தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
நியாயாதிபதிகள்
1. ஆகவே கெதெயோன் என்ற ஜெரோபாவால் இரவில் எழுந்து தன்னோடிருந்த எல்லா மக்களோடும் ஆராத் நீரூற்றோரம் வந்தான். மதியானியரோ ஓர் உயர்ந்த குன்றின் வடபக்கப் பள்ளத்தாக்கில் பாளையம் இறங்கியிருந்தனர்.
2. அப்போது ஆண்டவர் கெதெயோனை நோக்கி, "உன்னோடு இருப்பவர் பலர். அவர்கள் கையில் மதியானியரைக் கையளிக்கமாட்டோம். கையளித்தால், 'எங்கள் வலிமையால் மீட்கப்பட்டோம்' என்று இஸ்ராயேலர் வீண் பெருமை கொள்வர்.
3. நீ உன் மக்களையும் உன்னைப் பின்தொடர்ந்த அனைவரையும் நோக்கி, உங்களுக்குள் அஞ்சும் கோழைகள் திரும்பிப்போகட்டும் என்று பத்துப்பேர் கேட்கச் சொல்" என்றார். அப்போது மக்களில் இருபத்திரண்டாயிரம் பேர் காலாத் மலையினின்று திரும்பிப் போனார்கள்; பதினாயிரம் பேர் மட்டும் நின்றனர்.
4. அப்போது ஆண்டவர் கெதெயோனை நோக்கி, "மக்கள் இன்னும் அதிகமே. அவர்களைத் தண்ணீர் ஓரமாய்க் கொண்டு போ; அவர்களைச் சோதித்துப் பார்ப்போம். உன்னோடு போக நான் குறிப்பவர்கள் போகட்டும்; வேண்டாமென்று நான் குறிப்போர் திரும்பி விடட்டும்" என்றார்.
5. அப்படியே மக்கள் தண்ணீர் ஓரம் செல்ல, ஆண்டவர் கெதெயோனை நோக்கி," நாயைப்போல் நீரை நக்கிக் குடிப்போரை ஒரு பக்கமும், முழங்காலை வளைத்துக் குனிந்து குடிப்போரை மறுபக்கமும் நிறுத்து" என்றார்.
6. அவ்வாறு தண்ணீரைக் கையால் அள்ளி நக்கிக் குடித்தவர் முந்நூறு பேர். மீதிப்பேர் முழங்காலை வளைத்துக் குனிந்து குடித்தனர்.
7. ஆண்டவர் கெதெயோனிடம், "நீரை அள்ளி நக்கிக் குடித்த முந்நூறு பேரைக் கொண்டு உங்களை மீட்டு மதியானியரை உன் கையவயப்படுத்துவோம். மற்ற அனைவரும் தத்தம் இடம் போய்ச் சேரட்டும்" என்றார்.
8. மீதிப் பேர் தத்தம் பாளையத்திற்குத் திரும்பிப் போகக் கட்டளையிட்டான். பின் கெதெயோன் வேண்டிய உணவுப் பொருட்களையும் எக்காளங்களையும் எடுத்துக் கொண்டு, முந்நூறு பேரோடு போருக்குப் புறப்பட்டான். மதியானியர் பாளையம் அவனுக்குக் கீழே பள்ளத்தாக்கில் இருந்தது.
9. அன்றிரவே ஆண்டவர் அவனை நோக்கி, "நீ எழுந்து அவர்களுடைய பாளையத்திற்குப் போ. ஏனெனில் அவர்களை உன் கைவயமாக்கியுள்ளோம்.
10. தனியே போக அஞ்சினால், உன் ஊழியன் பாராவும் உன்னோடு வரட்டும்.
11. அவர்கள் பேசிக் கொள்வதை நீ கேட்டால் உனக்கு ஊக்கம் உண்டாகி, அஞ்சாது அவர்கள் பாளையத்தில் நுழைவாய்" என்றார். ஆகவே அவனும் அவன் ஊழியன் பாராவும் இராக் காவலர் இருந்த பக்கமாய் இறங்கினார்.
12. மதியானியரும் அமலேசித்தரும் கீழை நாட்டினர் அனைவரும் வெட்டுக்கிளிக் கூட்டம் போல் பள்ளத்தாக்கில் படுத்திருந்தனர். எண்ணற்ற ஒட்டகங்களும் கடலோரத்து மணற் குவியல் போலக் கிடந்தன.
13. கெதெயோன் நெருங்கி வரவே, அவர்களில் ஒருவன் தான் கண்ட கனவைப் பற்றி இன்னொருவனிடம், "ஒரு கனவு கண்டேன். சுடப்பட்ட ஒரு வாற்கோதுமை அப்பம் மதியானியர் பாளையத்துக்கு உருண்டு வந்தது. அது கூடாரம் வரை வந்து அதை விழச்செய்து, சமவெளிக்கு உருட்டித் தள்ளி விட்டது" என்றான்.
14. அதற்கு மற்றவன், "இது இஸ்ராயேலன் யோவாசின் மகன் கெதெயோனின் வாள் அன்றி வேறன்று. மதியானியரையும் அவரது பாளையம் முழுவதையும் ஆண்டவர் அவன் கைவயமளித்தார்" என்றான்.
15. கனவையும் அதன் விளக்கத்தையும் கேட்ட கெதெயோன் ஆண்டவரை வாழ்த்தினான். பின் இஸ்ராயேல் பாளையத்திற்குத் திரும்பி வந்து, "எழுந்திருங்கள், மதியானியரின் பாளையத்தை ஆண்டவர் நம் கைவயமளித்தார்" என்றான்.
16. முந்நூறு பேரையும் மூன்றாய்ப் பிரித்துக் கையில் எக்காளங்களையும் வெறும் பானைகளையும், அப்பானைகளுக்குள் விளக்குகளையும் கொடுத்து,
17. அவர்களை நோக்கி, "நான் செய்வது போலவே நீங்களும் செய்யுங்கள்; நான் பாளையத்தின் ஒரு புறத்தில் நுழைவேன்; நீங்கள் நான் செய்வதையெல்லாம் செய்யுங்கள்.
18. நான் என் கையிலிருக்கும் எக்காளத்தை ஊத நீங்களும் பாளையத்தைச் சுற்றி ஊதி 'ஆண்டவருக்காகவும் கெதெயோனுக்காகவும்' என்று ஆர்ப்பரியுங்கள்" என்றான்.
19. நடுநிசிக் காவலர் தம் வேலையைச் செய்யத் தொடங்கின போது கெதெயோனும் அவனோடு இருந்த முந்நூறு பேரும் பாளையத்தின் ஒரு புறத்தில் நுழைந்தனர். காவலர்களை எழுப்பி எக்காளங்களை ஊதிப் பானைகளை ஒன்றோடு ஒன்று மோதி உடைத்தார்கள்.
20. முப்பிரிவாரும் பாளையத்தின் முப்புறங்களில் நின்றுகொண்டு பானைகளை உடைத்து இடக்கையில் தீவெட்டி ஏந்தி, வலக்கையிலிருந்த எக்காளங்களை ஊதி, "இதோ ஆண்டவருடைய வாள், இதோ கெதெயோனின் வாள்!" என்று கூவினார்கள்.
21. பாளையத்தைச் சுற்றிலும் அவர்கள் தத்தம் இடங்களிலே நின்றனர். கூடாரங்கள் முழுவதும் ஒரே குழப்பமாய் இருந்தது. அப்போது பாளையத்தில் இருந்த அனைவரும் ஓலமிட்டு அலறிக்கொண்டு சிதறி ஓடிப்போனார்கள்.
22. முந்நூறு பேரும் எக்காளங்களை ஊதிக் கொண்டே நின்றனர். ஆண்டவரின் செயலால் எதிரிகள் தமக்குள்ளேயே ஒருவரை ஒருவர் மாய்த்துக் கொண்டனர்.
23. பெத்செத்தா வரையிலும், தேபாத்திலுள்ள அபெல்மெயுலா கரை வரைக்கும் ஓடினார்கள். நெப்தலி, ஆசேர், மனாசே வம்சத்தாரான எல்லா இஸ்ராயேலரும் கத்திக் கொண்டே மதியானியரைத் துரத்திச் சென்றனர்.
24. கெதெயோன் எபிராயீம் மலைநாடு எங்கும் தூதர்களை அனுப்பி, "மதியானியருக்கு எதிராய் இறங்கிப் பெத்பெராவின் நீர்த்துறைகளையும் யோர்தானின் நீர்த்துறைகளையும் கைப்பற்றிக் கொள்ளுங்கள்" என்றான். அப்படியே எபிராயிமியர் எல்லாருமாக அக்களித்துக் கூவிப் பெத்பெராவை யோர்தானின் நீர்த் துறைகளைக் கைப்பற்றிக் கொண்டனர்.
25. பிறகு அவர்கள் மதியானியரான ஒரேப், சேப் என்ற இருவரைப் பிடித்து, ஒரேபை ஒரேப் பாறையிலும், சேப்பைச் சேப் என்ற ஆலையிலும் கொன்று மதியானியரைத் துரத்திக் கொண்டே, ஒரேப், சேப் என்பவர்களின் தலைகளை யோர்தான் நதிக்கு அப்புறமிருந்த கெதெயோனிடம் கொண்டு வந்தனர்.
மொத்தம் 21 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 7 / 21
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
1 ஆகவே கெதெயோன் என்ற ஜெரோபாவால் இரவில் எழுந்து தன்னோடிருந்த எல்லா மக்களோடும் ஆராத் நீரூற்றோரம் வந்தான். மதியானியரோ ஓர் உயர்ந்த குன்றின் வடபக்கப் பள்ளத்தாக்கில் பாளையம் இறங்கியிருந்தனர். 2 அப்போது ஆண்டவர் கெதெயோனை நோக்கி, "உன்னோடு இருப்பவர் பலர். அவர்கள் கையில் மதியானியரைக் கையளிக்கமாட்டோம். கையளித்தால், 'எங்கள் வலிமையால் மீட்கப்பட்டோம்' என்று இஸ்ராயேலர் வீண் பெருமை கொள்வர். 3 நீ உன் மக்களையும் உன்னைப் பின்தொடர்ந்த அனைவரையும் நோக்கி, உங்களுக்குள் அஞ்சும் கோழைகள் திரும்பிப்போகட்டும் என்று பத்துப்பேர் கேட்கச் சொல்" என்றார். அப்போது மக்களில் இருபத்திரண்டாயிரம் பேர் காலாத் மலையினின்று திரும்பிப் போனார்கள்; பதினாயிரம் பேர் மட்டும் நின்றனர். 4 அப்போது ஆண்டவர் கெதெயோனை நோக்கி, "மக்கள் இன்னும் அதிகமே. அவர்களைத் தண்ணீர் ஓரமாய்க் கொண்டு போ; அவர்களைச் சோதித்துப் பார்ப்போம். உன்னோடு போக நான் குறிப்பவர்கள் போகட்டும்; வேண்டாமென்று நான் குறிப்போர் திரும்பி விடட்டும்" என்றார். 5 அப்படியே மக்கள் தண்ணீர் ஓரம் செல்ல, ஆண்டவர் கெதெயோனை நோக்கி," நாயைப்போல் நீரை நக்கிக் குடிப்போரை ஒரு பக்கமும், முழங்காலை வளைத்துக் குனிந்து குடிப்போரை மறுபக்கமும் நிறுத்து" என்றார். 6 அவ்வாறு தண்ணீரைக் கையால் அள்ளி நக்கிக் குடித்தவர் முந்நூறு பேர். மீதிப்பேர் முழங்காலை வளைத்துக் குனிந்து குடித்தனர். 7 ஆண்டவர் கெதெயோனிடம், "நீரை அள்ளி நக்கிக் குடித்த முந்நூறு பேரைக் கொண்டு உங்களை மீட்டு மதியானியரை உன் கையவயப்படுத்துவோம். மற்ற அனைவரும் தத்தம் இடம் போய்ச் சேரட்டும்" என்றார். 8 மீதிப் பேர் தத்தம் பாளையத்திற்குத் திரும்பிப் போகக் கட்டளையிட்டான். பின் கெதெயோன் வேண்டிய உணவுப் பொருட்களையும் எக்காளங்களையும் எடுத்துக் கொண்டு, முந்நூறு பேரோடு போருக்குப் புறப்பட்டான். மதியானியர் பாளையம் அவனுக்குக் கீழே பள்ளத்தாக்கில் இருந்தது. 9 அன்றிரவே ஆண்டவர் அவனை நோக்கி, "நீ எழுந்து அவர்களுடைய பாளையத்திற்குப் போ. ஏனெனில் அவர்களை உன் கைவயமாக்கியுள்ளோம். 10 தனியே போக அஞ்சினால், உன் ஊழியன் பாராவும் உன்னோடு வரட்டும். 11 அவர்கள் பேசிக் கொள்வதை நீ கேட்டால் உனக்கு ஊக்கம் உண்டாகி, அஞ்சாது அவர்கள் பாளையத்தில் நுழைவாய்" என்றார். ஆகவே அவனும் அவன் ஊழியன் பாராவும் இராக் காவலர் இருந்த பக்கமாய் இறங்கினார். 12 மதியானியரும் அமலேசித்தரும் கீழை நாட்டினர் அனைவரும் வெட்டுக்கிளிக் கூட்டம் போல் பள்ளத்தாக்கில் படுத்திருந்தனர். எண்ணற்ற ஒட்டகங்களும் கடலோரத்து மணற் குவியல் போலக் கிடந்தன. 13 கெதெயோன் நெருங்கி வரவே, அவர்களில் ஒருவன் தான் கண்ட கனவைப் பற்றி இன்னொருவனிடம், "ஒரு கனவு கண்டேன். சுடப்பட்ட ஒரு வாற்கோதுமை அப்பம் மதியானியர் பாளையத்துக்கு உருண்டு வந்தது. அது கூடாரம் வரை வந்து அதை விழச்செய்து, சமவெளிக்கு உருட்டித் தள்ளி விட்டது" என்றான். 14 அதற்கு மற்றவன், "இது இஸ்ராயேலன் யோவாசின் மகன் கெதெயோனின் வாள் அன்றி வேறன்று. மதியானியரையும் அவரது பாளையம் முழுவதையும் ஆண்டவர் அவன் கைவயமளித்தார்" என்றான். 15 கனவையும் அதன் விளக்கத்தையும் கேட்ட கெதெயோன் ஆண்டவரை வாழ்த்தினான். பின் இஸ்ராயேல் பாளையத்திற்குத் திரும்பி வந்து, "எழுந்திருங்கள், மதியானியரின் பாளையத்தை ஆண்டவர் நம் கைவயமளித்தார்" என்றான். 16 முந்நூறு பேரையும் மூன்றாய்ப் பிரித்துக் கையில் எக்காளங்களையும் வெறும் பானைகளையும், அப்பானைகளுக்குள் விளக்குகளையும் கொடுத்து, 17 அவர்களை நோக்கி, "நான் செய்வது போலவே நீங்களும் செய்யுங்கள்; நான் பாளையத்தின் ஒரு புறத்தில் நுழைவேன்; நீங்கள் நான் செய்வதையெல்லாம் செய்யுங்கள். 18 நான் என் கையிலிருக்கும் எக்காளத்தை ஊத நீங்களும் பாளையத்தைச் சுற்றி ஊதி 'ஆண்டவருக்காகவும் கெதெயோனுக்காகவும்' என்று ஆர்ப்பரியுங்கள்" என்றான். 19 நடுநிசிக் காவலர் தம் வேலையைச் செய்யத் தொடங்கின போது கெதெயோனும் அவனோடு இருந்த முந்நூறு பேரும் பாளையத்தின் ஒரு புறத்தில் நுழைந்தனர். காவலர்களை எழுப்பி எக்காளங்களை ஊதிப் பானைகளை ஒன்றோடு ஒன்று மோதி உடைத்தார்கள். 20 முப்பிரிவாரும் பாளையத்தின் முப்புறங்களில் நின்றுகொண்டு பானைகளை உடைத்து இடக்கையில் தீவெட்டி ஏந்தி, வலக்கையிலிருந்த எக்காளங்களை ஊதி, "இதோ ஆண்டவருடைய வாள், இதோ கெதெயோனின் வாள்!" என்று கூவினார்கள். 21 பாளையத்தைச் சுற்றிலும் அவர்கள் தத்தம் இடங்களிலே நின்றனர். கூடாரங்கள் முழுவதும் ஒரே குழப்பமாய் இருந்தது. அப்போது பாளையத்தில் இருந்த அனைவரும் ஓலமிட்டு அலறிக்கொண்டு சிதறி ஓடிப்போனார்கள். 22 முந்நூறு பேரும் எக்காளங்களை ஊதிக் கொண்டே நின்றனர். ஆண்டவரின் செயலால் எதிரிகள் தமக்குள்ளேயே ஒருவரை ஒருவர் மாய்த்துக் கொண்டனர். 23 பெத்செத்தா வரையிலும், தேபாத்திலுள்ள அபெல்மெயுலா கரை வரைக்கும் ஓடினார்கள். நெப்தலி, ஆசேர், மனாசே வம்சத்தாரான எல்லா இஸ்ராயேலரும் கத்திக் கொண்டே மதியானியரைத் துரத்திச் சென்றனர். 24 கெதெயோன் எபிராயீம் மலைநாடு எங்கும் தூதர்களை அனுப்பி, "மதியானியருக்கு எதிராய் இறங்கிப் பெத்பெராவின் நீர்த்துறைகளையும் யோர்தானின் நீர்த்துறைகளையும் கைப்பற்றிக் கொள்ளுங்கள்" என்றான். அப்படியே எபிராயிமியர் எல்லாருமாக அக்களித்துக் கூவிப் பெத்பெராவை யோர்தானின் நீர்த் துறைகளைக் கைப்பற்றிக் கொண்டனர். 25 பிறகு அவர்கள் மதியானியரான ஒரேப், சேப் என்ற இருவரைப் பிடித்து, ஒரேபை ஒரேப் பாறையிலும், சேப்பைச் சேப் என்ற ஆலையிலும் கொன்று மதியானியரைத் துரத்திக் கொண்டே, ஒரேப், சேப் என்பவர்களின் தலைகளை யோர்தான் நதிக்கு அப்புறமிருந்த கெதெயோனிடம் கொண்டு வந்தனர்.
மொத்தம் 21 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 7 / 21
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
×

Alert

×

Tamil Letters Keypad References