தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
நியாயாதிபதிகள்
1. அந்நாட்களில் இஸ்ராயேலில் அரசன் இல்லை. தான் கோத்திரத்தார் தாம் வாழ ஓர் இடம் தேடிக் கொண்டிருந்தார். ஏனெனில் மற்ற கோத்திரங்களைப்போல் அவர்களுக்குச் சொந்த நிலம் கிடைக்கவில்லை.
2. எனவே, நாட்டை உளவு பார்த்து வரும்படி தான் புதல்வர் தம் கோத்திரத்திலும் சொந்த வம்சத்திலும் வலிமையுள்ள ஐவரைச் சாராவிலும் எஸ்தாவோலிலும் இருந்து அனுப்பி, "நீங்கள் போய் நாட்டை உளவு பார்த்து வாருங்கள்" என்றனர். அவர்கள் புறப்பட்டுப்போய் எபிராயிம் மலையை அடைந்து, மிக்காசு வீட்டில் நுழைந்து அங்கு இரவைக் கழித்தனர்.
3. அவர்கள் அவ்வீட்டில் இருக்கையில், லேவியனான இளைஞனை அவனது குரலால் அறிந்து கொண்டனர்,. அவனை நோக்கி, "உன்னை இங்குக் கொணர்ந்தவர் யார்? நீ இங்கு என்ன செய்கிறாய்? நீ இங்கு வரக் காரணம் என்ன?" என்று கேட்டனர்.
4. அதற்கு அவன், "மிக்காசு எனக்கு இவற்றையெல்லாம் செய்துள்ளான்; நான் அவனுக்குக் குருவாயிருக்கும் படி அவன் எனக்கு ஊதியமும் கொடுக்கிறான்" என்றான்.
5. அப்போது அவர்கள் அவனை நோக்கி, "எங்கள் பயணம் வெற்றியாய் முடியுமா? நாங்கள் நினைத்தது கைகூடுமா என்று அறிய விரும்புகிறோம். நீ ஆண்டவரிடம் கேள்" என்றனர்.
6. அதற்கு அவன், "நீங்கள் அமைதியோடு போங்கள்; ஆண்டவர் உங்கள் வழியையும் பயணத்தையும் கருணைக் கண்கொண்டு நோக்குகிறார்" என்றான்.
7. எனவே, அவர்கள் ஐவரும் புறப்பட்டு லாயீசுக்குப் போய் அவ்விடத்து மக்கள் சீதோனியரின் வழக்கப்படி, யாதொரு அச்சமுமின்றிப் பாதுகாப்புடனும் அமைதியாயும் இருப்பதையும், தங்களை எதிர்ப்பவன் எவனுமின்றி நிறைந்த செல்வத்துடன் வாழ்ந்து வருவதையும், அவர்கள் சீதோனினின்றும் பிற மனிதரிடத்தினின்றும் பிரிந்திருப்பதையும் கண்டனர்.
8. சாராவிலும், எஸ்தாவோலிலும் இருந்த தம் சகோதரரிடம் அவர்கள் திரும்பி வந்த போது, "நீங்கள் என்ன செய்தீர்கள்?" என்று கேட்டவர்களுக்கு, "எழுந்திருங்கள், அவர்களிடம் போவோம்.
9. செல்வம் கொழிக்கும் நாட்டைக் கண்டோம்; கை நெகிழவிடாதீர்; போய் அதைக் கைப்பற்றுவோம்; ஒரு சிரமமும் வேண்டாம்.
10. பாதுகாப்புடன் இருக்கும் மக்களிடம் போவோம்; பரந்த நாட்டில் நுழைவோம். பூமியில் விளையும் அனைத்திலும் அது வளமான நாடு. ஆண்டவர் அந்நாட்டை நம்கையில் ஒப்படைத்தார்" என்றனர்.
11. அப்போது சாராவிலும் எஸ்தாவோலிலுமிருந்த தான் வம்சத்தாரில் அறுநூறு பேர் ஆயுதம் தாங்கி அங்கிருந்து புறப்பட்டு,
12. யூதாவிலுள்ள காரியாத்யாரிமில் தங்கினர். அன்று முதல் அவ்விடம் தானின் பாசறை என்று அழைக்கப் பட்டு வருகிறது. அது காரியாத்யாரிமுக்குப் பின்புறத்தில் இருக்கிறது.
13. அவர்கள் அங்கிருந்து எபிராயீம் மலைக்குச் சென்றனர். மிக்காசின் வீட்டுக்கு வந்தபோது,
14. லாயீசு நாட்டை உளவு பார்க்க முன்பே அனுப்பப்பட்டிருந்த ஐவர் தம் மற்ற சகோதரரை நோக்கி, "அவ்வீட்டிலே எப்போதும் தெரபீம்களும் செதுக்கப்பட்ட சிலையும் வார்க்கப்பட்ட சிலையும் இருப்பது உங்களுக்குத் தெரியுமே; உங்களுக்கு விருப்பமானதைச் செய்யுங்கள்" என்றனர்.
15. பிறகு அவர்கள் வழியை விட்டுச் சிறிது விலகி மிக்காசின் வீட்டிலிருந்த லேவிய இளைஞனின் அறைக்குள் சென்றனர். நல்லாசி கூறி அவனை வாழ்த்தினர்.
16. ஆயுதம் தாங்கிய அறுநூறு பேரும் வாயில் முன் நின்று கெண்டிருந்தனர்.
17. இனைஞனின் அறைக்குள் நுழைந்தவரோ செதுக்கப்பட்ட சிலையையும் எப்போதையும், தெரபீம்களையும் வார்க்கப்பட்ட சிலையையும் எடுக்க முயன்றனர். குரு வாயில்முன் நின்று கொண்டிருந்தான். ஆற்றல் படைத்த அறுநூறு பேரும் சற்று தூரத்தில் காத்து நின்றார்கள்.
18. உள் நுழைந்தவர்கள் செதுக்கப்பட்ட சிலையையும் எபோதையும் தெரபீம்களையும் வார்க்கப்பட்ட சிலையையும் எடுத்தனர். குரு அவர்களை நோக்கி, "என்ன செய்கிறீர்கள்?" என்றான்.
19. அதற்கு அவர்கள், "பேசாது வாயைமூடு; நீ எமக்குத் தந்தையும் குருவுமாய் இருக்க நீ எம்மோடு வா; ஒருவன் வீட்டில் குருவாய் இருப்பதை விட, இஸ்ராயேலின் ஒரு கோத்திரத்திற்கும் வம்சத்திற்கும் குருவாய் இருப்பது மேலானதன்றோ?" என்றனர்.
20. அவர்கள் கூறினதைக் கேட்டு, அவன் அதற்கு இணங்கி, எபோதையும் சிலைகளையும் செதுக்கப்பட்ட சிலையையும் எடுத்துக்கொண்டு அவர்களோடு புறப்பட்டான்.
21. அவர்கள் சிறுவர்களையும் ஆடு மாடுகளையும் விலையுயர்ந்த பொருட்களையும் முன்னால் எடுத்துப் போகும்படி செய்து, தாங்களும் புறப்பட்டனர்.
22. மிக்காசின் வீட்டிலிருந்து வெகுதூரம் சென்ற போது, மிக்காசோடு வாழ்ந்த மனிதர் கூக்குரலிட்டுக் கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்தனர்.
23. அவர்களுக்குப் பின் புறமாகச் சென்று கத்த ஆரம்பித்தனர். அவர்களோ திரும்பிப் பார்த்து மிக்காசை நோக்கி, "உனக்கு என்ன வேண்டும்? ஏன் கதறுகிறாய்?" என்றனர்.
24. அதற்கு அவன், "எனக்கென்று நான் செய்து வைத்திருந்த என் தேவர்களையும் என் குருவையும் எனக்குள்ள அனைத்தையும் நீங்கள் வாரிக்கொண்டதோடு, எனக்கு என்ன நேர்ந்தது? என்று நீங்கள் கேட்கின்றீர்களே!" என்றான்.
25. தான் புதல்வர் அவனை நோக்கி, "எம்மிடம் அதிகம் பேசாதே, எச்சரிக்கை! சினமுள்ள மனிதர் உன்மேல் விழுந்தால், நீயும் உன் குடும்பமும் அழிந்து போவீர்கள்" என்றனர்.
26. இப்படிக் கூறிவிட்டு அவர்கள் தம் வழியே சென்றனர். மிக்காசோ, அவர்கள் தன்னிலும் வலியவர் என்று கண்டு வீடு திரும்பினான்.
27. அந்த அறுநூறு பேரும், குருவோடும் மேற்கூறின பொருட்களோடும் லாயீசு ஊரை அடைந்து அச்சமின்றி அமைதியில் வாழ்ந்த மக்களை வாளுக்கு இரையாக்கித் தீயால் நகரைச் சுட்டெரித்தனர்.
28. அது சீதோனுக்கு வெகு தூரமாய் இருந்ததாலும், ஊராருக்கு வேறு மனிதரோடு தொடர்பும் வியாபாரமும் இல்லாததாலும் இவர்களைக் காப்பாற்றுவார் எவரும் இல்லை. லாயீசு நகர் ரொகோப் பள்ளத்தாக்கில் இருந்தது, அவர்கள் அதைப் புதிதாய்க் கட்டி அதில் குடியேறியிருந்தனர்.
29. முதலில் லாயீசு என்று அழைக்கப்பட்ட இந்நகருக்கு இஸ்ராயேலின் மகனான தானின் புதல்வர் தம் கோத்திரத்தின் தந்தை பெயரால், 'தான் நகர்' என்று புதிதாகப் பெயர் இட்டனர்.
30. அப்போது அவர்கள் செதுக்கப்பட்ட சிலையைத் தமக்குத் (தெய்வமாக) வைத்துக்கொண்டு, மோயீசனுக்குப் பிறந்த கேர்சாமின் மகன் யோனாத்தானையும் அவன் புதல்வர்களையும் தான் கோத்திரத்தாருக்குக் குருக்களாக்கினர். தான் புதல்வர் சிறைப்பட்ட நாள் வரை அவ்வாறே நடந்தது.
31. கடவுளின் ஆலயம் சீலோவிலிருந்த காலம் முழுவதும் அவர்கள் மிக்சாசின் சிலையை வைத்திருந்தனர். அந்நாட்களில் இஸ்ராயேலை ஆள ஓர் அரசன் இல்லை.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 21 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 18 / 21
1 2 3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16 17 18 19 20 21
நியாயாதிபதிகள் 18:23
1 அந்நாட்களில் இஸ்ராயேலில் அரசன் இல்லை. தான் கோத்திரத்தார் தாம் வாழ ஓர் இடம் தேடிக் கொண்டிருந்தார். ஏனெனில் மற்ற கோத்திரங்களைப்போல் அவர்களுக்குச் சொந்த நிலம் கிடைக்கவில்லை. 2 எனவே, நாட்டை உளவு பார்த்து வரும்படி தான் புதல்வர் தம் கோத்திரத்திலும் சொந்த வம்சத்திலும் வலிமையுள்ள ஐவரைச் சாராவிலும் எஸ்தாவோலிலும் இருந்து அனுப்பி, "நீங்கள் போய் நாட்டை உளவு பார்த்து வாருங்கள்" என்றனர். அவர்கள் புறப்பட்டுப்போய் எபிராயிம் மலையை அடைந்து, மிக்காசு வீட்டில் நுழைந்து அங்கு இரவைக் கழித்தனர். 3 அவர்கள் அவ்வீட்டில் இருக்கையில், லேவியனான இளைஞனை அவனது குரலால் அறிந்து கொண்டனர்,. அவனை நோக்கி, "உன்னை இங்குக் கொணர்ந்தவர் யார்? நீ இங்கு என்ன செய்கிறாய்? நீ இங்கு வரக் காரணம் என்ன?" என்று கேட்டனர். 4 அதற்கு அவன், "மிக்காசு எனக்கு இவற்றையெல்லாம் செய்துள்ளான்; நான் அவனுக்குக் குருவாயிருக்கும் படி அவன் எனக்கு ஊதியமும் கொடுக்கிறான்" என்றான். 5 அப்போது அவர்கள் அவனை நோக்கி, "எங்கள் பயணம் வெற்றியாய் முடியுமா? நாங்கள் நினைத்தது கைகூடுமா என்று அறிய விரும்புகிறோம். நீ ஆண்டவரிடம் கேள்" என்றனர். 6 அதற்கு அவன், "நீங்கள் அமைதியோடு போங்கள்; ஆண்டவர் உங்கள் வழியையும் பயணத்தையும் கருணைக் கண்கொண்டு நோக்குகிறார்" என்றான். 7 எனவே, அவர்கள் ஐவரும் புறப்பட்டு லாயீசுக்குப் போய் அவ்விடத்து மக்கள் சீதோனியரின் வழக்கப்படி, யாதொரு அச்சமுமின்றிப் பாதுகாப்புடனும் அமைதியாயும் இருப்பதையும், தங்களை எதிர்ப்பவன் எவனுமின்றி நிறைந்த செல்வத்துடன் வாழ்ந்து வருவதையும், அவர்கள் சீதோனினின்றும் பிற மனிதரிடத்தினின்றும் பிரிந்திருப்பதையும் கண்டனர். 8 சாராவிலும், எஸ்தாவோலிலும் இருந்த தம் சகோதரரிடம் அவர்கள் திரும்பி வந்த போது, "நீங்கள் என்ன செய்தீர்கள்?" என்று கேட்டவர்களுக்கு, "எழுந்திருங்கள், அவர்களிடம் போவோம். 9 செல்வம் கொழிக்கும் நாட்டைக் கண்டோம்; கை நெகிழவிடாதீர்; போய் அதைக் கைப்பற்றுவோம்; ஒரு சிரமமும் வேண்டாம். 10 பாதுகாப்புடன் இருக்கும் மக்களிடம் போவோம்; பரந்த நாட்டில் நுழைவோம். பூமியில் விளையும் அனைத்திலும் அது வளமான நாடு. ஆண்டவர் அந்நாட்டை நம்கையில் ஒப்படைத்தார்" என்றனர். 11 அப்போது சாராவிலும் எஸ்தாவோலிலுமிருந்த தான் வம்சத்தாரில் அறுநூறு பேர் ஆயுதம் தாங்கி அங்கிருந்து புறப்பட்டு, 12 யூதாவிலுள்ள காரியாத்யாரிமில் தங்கினர். அன்று முதல் அவ்விடம் தானின் பாசறை என்று அழைக்கப் பட்டு வருகிறது. அது காரியாத்யாரிமுக்குப் பின்புறத்தில் இருக்கிறது. 13 அவர்கள் அங்கிருந்து எபிராயீம் மலைக்குச் சென்றனர். மிக்காசின் வீட்டுக்கு வந்தபோது, 14 லாயீசு நாட்டை உளவு பார்க்க முன்பே அனுப்பப்பட்டிருந்த ஐவர் தம் மற்ற சகோதரரை நோக்கி, "அவ்வீட்டிலே எப்போதும் தெரபீம்களும் செதுக்கப்பட்ட சிலையும் வார்க்கப்பட்ட சிலையும் இருப்பது உங்களுக்குத் தெரியுமே; உங்களுக்கு விருப்பமானதைச் செய்யுங்கள்" என்றனர். 15 பிறகு அவர்கள் வழியை விட்டுச் சிறிது விலகி மிக்காசின் வீட்டிலிருந்த லேவிய இளைஞனின் அறைக்குள் சென்றனர். நல்லாசி கூறி அவனை வாழ்த்தினர். 16 ஆயுதம் தாங்கிய அறுநூறு பேரும் வாயில் முன் நின்று கெண்டிருந்தனர். 17 இனைஞனின் அறைக்குள் நுழைந்தவரோ செதுக்கப்பட்ட சிலையையும் எப்போதையும், தெரபீம்களையும் வார்க்கப்பட்ட சிலையையும் எடுக்க முயன்றனர். குரு வாயில்முன் நின்று கொண்டிருந்தான். ஆற்றல் படைத்த அறுநூறு பேரும் சற்று தூரத்தில் காத்து நின்றார்கள். 18 உள் நுழைந்தவர்கள் செதுக்கப்பட்ட சிலையையும் எபோதையும் தெரபீம்களையும் வார்க்கப்பட்ட சிலையையும் எடுத்தனர். குரு அவர்களை நோக்கி, "என்ன செய்கிறீர்கள்?" என்றான். 19 அதற்கு அவர்கள், "பேசாது வாயைமூடு; நீ எமக்குத் தந்தையும் குருவுமாய் இருக்க நீ எம்மோடு வா; ஒருவன் வீட்டில் குருவாய் இருப்பதை விட, இஸ்ராயேலின் ஒரு கோத்திரத்திற்கும் வம்சத்திற்கும் குருவாய் இருப்பது மேலானதன்றோ?" என்றனர். 20 அவர்கள் கூறினதைக் கேட்டு, அவன் அதற்கு இணங்கி, எபோதையும் சிலைகளையும் செதுக்கப்பட்ட சிலையையும் எடுத்துக்கொண்டு அவர்களோடு புறப்பட்டான். 21 அவர்கள் சிறுவர்களையும் ஆடு மாடுகளையும் விலையுயர்ந்த பொருட்களையும் முன்னால் எடுத்துப் போகும்படி செய்து, தாங்களும் புறப்பட்டனர். 22 மிக்காசின் வீட்டிலிருந்து வெகுதூரம் சென்ற போது, மிக்காசோடு வாழ்ந்த மனிதர் கூக்குரலிட்டுக் கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்தனர். 23 அவர்களுக்குப் பின் புறமாகச் சென்று கத்த ஆரம்பித்தனர். அவர்களோ திரும்பிப் பார்த்து மிக்காசை நோக்கி, "உனக்கு என்ன வேண்டும்? ஏன் கதறுகிறாய்?" என்றனர். 24 அதற்கு அவன், "எனக்கென்று நான் செய்து வைத்திருந்த என் தேவர்களையும் என் குருவையும் எனக்குள்ள அனைத்தையும் நீங்கள் வாரிக்கொண்டதோடு, எனக்கு என்ன நேர்ந்தது? என்று நீங்கள் கேட்கின்றீர்களே!" என்றான். 25 தான் புதல்வர் அவனை நோக்கி, "எம்மிடம் அதிகம் பேசாதே, எச்சரிக்கை! சினமுள்ள மனிதர் உன்மேல் விழுந்தால், நீயும் உன் குடும்பமும் அழிந்து போவீர்கள்" என்றனர். 26 இப்படிக் கூறிவிட்டு அவர்கள் தம் வழியே சென்றனர். மிக்காசோ, அவர்கள் தன்னிலும் வலியவர் என்று கண்டு வீடு திரும்பினான். 27 அந்த அறுநூறு பேரும், குருவோடும் மேற்கூறின பொருட்களோடும் லாயீசு ஊரை அடைந்து அச்சமின்றி அமைதியில் வாழ்ந்த மக்களை வாளுக்கு இரையாக்கித் தீயால் நகரைச் சுட்டெரித்தனர். 28 அது சீதோனுக்கு வெகு தூரமாய் இருந்ததாலும், ஊராருக்கு வேறு மனிதரோடு தொடர்பும் வியாபாரமும் இல்லாததாலும் இவர்களைக் காப்பாற்றுவார் எவரும் இல்லை. லாயீசு நகர் ரொகோப் பள்ளத்தாக்கில் இருந்தது, அவர்கள் அதைப் புதிதாய்க் கட்டி அதில் குடியேறியிருந்தனர். 29 முதலில் லாயீசு என்று அழைக்கப்பட்ட இந்நகருக்கு இஸ்ராயேலின் மகனான தானின் புதல்வர் தம் கோத்திரத்தின் தந்தை பெயரால், 'தான் நகர்' என்று புதிதாகப் பெயர் இட்டனர். 30 அப்போது அவர்கள் செதுக்கப்பட்ட சிலையைத் தமக்குத் (தெய்வமாக) வைத்துக்கொண்டு, மோயீசனுக்குப் பிறந்த கேர்சாமின் மகன் யோனாத்தானையும் அவன் புதல்வர்களையும் தான் கோத்திரத்தாருக்குக் குருக்களாக்கினர். தான் புதல்வர் சிறைப்பட்ட நாள் வரை அவ்வாறே நடந்தது. 31 கடவுளின் ஆலயம் சீலோவிலிருந்த காலம் முழுவதும் அவர்கள் மிக்சாசின் சிலையை வைத்திருந்தனர். அந்நாட்களில் இஸ்ராயேலை ஆள ஓர் அரசன் இல்லை.
மொத்தம் 21 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 18 / 21
1 2 3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16 17 18 19 20 21
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References