தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
லேவியராகமம்
1. மேலும், ஆண்டவர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி:
2. நீங்கள் இஸ்ராயேல் மக்களிடம் சொல்ல வேண்டியதாவது: மேகவெட்டை உள்ளவன் தீட்டுள்ளவனாவான்.
3. அவனுடைய உடலிலுள்ள மேக வெட்டை இடைவிடாது ஊறிக்கொண்டிருந்தாலும் அடைபட்டிருந்தாலும் அது அவனுக்குத் தீட்டாம்.
4. மேக வெட்டை உள்ளவன் படுக்கிற படுக்கையும், உட்காரும் இடமும் தீட்டுப்பட்டதாகும்.
5. அவனது படுக்கையைத் தொட்டவன் தன் ஆடைகளைத் தோய்த்துத் தண்ணீரில் குளிக்கக்கடவான் அவன் மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
6. அவன் உட்கார்ந்திருந்த இடத்திலே உட்கார்ந்தவனோ தன் ஆடைகளைத் தோய்த்துத் தண்ணீரில் குளிக்கக்கடவான். அவன் மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
7. அவனது உடலைத் தொட்டிருப்பவனும் தன் ஆடைகளைத் தோய்த்துக் குளிப்பான். அவன் மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
8. மேகவெட்டையுள்ள மனிதன் சுத்தமாயிருக்கிற ஒருவன்மேல் துப்பினால் அவன் தன் ஆடைகளைத் தோய்த்துத் தண்ணீரில் குளிப்பான். அவன் மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
9. அவன் உட்கார்ந்த சேணமும் தீட்டாயிருக்கும்.
10. மேகவெட்டை உள்ளவனுக்குக் கீழ் இருந்தது எல்லாம் மாலைவரை தீட்டாயிருக்கும். அதில் எதையும் சுமந்தவன் தன் ஆடைகளைத் தோய்த்துத் தானும் தண்ணீரில் குளித்து மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
11. அப்படிப்பட்ட நோயுள்ளவன் தன் கைகளைத் தண்ணீரில் கழுவுவதற்கு முன் மற்றொருவனைத் தொட்டிருப்பானாயின், அவன் தன் ஆடைகளைத் தோய்த்துத் தானும் தண்ணீரில் குளித்து மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
12. மேகவெட்டை உள்ளவன் தொட்ட மட்பாண்டம் உடைக்கப்பட வேண்டும். மரத்தினால் அமைந்த பாண்டமாயின் தண்ணீரில் கழுவப்படவேண்டும்.
13. அவ்வித நோயுடையவன் நலமடைந்தானாயின், தான் சுத்தமானபின் ஏழு நாட்களை எண்ணிவருவான். பின் ஊற்று நீரில் தன் ஆடைகளைத் தோய்த்துத் தானும் குளித்த பின் சுத்தமுள்ளவனாவான்.
14. எட்டாம் நாளிலோ அவன் இரண்டு காட்டுப்புறாக்களை அல்லது இரண்டு மாடப்புறாக்குஞ்சுகளை எடுத்துக் கொண்டு, ஆண்டவர் திருமுன் சாட்சியக் கூடார வாயிலில் வந்து, அவற்றைக் குருவிடம் கொடுப்பான்.
15. குரு பாவப் பரிகாரத்திற்கு ஒன்றையும் தகனப்பலிக்கு ஒன்றையும் ஒப்புக்கொடுத்த பின் அந்த மேகவெட்டையுள்ளவன் அதினின்று சுத்தமடையும்படி ஆண்டவர் திருமுன் வேண்டக்கடவார்.
16. ஒருவனிடமிருந்து இந்திரியம் கழிந்ததாயின், அவன் நீராடி மாலைவரை தீட்டுள்ளவனாய் இருப்பான்.
17. மேலும், அவன் அணிந்திருந்த ஆடையையும் தோலாடையையும் தண்ணீரில் தோய்ப்பான். அவையும் மாலைவரை தீட்டுள்ளனவாய் இருக்கும்.
18. அவனோடு படுத்த பெண்ணும் தண்ணீரில் குளித்து மாலைவரை தீட்டுள்ளவளாயிருப்பாள்.
19. மாதவிடாயுள்ள பெண் தன் இரத்த ஊறலின் பொருட்டு ஏழுநாள் விலக்கமாய் இருக்கக்கடவாள்.
20. அவளைத் தொட்டவன் யாராயினும் மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
21. அன்றியும், விலக்கமாய் இருக்கிற நாட்களில் அவள் எதன்மீது துங்குவாளோ அல்லது உட்காருவாளோ அவை தீட்டுப்பட்டவை.
22. அவளுடைய படுக்கையைத் தொட்டவன் தன் ஆடைகளைத் தோய்த்து, தானும் நீராடி, மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
23. அவள் உட்கார்ந்த ( மணைமுதலிய ) எப்பொருளையும் தொடுபவன் தன் ஆடைகளைத் தோய்த்து, தானும் நீராடி, மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
24. மாதவிடாய்க் காலத்தில் அவளோடு படுத்த ஆடவன் எழுநாள் தீட்டுள்ளவனாய் இருப்பதுமன்றி, அவன் படுக்கும் எவ்விதப் படுக்கையும் தீட்டுப்படும்.
25. ஒரு பெண் விலக்கமாய் இருக்கவேண்டிய காலமல்லாமல் அவளுடைய இரத்தம் பலநாள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது காலத்திற்கு மிஞ்சி இரத்தம் வற்றிப் போகாமல் இருந்தால், அது கண்டிருக்கும் நாளெல்லாம் அந்தப் பெண் மாதவிடாய் விலக்கம் போல் விலகியிருக்கக்கடவாள்.
26. அவள் படுக்கும் படுக்கையும், அவள் உட்காரும் அனைத்தும் தீட்டுண்டவை.
27. இவைகளைத் தொட்டவன் தன் ஆடைகளைத் தோய்த்து, தானும் நீரில் குளித்து மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
28. இரத்த ஊறல் நின்ற நின்ற பின், அவள் தன் சுத்திகரத்திற்காக ஏழுநாள் எண்ணிக்கொண்டு,
29. எட்டாம் நாளிலே தனக்காக இரண்டு காட்டுப்புறாக்களை அல்லது இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளைச் சாட்சியக் கூடார வாயிலிலே குருவிடம் கொண்டு வரக் கடவாள்.
30. அவர் பாவப் பரிகாரத்திற்கு ஒன்றையும் தகனப்பலிக்கு மற்றொன்றையும் ஒப்புக்கொடுத்து, ஆண்டவர் திருமுன் அவளுக்காகவும் அவளுடைய அசுத்த இரத்த ஊறலுக்காகவும் மன்றாடக் கடவார்.
31. ஆகையால், இஸ்ராயேல் மக்கள் அசுத்தத்திற்கு அஞ்சி, தங்கள் நடுவேயிருக்கும் நமது உறைவிடத்தை அசுத்தப்படுத்தியபின் தங்கள் அசுத்தங்களிலே சாகாதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்க வேண்டுமென்று அவர்களுக்கு அறிவுரை கூறக்கடவீர்கள்.
32. மேகவெட்டை உள்ளவனுக்கும், இந்திரியக் கழிவினாலே தீட்டானவனுக்கும்,
33. மாதவிடாயின் பொருட்டு விலக்காய் இருக்கிறவளுக்கும், அல்லது மித மிஞ்சின இரத்த ஊறல் உள்ளவளுக்கும், இப்படிப்பட்டவளோடு படுத்த ஆடவனுக்கும் ஏற்பட்ட சட்டம் இதுவே என்றார்

குறிப்பேடுகள்

No Verse Added

Total 27 Chapters, Current Chapter 15 of Total Chapters 27
லேவியராகமம் 15:4

×

Alert

×

tamil Letters Keypad References