தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
நியாயாதிபதிகள்
1. ஆவோத் இறந்தபின் இஸ்ராயேல் மக்கள் ஆண்டவர் திருமுன் மீண்டும் பாவங்களைச் செய்தனர்.
2. எனவே, ஆசோர் நகரை ஆண்டு கொண்டிருந்த கானான் நாட்டு அரசன் ஜாபீனுக்குக் கடவுள் அவர்களைக் கையளித்தார். அவன் படைத்தலைவன் சிசாரா புறவினத்தாரின் நகரான அரோசெத்தில் வாழ்ந்து வந்தான்.
3. இஸ்ராயேல் மக்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரல் எழுப்பினர்; ஏனெனில் அவனிடம் வாள் பொருத்தப்பட்ட தொள்ளாயிரம் தேர்கள் இருந்தன, மேலும் இருபது ஆண்டுகளாய் அவன் அவர்களை மிகவும் வதைத்து வந்தான்.
4. இலாப்பிதோத்தின் மனைவி தெபோரா என்ற இறைவாக்கினள் ஒருத்தி இருந்தாள். அவளே அக்காலத்தில் மக்களுக்கு நீதி வழங்கி வந்தாள்.
5. எபிராயீம் மலையில் ராமா, பேத்தல் என்ற ஊர்களுக்கு நடுவில் தன் பெயரையுடைய பனைமரத்தரடியில் அவள் அமர்ந்திருப்பாள். இஸ்ராயேல் மக்கள் தம் எல்லா வழக்குகளையும் தீர்த்துக்கொள்ள அவளிடம் செல்வர்.
6. அவள் அங்கிருந்துகொண்டு நெப்தலியைச் சேர்ந்த கேதஸ் ஊரானாகிய அபினோயனின் மகன் பாராக்கை வரவழைத்து, "இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுள் உனக்குக் கூறுவதாவது: 'நீ போய் உன் படையைத் தாபோர் மலைக்கு நடத்திச் செல். நெப்தலி புதல்வரும் சாபுலோன் புதல்வருமாகிய பதினாயிரம் போர் வீரரை உன்னுடன் கூட்டிப்போ.
7. நாம் ஜாபீனின் படைத்தலைவன் சிசாராவையும் அவன் தேர்களையும் படைகள் அனைத்தையும் சிசோன் ஆற்றங்கரை ஓரத்தில் கொணர்ந்து அவற்றை உன் கைவயப்படுத்துவோம்' என்கிறார்" என்று கூறினாள்.
8. அப்போது பாராக், " நீயும் என்னோடு வந்தால் போகிறேன்; இல்லையேல் நான் போகமாட்டேன்" என்றான்.
9. அவளோ அவனிடம், "நான் உன்னோடு வரத் தடையில்லை; நான் வந்தால் வெற்றியின் மேன்மை உன்னைச் சாராது. ஏனெனில், சிசாரா பெண் ஒருத்தியால் காட்டிக் கொடுக்கப்படுவான்" என்றாள். எனவே, தெபோரா எழுந்து பாராக்கோடு கேதஸ் ஊருக்குச் சென்றாள்.
10. அவனோ சாபுலோனையும் நெப்தலியையும் வரவழைத்து, தேபோராவின் துணையுடன் பதினாயிரம் வீரரோடு புறப்பட்டுச் சென்றான்.
11. சினேயனான ஆபேர், வெகு காலத்துக்கு முன்பே மோயீசனின் உறவினன் ஓபாபின் புதல்வரான மற்றச் சினேயரைப் பிரிந்து, சென்னிம் பள்ளத்தாக்கு வரை கூடாரங்களை அடித்துக் கேதஸ் ஊருக்கு அருகில் வாழ்ந்து வந்தான்.
12. அபினோயனின் மகன் பாராக் தபோர் மலையில் ஏறினான் என்று சிசாராவுக்கு அறிவிக்கப்பட்ட போது,
13. அவன் வாள் பொருத்தப்பட்ட தொள்ளாயிரம் தேர்களையும் புறவினத்தாருடைய அரோசெத் நகரின் எல்லாப் படைகளையும் திரட்டிக் கொண்டு சிசோன் ஆற்றின் அருகே வந்தான்.
14. அப்போது தெபோரா பாராக்கை நோக்கி, "எழுந்திரு, இன்றே சிசாராவை ஆண்டவர் உன் கையில் ஒப்படைத்தார். இதோ! அவரே உன் வழிகாட்டி" என்றாள். எனவே, பாராக்கும் அவனோடு இருந்த பதினாயிரம் வீரரும் தாபோர் மலையிலிருந்து இறங்கினார்.
15. ஆண்டவர் சிசாராவையும் அவனது தேர், சேனைகள் அனைத்தையும் பாராக் முன்னிலையில் வாள் முனையில் அச்சுறுத்தினார். இதைக் கண்ட சிசாரா தேரிலிருந்து குதித்து ஓட்டம் பிடித்தான்.
16. பாராக் தப்பியோடும் தேர்களையும் சேனைகளையும் அரோசெத் வரை துரத்திச் செல்ல, எதிரிகளின் சேனைகள் எல்லாம் அழிந்தன.
17. சிசாராவோ சினேயனான ஆபேரின் மனைவி சாகேலின் கூடாரத்திற்கு ஓடி வந்தான். ஏனெனில் ஆசோர் அரசன் ஜாபினும் சினேயனான ஆபேரும் அப்போது தங்களுக்குள் சமாதானமாய் இருந்தனர்.
18. எனவே, சாகேல் வெளியே வந்து சிசாராவை நோக்கி, "என் மன்னரே வாரும், என் கூடாரத்தினுள் வாரும், அஞ்சாதீர்" என்றாள். அவன் கூடாரத்திற்குள் நுழைந்தான்; அவளும் போர்வையால் அவனை மூடினாள்.
19. அவன் அவளை நோக்கி, "எனக்கு மிகவும் தாகமாயுள்ளது; தயவு செய்து கொஞ்சம் தண்ணீர் கொடு" என்றான். அவள் பால் அடங்கிய தோல் பையைத் திறந்து அவனுக்குக் குடிக்கக் கொடுத்து மீண்டும் அவனை மூடினாள்.
20. சிசாரா அவளை நோக்கி, "நீ கூடாரவாயிலில் நின்று கொண்டு, இங்கு எவனாவது இருக்கிறானா என்று யாராவது கேட்டால், எவனும் இல்லை என்று பதிலுரை" என்றான்.
21. ஆபேரின் மனைவி சாகேல் கூடாரத்தின் ஆணி ஒன்றையும் சுத்தியலையும் எடுத்துக்கொண்டு ஓசை படாது நுழைந்து சிசாராவின் கன்னப் பொட்டில் ஆணியை வைத்துச் சுத்தியால் அடித்தாள். அது அவன் மூளையைத் துளைத்துக்கொண்டு தரை வரை சென்றது. அவனது தூக்கம் சாவுத் தூக்கமாக முடிந்தது.
22. சிசாராவைத் துரத்தின பாராக் அப்போது அங்கு வர, சாகேல் அவனை எதிர்கொண்டழைத்து, "வாரும், நீர் தேடும் ஆளை உமக்குக் காண்பிக்கிறேன்" என்றாள். அவன் நுழைந்து இறந்துபட்ட சிசாராவையும், கன்னப் பொட்டில் அறையப்பட்டிருந்த ஆணியையும் கண்டான்.
23. இவ்வாறு கடவுள் அந்நாளில் இஸ்ராயேல் மக்கள் முன்பாகக் கானான் அரசன் ஜாபினைத் தாழ்த்தினார்.
24. அவர்கள் நாளுக்கு நாள் வலிமையுற்று கானான் அரசன் ஜாபினை அழித்துத் தீரும் வரை அவனை அடக்கி ஆண்டனர்.
மொத்தம் 21 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 4 / 21
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
1 ஆவோத் இறந்தபின் இஸ்ராயேல் மக்கள் ஆண்டவர் திருமுன் மீண்டும் பாவங்களைச் செய்தனர். 2 எனவே, ஆசோர் நகரை ஆண்டு கொண்டிருந்த கானான் நாட்டு அரசன் ஜாபீனுக்குக் கடவுள் அவர்களைக் கையளித்தார். அவன் படைத்தலைவன் சிசாரா புறவினத்தாரின் நகரான அரோசெத்தில் வாழ்ந்து வந்தான். 3 இஸ்ராயேல் மக்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரல் எழுப்பினர்; ஏனெனில் அவனிடம் வாள் பொருத்தப்பட்ட தொள்ளாயிரம் தேர்கள் இருந்தன, மேலும் இருபது ஆண்டுகளாய் அவன் அவர்களை மிகவும் வதைத்து வந்தான். 4 இலாப்பிதோத்தின் மனைவி தெபோரா என்ற இறைவாக்கினள் ஒருத்தி இருந்தாள். அவளே அக்காலத்தில் மக்களுக்கு நீதி வழங்கி வந்தாள். 5 எபிராயீம் மலையில் ராமா, பேத்தல் என்ற ஊர்களுக்கு நடுவில் தன் பெயரையுடைய பனைமரத்தரடியில் அவள் அமர்ந்திருப்பாள். இஸ்ராயேல் மக்கள் தம் எல்லா வழக்குகளையும் தீர்த்துக்கொள்ள அவளிடம் செல்வர். 6 அவள் அங்கிருந்துகொண்டு நெப்தலியைச் சேர்ந்த கேதஸ் ஊரானாகிய அபினோயனின் மகன் பாராக்கை வரவழைத்து, "இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுள் உனக்குக் கூறுவதாவது: 'நீ போய் உன் படையைத் தாபோர் மலைக்கு நடத்திச் செல். நெப்தலி புதல்வரும் சாபுலோன் புதல்வருமாகிய பதினாயிரம் போர் வீரரை உன்னுடன் கூட்டிப்போ. 7 நாம் ஜாபீனின் படைத்தலைவன் சிசாராவையும் அவன் தேர்களையும் படைகள் அனைத்தையும் சிசோன் ஆற்றங்கரை ஓரத்தில் கொணர்ந்து அவற்றை உன் கைவயப்படுத்துவோம்' என்கிறார்" என்று கூறினாள். 8 அப்போது பாராக், " நீயும் என்னோடு வந்தால் போகிறேன்; இல்லையேல் நான் போகமாட்டேன்" என்றான். 9 அவளோ அவனிடம், "நான் உன்னோடு வரத் தடையில்லை; நான் வந்தால் வெற்றியின் மேன்மை உன்னைச் சாராது. ஏனெனில், சிசாரா பெண் ஒருத்தியால் காட்டிக் கொடுக்கப்படுவான்" என்றாள். எனவே, தெபோரா எழுந்து பாராக்கோடு கேதஸ் ஊருக்குச் சென்றாள். 10 அவனோ சாபுலோனையும் நெப்தலியையும் வரவழைத்து, தேபோராவின் துணையுடன் பதினாயிரம் வீரரோடு புறப்பட்டுச் சென்றான். 11 சினேயனான ஆபேர், வெகு காலத்துக்கு முன்பே மோயீசனின் உறவினன் ஓபாபின் புதல்வரான மற்றச் சினேயரைப் பிரிந்து, சென்னிம் பள்ளத்தாக்கு வரை கூடாரங்களை அடித்துக் கேதஸ் ஊருக்கு அருகில் வாழ்ந்து வந்தான். 12 அபினோயனின் மகன் பாராக் தபோர் மலையில் ஏறினான் என்று சிசாராவுக்கு அறிவிக்கப்பட்ட போது, 13 அவன் வாள் பொருத்தப்பட்ட தொள்ளாயிரம் தேர்களையும் புறவினத்தாருடைய அரோசெத் நகரின் எல்லாப் படைகளையும் திரட்டிக் கொண்டு சிசோன் ஆற்றின் அருகே வந்தான். 14 அப்போது தெபோரா பாராக்கை நோக்கி, "எழுந்திரு, இன்றே சிசாராவை ஆண்டவர் உன் கையில் ஒப்படைத்தார். இதோ! அவரே உன் வழிகாட்டி" என்றாள். எனவே, பாராக்கும் அவனோடு இருந்த பதினாயிரம் வீரரும் தாபோர் மலையிலிருந்து இறங்கினார். 15 ஆண்டவர் சிசாராவையும் அவனது தேர், சேனைகள் அனைத்தையும் பாராக் முன்னிலையில் வாள் முனையில் அச்சுறுத்தினார். இதைக் கண்ட சிசாரா தேரிலிருந்து குதித்து ஓட்டம் பிடித்தான். 16 பாராக் தப்பியோடும் தேர்களையும் சேனைகளையும் அரோசெத் வரை துரத்திச் செல்ல, எதிரிகளின் சேனைகள் எல்லாம் அழிந்தன. 17 சிசாராவோ சினேயனான ஆபேரின் மனைவி சாகேலின் கூடாரத்திற்கு ஓடி வந்தான். ஏனெனில் ஆசோர் அரசன் ஜாபினும் சினேயனான ஆபேரும் அப்போது தங்களுக்குள் சமாதானமாய் இருந்தனர். 18 எனவே, சாகேல் வெளியே வந்து சிசாராவை நோக்கி, "என் மன்னரே வாரும், என் கூடாரத்தினுள் வாரும், அஞ்சாதீர்" என்றாள். அவன் கூடாரத்திற்குள் நுழைந்தான்; அவளும் போர்வையால் அவனை மூடினாள். 19 அவன் அவளை நோக்கி, "எனக்கு மிகவும் தாகமாயுள்ளது; தயவு செய்து கொஞ்சம் தண்ணீர் கொடு" என்றான். அவள் பால் அடங்கிய தோல் பையைத் திறந்து அவனுக்குக் குடிக்கக் கொடுத்து மீண்டும் அவனை மூடினாள். 20 சிசாரா அவளை நோக்கி, "நீ கூடாரவாயிலில் நின்று கொண்டு, இங்கு எவனாவது இருக்கிறானா என்று யாராவது கேட்டால், எவனும் இல்லை என்று பதிலுரை" என்றான். 21 ஆபேரின் மனைவி சாகேல் கூடாரத்தின் ஆணி ஒன்றையும் சுத்தியலையும் எடுத்துக்கொண்டு ஓசை படாது நுழைந்து சிசாராவின் கன்னப் பொட்டில் ஆணியை வைத்துச் சுத்தியால் அடித்தாள். அது அவன் மூளையைத் துளைத்துக்கொண்டு தரை வரை சென்றது. அவனது தூக்கம் சாவுத் தூக்கமாக முடிந்தது. 22 சிசாராவைத் துரத்தின பாராக் அப்போது அங்கு வர, சாகேல் அவனை எதிர்கொண்டழைத்து, "வாரும், நீர் தேடும் ஆளை உமக்குக் காண்பிக்கிறேன்" என்றாள். அவன் நுழைந்து இறந்துபட்ட சிசாராவையும், கன்னப் பொட்டில் அறையப்பட்டிருந்த ஆணியையும் கண்டான். 23 இவ்வாறு கடவுள் அந்நாளில் இஸ்ராயேல் மக்கள் முன்பாகக் கானான் அரசன் ஜாபினைத் தாழ்த்தினார். 24 அவர்கள் நாளுக்கு நாள் வலிமையுற்று கானான் அரசன் ஜாபினை அழித்துத் தீரும் வரை அவனை அடக்கி ஆண்டனர்.
மொத்தம் 21 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 4 / 21
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
×

Alert

×

Tamil Letters Keypad References