தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
லேவியராகமம்
1. மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2. இஸ்ராயேல் மக்களிடம் நீ சொல்ல வேண்டியதாவது: இஸ்ராயேல் மக்களிலேனும் இஸ்ராயேலரோடு குடியிருக்கிற அந்நியர்களிலேனும் எவனாயினும் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மொலோக் விக்கிரகத்துக்கு நேர்ந்து கொடுத்தால், அவன் சாகவே சாவான். நாட்டு மக்கள் அவனைக் கல்லாலெறிந்து கொல்வார்கள்.
3. அப்படிப்பட்டவன் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மொலோக் விக்கிரகத்துக்கு நேர்ந்து கொடுத்து நம்முடைய மூலத்தானத்தைத் தீட்டுப்படுத்தி நம் திருப் பெயரை இழிவு படுத்தினதற்காக, நாம் அவனுக்கு விரோதமாய் எதிர்த்து நின்று, அவனைத் தன் இனத்தினின்று விலக்குண்டு போகச் செய்வோம்.
4. அவன் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மெலோக்குக்கு நேர்ந்து கொடுத்தானென்று அறிந்திருந்தும் நாட்டு மக்கள் அதனைப் பொருட்படுத்தாமல், கடவுளின் கட்டளையை அற்பமாய் எண்ணி, அவனைக் கொல்லாமல் கண்ணோட்டமாய் விட்டு விட்டாலோ,
5. நாம் அந்த மனிதனுக்கும் அவன் உறவினருக்கும் விரோதமாக எதிர்த்து நின்று, அவனையும் அவன் மொலோக்குடன் விபசாரம் செய்வதற்கு உடந்தையாயிருக்கும் யாவரையும் தங்கள் இனத்திலிருந்து விலக்குண்டு போகச் செய்வோம்.
6. பில்லி சூனியக்காரரையும் குறி சொல்கிறவர்களையும் நாடி அவர்களோடு விபசாரம் செய்கிறவனுக்கு நாம் எதிர்த்து நின்று, தன் இனத்திலிருந்து விலக்குண்டு போகச் செய்வோம்.
7. நாம் உங்கள் ஆண்டவராகையால், நீங்கள் உங்களைப் புனிதப்படுத்திப் பரிசுத்தராயிருங்கள்.
8. நமது கட்டளைகளைக் கைக்கொண்டு அவற்றின்படி நடங்கள். நாம் உங்களைப் பரிசுத்தராக்குகிற ஆண்டவர்.
9. தன் தந்தையையோ தாயையோ சபித்தவன் சாகவே சாவான். அவன் தன்னைப் பெற்ற தாய் தந்தையரையுமல்லவா சபிக்கத் துணிந்தான் ? ஆகையால், அவன் இரத்தப் பழி அவன் மேல் இருப்பதாக.
10. ஒருவன் மற்றொருவனுடைய மனைவியோடு விபசாரம் செய்து அவளைக் கற்பழித்தால், விபசாரம் செய்த அவனும் அவளும் ஆக இருவருமே கொலை செய்யப்படக்கடவார்கள்.
11. தன் தந்தையின் மனைவியோடு படுத்துத் தன் தந்தையின் நிருவாணத்தை வெளிப்படுத்தினவனும் அவளும் கொலை செய்யப்படக்கடவார்கள். அவர்களின் இரத்தப்பழி அவர்கள் மேல் இருப்பதாக.
12. ஒருவன் தன் மருமகளோடு படுத்து இருவரும் வெறுப்புக் குரிய தீச்செயலைச் செய்தால் அவர்கள் இருவருமே அதன் பொருட்டுச் சாகக்கடவார்கள். அவர்களின் இரத்தப் பழி அவர்கள் மேல் இருப்பதாக.
13. ஒருவன் பெண்ணோடு மோகங் கொள்வது போல ஆண்மகனோடு கூடினால், வெறுப்புக் குரிய செயல் செய்த அவ்விருவரும் கொலை செய்யப்படக்கடவார்கள். அவர்களின் இரத்தப் பழி அவர்கள் மேல் இருப்பதாக.
14. மகளை மனைவியாக்கிக் கொண்டவன் பிறகு அவள் தாயையும் கொண்டானாயின், அவன் பாதகன் ஆனான். இப்படிப்பட்ட கொடுமை உங்களுக்குள் நிலைத்திராதபடிக்கு அவனையும் அவர்களிருவரையும் நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.
15. மாட்டோடாவது ஆட்டோடாவது புணர்பவன் கொலை செய்யப்படுவான். அந்த விலங்கையும் கொல்லக்கடவீர்கள்.
16. ஒரு பெண் யாதொரு மிருகத்தோடு சேர்ந்தால், அவளும் அந்த மிருகமும் கொலை செய்யப்படவேண்டும். அந்த இரத்தப் பழி அவர்கள் மேலும் அவற்றின் மேலும் இருப்பதாக.
17. தன் தந்தைக்கோ தாய்க்கோ பிறந்த மகளாகிய தன் சகோதரியோடு சேர்ந்து, அவன் அவளுடைய நிருவானத்தையும் அவள் அவனுடைய நிருவாணத்தையும் பார்த்திருந்தால், அவர்கள் அடாத பாதகத்தைக் கட்டிக்கொண்டவர்கள் ஆவார்கள். அவ்விருவரும் ஒருவர் மற்றொருவர்க்குத் தம் நிருவாணத்தைக் காட்டினமையால் தங்கள் மக்களின் கண்களுக்கு முன்பாகக் கொலை செய்யப்படுவார்கள். தங்கள் கொடுமையைத் தாங்களே சுமப்பார்கள்.
18. ஒருவன் மாதவிடாயுள்ள பெண்ணோடு கூடி, அவன் அவளை நிருவானமாக்கினதாலும், அவள் தன் வெட்கக் கேட்டை அவனுக்குக் காட்டினதாலும், இருவருமே தங்கள் இனத்திலிருந்து விலக்கண்டு போகக்கடவார்கள்.
19. உன் பெரியம்மா அல்லது சித்தியினுடைய மறைவிடத்தைத் திறக்காதே. இப்படிச் செய்பவன் தன் நிருவாணத்தின் அவலட்சணத்தைக் காட்டுகிறான். இருவரும் தங்கள் கொடுமையைச் சுமப்பார்கள்.
20. தனது தாய் அல்லது தந்தையின் சகோதரனுடைய மனைவியோடு கூடினவன் தன் இனத்தாளுடைய அவமானத்தைத் திறந்து காட்டினான். அவர்கள் இருவரும் தங்கள் கொடுமையைச் சுமப்பார்கள்; பிள்ளைப்பேறு இன்றி இறப்பார்கள்.
21. தன் சகோதரனுடைய மனைவியை மணந்து கொண்டவன் தகாத காரியம் செய்திருக்கிறான். அவன் தன் சகோதரனுடைய நிருவாணத்தை வெளிப்படுத்தினான். அவர்கள் இருவரும் பிள்ளை இல்லாதிருப்பார்கள்.
22. நீங்கள் நம்முடைய கட்டளைகளையும் நீதிநெறிகளையும் கைக்கொண்டு, அவற்றின் படி நடவுங்கள். இல்லாவிடில், நீங்கள் குடியிருப்பதற்காக நாம் உங்களைக் கொண்டு போகிற நாடு உங்களைக் கக்கிப்போடும்.
23. நாம் உங்கள் முன்னிலையிலிருந்து துரத்தி விடப்போகிற மக்களுடைய பழக்க வழக்கங்களின்படி நீங்கள் நடக்கவேண்டாம். அவர்கள் மேற்சொல்லப்பட்ட கொடுமைகளையெல்லாம் செய்தபடியால், நாம் அவர்களை வெறுத்து விட்டோம்.
24. நாம் உங்களுக்கு உடைமையாகக் கொடுக்கப் போகிற அவர்களுடைய நாட்டை நீங்கள் உரிமையாக்கிக் கொள்ளுங்களென்று நாம் உங்களுக்குச் சொல்கிறோம். அந்நாடு பாலும் தேனும் பொழியும் நாடு. உங்கள் கடவுளாகிய நாம் உங்களை மற்ற மக்களினின்று பிரித்தெடுத்தோம்.
25. ஆதலால், நீங்களும் அசுத்தமான விலங்குக்கும் சுத்தமான விலங்குக்கும், அசுத்தமான பறவைக்கும் சுத்தமான பறவைக்கும் வேறுபாடு காணக் ( கற்றுக் கொள்ளுங்கள் ). நாம் உங்களுக்குத் தீட்டாக எண்ணச் சொல்லி விலக்கின மிருகங்களாலும் பறவைகளாலும் மண்ணில் நடமாடுகிற எவ்வகை மிருகங்களாலும் உங்கள் ஆன்மாவை அசுத்தப்படுத்தாதீர்கள்.
26. ஆண்டவராகிய நாம் பரிசுத்தராகையால், நீங்கள் நமக்கேற்ற பரிசுத்தவான்களாய் இருக்க வேண்டும். நீங்கள் நமது சொந்த மக்களாய் இருக்கும்படியே உங்களை மற்ற மக்களிடமிருந்து பிரித்தெடுத்தோம்.
27. பில்லி சூனியம் பார்க்கிறதற்கும் குறி சொல்லுகிறதற்கும் ஏதுவான பேய்ப்புத்தி ஓர் ஆடவனுக்கோ ஒரு பெண்ணுக்கோ இருந்தால், அப்படிப் பட்டவர் சாகவே சாவர். அவர்களைக் கல்லால் எறிந்து கொல்லுங்கள். அவர்களுடைய இரத்தப் பழி அவர்கள் மேல் இருக்கக் கடவதாக என்றார்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 27 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 20 / 27
லேவியராகமம் 20:39
1 மேலும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: 2 இஸ்ராயேல் மக்களிடம் நீ சொல்ல வேண்டியதாவது: இஸ்ராயேல் மக்களிலேனும் இஸ்ராயேலரோடு குடியிருக்கிற அந்நியர்களிலேனும் எவனாயினும் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மொலோக் விக்கிரகத்துக்கு நேர்ந்து கொடுத்தால், அவன் சாகவே சாவான். நாட்டு மக்கள் அவனைக் கல்லாலெறிந்து கொல்வார்கள். 3 அப்படிப்பட்டவன் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மொலோக் விக்கிரகத்துக்கு நேர்ந்து கொடுத்து நம்முடைய மூலத்தானத்தைத் தீட்டுப்படுத்தி நம் திருப் பெயரை இழிவு படுத்தினதற்காக, நாம் அவனுக்கு விரோதமாய் எதிர்த்து நின்று, அவனைத் தன் இனத்தினின்று விலக்குண்டு போகச் செய்வோம். 4 அவன் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மெலோக்குக்கு நேர்ந்து கொடுத்தானென்று அறிந்திருந்தும் நாட்டு மக்கள் அதனைப் பொருட்படுத்தாமல், கடவுளின் கட்டளையை அற்பமாய் எண்ணி, அவனைக் கொல்லாமல் கண்ணோட்டமாய் விட்டு விட்டாலோ, 5 நாம் அந்த மனிதனுக்கும் அவன் உறவினருக்கும் விரோதமாக எதிர்த்து நின்று, அவனையும் அவன் மொலோக்குடன் விபசாரம் செய்வதற்கு உடந்தையாயிருக்கும் யாவரையும் தங்கள் இனத்திலிருந்து விலக்குண்டு போகச் செய்வோம். 6 பில்லி சூனியக்காரரையும் குறி சொல்கிறவர்களையும் நாடி அவர்களோடு விபசாரம் செய்கிறவனுக்கு நாம் எதிர்த்து நின்று, தன் இனத்திலிருந்து விலக்குண்டு போகச் செய்வோம். 7 நாம் உங்கள் ஆண்டவராகையால், நீங்கள் உங்களைப் புனிதப்படுத்திப் பரிசுத்தராயிருங்கள். 8 நமது கட்டளைகளைக் கைக்கொண்டு அவற்றின்படி நடங்கள். நாம் உங்களைப் பரிசுத்தராக்குகிற ஆண்டவர். 9 தன் தந்தையையோ தாயையோ சபித்தவன் சாகவே சாவான். அவன் தன்னைப் பெற்ற தாய் தந்தையரையுமல்லவா சபிக்கத் துணிந்தான் ? ஆகையால், அவன் இரத்தப் பழி அவன் மேல் இருப்பதாக. 10 ஒருவன் மற்றொருவனுடைய மனைவியோடு விபசாரம் செய்து அவளைக் கற்பழித்தால், விபசாரம் செய்த அவனும் அவளும் ஆக இருவருமே கொலை செய்யப்படக்கடவார்கள். 11 தன் தந்தையின் மனைவியோடு படுத்துத் தன் தந்தையின் நிருவாணத்தை வெளிப்படுத்தினவனும் அவளும் கொலை செய்யப்படக்கடவார்கள். அவர்களின் இரத்தப்பழி அவர்கள் மேல் இருப்பதாக. 12 ஒருவன் தன் மருமகளோடு படுத்து இருவரும் வெறுப்புக் குரிய தீச்செயலைச் செய்தால் அவர்கள் இருவருமே அதன் பொருட்டுச் சாகக்கடவார்கள். அவர்களின் இரத்தப் பழி அவர்கள் மேல் இருப்பதாக. 13 ஒருவன் பெண்ணோடு மோகங் கொள்வது போல ஆண்மகனோடு கூடினால், வெறுப்புக் குரிய செயல் செய்த அவ்விருவரும் கொலை செய்யப்படக்கடவார்கள். அவர்களின் இரத்தப் பழி அவர்கள் மேல் இருப்பதாக. 14 மகளை மனைவியாக்கிக் கொண்டவன் பிறகு அவள் தாயையும் கொண்டானாயின், அவன் பாதகன் ஆனான். இப்படிப்பட்ட கொடுமை உங்களுக்குள் நிலைத்திராதபடிக்கு அவனையும் அவர்களிருவரையும் நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும். 15 மாட்டோடாவது ஆட்டோடாவது புணர்பவன் கொலை செய்யப்படுவான். அந்த விலங்கையும் கொல்லக்கடவீர்கள். 16 ஒரு பெண் யாதொரு மிருகத்தோடு சேர்ந்தால், அவளும் அந்த மிருகமும் கொலை செய்யப்படவேண்டும். அந்த இரத்தப் பழி அவர்கள் மேலும் அவற்றின் மேலும் இருப்பதாக. 17 தன் தந்தைக்கோ தாய்க்கோ பிறந்த மகளாகிய தன் சகோதரியோடு சேர்ந்து, அவன் அவளுடைய நிருவானத்தையும் அவள் அவனுடைய நிருவாணத்தையும் பார்த்திருந்தால், அவர்கள் அடாத பாதகத்தைக் கட்டிக்கொண்டவர்கள் ஆவார்கள். அவ்விருவரும் ஒருவர் மற்றொருவர்க்குத் தம் நிருவாணத்தைக் காட்டினமையால் தங்கள் மக்களின் கண்களுக்கு முன்பாகக் கொலை செய்யப்படுவார்கள். தங்கள் கொடுமையைத் தாங்களே சுமப்பார்கள். 18 ஒருவன் மாதவிடாயுள்ள பெண்ணோடு கூடி, அவன் அவளை நிருவானமாக்கினதாலும், அவள் தன் வெட்கக் கேட்டை அவனுக்குக் காட்டினதாலும், இருவருமே தங்கள் இனத்திலிருந்து விலக்கண்டு போகக்கடவார்கள். 19 உன் பெரியம்மா அல்லது சித்தியினுடைய மறைவிடத்தைத் திறக்காதே. இப்படிச் செய்பவன் தன் நிருவாணத்தின் அவலட்சணத்தைக் காட்டுகிறான். இருவரும் தங்கள் கொடுமையைச் சுமப்பார்கள். 20 தனது தாய் அல்லது தந்தையின் சகோதரனுடைய மனைவியோடு கூடினவன் தன் இனத்தாளுடைய அவமானத்தைத் திறந்து காட்டினான். அவர்கள் இருவரும் தங்கள் கொடுமையைச் சுமப்பார்கள்; பிள்ளைப்பேறு இன்றி இறப்பார்கள். 21 தன் சகோதரனுடைய மனைவியை மணந்து கொண்டவன் தகாத காரியம் செய்திருக்கிறான். அவன் தன் சகோதரனுடைய நிருவாணத்தை வெளிப்படுத்தினான். அவர்கள் இருவரும் பிள்ளை இல்லாதிருப்பார்கள். 22 நீங்கள் நம்முடைய கட்டளைகளையும் நீதிநெறிகளையும் கைக்கொண்டு, அவற்றின் படி நடவுங்கள். இல்லாவிடில், நீங்கள் குடியிருப்பதற்காக நாம் உங்களைக் கொண்டு போகிற நாடு உங்களைக் கக்கிப்போடும். 23 நாம் உங்கள் முன்னிலையிலிருந்து துரத்தி விடப்போகிற மக்களுடைய பழக்க வழக்கங்களின்படி நீங்கள் நடக்கவேண்டாம். அவர்கள் மேற்சொல்லப்பட்ட கொடுமைகளையெல்லாம் செய்தபடியால், நாம் அவர்களை வெறுத்து விட்டோம். 24 நாம் உங்களுக்கு உடைமையாகக் கொடுக்கப் போகிற அவர்களுடைய நாட்டை நீங்கள் உரிமையாக்கிக் கொள்ளுங்களென்று நாம் உங்களுக்குச் சொல்கிறோம். அந்நாடு பாலும் தேனும் பொழியும் நாடு. உங்கள் கடவுளாகிய நாம் உங்களை மற்ற மக்களினின்று பிரித்தெடுத்தோம். 25 ஆதலால், நீங்களும் அசுத்தமான விலங்குக்கும் சுத்தமான விலங்குக்கும், அசுத்தமான பறவைக்கும் சுத்தமான பறவைக்கும் வேறுபாடு காணக் ( கற்றுக் கொள்ளுங்கள் ). நாம் உங்களுக்குத் தீட்டாக எண்ணச் சொல்லி விலக்கின மிருகங்களாலும் பறவைகளாலும் மண்ணில் நடமாடுகிற எவ்வகை மிருகங்களாலும் உங்கள் ஆன்மாவை அசுத்தப்படுத்தாதீர்கள். 26 ஆண்டவராகிய நாம் பரிசுத்தராகையால், நீங்கள் நமக்கேற்ற பரிசுத்தவான்களாய் இருக்க வேண்டும். நீங்கள் நமது சொந்த மக்களாய் இருக்கும்படியே உங்களை மற்ற மக்களிடமிருந்து பிரித்தெடுத்தோம். 27 பில்லி சூனியம் பார்க்கிறதற்கும் குறி சொல்லுகிறதற்கும் ஏதுவான பேய்ப்புத்தி ஓர் ஆடவனுக்கோ ஒரு பெண்ணுக்கோ இருந்தால், அப்படிப் பட்டவர் சாகவே சாவர். அவர்களைக் கல்லால் எறிந்து கொல்லுங்கள். அவர்களுடைய இரத்தப் பழி அவர்கள் மேல் இருக்கக் கடவதாக என்றார்.
மொத்தம் 27 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 20 / 27
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References