தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
நியாயாதிபதிகள்
1. லேவியன் ஒருவன் எபிராயிம் மலை ஓரத்தில் குடியிருந்தான். அவன் யூதா நாட்டுப் பெத்லேகம் ஊரினளான ஒருத்தியை மணந்திருந்தான்.
2. அவளோ அவனை விட்டுப் பெத்லகேமில் இருந்த தன் தந்தை வீட்டுக்குத் திரும்பி வந்து அவனுடன், நான்கு மாதம் தங்கியிருந்தாள்.
3. அவளைச் சமாதானப்படுத்தி அன்பு காட்டித் தன்னோடு அழைத்து வரும்படி கணவன் ஓர் ஊழியனோடும் இரு கழுதைகளோடும் அவளிடம் போனான். அவள் அவனை வரவேற்றுத் தன் தந்தை வீட்டுக்கு அழைத்துப் போனாள். அதைக் கேள்வியுற்ற அவன் மாமனார் மகிழ்ச்சியுற்று, அவனைக் கண்டு சந்தித்து, அவனைக் கட்டி அணைத்தார்.
4. மருமகன் மாமனார் வீட்டில் மூன்று நாள் தங்கி அவனோடு உண்டு குடித்து மகிழ்வாய் இருந்தான்.
5. நான்காம் நாள் அதிகாலையில் எழுந்து புறப்படவிருக்கையில் மாமனார் அவனை நிறுத்தி, "முதலில் நீ கொஞ்சம் ரொட்டி உண்டு பசியாறு; பின் புறப்படலாம்" என்றான்.
6. இருவரும் அமர்ந்து உண்டு குடித்தனர். அப்போது பெண்ணின் தந்தை மருமகனை நோக்கி, "நீ தயவு செய்து இன்னும் சில காலம் இங்கே தங்கியிரு; நாம் இருவரும் மகிழ்வாய் இருப்போம்" என்றார்.
7. அவனோ எழுந்து புறப்பட விருக்கையில் மாமனார் அவனை வலுக்கட்டாயமாய்த் தம்மோடு தங்கச் செய்தார்.
8. பொழுது விடிந்த பின் லேவியன் புறப்படவிருந்தான். திரும்பவும் மாமனார், "கொஞ்சம் சாப்பிட்டுத் திடம் கொள்; சற்றுப் பொழுது சென்ற பின் நீ புறப்படலாம்" என்று வேண்டினான்.
9. அதன்படி இருவரும் உண்டனர். இளைஞன் தன் மனைவியோடும் ஊழியனோடும் புறப்பட எழுந்தான். அப்போது மாமனார், "பார், பொழுது சாய்ந்து விட்டது; மாலையும் வந்து விட்டது. இன்றும் என்னுடன் இருந்து மகிழ்வாய் நாளைக் கழி. நாளை உன் வீட்டுக்குப் புறப்படலாம்" என்றான்.
10. மருமகன் அதற்கு இணங்காது, உடனே இரு கழுதைகளின் மேல் சுமையை வைத்துத் தானும் தன் மனைவியுடன் புறப்பட்டு யெருசலேம் எனும் மறு பெயர் கொண்டிருந்த எபுசை நோக்கிப் பயணமானான்.
11. அவர்கள் எபுசுக்கு அருகில் வரும் போது இரவானது. எனவே, ஊழியன் தன் தலைவனை நோக்கி, "எபுசேயர் நகருக்குப் போய் அங்கு இரவைக் கழிக்கலாம்; தயவு செய்து வாரும்" என்றான்.
12. அதற்குத் தலைவன், "இஸ்ராயேல் மக்கள் அல்லாத புறவினத்தார் நகரில் நுழைய மாட்டேன்; ஆனால் காபாவுக்குப் போவேன்.
13. அதை அடைந்தபின், அங்காவது ராமா நகரிலாவது தங்கலாம்" என்றான்.
14. அவ்வாறே எபுசைக் கடந்து வழி நடந்து பெஞ்சமின் கோத்திரத்தைச் சார்ந்த காபா அருகே வருகையில் சூரியன் மறைந்தது.
15. எனவே, இரவைக் கழிக்க அங்குப் போய்ச் சேர்ந்தனர். நகருக்குள் நுழைந்த போது அவர்களைத் தங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ள ஒருவனும் விரும்பாததால் அவர்கள் நகர் வீதியிலே உட்கார்ந்தனர்.
16. இதோ! வயலில் வேலை செய்துவிட்டு மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் அங்கு வந்தார். அவரும் எபிராயிம் மலை நாட்டார் தான். காபாவில் அன்னியனாக வாழ்ந்து வந்தவர். அந்நாட்டவரே ஜெமினியின் புதல்வர்கள்.
17. அந்த முதியவர் தம் கண்களை உயர்த்தி நகர் வீதியில் உட்கார்ந்திருந்த லேவியைக் கண்டு, "எங்கிருந்து வருகிறாய்? எங்குப் போகிறாய்?" என்று கேட்டார்.
18. அதற்கு அவன், "நாங்கள் யூதா நாட்டுப் பெத்லகேமிலிருந்து வருகிறோம், எபிராயிம் மலை ஓரமாயிருக்கும் எங்கள் ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறோம். அங்கிருந்து தான் பெத்லகேமுக்குப் போயிருந்தோம். இப்போது கடவுளின் ஆலயம் இருக்குமிடம் போகிறோம். இவ்வூரில் எம்மைத் தம் வீட்டில் ஏற்றுக்கொள்பவர் ஒருவரும் இல்லை.
19. கழுதைகளுக்கு வைக்கோலும் புல்லும் உண்டு; எனக்கும் உம் அடியாளுக்கும் என்னுடன் இருக்கும் என் ஊழியனுக்கும் ரொட்டியும் திராட்சை இரசமும் உண்டு; தங்கமட்டும் இடம் வேண்டும்" என்றான்.
20. அதற்கு அந்த முதியவர், "உனக்குச் சமாதானம் உண்டாவதாக. வேண்டியவற்றை எல்லாம் நானே கொடுக்கிறேன்; வெளியில் மட்டும் இரவைக் கழிக்க வேண்டாம்" என்று வேண்டினார்.
21. பின் அவனைத் தன் வீட்டுக்கு அழைத்துப் போய்க் கழுதைகளுக்கு இரை போட்டார். அவர்கள் தம் கால்களைக் கழுவிய பின் அவர் அவர்களுக்கு விருந்து அளித்தார்.
22. உணவாலும் குடியாலும் அவர்கள் பயணக்களைப்பைத் தீர்த்துக் கொண்டிருந்த போது, எவ்விதக் கட்டுப்பாட்டுக்கும் அடங்காத பெலியாலின் மக்களாகிய அவ்வூரார் வந்து, முதியவரின் வீட்டைச் சூழ்ந்து கொண்டு, கதவைப் பலமாய்த் தட்டிச் சத்தம் போட்டு வீட்டுத் தலைவனைக் கூப்பிட்டு, "உன் வீட்டில் நுழைந்த மனிதனை நாங்கள் பங்கப்படுத்தும் படி வெளியே கொண்டுவா" என்றனர்.
23. முதியவர் வெளியே வந்து அவர்களிடம், "சகோதரரே, வேண்டாம்; இப்படிப்பட்ட பழியைச் செய்யாதீர்; என் வீட்டிற்கு விருத்தினனாக வந்திருக்கும் அம்மனிதனுக்கு இம்மதிகேட்டைச் செய்யலாமா?
24. எனக்குக் கன்னிப் பெண்ணான மகள் ஒருத்தி உண்டு. அம்மனிதனுக்கு ஒரு வைப்பாட்டி இருக்கிறாள். அவர்களை வெளியே கொணர்ந்து உங்களிடம் விடுகிறேன். அவர்களைப் பங்கப்படுத்தி உங்கள் காம வெறியைத் திர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் இம்மனிதனுடன் மனிதத் தன்மைக்கு மாறான பழியைச் செய்யாதபடி உங்களை வேண்டுகிறேன்." என்றார்.
25. அவரது பேச்சுக்கு அவர்கள் இணங்காததைக் கண்ட லேவியன் தன் வைப்பாட்டியை வெளியே கொண்டு போய் அவளை அவர்கள் பங்கப்படுத்தும்படி விட்டு விட்டான். இரவு முழுவதும் அவளை அவர்கள் பங்கப்படுத்தினபின், அதி காலையில் அவளை அனுப்பி விட்டனர்.
26. அப்பெண் பொழுது புலர்ந்ததும் தன் கணவன் இருந்த வீட்டின் கதவு அண்டையில் வந்து தரையில் விழுந்தாள்.
27. கீழ்த்திசை வெளுக்கக் கண்ட லேவியன் எழுந்து தன் வழியே போகக் கதவைத் திறந்தான். அப்பொழுது தன் வைப்பாட்டி வீட்டு வாயிலில் தன் இரு கைகளையும் நிலைப்படியில் வைத்த படி விழுந்து கிடக்கக் கண்டான்.
28. அவள் தூங்குகிறாள் என்று கருதி, அவன் அவளைத் தட்டி எழுப்பி, "எழுந்திரு, போவோம்" என்றான். அவள் மறுமொழி கூறாதிருக்கவே, உயிர் போய்விட்டது என அறிந்து, அவளது சவத்தை எடுத்துக் கழுதையின் மேல் வைத்துக் கொண்டு தன் வீடு சென்றான்.
29. வீட்டை அடைந்தபின் அவன் ஒரு கத்தியை எடுத்துத் தன் மனைவியின் சவத்தை எலும்புகளுடன் வெட்டிப் பன்னிரு கூறுகளாக்கி, இஸ்ராயேலின் கோத்திரத்திற்கெல்லாம் ஒவ்வொரு கூறு அனுப்பினான்.
30. (29b) அதைக் கண்ட யாவரும், "நம் முன்னோர் எகிப்தினின்று புறப்பட்ட நாள் முதல் இதுவரை இப்படிப்பட்டது எதுவும் நடக்கவேயில்லை. எனவே கலந்து பேசி, செய்ய வேண்டியது என்ன என்று தெரிவி" என்றனர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 21 Chapters, Current Chapter 19 of Total Chapters 21
1 2 3 4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17 18 19 20 21
நியாயாதிபதிகள் 19:9

×

Alert

×

tamil Letters Keypad References