தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
லேவியராகமம்
1. மேலும் ஆண்டவர் மேயீசனை நோக்கி: நீ ஆரோனுடைய புதல்வர்களாகிய குருக்களிடம் சொல்லவேண்டியதாவது: குரு தன் ஊராரில் யாரேனும் இறந்தால் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது.
2. ஆனால், அவனுடைய உறவின் முறையாரும் இனத்தாருமாகிய தந்தை, தாய், மகன், மகள் சகோதரன்,
3. வாழ்க்கைப்படாது தம்முடனிருக்கும் கன்னிப் பெண்ணாகிய சகோதரி முதலியோர் ( இறந்தால் அவர்களுக்கு இழவு கெண்டாட அவனுக்குத் தடையில்லை ).
4. தன் மக்களுள் பெரிய மனிதனுடைய சாவுக்காக அவன் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது.
5. அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும், தங்கள் தாடியைச் சிரைக்காமலும், தங்கள் உடலைக் கீறிக் கொள்ளாமலும்,
6. தங்கள் கடவுளுக்கு முன் தூய்மையாயிருந்து, அவருடைய பெயருக்கு இழுக்கு வருவிக்காதிருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் ஆண்டவருடைய தகனப்பலிகளையும் செலுத்துகிறவர்களாகையால், தூயோராய் இருக்கக்கடவார்கள்.
7. அவர்கள் கற்பழிக்கப்பட்ட பெண்ணையோ, விலைமகளையோ, கணவனால் தள்ளப்பட்டவளையோ மணந்து கொள்ளாதிருப்பார்கள். ஏனென்றால், அவர்கள் தங்கள் கடவுளுக்கு அபிசேகமானவர்களாயும், காணிக்கை அப்பங்களைச் செலுத்துகிறவர்களாயும், இருக்கிறார்கள்.
8. ஆகையால், அவர்களைப் பரிசுத்தப் படுத்துகிற ஆண்டவராகிய நாம் பரிசுத்தராயிருக்கிறது போல், அவர்களும் பரிசுத்தராய் இருக்கக் கடவார்கள்.
9. குருவுடைய புதல்வி வேசித்தனம் புரியும் போதே அகப்பட்டுக் கொண்டு தன் தந்தையின் பெயருக்கு இழுக்கு வருவித்தால், அவள் சாம்பலாய்ச் சுட்டெரிக்கப்படக் கடவாள்.
10. தலைமைக்குரு, அதாவது: தன் சகோதரருக்குள்ளே தலையிலும் கைகளிலும் குருத்துவ அபிசேகம் பெற்று, அதற்குரிய உடைகளை அணிகின்றவர், தம் தலைப்பாகையை எடுத்து விடவும் தம் உடைகளைக் கிழித்துப் போடவும் கூடாது.
11. பிணம் கிடக்கும் இடத்திற்கு அவர் கண்டிப்பாய்ப் போகலாகாது. தம் தந்தைக்காகவும் தாய்க்காகவும் அவர் தம்மைத் தீட்டுப்படுத்திக் கொள்ளலாகாது.
12. அபிசேகத் தைலம் அவர் மேல் வார்க்கப்பட்டதனால் அவர் ஆண்டவருடைய இடத்தைத் தீட்டுப்படுத்தாதபடிக்குப் பரிசுத்த இடங்களிலிருந்து வெளியே போகாமல் இருக்கக் கடவார். நாம் ஆண்டவர்.
13. அவர் கன்னிப்பெண்ணை மனைவியாகக் கொள்ளலாமேயன்றி,
14. விதவையையோ, தள்ளப்பட்டவளையோ, கற்புக் குலைந்தவளையோ, விலைமகளையோ, மணக்கலாகாது. அன்றியும், அவர் தம் இனத்துப் பெண்ணையே மணந்து கொள்ளக் கடவார்.
15. அவர் தம் இனத்தின் இரத்தத்தை இஸ்ராயேலரில் சாதாரண மக்களுடைய இரத்தத்தோடு கலக்க வேண்டாம். ஏனென்றால் நாம் பரிசுத்தமாக்குகிற ஆண்டவர் என்றருளினார்.
16. மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
17. நீ ஆரோனிடம் சொல்ல வேண்டியதாவது: உன் குடும்பத்துச் சந்ததியாருக்குள்ளே அங்கவீனம் உள்ளவன் தன் கடவுளுக்கு அப்பங்களைச் செலுத்தலாகாது.
18. அவன் குருடனானாலும், சப்பாணியானாலும், மிகச்சிறிய அல்லது மிகப் பெரிய அல்லது கோணலான மூக்கை உடையவனானாலும்,
19. கால் ஒடிந்தவனானாலும், கை முறிந்தவனானாலும்,
20. கூனனானாலும் பீளைக் கண்ணனானாலும், பூ விழுந்த கண்ணனானாலும், தீராச் சிரங்குள்ளவனானாலும், எச்சில் தழுப்புள்ளவனானாலும், விதை வீக்கமுள்ளவனானாலும் குருவுக்கடுத்த ஊழியங்களை நடத்தலாகாது.
21. குருவாகிய ஆரோனுடைய சந்ததியாரில் அங்கவீனமுள்ளவன் ஆண்டவருக்குப் பலிகளையும் தன் கடவுளுக்கு அப்பங்களையும் செலுத்த வரலாகாது.
22. ஆயினும், பரிசுத்த இடத்திலே செலுத்தப்படும் அப்பங்களை அவன் உண்ணலாம்.
23. உண்ணலாமென்றாலும், அவன் அங்கவீனமுள்ளவனாதலால், நமது பரிசுத்த இடத்தைத் தீட்டுப்படுத்தாதபடி அவன் திரைக்கு உட்புறத்தில் புகவும் பலிப்பீடத்தண்டை செல்லவும் கூடாது. உங்களைப் பரிசுத்தமாக்குகிற ஆண்டவர் நாமே என்று திருவுளம்பற்றினார்.
24. ஆகையால், மோயீசன் தமக்குக் கட்டளையிடப்பட்டிருந்த எல்லாவற்றையும் ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் இஸ்ராயேலர் அனைவருக்கும் சொன்னார்.
மொத்தம் 27 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 21 / 27
1 மேலும் ஆண்டவர் மேயீசனை நோக்கி: நீ ஆரோனுடைய புதல்வர்களாகிய குருக்களிடம் சொல்லவேண்டியதாவது: குரு தன் ஊராரில் யாரேனும் இறந்தால் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது. 2 ஆனால், அவனுடைய உறவின் முறையாரும் இனத்தாருமாகிய தந்தை, தாய், மகன், மகள் சகோதரன், 3 வாழ்க்கைப்படாது தம்முடனிருக்கும் கன்னிப் பெண்ணாகிய சகோதரி முதலியோர் ( இறந்தால் அவர்களுக்கு இழவு கெண்டாட அவனுக்குத் தடையில்லை ). 4 தன் மக்களுள் பெரிய மனிதனுடைய சாவுக்காக அவன் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது. 5 அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும், தங்கள் தாடியைச் சிரைக்காமலும், தங்கள் உடலைக் கீறிக் கொள்ளாமலும், 6 தங்கள் கடவுளுக்கு முன் தூய்மையாயிருந்து, அவருடைய பெயருக்கு இழுக்கு வருவிக்காதிருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் ஆண்டவருடைய தகனப்பலிகளையும் செலுத்துகிறவர்களாகையால், தூயோராய் இருக்கக்கடவார்கள். 7 அவர்கள் கற்பழிக்கப்பட்ட பெண்ணையோ, விலைமகளையோ, கணவனால் தள்ளப்பட்டவளையோ மணந்து கொள்ளாதிருப்பார்கள். ஏனென்றால், அவர்கள் தங்கள் கடவுளுக்கு அபிசேகமானவர்களாயும், காணிக்கை அப்பங்களைச் செலுத்துகிறவர்களாயும், இருக்கிறார்கள். 8 ஆகையால், அவர்களைப் பரிசுத்தப் படுத்துகிற ஆண்டவராகிய நாம் பரிசுத்தராயிருக்கிறது போல், அவர்களும் பரிசுத்தராய் இருக்கக் கடவார்கள். 9 குருவுடைய புதல்வி வேசித்தனம் புரியும் போதே அகப்பட்டுக் கொண்டு தன் தந்தையின் பெயருக்கு இழுக்கு வருவித்தால், அவள் சாம்பலாய்ச் சுட்டெரிக்கப்படக் கடவாள். 10 தலைமைக்குரு, அதாவது: தன் சகோதரருக்குள்ளே தலையிலும் கைகளிலும் குருத்துவ அபிசேகம் பெற்று, அதற்குரிய உடைகளை அணிகின்றவர், தம் தலைப்பாகையை எடுத்து விடவும் தம் உடைகளைக் கிழித்துப் போடவும் கூடாது. 11 பிணம் கிடக்கும் இடத்திற்கு அவர் கண்டிப்பாய்ப் போகலாகாது. தம் தந்தைக்காகவும் தாய்க்காகவும் அவர் தம்மைத் தீட்டுப்படுத்திக் கொள்ளலாகாது. 12 அபிசேகத் தைலம் அவர் மேல் வார்க்கப்பட்டதனால் அவர் ஆண்டவருடைய இடத்தைத் தீட்டுப்படுத்தாதபடிக்குப் பரிசுத்த இடங்களிலிருந்து வெளியே போகாமல் இருக்கக் கடவார். நாம் ஆண்டவர். 13 அவர் கன்னிப்பெண்ணை மனைவியாகக் கொள்ளலாமேயன்றி, 14 விதவையையோ, தள்ளப்பட்டவளையோ, கற்புக் குலைந்தவளையோ, விலைமகளையோ, மணக்கலாகாது. அன்றியும், அவர் தம் இனத்துப் பெண்ணையே மணந்து கொள்ளக் கடவார். 15 அவர் தம் இனத்தின் இரத்தத்தை இஸ்ராயேலரில் சாதாரண மக்களுடைய இரத்தத்தோடு கலக்க வேண்டாம். ஏனென்றால் நாம் பரிசுத்தமாக்குகிற ஆண்டவர் என்றருளினார். 16 மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: 17 நீ ஆரோனிடம் சொல்ல வேண்டியதாவது: உன் குடும்பத்துச் சந்ததியாருக்குள்ளே அங்கவீனம் உள்ளவன் தன் கடவுளுக்கு அப்பங்களைச் செலுத்தலாகாது. 18 அவன் குருடனானாலும், சப்பாணியானாலும், மிகச்சிறிய அல்லது மிகப் பெரிய அல்லது கோணலான மூக்கை உடையவனானாலும், 19 கால் ஒடிந்தவனானாலும், கை முறிந்தவனானாலும், 20 கூனனானாலும் பீளைக் கண்ணனானாலும், பூ விழுந்த கண்ணனானாலும், தீராச் சிரங்குள்ளவனானாலும், எச்சில் தழுப்புள்ளவனானாலும், விதை வீக்கமுள்ளவனானாலும் குருவுக்கடுத்த ஊழியங்களை நடத்தலாகாது. 21 குருவாகிய ஆரோனுடைய சந்ததியாரில் அங்கவீனமுள்ளவன் ஆண்டவருக்குப் பலிகளையும் தன் கடவுளுக்கு அப்பங்களையும் செலுத்த வரலாகாது. 22 ஆயினும், பரிசுத்த இடத்திலே செலுத்தப்படும் அப்பங்களை அவன் உண்ணலாம். 23 உண்ணலாமென்றாலும், அவன் அங்கவீனமுள்ளவனாதலால், நமது பரிசுத்த இடத்தைத் தீட்டுப்படுத்தாதபடி அவன் திரைக்கு உட்புறத்தில் புகவும் பலிப்பீடத்தண்டை செல்லவும் கூடாது. உங்களைப் பரிசுத்தமாக்குகிற ஆண்டவர் நாமே என்று திருவுளம்பற்றினார். 24 ஆகையால், மோயீசன் தமக்குக் கட்டளையிடப்பட்டிருந்த எல்லாவற்றையும் ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் இஸ்ராயேலர் அனைவருக்கும் சொன்னார்.
மொத்தம் 27 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 21 / 27
×

Alert

×

Tamil Letters Keypad References