தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
லேவியராகமம்
1. ஆண்டவர் சாட்சியக் கூடாரத்தினின்று மோயீசனைக் கூப்பிட்டு,
2. அவரை நோக்கி: நீ இஸ்ராயேல் மக்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது: உங்களுள் ஒருவன் மாட்டையேனும், ஆட்டையேனும் ஆண்டவருக்குப் பலியாக ஒப்புக்கொடுக்க வரும் போது, அவன் கீழ்க்காணும் விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
3. மாட்டு மந்தையிலிருந்து எடுத்துத் தகனப்பலி செலுத்த வேண்டியதாயின், அவன் மறுவற்ற ஒரு காளையைத் தெரிந்தெடுத்து, ஆண்டவர் தன் மீது அருள் கூரும் பொருட்டு அதைச் சாட்சியக் கூடார வாயிலுக்குக் கொண்டு வந்து,
4. பலிமிருகத்துத் தலையின் மேல் தன் கையை வைக்கக்கடவான். அதனால் அவன் காணிக்கை பாவப் பரிகாரத்திற்கென்று ஏற்றுக்கொள்ளப்படும்.
5. பிறகு அவன் கன்றுக்குட்டியை ஆண்டவர் திருமுன் பலியிட, ஆரோனின் புதல்வராகிய குருக்கள் கூடார வாயிலின் முன் இருக்கும் பீடத்தின் மேல் சுற்றிலும் அதன் இரத்தத்தை வார்த்து ஒப்புக்கொடுப்பார்.
6. பலி மிருகத்தின் தோலை உரித்து விட்டு, உறுப்புக்களைத் துண்டு துண்டாக வெட்டக்கடவார்கள்.
7. பிறகு பீடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விறகிலே அவர்கள் நெருப்புப் பற்ற வைத்து,
8. துண்டித்தெடுத்த உறுப்புக்களாகிய தலையையும், ஈரலோடு சேர்ந்த எல்லாவற்றையும் அதன்மீது முறையாக வைத்து,
9. அதன் குடல்களையும் கால்களையும் தண்ணீரால் கழுவி ஆண்டவருக்குத் தகனப்பலியாகவும் நறுமணப் பொருளாகவும் குரு பீடத்தின் மீது சுட்டெரிப்பார்.
10. ஆனால், செம்மறி ஆட்டையோ, வெள்ளாட்டையோ தகனப்பலியாகச் செலுத்த வேண்டுமாயின், அவன் மறுவற்ற கிடாயைக் கொண்டு வந்து,
11. ஆண்டவர் திருமுன் வடதிசையை நோக்கிய பலிப்பீடத்தின் பக்கத்திலே அதைக் கொல்லக்கடவான். ஆரோனின் புதல்வர்களோ அதன் இரத்தத்தைப் பீடத்தின் மீது சுற்றிலும் வார்த்து,
12. அதன் உறுப்புக்களையும் தலையையும் ஈரலோடு சேர்ந்த எல்லாவற்றையும் வெவ்வேறாகப் பிரித்து விறகின் மேல் வைத்து அதன் கீழே நெருப்புப் பற்ற வைப்பார்கள்.
13. குடல்களையும் கால்களையும் தண்ணீரில் கழுவுவார்கள். பிறகு குரு பீடத்தின் மீது ஆண்டவருக்குத் தகனப் பலியாகவும் நறுமணமாகவும் ஆகும் பொருட்டு அவற்றைச் சுட்டெரிக்கக்கடவார்.
14. ஆனால், பறவைகளை அதாவது புறாக்களையோ மாடப்புறாக் குஞ்சுகளையோ, ஆண்டவருக்குத் தகனப் பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமாயின்,
15. அதைக் குருபீடத்திலே ஒப்புக்கொடுத்து, அதன் தலையைக் கழுத்தின் பின்புறமாகத் திருப்பி, அறுப்பட்ட காயத்தின் வழியாக இரத்தத்தைப் பீடத்தின் ஒரமாய்ச் சிந்த விடுவார்.
16. அதன் இரைப்பையையும் இறகுகளையும் பீடத்தருகில் கீழ்ப்புறத்திலே சாம்பலைச் சேர்த்து வைக்கும் இடத்தில் எறிந்து விட்டு,
17. அதன் இறக்கைகளைக் கத்தியால் வெட்டாமல் பிளக்கக் கடவார். ( பின் ) பீடத்தின் மீதுள்ள விறகுக் கட்டைகளில் நெருப்பைப் பற்ற வைத்து அதைச் சுட்டெரிப்பார். இது தகனப் பலியும் ஆண்டவருக்கு மிக்க நறுமணமுள்ள காணிக்கையுமாகும்.
மொத்தம் 27 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 1 / 27
1 ஆண்டவர் சாட்சியக் கூடாரத்தினின்று மோயீசனைக் கூப்பிட்டு, 2 அவரை நோக்கி: நீ இஸ்ராயேல் மக்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது: உங்களுள் ஒருவன் மாட்டையேனும், ஆட்டையேனும் ஆண்டவருக்குப் பலியாக ஒப்புக்கொடுக்க வரும் போது, அவன் கீழ்க்காணும் விதிகளைப் பின்பற்ற வேண்டும். 3 மாட்டு மந்தையிலிருந்து எடுத்துத் தகனப்பலி செலுத்த வேண்டியதாயின், அவன் மறுவற்ற ஒரு காளையைத் தெரிந்தெடுத்து, ஆண்டவர் தன் மீது அருள் கூரும் பொருட்டு அதைச் சாட்சியக் கூடார வாயிலுக்குக் கொண்டு வந்து, 4 பலிமிருகத்துத் தலையின் மேல் தன் கையை வைக்கக்கடவான். அதனால் அவன் காணிக்கை பாவப் பரிகாரத்திற்கென்று ஏற்றுக்கொள்ளப்படும். 5 பிறகு அவன் கன்றுக்குட்டியை ஆண்டவர் திருமுன் பலியிட, ஆரோனின் புதல்வராகிய குருக்கள் கூடார வாயிலின் முன் இருக்கும் பீடத்தின் மேல் சுற்றிலும் அதன் இரத்தத்தை வார்த்து ஒப்புக்கொடுப்பார். 6 பலி மிருகத்தின் தோலை உரித்து விட்டு, உறுப்புக்களைத் துண்டு துண்டாக வெட்டக்கடவார்கள். 7 பிறகு பீடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விறகிலே அவர்கள் நெருப்புப் பற்ற வைத்து, 8 துண்டித்தெடுத்த உறுப்புக்களாகிய தலையையும், ஈரலோடு சேர்ந்த எல்லாவற்றையும் அதன்மீது முறையாக வைத்து, 9 அதன் குடல்களையும் கால்களையும் தண்ணீரால் கழுவி ஆண்டவருக்குத் தகனப்பலியாகவும் நறுமணப் பொருளாகவும் குரு பீடத்தின் மீது சுட்டெரிப்பார். 10 ஆனால், செம்மறி ஆட்டையோ, வெள்ளாட்டையோ தகனப்பலியாகச் செலுத்த வேண்டுமாயின், அவன் மறுவற்ற கிடாயைக் கொண்டு வந்து, 11 ஆண்டவர் திருமுன் வடதிசையை நோக்கிய பலிப்பீடத்தின் பக்கத்திலே அதைக் கொல்லக்கடவான். ஆரோனின் புதல்வர்களோ அதன் இரத்தத்தைப் பீடத்தின் மீது சுற்றிலும் வார்த்து, 12 அதன் உறுப்புக்களையும் தலையையும் ஈரலோடு சேர்ந்த எல்லாவற்றையும் வெவ்வேறாகப் பிரித்து விறகின் மேல் வைத்து அதன் கீழே நெருப்புப் பற்ற வைப்பார்கள். 13 குடல்களையும் கால்களையும் தண்ணீரில் கழுவுவார்கள். பிறகு குரு பீடத்தின் மீது ஆண்டவருக்குத் தகனப் பலியாகவும் நறுமணமாகவும் ஆகும் பொருட்டு அவற்றைச் சுட்டெரிக்கக்கடவார். 14 ஆனால், பறவைகளை அதாவது புறாக்களையோ மாடப்புறாக் குஞ்சுகளையோ, ஆண்டவருக்குத் தகனப் பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமாயின், 15 அதைக் குருபீடத்திலே ஒப்புக்கொடுத்து, அதன் தலையைக் கழுத்தின் பின்புறமாகத் திருப்பி, அறுப்பட்ட காயத்தின் வழியாக இரத்தத்தைப் பீடத்தின் ஒரமாய்ச் சிந்த விடுவார். 16 அதன் இரைப்பையையும் இறகுகளையும் பீடத்தருகில் கீழ்ப்புறத்திலே சாம்பலைச் சேர்த்து வைக்கும் இடத்தில் எறிந்து விட்டு, 17 அதன் இறக்கைகளைக் கத்தியால் வெட்டாமல் பிளக்கக் கடவார். ( பின் ) பீடத்தின் மீதுள்ள விறகுக் கட்டைகளில் நெருப்பைப் பற்ற வைத்து அதைச் சுட்டெரிப்பார். இது தகனப் பலியும் ஆண்டவருக்கு மிக்க நறுமணமுள்ள காணிக்கையுமாகும்.
மொத்தம் 27 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 1 / 27
×

Alert

×

Tamil Letters Keypad References