தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
லேவியராகமம்
1. ஆரோனின் புதல்வர்களான நாதாப், அபியூ என்பவர்கள் தூபக் கலசங்களை எடுத்து அவற்றுள் நெருப்பையும் அதன் மேல் தூபத்தையும் போட்டு, தங்களுக்குக் கட்டளையிட்டிருந்ததை மீறி ஆண்டவர் திருமுன் அந்நிய நெருப்பைச் சமர்ப்பித்தனர்.
2. உடனே ஆண்டவரிடமிருந்து நெருப்பு புறப்பட்டு அவர்களை எரித்தது. அவர்கள் ஆண்டவர் முன்னிலையிலே இறந்தனர்.
3. அப்போது மோயீசன் ஆரோனை நோக்கி: ஆண்டவர் சொல்கிறதாவது: நம்மை அணுகிவருவோர் மூலம் நம் பரிசுத்ததனத்தை வெளிப்படுத்துவோம்; எல்லா மக்களுக்கும் முன் நம் மாட்சி துலங்கப் பண்ணுவோம் என்கிறார் என்றார். இதைக் கேட்டு, ஆரோன் மௌனமாய் இருந்தார்.
4. பின்னர் மோயீசன் ஆரோனின் சிற்றப்பனாகிய ஓஸியேலுடைய மக்களான மிசாயேலையும் எலிஸ்பானையும் அழைத்து: நீங்கள் போய் உங்கள் சகோதரர்களின் சடலங்களைப் பரிசுத்த இடத்தினின்று எடுத்துப் பாளையத்திற்கு வெளியே கொண்டு போங்கள் என்றான்.
5. அவர்கள் உடனே போய், தங்களுக்குக் கட்டளையிட்டபடி, அவர்களைக் கிடந்த படியே, அதாவது: அவர்கள் அணிந்திருந்த மெல்லிய சணற்சட்டைகளோடு எடுத்து வெளியே கொண்டு போனார்கள்.
6. மோயீசன் ஆரோனையும், எலேயசார், இத்தமார் என்னும் அவர் மக்களையும் நோக்கி: நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்து விடவும், உங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொள்ளவும் வேண்டாம். இன்றேல் நீங்களும் சாவீர்கள். எல்லா மக்கள் மேலும் இறைவனின் கோபமும் உண்டாகும், உங்கள் சகோதரர்களும், இஸ்ராயேல் குடும்பத்தார் யாவரும் ஆண்டவர் மூட்டி எழுப்பிய நெருப்பைப் பற்றிப் புலம்புவார்களாக.
7. நீங்களோ சாட்சியக் கூடார வாயிலுக்கு வெளியே போகாதீர்கள். போனால், சாவீர்கள். ஏனென்றால், திரு அபிசேகத் தைலம் உங்கள் மேல் இருக்கிறது என்றார். அவர்கள் மோயீசன் கட்டளைப்படியே எல்லாம் செய்தார்கள்.
8. பின்னர் ஆண்டவர் ஆரோனை நோக்கி:
9. நீயும் உன் புதல்வர்களும் சாகாதபடிக்கு, சாட்சியக் கூடாரத்தில் நீங்கள் புகும் போது திராட்சை இரசத்தையோ வேறு மதுவையோ குடிக்காமலிருக்க வேண்டும். அது உங்கள் தலைமுறை தோறும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய கட்டளையாம்.
10. ஏனென்றால், நீங்கள் பரிசுத்தமானதையும் பரிசுத்தமில்லாததையும், தீட்டுள்ளதையும் தீட்டில்லாததையும் பகுத்தறியும் அறிவைக் கொண்டிருக்க வேண்டும்.
11. அதோடு ஆண்டவர் மோயீசன் மூலமாய் இஸ்ராயேல் மக்களுக்குத் திருவுளம் பற்றின நம் எல்லாச் சட்டங்களையும் நீங்கள் அவர்களுக்கு அறிவிக்கவும் வேண்டும் என்று திருவுளம் பற்றினார்.
12. பின்னர் மோயீசன் ஆரோனையும் அவருடைய மற்றப் புதல்வராகிய எலேயசார், இத்தமார் இவ்விருவரையும் நோக்கி: நீங்கள் ஆண்டவருக்குச் செலுத்தப்பட்ட பலியிலே மீதியான போசனப் பலியை எடுத்து, அதைப் புளிப்பில்லாமல் பலிப்பீடத்தண்டை உண்ணுங்கள். ஏனென்றால், அது மிகவும் பரிசுத்தமானது.
13. ஆண்டவருக்குப் படைக்கப்பட்ட பலிகளில் உனக்கும் உன் புதல்வர்களுக்கும் நியமிக்கப்பட்டதை நீங்கள் பரிசுத்த இடத்தில் உண்ணக்கடவீர்கள். எனக்கு விடுக்கப்பட்ட கட்டளை இதுவே.
14. அன்றியும், ஒப்புக் கொடுக்கப்பட்ட சிறு மார்க்கண்டத்தையும், பிரிக்கப்பட்ட முன்னந்தொடையையும், நீயும் உன்னோடு கூட உன் புதல்வர் புதல்வியரும் மிகவும் பரிசுத்த இடத்திலே உண்பீர்கள். ஏனென்றால், அவை இஸ்ராயேல் மக்களுடைய திருப்பலிகளிலே உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் கிடைக்கும்படி நியமிக்கப்பட்டிருக்கின்றன.
15. உண்மையில் அவர்கள் தகனப் பலிகளின் சமயத்தில் முன்னந்தொடையையும், மார்புக்கண்டத்தையும், பலிபீடத்தில் எரிக்கப்பட்ட கொழுப்பையும் ஆண்டவர் முன்னிலையில் உயர்த்திக் காட்டினார்கள். எனவே, அவை உனக்கும் உன் மக்களுக்கும் நித்திய கட்டளையின்படி சொந்தமாய் இருக்குமென்று ஆண்டவர் கட்டளையிட்டிருக்கிறார் என்றார்.
16. இதற்கிடையில் பாவப்பரிகாரமாகப் படைக்கப்படவிருந்த வெள்ளாட்டுக் கிடாயை மோயீசன் தேடியபோது, அது ஏற்கெனவே எரிக்கப்பட்டிருந்ததைக் கண்டார். அங்கிருந்த ஆரோனின் புதல்வர்களாகிய எலேயசார், இத்தமார் மீது கோபம் கொண்டார்.
17. நீங்கள் பாவ நிவாரணப்பலியைப் பரிசுத்த இடத்தில் உண்ணாமல் போனதென்ன? அது மிகவும் பரிசுத்தமானதல்லவா? மக்களின் அக்கிரமத்தைச் சுமந்து கொண்டு நீங்கள் ஆண்டவர் திருமுன் அவர்களுக்காக மன்றாடும் பொருட்டுத்தானே அது உங்களுக்குக் கொடுக்கப்பட்டது?
18. குறிப்பாக, அதன் இரத்தம் பரிசுத்த இடத்துக்குள்ளே கொண்டு வரப்படவில்லையே! நான் கட்டளை பெற்றுள்ள படி, நீங்கள் அதைப் பரிசுத்த இடத்திலே உண்டிருக்க வேண்டும் என மொழிந்தார்.
19. அதற்கு ஆரோன்: ஆண்டவர் திருமுன் பாவநிவாரணப் பலியும் தகனப்பலியும் செலுத்தப்பட்டது இன்றுதான். ஆனால், எனக்கு நேரிட்ட துன்பம் உமக்குத் தெரியுமே? மிகுந்த துக்கத்தில் அமிழ்ந்திருக்கும் நான் எப்படி அதை உண்ணக்கூடும் அல்லது, ஆண்டவர் விருப்பப்படி எப்படித் திருச்சடங்குகளைச் செய்யக்கூடும் என்றார்.
20. மோயீசன் அதைக் கேட்டு, அவர் சொன்ன காரணத்தைச் சரியென்று ஒப்புக்கொண்டார்.
மொத்தம் 27 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 10 / 27
1 ஆரோனின் புதல்வர்களான நாதாப், அபியூ என்பவர்கள் தூபக் கலசங்களை எடுத்து அவற்றுள் நெருப்பையும் அதன் மேல் தூபத்தையும் போட்டு, தங்களுக்குக் கட்டளையிட்டிருந்ததை மீறி ஆண்டவர் திருமுன் அந்நிய நெருப்பைச் சமர்ப்பித்தனர். 2 உடனே ஆண்டவரிடமிருந்து நெருப்பு புறப்பட்டு அவர்களை எரித்தது. அவர்கள் ஆண்டவர் முன்னிலையிலே இறந்தனர். 3 அப்போது மோயீசன் ஆரோனை நோக்கி: ஆண்டவர் சொல்கிறதாவது: நம்மை அணுகிவருவோர் மூலம் நம் பரிசுத்ததனத்தை வெளிப்படுத்துவோம்; எல்லா மக்களுக்கும் முன் நம் மாட்சி துலங்கப் பண்ணுவோம் என்கிறார் என்றார். இதைக் கேட்டு, ஆரோன் மௌனமாய் இருந்தார். 4 பின்னர் மோயீசன் ஆரோனின் சிற்றப்பனாகிய ஓஸியேலுடைய மக்களான மிசாயேலையும் எலிஸ்பானையும் அழைத்து: நீங்கள் போய் உங்கள் சகோதரர்களின் சடலங்களைப் பரிசுத்த இடத்தினின்று எடுத்துப் பாளையத்திற்கு வெளியே கொண்டு போங்கள் என்றான். 5 அவர்கள் உடனே போய், தங்களுக்குக் கட்டளையிட்டபடி, அவர்களைக் கிடந்த படியே, அதாவது: அவர்கள் அணிந்திருந்த மெல்லிய சணற்சட்டைகளோடு எடுத்து வெளியே கொண்டு போனார்கள். 6 மோயீசன் ஆரோனையும், எலேயசார், இத்தமார் என்னும் அவர் மக்களையும் நோக்கி: நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்து விடவும், உங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொள்ளவும் வேண்டாம். இன்றேல் நீங்களும் சாவீர்கள். எல்லா மக்கள் மேலும் இறைவனின் கோபமும் உண்டாகும், உங்கள் சகோதரர்களும், இஸ்ராயேல் குடும்பத்தார் யாவரும் ஆண்டவர் மூட்டி எழுப்பிய நெருப்பைப் பற்றிப் புலம்புவார்களாக. 7 நீங்களோ சாட்சியக் கூடார வாயிலுக்கு வெளியே போகாதீர்கள். போனால், சாவீர்கள். ஏனென்றால், திரு அபிசேகத் தைலம் உங்கள் மேல் இருக்கிறது என்றார். அவர்கள் மோயீசன் கட்டளைப்படியே எல்லாம் செய்தார்கள். 8 பின்னர் ஆண்டவர் ஆரோனை நோக்கி: 9 நீயும் உன் புதல்வர்களும் சாகாதபடிக்கு, சாட்சியக் கூடாரத்தில் நீங்கள் புகும் போது திராட்சை இரசத்தையோ வேறு மதுவையோ குடிக்காமலிருக்க வேண்டும். அது உங்கள் தலைமுறை தோறும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய கட்டளையாம். 10 ஏனென்றால், நீங்கள் பரிசுத்தமானதையும் பரிசுத்தமில்லாததையும், தீட்டுள்ளதையும் தீட்டில்லாததையும் பகுத்தறியும் அறிவைக் கொண்டிருக்க வேண்டும். 11 அதோடு ஆண்டவர் மோயீசன் மூலமாய் இஸ்ராயேல் மக்களுக்குத் திருவுளம் பற்றின நம் எல்லாச் சட்டங்களையும் நீங்கள் அவர்களுக்கு அறிவிக்கவும் வேண்டும் என்று திருவுளம் பற்றினார். 12 பின்னர் மோயீசன் ஆரோனையும் அவருடைய மற்றப் புதல்வராகிய எலேயசார், இத்தமார் இவ்விருவரையும் நோக்கி: நீங்கள் ஆண்டவருக்குச் செலுத்தப்பட்ட பலியிலே மீதியான போசனப் பலியை எடுத்து, அதைப் புளிப்பில்லாமல் பலிப்பீடத்தண்டை உண்ணுங்கள். ஏனென்றால், அது மிகவும் பரிசுத்தமானது. 13 ஆண்டவருக்குப் படைக்கப்பட்ட பலிகளில் உனக்கும் உன் புதல்வர்களுக்கும் நியமிக்கப்பட்டதை நீங்கள் பரிசுத்த இடத்தில் உண்ணக்கடவீர்கள். எனக்கு விடுக்கப்பட்ட கட்டளை இதுவே. 14 அன்றியும், ஒப்புக் கொடுக்கப்பட்ட சிறு மார்க்கண்டத்தையும், பிரிக்கப்பட்ட முன்னந்தொடையையும், நீயும் உன்னோடு கூட உன் புதல்வர் புதல்வியரும் மிகவும் பரிசுத்த இடத்திலே உண்பீர்கள். ஏனென்றால், அவை இஸ்ராயேல் மக்களுடைய திருப்பலிகளிலே உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் கிடைக்கும்படி நியமிக்கப்பட்டிருக்கின்றன. 15 உண்மையில் அவர்கள் தகனப் பலிகளின் சமயத்தில் முன்னந்தொடையையும், மார்புக்கண்டத்தையும், பலிபீடத்தில் எரிக்கப்பட்ட கொழுப்பையும் ஆண்டவர் முன்னிலையில் உயர்த்திக் காட்டினார்கள். எனவே, அவை உனக்கும் உன் மக்களுக்கும் நித்திய கட்டளையின்படி சொந்தமாய் இருக்குமென்று ஆண்டவர் கட்டளையிட்டிருக்கிறார் என்றார். 16 இதற்கிடையில் பாவப்பரிகாரமாகப் படைக்கப்படவிருந்த வெள்ளாட்டுக் கிடாயை மோயீசன் தேடியபோது, அது ஏற்கெனவே எரிக்கப்பட்டிருந்ததைக் கண்டார். அங்கிருந்த ஆரோனின் புதல்வர்களாகிய எலேயசார், இத்தமார் மீது கோபம் கொண்டார். 17 நீங்கள் பாவ நிவாரணப்பலியைப் பரிசுத்த இடத்தில் உண்ணாமல் போனதென்ன? அது மிகவும் பரிசுத்தமானதல்லவா? மக்களின் அக்கிரமத்தைச் சுமந்து கொண்டு நீங்கள் ஆண்டவர் திருமுன் அவர்களுக்காக மன்றாடும் பொருட்டுத்தானே அது உங்களுக்குக் கொடுக்கப்பட்டது? 18 குறிப்பாக, அதன் இரத்தம் பரிசுத்த இடத்துக்குள்ளே கொண்டு வரப்படவில்லையே! நான் கட்டளை பெற்றுள்ள படி, நீங்கள் அதைப் பரிசுத்த இடத்திலே உண்டிருக்க வேண்டும் என மொழிந்தார். 19 அதற்கு ஆரோன்: ஆண்டவர் திருமுன் பாவநிவாரணப் பலியும் தகனப்பலியும் செலுத்தப்பட்டது இன்றுதான். ஆனால், எனக்கு நேரிட்ட துன்பம் உமக்குத் தெரியுமே? மிகுந்த துக்கத்தில் அமிழ்ந்திருக்கும் நான் எப்படி அதை உண்ணக்கூடும் அல்லது, ஆண்டவர் விருப்பப்படி எப்படித் திருச்சடங்குகளைச் செய்யக்கூடும் என்றார். 20 மோயீசன் அதைக் கேட்டு, அவர் சொன்ன காரணத்தைச் சரியென்று ஒப்புக்கொண்டார்.
மொத்தம் 27 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 10 / 27
×

Alert

×

Tamil Letters Keypad References