தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
நியாயாதிபதிகள்
1. அக்காலத்தில் காலாத்தியனான ஜெப்தே வன்மை மிக்க போர்வீரனாய் இருந்தான். அவன் காலாத்துக்கு ஒரு விலைமாதின் வயிற்றில் பிறந்தவன்.
2. காலாத்துக்கு ஒரு மனைவி இருந்தாள். அவள் மூலம் அவனுக்குப் புதல்வர் இருந்தனர். இவர்கள் வளர்ந்த பின் ஜெப்தேயை நோக்கி, "நீ வேறொரு தாய்க்குப் பிறந்தவன்; தந்தை வீட்டில் உனக்கு உரிமை இல்லை" என்று கூறி அவனைத் துரத்தி விட்டனர்.
3. அப்போது ஜெப்தே அவர்களைப் பிரிந்து, ஓடிப்போய்த் தோப் நாட்டில் வாழ்ந்தான். திக்கற்றவரும் கொள்ளையடிப்போருமான பலர் அவனோடு சேர்ந்து அவனைத் தம் தலைவனாகக் கொண்டு பின் சென்றனர்.
4. அக்காலத்தில் அம்மோன் புதல்வர் இஸ்ராயேலரோடு போர் தொடுத்தனர்.
5. அவர்கள் இவர்களைக் கொடுமைப் படுத்தினதால் காலாத் நாட்டுப் பெரியோர் தமக்குத் துணையாக தோப் நாட்டு ஜெப்தேயை அழைக்கச் சென்றனர்.
6. அங்கே அவனை நோக்கி, "நீ எம் தலைவனாக வந்திருந்து அம்மோன் புதல்வரோடு போர்தொடு" என்றனர்.
7. அதற்கு அவன், "என்னைப் பகைத்து என் தந்தை வீட்டினின்று என்னைத் துரத்தினது நீங்கள் அல்லவா? இப்போது தேவையை முன்னிட்டுத் தானே என்னிடம் வந்துள்ளீர்கள்?" என்றான்.
8. காலாத் நாட்டுப் பெருமக்கள் ஜெப்தேயை நோக்கி, "நீ எம்மோடு புறப்பட்டு அம்மோன் புதல்வரை எதிர்த்து, காலாத்திலிருக்கும் அனைவருக்கும் தலைவனாய் இருக்கவேண்டும் என்பதற்காக உன்னைத் தேடி வந்தோம்" என்றனர்.
9. மீண்டும் ஜெப்தே, "அம்மோன் புதல்வரோடு போர் புரிய நீங்கள் என்னை நேர்மையோடு அழைப்பீர்களானால், ஆண்டவர் அவர்களை என்னிடம் கையளிப்பாரானால், நான் உங்கள் தலைவனாய் இருப்பேனா?" என்று கேட்டான்.
10. அதற்கு அவர்கள், " நாங்கள் சொன்னதை நிறைவேற்றுவோம் என்ற எமது கூற்றைக் கேட்ட ஆண்டவரே இதற்கு நடுவரும் சாட்சியுமாய் இருக்கிறார்" என்றனர்.
11. ஆகையால், ஜெப்தே காலாத்தின் பெரியோரோடு சென்றான். எல்லா மக்களும் அவனைத் தம் தலைவனாக்கினர். ஜெப்தே மாஸ்பாவில் ஆண்டவர் திருமுன் தன் நிபந்தனைகளை எல்லாம் திரும்பவும் கூறினான்.
12. அப்பொழுது அவன், "நீ எனக்கு எதிராக எழுந்து என் நாட்டைக் கொள்ளையடித்துப் பாழாக்க உனக்கும் எனக்கும் வழக்கு என்ன?" என்று நேரில் கேட்கும்படி அம்மோன் புதல்வரின் அரசனுக்குத் தூதரை அனுப்பினான்.
13. அதற்கு அவன், "இஸ்ராயேலர் எகிப்தினின்று வருகையில் ஆர்னோன் முதல் ஜாபோக், இன்னும் யோர்தான் வரையுள்ள என் நாட்டை எடுத்துக்கொண்ட அந்த வழக்குத்தான். இப்போது நீ அதைச் சமாதானமாய் எனக்குத் திரும்பக் கொடுத்து விடு" என்றான்.
14. ஜெப்தே மீண்டும் தூதரை அனுப்பி, அம்மோன் அரசனுக்கு இவ்வாறு அறிவிக்கும்படி கட்டளையிட்டான்:
15. 'ஜெப்தே சொல்லுவதாவது: இஸ்ராயேலர் மோவாப் நாட்டையும் அம்மோன் புதல்வர் நாட்டையும் பிடித்துக் கொள்ளவில்லை.
16. அவர்கள் எகிப்தினின்று வெளியேறிய போது பாலை நிலத்தின் வழியாகச் செங்கடல் வரை நடந்து காதேசுக்கு வந்தார்கள்.
17. அப்போது அவர்கள் ஏதோம் அரசனுக்குத் தூதரை அனுப்பி: 'நாங்கள் உன் நாட்டின் வழியாகப் போக அனுமதி அளி' என்றனர். அவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவில்லை. மோவாப் அரசனுக்குத் தூதரை அனுப்பிக் கேட்க, அவனும் அவர்களுக்கு வழிவிடவில்லை.
18. எனவே, அவர்கள் காதேசில் தங்கிப் பிறகு, ஏதோம் நாட்டையும் மோவாப் நாட்டையும் சுற்றி, மோவாப் நாட்டின் கிழக்குப் பக்கமாக வந்து ஆர்னோனுக்கு அப்புறத்தில் பாளையம் இறங்கினார்கள். மோவாப் நாட்டின் எல்லைக்குள் அவர்கள் நுழையவில்லை. உண்மையில் ஆர்னோன் மோவாப் நாட்டின் எல்லையாகும்.
19. மீண்டும் எசேபோனில் வாழ்ந்து வந்த அமோறையரின் அரசன் செகோனுக்கு இஸ்ராயேல் மக்கள் தூதரை அனுப்பி, 'உன் நாட்டின் வழியாக நதிவரை போக எமக்கு அனுமதி அளி' என்றனர்.
20. அவனும் இஸ்ராயேலரின் வேண்டுகோளைப் புறிக்கணித்துத் தன் எல்லைகளைக் கடக்க அனுமதியாது, பெரும் சேனைகளைத் திரட்டி ஜாசாவில் அவர்களோடு வன்மையுடன் போரிட்டான்.
21. ஆண்டவர் அவனையும் அவன் சேனைகளையும் இஸ்ராயேலருக்குக் கையளிக்கவே, இவர்கள் அவனை முறியடித்து அப்பகுதியில் வாழ்ந்து வந்த அமோறையரின் நாட்டையெல்லாம் தம் உரிமையாக்கினர்.
22. அப்படியே இஸ்ராயேலர் ஆர்னோன் முதல் ஜாபோக்வரையிலும், பாலை நிலம் முதல் யோர்தான் வரையிலுமுள்ள நாட்டையும் தம் உரிமையாக்கினர்.
23. இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுள் தம் மக்களாம் இஸ்ராயேலர் மூலம் அமோறையரை முறியடித்திருக்க, நீ அந்நாட்டை உரிமையாக்கிக் கொள்வது முறையா?
24. உன் தேவன் காமோசுக்குச் சொந்தமான எதுவும் உனக்கும் சொந்தம்தானே? எம் ஆண்டவராகிய கடவுள் வெற்றியின் மூலம் சொந்தமாக்கின நாடு எமக்கும் சொந்தம் அன்றோ?
25. மோவாப் அரசன் சேபோர் மகன் பாலாக்கைவிட நீ வலிமை மிக்கவனோ? அவன் உன்னைப் போல் இஸ்ராயேலின் மேல் முறையிட்டான் என்றும், இதற்காகப் போரிட்டான் என்றும் உன்னால் எண்பிக்க முடியுமா?
26. இஸ்ராயேலரோ எசேபோனிலும் அதன் ஊர்களிலும், அரோயேரிலும் அதன் சிற்றூர்களிலும், யோர்தானை அடுத்த எல்லா நகர்களிலும் முந்நூறு ஆண்டுகளாய் வாழ்கின்றனரே, இத்தனை காலமாய் உன் உரிமையை அடைய நீ ஏன் முயலவில்லை? எனவே, நான் உனக்கு அநீதி இழைக்கவில்லை.
27. நீயே எனக்குக் கெடுதி செய்து அநியாயமாகப் போரிட வந்துள்ளாய். நடுவராகிய ஆண்டவரே இன்று இஸ்ராயேலுக்கும் அம்மோன் புதல்வருக்கும் நடுநின்று தீர்ப்பிடுவாராக" என்றான்.
28. ஆயினும் அம்மோன் புதல்வரின் அரசன் தூதர் மூலம் ஜெர்தே சொற்களுக்குச் செவி கொடுக்கவில்லை.
29. அப்போது ஆண்டவரின் ஆவி, ஜெப்தேயின், மேல் வந்தது. அவன் காலாத், மனாசே, மாஸ்பா நாடெங்கும் சுற்றிவந்து, அங்கிருந்து அம்மோன் புதல்வரிடம் சென்று,
30. ஆண்டவருக்கு அளித்த வாக்குறுதியாவது: "நீர் அம்மோன் மக்களை என் கைவயமாக்குவீராகில்,
31. நான் அம்மோன் புதல்வரிடமிருந்து சமாதானமாய்த் திரும்பி வரும்போது என்னை எதிர்கொள்ள என் வீட்டு வாயிலில் எவர் வருவாரோ அவரை நான் ஆண்டவருக்குப் பலியாக ஒப்புக்கொடுப்பேன்" என்பதாம்.
32. பிறகு ஜெப்தே அம்மோன் புதல்வரோடு போரிட அவர்களது நாட்டுக்குப் போனான். ஆண்டவரும் அவர்களை அவன் கைவயமளித்தார்.
33. ஆரோயர் முதல் மென்னித் எல்லை வரை, திராட்சைத் தோட்டங்கள் செழித்துள்ள ஆபேல் வரை ஜெப்தே இருபது நகர்களைப் பிடித்து அழித்தொழித்தான். எனவே, அம்மோன் புதல்வர் இஸ்ராயேல் மக்களுக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டனர்.
34. பிறகு ஜெப்தே மாஸ்பாவிலிருந்த தன் வீட்டுக்குத் திரும்பி வரும் போது, இதோ! அவனுடைய ஒரே மகள் தம்புரு அடித்து நடனமாடும் பலரோடு அவனை எதிர் கொண்டு வந்தாள். அவளையன்றி அவனுக்கு வேறு பிள்ளை இல்லை.
35. அவன் அவளைக் கண்டவுடனே தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, "ஐயோ, என் மகளே, என்னையும் ஏமாற்றி, நீயும் ஏமாந்து போனாய்! நான் ஆண்டவருக்கு வாக்குறுதி கொடுத்துள்ளேனே! அந்த வாக்குறுதியை என்னால் மீறமுடியாதே!" என்றான்.
36. அதற்கு அவள், "தந்தாய், நீர் ஆண்டவருக்கு வாக்களித்திருக்கிறீர். உம் எதிரிகளைப் பழி வாங்கவும், அவர்களை வெல்லவும் அவர் உமக்குச் செய்தருளினாரே. நீர் அளித்துள்ள வாக்குறுதிபடியே எனக்கும் செய்யும்" என்று கூறினாள்.
37. மீண்டும் தன் தந்தையை நோக்கி, "என் ஒரு விண்ணப்பத்தை மட்டும் நீர் கேட்டருள வேண்டும். அதாவது, நான் இரு மாதங்கள் மலைகளின் மேல் சுற்றித் திரிந்து, நானும் என் தோழியரும் என் கன்னிமையை முன்னிட்டுக் கதறியழ அனுமதியும்" என்றாள்.
38. அதற்கு அவன், "போய்வா" என்று அவளை இரு மாதங்களுக்கு அனுப்பிவிட்டான். அவளும் தன் தோழியருடன் போய்த் தன் கன்னிமையின் பொருட்டு மலைகளின் மேல் துக்கம் கொண்டாடி,
39. இரு மாதங்களுக்குப்பிறகு தன் தந்தையிடம் திரும்பி வந்தாள். அப்போது அவன் தான் கொடுத்திருந்த வாக்குறுதியின்படி அவளுக்குச் செய்தான். அவள் மனிதனை அறியாதிருந்தாள். அது முதல் இஸ்ராயேலில் வழக்கம் ஒன்று தோன்றி அனுசரிக்கப்பட்டு வந்தது.
40. அதாவது, ஆண்டுதோறும் இஸ்ராயேல் பெண்டீர் ஒன்று சேர்ந்து காலாதித்தனான ஜெப்தேயின் மகளைக் குறித்து நான்கு நாள் துக்கம் கொண்டாடுவார்கள்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 21 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 11 / 21
1 2
3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19
20 21
நியாயாதிபதிகள் 11:12
1 அக்காலத்தில் காலாத்தியனான ஜெப்தே வன்மை மிக்க போர்வீரனாய் இருந்தான். அவன் காலாத்துக்கு ஒரு விலைமாதின் வயிற்றில் பிறந்தவன். 2 காலாத்துக்கு ஒரு மனைவி இருந்தாள். அவள் மூலம் அவனுக்குப் புதல்வர் இருந்தனர். இவர்கள் வளர்ந்த பின் ஜெப்தேயை நோக்கி, "நீ வேறொரு தாய்க்குப் பிறந்தவன்; தந்தை வீட்டில் உனக்கு உரிமை இல்லை" என்று கூறி அவனைத் துரத்தி விட்டனர். 3 அப்போது ஜெப்தே அவர்களைப் பிரிந்து, ஓடிப்போய்த் தோப் நாட்டில் வாழ்ந்தான். திக்கற்றவரும் கொள்ளையடிப்போருமான பலர் அவனோடு சேர்ந்து அவனைத் தம் தலைவனாகக் கொண்டு பின் சென்றனர். 4 அக்காலத்தில் அம்மோன் புதல்வர் இஸ்ராயேலரோடு போர் தொடுத்தனர். 5 அவர்கள் இவர்களைக் கொடுமைப் படுத்தினதால் காலாத் நாட்டுப் பெரியோர் தமக்குத் துணையாக தோப் நாட்டு ஜெப்தேயை அழைக்கச் சென்றனர். 6 அங்கே அவனை நோக்கி, "நீ எம் தலைவனாக வந்திருந்து அம்மோன் புதல்வரோடு போர்தொடு" என்றனர். 7 அதற்கு அவன், "என்னைப் பகைத்து என் தந்தை வீட்டினின்று என்னைத் துரத்தினது நீங்கள் அல்லவா? இப்போது தேவையை முன்னிட்டுத் தானே என்னிடம் வந்துள்ளீர்கள்?" என்றான். 8 காலாத் நாட்டுப் பெருமக்கள் ஜெப்தேயை நோக்கி, "நீ எம்மோடு புறப்பட்டு அம்மோன் புதல்வரை எதிர்த்து, காலாத்திலிருக்கும் அனைவருக்கும் தலைவனாய் இருக்கவேண்டும் என்பதற்காக உன்னைத் தேடி வந்தோம்" என்றனர். 9 மீண்டும் ஜெப்தே, "அம்மோன் புதல்வரோடு போர் புரிய நீங்கள் என்னை நேர்மையோடு அழைப்பீர்களானால், ஆண்டவர் அவர்களை என்னிடம் கையளிப்பாரானால், நான் உங்கள் தலைவனாய் இருப்பேனா?" என்று கேட்டான். 10 அதற்கு அவர்கள், " நாங்கள் சொன்னதை நிறைவேற்றுவோம் என்ற எமது கூற்றைக் கேட்ட ஆண்டவரே இதற்கு நடுவரும் சாட்சியுமாய் இருக்கிறார்" என்றனர். 11 ஆகையால், ஜெப்தே காலாத்தின் பெரியோரோடு சென்றான். எல்லா மக்களும் அவனைத் தம் தலைவனாக்கினர். ஜெப்தே மாஸ்பாவில் ஆண்டவர் திருமுன் தன் நிபந்தனைகளை எல்லாம் திரும்பவும் கூறினான். 12 அப்பொழுது அவன், "நீ எனக்கு எதிராக எழுந்து என் நாட்டைக் கொள்ளையடித்துப் பாழாக்க உனக்கும் எனக்கும் வழக்கு என்ன?" என்று நேரில் கேட்கும்படி அம்மோன் புதல்வரின் அரசனுக்குத் தூதரை அனுப்பினான். 13 அதற்கு அவன், "இஸ்ராயேலர் எகிப்தினின்று வருகையில் ஆர்னோன் முதல் ஜாபோக், இன்னும் யோர்தான் வரையுள்ள என் நாட்டை எடுத்துக்கொண்ட அந்த வழக்குத்தான். இப்போது நீ அதைச் சமாதானமாய் எனக்குத் திரும்பக் கொடுத்து விடு" என்றான். 14 ஜெப்தே மீண்டும் தூதரை அனுப்பி, அம்மோன் அரசனுக்கு இவ்வாறு அறிவிக்கும்படி கட்டளையிட்டான்: 15 'ஜெப்தே சொல்லுவதாவது: இஸ்ராயேலர் மோவாப் நாட்டையும் அம்மோன் புதல்வர் நாட்டையும் பிடித்துக் கொள்ளவில்லை. 16 அவர்கள் எகிப்தினின்று வெளியேறிய போது பாலை நிலத்தின் வழியாகச் செங்கடல் வரை நடந்து காதேசுக்கு வந்தார்கள். 17 அப்போது அவர்கள் ஏதோம் அரசனுக்குத் தூதரை அனுப்பி: 'நாங்கள் உன் நாட்டின் வழியாகப் போக அனுமதி அளி' என்றனர். அவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவில்லை. மோவாப் அரசனுக்குத் தூதரை அனுப்பிக் கேட்க, அவனும் அவர்களுக்கு வழிவிடவில்லை. 18 எனவே, அவர்கள் காதேசில் தங்கிப் பிறகு, ஏதோம் நாட்டையும் மோவாப் நாட்டையும் சுற்றி, மோவாப் நாட்டின் கிழக்குப் பக்கமாக வந்து ஆர்னோனுக்கு அப்புறத்தில் பாளையம் இறங்கினார்கள். மோவாப் நாட்டின் எல்லைக்குள் அவர்கள் நுழையவில்லை. உண்மையில் ஆர்னோன் மோவாப் நாட்டின் எல்லையாகும். 19 மீண்டும் எசேபோனில் வாழ்ந்து வந்த அமோறையரின் அரசன் செகோனுக்கு இஸ்ராயேல் மக்கள் தூதரை அனுப்பி, 'உன் நாட்டின் வழியாக நதிவரை போக எமக்கு அனுமதி அளி' என்றனர். 20 அவனும் இஸ்ராயேலரின் வேண்டுகோளைப் புறிக்கணித்துத் தன் எல்லைகளைக் கடக்க அனுமதியாது, பெரும் சேனைகளைத் திரட்டி ஜாசாவில் அவர்களோடு வன்மையுடன் போரிட்டான். 21 ஆண்டவர் அவனையும் அவன் சேனைகளையும் இஸ்ராயேலருக்குக் கையளிக்கவே, இவர்கள் அவனை முறியடித்து அப்பகுதியில் வாழ்ந்து வந்த அமோறையரின் நாட்டையெல்லாம் தம் உரிமையாக்கினர். 22 அப்படியே இஸ்ராயேலர் ஆர்னோன் முதல் ஜாபோக்வரையிலும், பாலை நிலம் முதல் யோர்தான் வரையிலுமுள்ள நாட்டையும் தம் உரிமையாக்கினர். 23 இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுள் தம் மக்களாம் இஸ்ராயேலர் மூலம் அமோறையரை முறியடித்திருக்க, நீ அந்நாட்டை உரிமையாக்கிக் கொள்வது முறையா? 24 உன் தேவன் காமோசுக்குச் சொந்தமான எதுவும் உனக்கும் சொந்தம்தானே? எம் ஆண்டவராகிய கடவுள் வெற்றியின் மூலம் சொந்தமாக்கின நாடு எமக்கும் சொந்தம் அன்றோ? 25 மோவாப் அரசன் சேபோர் மகன் பாலாக்கைவிட நீ வலிமை மிக்கவனோ? அவன் உன்னைப் போல் இஸ்ராயேலின் மேல் முறையிட்டான் என்றும், இதற்காகப் போரிட்டான் என்றும் உன்னால் எண்பிக்க முடியுமா? 26 இஸ்ராயேலரோ எசேபோனிலும் அதன் ஊர்களிலும், அரோயேரிலும் அதன் சிற்றூர்களிலும், யோர்தானை அடுத்த எல்லா நகர்களிலும் முந்நூறு ஆண்டுகளாய் வாழ்கின்றனரே, இத்தனை காலமாய் உன் உரிமையை அடைய நீ ஏன் முயலவில்லை? எனவே, நான் உனக்கு அநீதி இழைக்கவில்லை. 27 நீயே எனக்குக் கெடுதி செய்து அநியாயமாகப் போரிட வந்துள்ளாய். நடுவராகிய ஆண்டவரே இன்று இஸ்ராயேலுக்கும் அம்மோன் புதல்வருக்கும் நடுநின்று தீர்ப்பிடுவாராக" என்றான். 28 ஆயினும் அம்மோன் புதல்வரின் அரசன் தூதர் மூலம் ஜெர்தே சொற்களுக்குச் செவி கொடுக்கவில்லை. 29 அப்போது ஆண்டவரின் ஆவி, ஜெப்தேயின், மேல் வந்தது. அவன் காலாத், மனாசே, மாஸ்பா நாடெங்கும் சுற்றிவந்து, அங்கிருந்து அம்மோன் புதல்வரிடம் சென்று, 30 ஆண்டவருக்கு அளித்த வாக்குறுதியாவது: "நீர் அம்மோன் மக்களை என் கைவயமாக்குவீராகில், 31 நான் அம்மோன் புதல்வரிடமிருந்து சமாதானமாய்த் திரும்பி வரும்போது என்னை எதிர்கொள்ள என் வீட்டு வாயிலில் எவர் வருவாரோ அவரை நான் ஆண்டவருக்குப் பலியாக ஒப்புக்கொடுப்பேன்" என்பதாம். 32 பிறகு ஜெப்தே அம்மோன் புதல்வரோடு போரிட அவர்களது நாட்டுக்குப் போனான். ஆண்டவரும் அவர்களை அவன் கைவயமளித்தார். 33 ஆரோயர் முதல் மென்னித் எல்லை வரை, திராட்சைத் தோட்டங்கள் செழித்துள்ள ஆபேல் வரை ஜெப்தே இருபது நகர்களைப் பிடித்து அழித்தொழித்தான். எனவே, அம்மோன் புதல்வர் இஸ்ராயேல் மக்களுக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டனர். 34 பிறகு ஜெப்தே மாஸ்பாவிலிருந்த தன் வீட்டுக்குத் திரும்பி வரும் போது, இதோ! அவனுடைய ஒரே மகள் தம்புரு அடித்து நடனமாடும் பலரோடு அவனை எதிர் கொண்டு வந்தாள். அவளையன்றி அவனுக்கு வேறு பிள்ளை இல்லை. 35 அவன் அவளைக் கண்டவுடனே தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, "ஐயோ, என் மகளே, என்னையும் ஏமாற்றி, நீயும் ஏமாந்து போனாய்! நான் ஆண்டவருக்கு வாக்குறுதி கொடுத்துள்ளேனே! அந்த வாக்குறுதியை என்னால் மீறமுடியாதே!" என்றான். 36 அதற்கு அவள், "தந்தாய், நீர் ஆண்டவருக்கு வாக்களித்திருக்கிறீர். உம் எதிரிகளைப் பழி வாங்கவும், அவர்களை வெல்லவும் அவர் உமக்குச் செய்தருளினாரே. நீர் அளித்துள்ள வாக்குறுதிபடியே எனக்கும் செய்யும்" என்று கூறினாள். 37 மீண்டும் தன் தந்தையை நோக்கி, "என் ஒரு விண்ணப்பத்தை மட்டும் நீர் கேட்டருள வேண்டும். அதாவது, நான் இரு மாதங்கள் மலைகளின் மேல் சுற்றித் திரிந்து, நானும் என் தோழியரும் என் கன்னிமையை முன்னிட்டுக் கதறியழ அனுமதியும்" என்றாள். 38 அதற்கு அவன், "போய்வா" என்று அவளை இரு மாதங்களுக்கு அனுப்பிவிட்டான். அவளும் தன் தோழியருடன் போய்த் தன் கன்னிமையின் பொருட்டு மலைகளின் மேல் துக்கம் கொண்டாடி, 39 இரு மாதங்களுக்குப்பிறகு தன் தந்தையிடம் திரும்பி வந்தாள். அப்போது அவன் தான் கொடுத்திருந்த வாக்குறுதியின்படி அவளுக்குச் செய்தான். அவள் மனிதனை அறியாதிருந்தாள். அது முதல் இஸ்ராயேலில் வழக்கம் ஒன்று தோன்றி அனுசரிக்கப்பட்டு வந்தது. 40 அதாவது, ஆண்டுதோறும் இஸ்ராயேல் பெண்டீர் ஒன்று சேர்ந்து காலாதித்தனான ஜெப்தேயின் மகளைக் குறித்து நான்கு நாள் துக்கம் கொண்டாடுவார்கள்.
மொத்தம் 21 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 11 / 21
1 2
3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19
20 21
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References