. இஸ்ராயேல் மக்களால் ஆண்டவருக்குப் படைக்கப்பட்டவற்றை அவர்கள் பரிசுத்தக் குறைச்சல் செய்யாதிருப்பார்களாக.
16. அவர்கள் பரிசுத்தமானவற்றை உண்டால் தங்கள் குற்றத்திற்காகப் பெறவிருக்கும் தண்டனைக்கு அஞ்சக்கடவார்கள். அவர்களைப் பரிசுத்தமாக்குகின்ற ஆண்டவர் நாமே, என்று திருவுளம் பற்றினார்.
17. மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
18. நீ ஆரோனையும் அவன் புதல்வரையும் இஸ்ராயேல் மக்கள் அனைவரையும் நோக்கி: அவர்களுக்குச் சொல்ல வேண்டியதாவது: இஸ்ராயேலரிலும் உங்களிடையே தங்குகிற அந்நியரிலும் யாரேனும் தன் நேர்ச்சியின்படியோ தன் உற்சாகத்தின்படியோ தன் காணிக்கையை ஒப்புக்கொடுக்க வரும்போது, ஆண்டவருக்குத் தகனப்பலிக்கென்று அவன் கொண்டு வரும் காணிக்கை எவ்வகையானதாயிருந்த போதிலும்,
19. அதைப் படைக்க வேண்டுமென்று உங்களைக் கேட்டால், அது மாடுகளிலாவது செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது மறுவற்ற ஆணாய் இருக்கவேண்டும்.
20. அது மறுவுள்ளதாயின், ( அதைச் ) செலுத்தாதிருப்பீர்கள்.
21. அதை ஏற்றுக் கொள்ளப்படத் தக்கதன்று. ஒருவன் நேர்ச்சியாகவோ, உற்சாகமாகவோ மாடுகளிலும் சரி ஆடுகளிலும் சரி, ஆண்டவருக்குச் சமாதானப் பலியைச் செலுத்துவதாயின், அது ஏற்றுக் கொள்ளப்படும்படி ஒரு மறுவுமின்றி உத்தமமாய் இருக்கவேண்டும்.
22. அது குருடு, நெரிசல், தழும்பு, கொப்புளம், சொறி, சிரங்கு முதலிய பழுது உள்ளதாயின், அதை ஆண்டவருச் செலுத்தவும் கூடாது; ஆண்டவருடைய பலிபீடத்தில் தகனப் பலியிடவும் கூடாது.
23. நீ உற்சாகத்தை முன்னிட்டு ஆட்டையோ, மாட்டையோ படைக்க மனமுள்ளவனாய் இருந்தால், அறுத்த காதும் முறித்த வாலுமுள்ள விலங்கைப் பலியிட்டாலும் இடலாம். ஆனால், நேர்ச்சைக்காக அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
24. விதை நசுங்கினதையும் நொறுங்கினதையும் கத்தியால் அறுத்து விதை எடுக்கப்பட்டதையும் ஆண்டவருக்குப் படைத்தலாகாது. உங்கள் நாட்டில் அதைக் கண்டிப்பாய்ச் செய்யலாகாது.
25. நீங்கள் அந்நியன் கையிலே அப்பங்களையோ, வேறு யாதொன்றையோ வாங்கி, அவன் பெயரால் ஆண்டவருக்குச் செலுத்தாதீர்கள். உண்மையில் அவையெல்லாம் தீட்டும் பழுதும் உள்ளவை. அவை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்றருளினார்.
26. மேலும், ஆண்டவர் மோயீசனை நோக்கி:
27. கன்றுக்குட்டியோ, செம்மறியாட்டுக்குட்டியோ, வெள்ளாட்டுக் குட்டியோ பிறந்தால். அது ஏழு நாள் தன் தாயின் முலைப்பாலைக் குடிக்கும். ஆனால், எட்டாம் நாளில் அல்லது அதற்குப் பின் வரும் நாளில் அது ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்கப்படலாம்.
28. ( படைக்கலாமென்றாலும், ) பசுவையும் ஆட்டையும் தன் தன் குட்டியுடன் ஒரே நாளில் பலியிடலாகாது.
29. உங்கள் மீது ஆண்டவர் தயவுள்ளவராய் இருக்கும்படி அவருக்கு நன்றியறிதலாக ஒரு பலியைச் செலுத்துவீர்களாயின்,
30. அதை அதே நாளிலே உண்பீர்கள். அதில் யாதொன்றும் மறுநாள் சூரியன் உதிக்கும் வரை எஞ்சியிருக்கக் கூடாது.
31. நாம் ஆண்டவர். நமது கட்டளைகளைக் கைக்கொண்டு, அவ்வாறே நடவுங்கள்.
32. நாம் ஆண்டவர். நாம் இஸ்ராயேல் மக்கள் நடுவே பரிசுத்தரென்று மதிக்கப் பெறும்படியாய், நமது பெயரை இழிவு படுத்தாதீர்கள். உங்களைப் பரிசுத்தமாக்குகிறவர் நாமே.
33. உங்களுக்குக் கடவுளாய் இருக்கும்படி ( உங்களை ) எகிப்து நாட்டிலிருந்து விடுவித்தோம். நாமே ஆண்டவர், நாமே.
மொத்தம் 27 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 22 / 27
1 மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: 2 நீ ஆரோனோடும் அவன் புதல்வரோடும் பேசி, இஸ்ராயேல் மக்களால் நமக்கு நேர்ந்து விடப்பட்ட காணிக்கைகளை அவர்கள் தொடவேண்டாமென்றும், அவர்களே நமக்குச் செலுத்திவருகிற பரிசுத்த மாக்கப்பட்டவைகளின் பெயரை இழிவுபடுத்த வேண்டாமென்றும் சொல். நாம் ஆண்டவர். 3 நீ அவர்களையும் அவர்களின் சந்ததியாரையும் நோக்கி: உங்கள் வம்ச சந்ததியாரில் எவனேனும் தீட்டுப்பட்டவனாயிருந்து, இஸ்ராயேல் மக்களால் ஆண்டவருக்குக் காணிக்கையாக, ஒப்புக் கொடுக்கப்பட்டவைகளின் அண்டையில் சென்றானாயின், அவன் ஆண்டவர் முன்னிலையில் கொலை செய்யப்படுவான். 4 நாம் ஆண்டவர். ஆரோனின் சந்ததியாரில் தொழுநோய் அல்லது மேகவெட்டை உள்ளவன் தான் குணமடையும் வரை நமக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட காணிக்கைகளில் ஒன்றையும் உண்ணலாகாது. பிணத்தைத் தொட்டதினால் தீட்டுள்ளவனையும், இந்திரியக் கழிவு உள்ளவனையும், 5 தீட்டுப்படுத்தும் ஊர், விலங்கு மற்றமுள்ள தொடத்தகாத பொருள் முதலியவற்றைத் தொட்டவன், 6 மாலைவரை அசுத்தனாய் இருந்து, ஆண்டவருக்கு அருச்சித்து ஒதுக்கப்பட்டவைகளை உண்ணலாகாது. ஆனால் அவன் தன் உடலைத் தண்ணீரால் கழுவி, 7 சூரியன் மறைந்த பின் சுத்திகரம் அடைவானாயின், அப்பொழுது, தனக்குச் சொந்த உணவாகிய காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டவைகளை உண்ணலாம். 8 குருக்கள், தானாய்ச் செத்ததையோ கொடிய விலங்கால் கொல்லப்பட்டதையோ உண்ணாமலும், அவைகளால் தீட்டுப்படாமலும் இருப்பார்களாக. நாம் ஆண்டவர். 9 அவர்கள் பாவத்துக்கு உட்படாதபடிக்கும், பரிசுத்த இடத்தைத் தீட்டுப்படுத்தின பின் அவர்கள் அதிலே சாகாதபடிக்கும் நம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளக் கடவார்கள். நாம் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற ஆண்டவர். 10 அந்நியன் ஒருவனும் பரிசுத்தமானவற்றை உண்ணலாகாது. குருவின் வீட்டில் குடியிருக்கிறவனும், கூலி வேலை செய்கிறவனும் அவற்றை உண்ணலாகாது. 11 ஆயினும், குருவினால் பணத்துக்கு வாங்கப்பட்டவனும், அவன் வீட்டிலே பிறந்திருப்பவனும் அவற்றை உண்ணலாம். 12 குருவின் புதல்வி அந்நியனுக்கு வாழ்க்கைப்பட்டால், அவள் பரிசுத்த மானவற்றையும் படைக்கப்பட்ட புதுப் பலன்களையும் உண்ணலாகாது. 13 ஆனால், அவள் விதவையாகி அல்லது பிள்ளையில்லாது, தள்ளுபடி யானவளாகித் தந்தை வீட்டிற்குத் திரும்பி வந்தவளானால், அவள் சிறு பெண்ணாயிருந்த நாளிலே உண்டு வந்ததுபோல் இப்பொழுதும் தந்தையின் உணவை உண்ணலாம். அந்நியரில் ஒருவனும் அதை உண்ணலாகாது. 14 அறியாமல் பரிசுத்தமானதை உண்டவன் அதிலே ஐந்தில் ஒரு பங்கு அதிகமாய்க் கூட்டிப் பரிசுத்தமானவைகளோடு கூட ஆலயத்திற்காகக் குருவிடம் கொடுத்து விடக் கடவான். 15 இஸ்ராயேல் மக்களால் ஆண்டவருக்குப் படைக்கப்பட்டவற்றை அவர்கள் பரிசுத்தக் குறைச்சல் செய்யாதிருப்பார்களாக. 16 அவர்கள் பரிசுத்தமானவற்றை உண்டால் தங்கள் குற்றத்திற்காகப் பெறவிருக்கும் தண்டனைக்கு அஞ்சக்கடவார்கள். அவர்களைப் பரிசுத்தமாக்குகின்ற ஆண்டவர் நாமே, என்று திருவுளம் பற்றினார். 17 மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: 18 நீ ஆரோனையும் அவன் புதல்வரையும் இஸ்ராயேல் மக்கள் அனைவரையும் நோக்கி: அவர்களுக்குச் சொல்ல வேண்டியதாவது: இஸ்ராயேலரிலும் உங்களிடையே தங்குகிற அந்நியரிலும் யாரேனும் தன் நேர்ச்சியின்படியோ தன் உற்சாகத்தின்படியோ தன் காணிக்கையை ஒப்புக்கொடுக்க வரும்போது, ஆண்டவருக்குத் தகனப்பலிக்கென்று அவன் கொண்டு வரும் காணிக்கை எவ்வகையானதாயிருந்த போதிலும், 19 அதைப் படைக்க வேண்டுமென்று உங்களைக் கேட்டால், அது மாடுகளிலாவது செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது மறுவற்ற ஆணாய் இருக்கவேண்டும். 20 அது மறுவுள்ளதாயின், ( அதைச் ) செலுத்தாதிருப்பீர்கள். 21 அதை ஏற்றுக் கொள்ளப்படத் தக்கதன்று. ஒருவன் நேர்ச்சியாகவோ, உற்சாகமாகவோ மாடுகளிலும் சரி ஆடுகளிலும் சரி, ஆண்டவருக்குச் சமாதானப் பலியைச் செலுத்துவதாயின், அது ஏற்றுக் கொள்ளப்படும்படி ஒரு மறுவுமின்றி உத்தமமாய் இருக்கவேண்டும். 22 அது குருடு, நெரிசல், தழும்பு, கொப்புளம், சொறி, சிரங்கு முதலிய பழுது உள்ளதாயின், அதை ஆண்டவருச் செலுத்தவும் கூடாது; ஆண்டவருடைய பலிபீடத்தில் தகனப் பலியிடவும் கூடாது. 23 நீ உற்சாகத்தை முன்னிட்டு ஆட்டையோ, மாட்டையோ படைக்க மனமுள்ளவனாய் இருந்தால், அறுத்த காதும் முறித்த வாலுமுள்ள விலங்கைப் பலியிட்டாலும் இடலாம். ஆனால், நேர்ச்சைக்காக அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. 24 விதை நசுங்கினதையும் நொறுங்கினதையும் கத்தியால் அறுத்து விதை எடுக்கப்பட்டதையும் ஆண்டவருக்குப் படைத்தலாகாது. உங்கள் நாட்டில் அதைக் கண்டிப்பாய்ச் செய்யலாகாது. 25 நீங்கள் அந்நியன் கையிலே அப்பங்களையோ, வேறு யாதொன்றையோ வாங்கி, அவன் பெயரால் ஆண்டவருக்குச் செலுத்தாதீர்கள். உண்மையில் அவையெல்லாம் தீட்டும் பழுதும் உள்ளவை. அவை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்றருளினார். 26 மேலும், ஆண்டவர் மோயீசனை நோக்கி: 27 கன்றுக்குட்டியோ, செம்மறியாட்டுக்குட்டியோ, வெள்ளாட்டுக் குட்டியோ பிறந்தால். அது ஏழு நாள் தன் தாயின் முலைப்பாலைக் குடிக்கும். ஆனால், எட்டாம் நாளில் அல்லது அதற்குப் பின் வரும் நாளில் அது ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்கப்படலாம். 28 ( படைக்கலாமென்றாலும், ) பசுவையும் ஆட்டையும் தன் தன் குட்டியுடன் ஒரே நாளில் பலியிடலாகாது. 29 உங்கள் மீது ஆண்டவர் தயவுள்ளவராய் இருக்கும்படி அவருக்கு நன்றியறிதலாக ஒரு பலியைச் செலுத்துவீர்களாயின், 30 அதை அதே நாளிலே உண்பீர்கள். அதில் யாதொன்றும் மறுநாள் சூரியன் உதிக்கும் வரை எஞ்சியிருக்கக் கூடாது. 31 நாம் ஆண்டவர். நமது கட்டளைகளைக் கைக்கொண்டு, அவ்வாறே நடவுங்கள். 32 நாம் ஆண்டவர். நாம் இஸ்ராயேல் மக்கள் நடுவே பரிசுத்தரென்று மதிக்கப் பெறும்படியாய், நமது பெயரை இழிவு படுத்தாதீர்கள். உங்களைப் பரிசுத்தமாக்குகிறவர் நாமே. 33 உங்களுக்குக் கடவுளாய் இருக்கும்படி ( உங்களை ) எகிப்து நாட்டிலிருந்து விடுவித்தோம். நாமே ஆண்டவர், நாமே.
மொத்தம் 27 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 22 / 27
×

Alert

×

Tamil Letters Keypad References