தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
யோசுவா
1. இஸ்ராயேல் மக்களுக்கு அஞ்சி எரிக்கோ நகர் அடைபட்டுக் கிடந்தது; சுற்றிலும் அரணும் எழுப்பப்பட்டிருந்தது. வெளியே போகவும், உள்ளே வரவும் யாரும் துணியவில்லை.
2. ஆண்டவர் யோசுவாவை நோக்கி, "இதோ நாம் எரிக்கோவையும் அதன் அரசனையும் போர்வீரரையும் உன் கையில் ஒப்படைத்தோம்.
3. போர் வீரராகிய நீங்கள் எல்லாரும் நாளுக்கு ஒருமுறை நகரைச் சுற்றி வாருங்கள். இப்படியே ஆறுநாள் செய்யக்கடவீர்கள்.
4. ஏழாம் நாளிலோ, ஏழு குருக்கள் ஜூபிலி காலத்துக்குரிய ஏழு எக்காளங்களை எடுத்துக்கொண்டு உடன் படிக்கைப் பெட்டிக்கு முன் போக வேண்டும். அன்று நீங்கள் ஏழு முறை நகரைச் சுற்றி வருவீர்கள். அப்போது குருக்கள் எக்காளங்களை ஊத வேண்டும்.
5. அவர்கள் எக்காளத்தில் நீண்டதும் முறிபட்டதுமான தொனிகளை வாசிப்பதை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் எல்லோரும் கூடிச் சத்தமாய் ஆரவாரம் செய்யக்கடவீர்கள். அப்பொழுது நகர மதில் அடியோடு இடிந்துவிழும். உடனே மக்கள் தத்தமக்கு நேராக உள்ளே போகக்கடவார்கள்" என்றார்.
6. அதன்படி நூனின் மகனான யோசுவா குருக்களை அழைத்து, "உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு போங்கள். ஜூபிலி காலத்துக்குரிய ஏழு எக்காளங்களைப் பிடித்து வேறேழு குருக்கள் ஆண்டவருடைய பெட்டிக்கு முன்பாக நடக்ககடவார்கள்" என்று சொன்னார்.
7. பிறகு அவர் மக்களை நோக்கி, "நீங்கள் ஆயுதம் தாங்கியவராய் ஆண்டவரின் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன் நடந்து நகரைச் சுற்றிவாருங்கள்" எனக் கட்டளையிட்டார்.
8. இப்படி யோசுவா மக்களிடம் சொன்னவுடனே, குருக்கள் தங்கள் எக்காளங்களை ஊதி ஆண்டவருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன் நடக்கத் தொடங்கினர்.
9. ஆயுதம் தாங்கிய வீரர்கள் அனைவரும் உடன்படிக்கைப் பெட்டிக்கு மூன்னும், சாதாரண மக்கள் அதற்குப் பின்னும் நடந்து செல்ல எக்காளங்கள் முழங்கின. ஆனால் யோசுவா,
10. ஆர்ப்பரித்துக் கூக்குரலிடுங்கள்' என்று நான் உங்களுக்குச் சொல்லும் நாள் வரை நீங்கள் கூக்குரலிட வேண்டாம்; உங்கள் குரல் கேட்கப்படாதிருக்கட்டும்; உங்கள் வாயினின்று ஒரு சொல்லும் வெளிவராதிருப்பதாக" என்று மக்களுக்குச் சொல்லியிருந்தார்.
11. அவ்வாறே அவர்கள் நாளொருமுறை ஆண்டவரின் உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கி கொண்டு நகரைச் சுற்றிவருவார்கள். பிறகு திரும்பிப் பாளையத்தில் தங்குவார்கள்.
12. அதிகாலையில் யோசுவா எழுந்திருக்கும் போது, குருக்கள் ஆண்டவரின் உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு போவார்கள்.
13. ஜுபிலி காலத்துக்குரிய ஏழு எக்காளங்களை கொண்டிருந்த ஏழு குருக்களும் ஊதிக்கொண்டு ஆண்டவருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன் நடந்து போவார்கள். ஆயுதம் தாங்கிய போர் வீரர்கள் அவர்களுக்கு முன் செல்ல, சாதாரண மக்கள் உடன்படிக்கைப் பெட்டிக்குப் பின் கொம்புகளை ஊதிக்கொண்டு நடந்து வருவார்கள்.
14. இரண்டாம் நாளும் அவர்கள் நகரை ஒரு முறை சுற்றிவந்து, பின் பாளையத்திற்குத் திரும்பினார்கள். இப்படி ஆறு நாளும் செய்து வந்தார்கள்.
15. ஏழாவது நாளிலோ, அதிகாலையில் எழுந்திருந்து முன்பு கட்டளையிடப்பட்டிருந்த படியே அவர்கள் ஏழு முறை நகரைச் சுற்றி வந்தார்கள்.
16. ஏழாம் முறை குருக்கள் எக்காளங்களை ஊதுகையில் யோசுவா மக்களை நோக்கி, "ஆர்ப்பரித்துக் கூக்குரலிடுஙகள். ஏனெனில் ஆண்டவர் உங்களுக்கு நகரை ஒப்படைத்துள்ளார்.
17. ஆனால் இந்நகரும் இதிலுள்ள யாவும் ஆண்டவரின் சாபத்துக்கு உள்ளாகக்கடவன. நாம் முன்பு அனுப்பின தூதர்களை இராக்காப் என்ற விலைமாது மறைத்து வைத்தபடியால், அவளையும் அவள் வீட்டார் அனைவரையும் மட்டுமே உயிரோடு விட்டு வையுங்கள்.
18. நீங்கள் குற்றத்திற்கு ஆளாகாதபடிக்கும், இஸ்ராயேலின் பாளையம் சாபத்துக்கு உள்ளாகி அலங்கோலையாய்ப் போகாதபடிக்கும், விலக்கப்பட்டவற்றில் ஒன்றையும் நீங்கள் தொடவேண்டாம். எச்சரிக்கை!
19. பொன்னும் வெள்ளியும், பித்தளை இரும்பால் செய்யப்பட்ட பாத்திரங்களும் ஆணடவருக்குக் காணிக்கையாக்கப்பட்டு ஆண்டவருடைய கருவூலத்தோடு சேர்க்கப்பட வேண்டும்" என்றார்.
20. உடனே, இஸ்ராயேலர் ஆரவாரமாய் ஆர்ப்பரித்துக் கூவ, எக்காளங்கள் முழங்க, அச்சத்தம் மக்களின் செவிகளில் விழுமுன்னே, அதோ! மதில்கள் கடகடவென்று இடிந்து விழுந்தன. உடனே மக்கள் தத்தமக்கு நேராக நகரில் நுழைந்து அதைப் பிடித்தனர்.
21. அதிலிருந்த ஆண் பெண்களையும், சிறியோர் பெரியோரையும் கொன்று குவித்தனர்; ஆடுமாடுகளையும் கழுதையையும் வாளால் வெட்டி வீழ்த்தினர்.
22. உளவு பார்க்கும்படி முன்பு அனுப்பப்பட்டிருந்த இரு மனிதரையும் நோக்கி, யோசுவா, "அவ்விலைமாதின் வீட்டிற்குப் போய், நீங்கள் அவளுக்கு உறுதியளித்துள்ள படி அவளையும் அவளுக்குள்ள யாவற்றையும் அங்கிருந்து வெளியே கொண்டு வாருங்கள்" என்றார்.
23. அந்த இளைஞர் அதன்படி போய் இராக்காபையும், அவள் தாய் தந்தயரையும், சகோதரர் சுற்றத்தாரையும், அவள் பொருட்கள் முதலியவற்றுடன் வெளியே அழைத்துக் கொண்டு வந்து, இஸ்ராயேலரின் பாளையத்துக்கு வெளியே இருக்கும்படி செய்தனர்.
24. நகரையும் அதிலுள்ள யாவற்றையும் தீயால் சுட்டெரித்தனர். பொன்னும் வெள்ளியும், பித்தளை இரும்பால் செய்யப்பட்ட பாத்திரங்களும் மட்டும் பாதுகாக்கப் பெற்றன. அவற்றைக் காணிக்கையாக்கி, ஆண்டவரின் கருவூலத்தோடு சேர்த்தனர்.
25. எரிக்கோவை உளவு பார்த்து வருவதற்காகத் தாம் முன்பு அனுப்பியிருந்த தூதர்களை இராக்காப் என்ற விலைமாது மறைத்து வைத்திருந்தினால், யோசுவா அவளுக்கும், அவளுடைய தந்தை வீட்டாருக்கும் உயிர்ப்பிச்சை கொடுத்தார்; அத்தோடு அவளுடைய உடைமைகள் எல்லாவற்றையும் காப்பாற்றினார். அவர்கள் இன்று வரை இஸ்ராயேல் மக்கள் மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள்.
26. அப்பொழுது யோசுவா சாபமிட்டு, "இந்த எரிக்கோ நகரை மறுபடியும் கட்டி எழுப்பத்துணிபவன் ஆண்டவர் திருமுன் சபிக்கப்பட்டவனாய் இருக்கக்கடவான்! அவன் அதற்கு அடிக்கல் நாட்டும்போது தன் தலை மகனையும், அதன் நிலைகளை நிறுத்தும்போது தன் இளைய மகனையும் சாகக் கொடுப்பான்" என்று கடுமொழி கூறினார்.
27. இவ்விதமாய் ஆண்டவர் யோசுவாவோடு இருந்தார். அவருடைய புகழ் நாடு முழுவதும் பரவிற்று.

பதிவுகள்

மொத்தம் 24 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 24
1 இஸ்ராயேல் மக்களுக்கு அஞ்சி எரிக்கோ நகர் அடைபட்டுக் கிடந்தது; சுற்றிலும் அரணும் எழுப்பப்பட்டிருந்தது. வெளியே போகவும், உள்ளே வரவும் யாரும் துணியவில்லை. 2 ஆண்டவர் யோசுவாவை நோக்கி, "இதோ நாம் எரிக்கோவையும் அதன் அரசனையும் போர்வீரரையும் உன் கையில் ஒப்படைத்தோம். 3 போர் வீரராகிய நீங்கள் எல்லாரும் நாளுக்கு ஒருமுறை நகரைச் சுற்றி வாருங்கள். இப்படியே ஆறுநாள் செய்யக்கடவீர்கள். 4 ஏழாம் நாளிலோ, ஏழு குருக்கள் ஜூபிலி காலத்துக்குரிய ஏழு எக்காளங்களை எடுத்துக்கொண்டு உடன் படிக்கைப் பெட்டிக்கு முன் போக வேண்டும். அன்று நீங்கள் ஏழு முறை நகரைச் சுற்றி வருவீர்கள். அப்போது குருக்கள் எக்காளங்களை ஊத வேண்டும். 5 அவர்கள் எக்காளத்தில் நீண்டதும் முறிபட்டதுமான தொனிகளை வாசிப்பதை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் எல்லோரும் கூடிச் சத்தமாய் ஆரவாரம் செய்யக்கடவீர்கள். அப்பொழுது நகர மதில் அடியோடு இடிந்துவிழும். உடனே மக்கள் தத்தமக்கு நேராக உள்ளே போகக்கடவார்கள்" என்றார். 6 அதன்படி நூனின் மகனான யோசுவா குருக்களை அழைத்து, "உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு போங்கள். ஜூபிலி காலத்துக்குரிய ஏழு எக்காளங்களைப் பிடித்து வேறேழு குருக்கள் ஆண்டவருடைய பெட்டிக்கு முன்பாக நடக்ககடவார்கள்" என்று சொன்னார். 7 பிறகு அவர் மக்களை நோக்கி, "நீங்கள் ஆயுதம் தாங்கியவராய் ஆண்டவரின் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன் நடந்து நகரைச் சுற்றிவாருங்கள்" எனக் கட்டளையிட்டார். 8 இப்படி யோசுவா மக்களிடம் சொன்னவுடனே, குருக்கள் தங்கள் எக்காளங்களை ஊதி ஆண்டவருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன் நடக்கத் தொடங்கினர். 9 ஆயுதம் தாங்கிய வீரர்கள் அனைவரும் உடன்படிக்கைப் பெட்டிக்கு மூன்னும், சாதாரண மக்கள் அதற்குப் பின்னும் நடந்து செல்ல எக்காளங்கள் முழங்கின. ஆனால் யோசுவா, 10 ஆர்ப்பரித்துக் கூக்குரலிடுங்கள்' என்று நான் உங்களுக்குச் சொல்லும் நாள் வரை நீங்கள் கூக்குரலிட வேண்டாம்; உங்கள் குரல் கேட்கப்படாதிருக்கட்டும்; உங்கள் வாயினின்று ஒரு சொல்லும் வெளிவராதிருப்பதாக" என்று மக்களுக்குச் சொல்லியிருந்தார். 11 அவ்வாறே அவர்கள் நாளொருமுறை ஆண்டவரின் உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கி கொண்டு நகரைச் சுற்றிவருவார்கள். பிறகு திரும்பிப் பாளையத்தில் தங்குவார்கள். 12 அதிகாலையில் யோசுவா எழுந்திருக்கும் போது, குருக்கள் ஆண்டவரின் உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு போவார்கள். 13 ஜுபிலி காலத்துக்குரிய ஏழு எக்காளங்களை கொண்டிருந்த ஏழு குருக்களும் ஊதிக்கொண்டு ஆண்டவருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன் நடந்து போவார்கள். ஆயுதம் தாங்கிய போர் வீரர்கள் அவர்களுக்கு முன் செல்ல, சாதாரண மக்கள் உடன்படிக்கைப் பெட்டிக்குப் பின் கொம்புகளை ஊதிக்கொண்டு நடந்து வருவார்கள். 14 இரண்டாம் நாளும் அவர்கள் நகரை ஒரு முறை சுற்றிவந்து, பின் பாளையத்திற்குத் திரும்பினார்கள். இப்படி ஆறு நாளும் செய்து வந்தார்கள். 15 ஏழாவது நாளிலோ, அதிகாலையில் எழுந்திருந்து முன்பு கட்டளையிடப்பட்டிருந்த படியே அவர்கள் ஏழு முறை நகரைச் சுற்றி வந்தார்கள். 16 ஏழாம் முறை குருக்கள் எக்காளங்களை ஊதுகையில் யோசுவா மக்களை நோக்கி, "ஆர்ப்பரித்துக் கூக்குரலிடுஙகள். ஏனெனில் ஆண்டவர் உங்களுக்கு நகரை ஒப்படைத்துள்ளார். 17 ஆனால் இந்நகரும் இதிலுள்ள யாவும் ஆண்டவரின் சாபத்துக்கு உள்ளாகக்கடவன. நாம் முன்பு அனுப்பின தூதர்களை இராக்காப் என்ற விலைமாது மறைத்து வைத்தபடியால், அவளையும் அவள் வீட்டார் அனைவரையும் மட்டுமே உயிரோடு விட்டு வையுங்கள். 18 நீங்கள் குற்றத்திற்கு ஆளாகாதபடிக்கும், இஸ்ராயேலின் பாளையம் சாபத்துக்கு உள்ளாகி அலங்கோலையாய்ப் போகாதபடிக்கும், விலக்கப்பட்டவற்றில் ஒன்றையும் நீங்கள் தொடவேண்டாம். எச்சரிக்கை! 19 பொன்னும் வெள்ளியும், பித்தளை இரும்பால் செய்யப்பட்ட பாத்திரங்களும் ஆணடவருக்குக் காணிக்கையாக்கப்பட்டு ஆண்டவருடைய கருவூலத்தோடு சேர்க்கப்பட வேண்டும்" என்றார். 20 உடனே, இஸ்ராயேலர் ஆரவாரமாய் ஆர்ப்பரித்துக் கூவ, எக்காளங்கள் முழங்க, அச்சத்தம் மக்களின் செவிகளில் விழுமுன்னே, அதோ! மதில்கள் கடகடவென்று இடிந்து விழுந்தன. உடனே மக்கள் தத்தமக்கு நேராக நகரில் நுழைந்து அதைப் பிடித்தனர். 21 அதிலிருந்த ஆண் பெண்களையும், சிறியோர் பெரியோரையும் கொன்று குவித்தனர்; ஆடுமாடுகளையும் கழுதையையும் வாளால் வெட்டி வீழ்த்தினர். 22 உளவு பார்க்கும்படி முன்பு அனுப்பப்பட்டிருந்த இரு மனிதரையும் நோக்கி, யோசுவா, "அவ்விலைமாதின் வீட்டிற்குப் போய், நீங்கள் அவளுக்கு உறுதியளித்துள்ள படி அவளையும் அவளுக்குள்ள யாவற்றையும் அங்கிருந்து வெளியே கொண்டு வாருங்கள்" என்றார். 23 அந்த இளைஞர் அதன்படி போய் இராக்காபையும், அவள் தாய் தந்தயரையும், சகோதரர் சுற்றத்தாரையும், அவள் பொருட்கள் முதலியவற்றுடன் வெளியே அழைத்துக் கொண்டு வந்து, இஸ்ராயேலரின் பாளையத்துக்கு வெளியே இருக்கும்படி செய்தனர். 24 நகரையும் அதிலுள்ள யாவற்றையும் தீயால் சுட்டெரித்தனர். பொன்னும் வெள்ளியும், பித்தளை இரும்பால் செய்யப்பட்ட பாத்திரங்களும் மட்டும் பாதுகாக்கப் பெற்றன. அவற்றைக் காணிக்கையாக்கி, ஆண்டவரின் கருவூலத்தோடு சேர்த்தனர். 25 எரிக்கோவை உளவு பார்த்து வருவதற்காகத் தாம் முன்பு அனுப்பியிருந்த தூதர்களை இராக்காப் என்ற விலைமாது மறைத்து வைத்திருந்தினால், யோசுவா அவளுக்கும், அவளுடைய தந்தை வீட்டாருக்கும் உயிர்ப்பிச்சை கொடுத்தார்; அத்தோடு அவளுடைய உடைமைகள் எல்லாவற்றையும் காப்பாற்றினார். அவர்கள் இன்று வரை இஸ்ராயேல் மக்கள் மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். 26 அப்பொழுது யோசுவா சாபமிட்டு, "இந்த எரிக்கோ நகரை மறுபடியும் கட்டி எழுப்பத்துணிபவன் ஆண்டவர் திருமுன் சபிக்கப்பட்டவனாய் இருக்கக்கடவான்! அவன் அதற்கு அடிக்கல் நாட்டும்போது தன் தலை மகனையும், அதன் நிலைகளை நிறுத்தும்போது தன் இளைய மகனையும் சாகக் கொடுப்பான்" என்று கடுமொழி கூறினார். 27 இவ்விதமாய் ஆண்டவர் யோசுவாவோடு இருந்தார். அவருடைய புகழ் நாடு முழுவதும் பரவிற்று.
மொத்தம் 24 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 24
×

Alert

×

Tamil Letters Keypad References