தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
நியாயாதிபதிகள்
1. அபிமெலேக்குக்குப்பின், எபிராயிம் மலைநாட்டுச் சாமிர் ஊரில் வாழ்ந்த இசாக்கார் கோத்திரத்தானான அபிமெலேக்கின் சிற்றப்பன் பூவாவின் மகன் தோலா இஸ்ராயேலை ஆண்டுவந்தான்.
2. அவன் இருபத்திமூன்று ஆண்டுகள் இஸ்ராயேலுக்கு நீதி வழங்கின பிறகு இறந்து சாமிரில் புதைக்கப்பட்டான்.
3. இவனுக்குப் பின் காலாதியனான யாயிர் தோன்றி இருபத்திரண்டு ஆண்டுகள் இஸ்ராயேலுக்கு நீதிபதியாய் இருந்தார்.
4. அவருக்கு முப்பது புதல்வர் இருந்தனர். இவர்கள் முப்பது கழுதைக் குட்டிகளின்மேல் அமர்ந்து முப்பது நகர்களுக்குத் தலைமை வகித்து வந்தனர். எனவே, அந்நகரங்கள் காலாதில் இது வரை யாயிர் நகர்கள் என்று பொருள் படும் ஆவோத்-யாயிர் என்று அழைக்கப்படுகின்றன.
5. யாயிர் இறக்கவே காமோன் என்ற இடத்தில் புதைக்கப்பட்டார்.
6. இஸ்ராயேல் மக்களோ, பழைய பாவங்களுடன் புதிதாய்ப் பாவங்களைச் செய்து ஆண்டவர் திருமுன் பழிகாரராகி, பாவால், அஸ்தரோத்தின் சிலைகளையும், சீரியா, சீதோன், மோவாப் நாட்டுத் தேவர்கள், அம்மோன் புதல்வரின் தேவர்கள், இன்னும் பிலிஸ்தியரின் தேவர்களையும் வழிபட்டனர். ஆண்டவரை அவர்கள் வழிபடாமல் கைவிட்டனர்.
7. ஆண்டவர் அவர்கள் மேல் கோபமுற்று அவர்களைப் பிலிஸ்தியருக்கும், அம்மோன் புதல்வருக்கும் கையளித்தார்.
8. யோர்தானுக்கு அப்புறத்துக் காலாதிலுள்ள அமோறையர் நாட்டில் இருந்தோர் எல்லாரும் பதினெட்டு ஆண்டுகள் மிகவும் ஒடுக்கித் துன்புறுத்தப்பட்டனர்.
9. எனெனில், அம்மோன் புதல்வர் யோர்தானைக் கடந்து, யூதா, பெஞ்சமின், எபிராயிம் கோத்திரங்களோடு போரிட்டு அவர்கள் நாட்டைப் பாழாக்கினர். எனவே, இஸ்ராயேலர் மிகவும் துன்புற்றனர்.
10. ஆகையால், ஆண்டவரை நோக்கி, "எங்கள் ஆண்டவராகிய கடவுளை நாங்கள் கைவிட்டுப் பாவாலை வழிபட்டதால் பாவிகளானோம்" என்று கதறி அழுதனர்.
11. ஆண்டவர் அவர்களை நோக்கி, "எகிப்தியரும் அமோறையரும் அம்மோன் புதல்வரும் பிலிஸ்தியரும், சீதோனியரும் அமலேக்கியரும் கானானையரும்
12. உங்களைத் துன்புறுத்த, நீங்கள் நம்மை நோக்கி முறையிட்ட போது, நாம் உங்களை அவர்கள் கையிலிருந்து மீட்கவில்லையா?
13. அப்படி மீட்டும், நீங்கள் நம்மைக் கைவிட்டு அன்னிய தேவர்களை வழிபட்டீர்கள். எனவே, இனிமேல் உங்களை மீட்கமாட்டோம்.
14. நீங்களே தேர்ந்துகொண்ட தேவர்களிடம் போய் மன்றாடுங்கள். இக்கட்டு வேளையில் அவர்களே உங்களை மீட்கட்டும்" என்றார்.
15. இஸ்ராயேல் மக்கள் ஆண்டவரை நோக்கி, "பாவிகளானோம்; உமது திருவுளப்படியே எம்மைத் தண்டியும்; இந்த ஒரு முறை மட்டும் எம்மை மீட்டருளும்" என்று மன்றாடினர்.
16. அன்னிய தேவர்களின் எல்லாச் சிலைகளையும் தங்கள் எல்லைக்கு அப்பால் எறிந்து விட்டுத் தங்கள் ஆண்டவராகிய கடவுளை வழிபட்டனர். அப்போது அவர் இஸ்ராயேலின் இழிநிலை கண்டு இரங்கினார்.
17. பின்னர் அம்மோன் புதல்வர் அர்ப்பரித்துக் காலாத் நாட்டில் கூடாரங்களை அடித்தனர். அவர்களுக்கு எதிராக இஸ்ராயேல் மக்கள் ஒன்றாய்க் கூடி மாஸ்பாவிலே பாளையமிறங்கினர்.
18. அப்போது காலாத்தின் மக்கட் தலைவர்கள், "அம்மோன் புதல்வரை நமக்குள் முதன் முதல் எதிர்க்கத் தொடங்குபவனே காலாத் மக்களின் தலைவன் ஆகட்டும்" என்று ஒருவர் ஒருவரிடம் கூறினர்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 21 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 10 / 21
1
2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
19 20 21
நியாயாதிபதிகள் 10:17
1 அபிமெலேக்குக்குப்பின், எபிராயிம் மலைநாட்டுச் சாமிர் ஊரில் வாழ்ந்த இசாக்கார் கோத்திரத்தானான அபிமெலேக்கின் சிற்றப்பன் பூவாவின் மகன் தோலா இஸ்ராயேலை ஆண்டுவந்தான். 2 அவன் இருபத்திமூன்று ஆண்டுகள் இஸ்ராயேலுக்கு நீதி வழங்கின பிறகு இறந்து சாமிரில் புதைக்கப்பட்டான். 3 இவனுக்குப் பின் காலாதியனான யாயிர் தோன்றி இருபத்திரண்டு ஆண்டுகள் இஸ்ராயேலுக்கு நீதிபதியாய் இருந்தார். 4 அவருக்கு முப்பது புதல்வர் இருந்தனர். இவர்கள் முப்பது கழுதைக் குட்டிகளின்மேல் அமர்ந்து முப்பது நகர்களுக்குத் தலைமை வகித்து வந்தனர். எனவே, அந்நகரங்கள் காலாதில் இது வரை யாயிர் நகர்கள் என்று பொருள் படும் ஆவோத்-யாயிர் என்று அழைக்கப்படுகின்றன. 5 யாயிர் இறக்கவே காமோன் என்ற இடத்தில் புதைக்கப்பட்டார். 6 இஸ்ராயேல் மக்களோ, பழைய பாவங்களுடன் புதிதாய்ப் பாவங்களைச் செய்து ஆண்டவர் திருமுன் பழிகாரராகி, பாவால், அஸ்தரோத்தின் சிலைகளையும், சீரியா, சீதோன், மோவாப் நாட்டுத் தேவர்கள், அம்மோன் புதல்வரின் தேவர்கள், இன்னும் பிலிஸ்தியரின் தேவர்களையும் வழிபட்டனர். ஆண்டவரை அவர்கள் வழிபடாமல் கைவிட்டனர். 7 ஆண்டவர் அவர்கள் மேல் கோபமுற்று அவர்களைப் பிலிஸ்தியருக்கும், அம்மோன் புதல்வருக்கும் கையளித்தார். 8 யோர்தானுக்கு அப்புறத்துக் காலாதிலுள்ள அமோறையர் நாட்டில் இருந்தோர் எல்லாரும் பதினெட்டு ஆண்டுகள் மிகவும் ஒடுக்கித் துன்புறுத்தப்பட்டனர். 9 எனெனில், அம்மோன் புதல்வர் யோர்தானைக் கடந்து, யூதா, பெஞ்சமின், எபிராயிம் கோத்திரங்களோடு போரிட்டு அவர்கள் நாட்டைப் பாழாக்கினர். எனவே, இஸ்ராயேலர் மிகவும் துன்புற்றனர். 10 ஆகையால், ஆண்டவரை நோக்கி, "எங்கள் ஆண்டவராகிய கடவுளை நாங்கள் கைவிட்டுப் பாவாலை வழிபட்டதால் பாவிகளானோம்" என்று கதறி அழுதனர். 11 ஆண்டவர் அவர்களை நோக்கி, "எகிப்தியரும் அமோறையரும் அம்மோன் புதல்வரும் பிலிஸ்தியரும், சீதோனியரும் அமலேக்கியரும் கானானையரும் 12 உங்களைத் துன்புறுத்த, நீங்கள் நம்மை நோக்கி முறையிட்ட போது, நாம் உங்களை அவர்கள் கையிலிருந்து மீட்கவில்லையா? 13 அப்படி மீட்டும், நீங்கள் நம்மைக் கைவிட்டு அன்னிய தேவர்களை வழிபட்டீர்கள். எனவே, இனிமேல் உங்களை மீட்கமாட்டோம். 14 நீங்களே தேர்ந்துகொண்ட தேவர்களிடம் போய் மன்றாடுங்கள். இக்கட்டு வேளையில் அவர்களே உங்களை மீட்கட்டும்" என்றார். 15 இஸ்ராயேல் மக்கள் ஆண்டவரை நோக்கி, "பாவிகளானோம்; உமது திருவுளப்படியே எம்மைத் தண்டியும்; இந்த ஒரு முறை மட்டும் எம்மை மீட்டருளும்" என்று மன்றாடினர். 16 அன்னிய தேவர்களின் எல்லாச் சிலைகளையும் தங்கள் எல்லைக்கு அப்பால் எறிந்து விட்டுத் தங்கள் ஆண்டவராகிய கடவுளை வழிபட்டனர். அப்போது அவர் இஸ்ராயேலின் இழிநிலை கண்டு இரங்கினார். 17 பின்னர் அம்மோன் புதல்வர் அர்ப்பரித்துக் காலாத் நாட்டில் கூடாரங்களை அடித்தனர். அவர்களுக்கு எதிராக இஸ்ராயேல் மக்கள் ஒன்றாய்க் கூடி மாஸ்பாவிலே பாளையமிறங்கினர். 18 அப்போது காலாத்தின் மக்கட் தலைவர்கள், "அம்மோன் புதல்வரை நமக்குள் முதன் முதல் எதிர்க்கத் தொடங்குபவனே காலாத் மக்களின் தலைவன் ஆகட்டும்" என்று ஒருவர் ஒருவரிடம் கூறினர்.
மொத்தம் 21 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 10 / 21
1
2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
19 20 21
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References