தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
யோசுவா
1. மக்கள் கடந்து சென்ற பிறகு ஆண்டவர் யோசுவாவை நோக்கி,
2. நீ கோத்திரத்திற்கு ஒருவராகப் பன்னிருவரைத் தேர்ந்தெடு.
3. யோர்தானின் நடுவிலே குருக்களின் கால்கள் நிலையாய் நின்ற இடத்திலிருந்து பன்னிரு உறுதியான கற்களை எடுத்து வருமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டு, நீங்கள் இன்றிரவு தங்கியிருக்கும் இடத்திலே அவற்றை நாட்டி வையுங்கள்" என்றார்.
4. அதன்படி யோசுவா, இஸ்ராயேல் மக்களிலே கோத்திரத்திற்கு ஒருவராகத் தாம் தேர்ந்து கொண்ட பன்னிருவரையும் அழைத்தார்.
5. நீங்கள் யோர்தானின் நடுவில் உங்கள் ஆண்டவராகிய கடவுளின் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன் சென்று இஸ்ராயேல் மக்களின் எண்ணிக்கைக்குச் சரியாக உங்களில் ஒவ்வொருவனும் ஒவ்வொரு கல்லைத் தன் தோள் மேல் தூக்கிக் கொண்டு வரக்கடவான். அது உங்களுக்குள் நினைவுச் சின்னமாக விளங்கும்.
6. 'இந்தக் கற்களின் பொருள் என்ன?' என்று நாளை உங்கள் பிள்ளைகள் உங்களைக் கேட்கும்போது, நீங்கள் 'யோர்தான் நதியைக் கடந்து சென்ற நாளில் ஆண்டவரின் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாகத் தண்ணீர் வற்றிப் போயிற்று.
7. ஆதலால் இஸ்ராயேல் மக்களுக்கு அதை என்றென்றும் மனத்தில் இருத்தும் நினைவுச் சின்னமாக இக்கற்கள் வைக்கப்பட்டுள்ளன' என்று மறுமொழி சொல்வீர்கள்" என்றார்.
8. யோசுவா சொன்னபடி இஸ்ராயேல் மக்கள் செய்தார்கள்; அவருக்கு ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி யோர்தான் நதியின் அடிநடுவிலிருந்து இஸ்ராயேல் மக்களுடைய எண்ணிக்கைக்குச் சரியாகப் பன்னிரு கற்களை எடுத்து வந்தார்கள்; தாங்கள் பாளையம் இறங்கியிருந்த இடத்திற்குக் கொண்டு வந்து அங்கு அவற்றை வைத்தார்கள்.
9. மேலும் யோர்தானின் நடுவில் உடன் படிக்கைப் பெட்டியைத் தூக்கிச் சென்ற குருக்கள் நின்று கொண்டிருந்த இடத்திலும் யோசுவா வேறு பன்னிரு கற்களை நாட்டி வைத்தார். அவை இன்று வரை அங்கேயே இருக்கின்றன.
10. நிற்க, யோசுவாவிடம் மோயிசன் கூறியிருந்ததும், ஆண்டவர் மக்களுக்குச் சொல்லக் கட்டளையிட்டிருந்ததுமான எல்லாம் நிறைவேறும் வரை உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கி வந்த குருக்கள் யோர்தானின் நடுவே நின்று கொண்டிருந்தனர். மக்கள் விரைவாய் நதியைக் கடந்தனர்.
11. மக்கள் எல்லாரும் அக்கரைக்குச் சென்றபின், ஆண்டவருடைய உடன் படிக்கைப் பெட்டியும் கடந்து சென்றது. குருக்களோ மக்களுக்கு முன் சென்றனர்.
12. மேலும், ரூபன் புதல்வரும் காத் புதல்வரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் மோயீசன் தங்களுக்குக் கட்டளையிட்டிருந்த படி ஆயுதம் தாங்கியவராய் இஸ்ராயேல் மக்களுக்கு முன்பாகவே சென்றனர்.
13. நாற்பதினாயிரம் வீரர் கூட்டம் கூட்டமாயும் அணி அணியாகவும் எரிக்கோவின் சமவெளிகளிலும் நாட்டுப் புறங்களிலும் நடந்து சென்றனர்.
14. அன்று இஸ்ராயேலர் அனைவரின் முன்னிலையில் ஆண்டவர் யோசுவாவை மேன்மைப்படுத்தினார். அதாவது அவர்கள் மோயீசனுக்கு அஞ்சி நடக்க வேண்டும் என்பதே.
15. ஆண்டவர் அவரை நோக்கி,
16. உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிச் செல்லும் ஊருக்குள் யோர்தானிலிருந்து கரை ஏறக் கட்டளையிடு" என்றார்.
17. அதன்படி அவரும், "யோர்தானிலிருந்து கரை ஏறுங்கள்" என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
18. அவர்கள் அதன் படி ஆண்டவரின் உடன்படிக்கைப பெட்டியைத் தூக்கிக்கொண்டு கரை ஏரிக் காய்ந்த தரையில் மிதித்தனர். உடனே யோர்தானின் தண்ணீர் தன் இடத்திருக்குத் திரும்பி வந்து முன் போல் ஓடத் தொடங்கினது.
19. இவ்வாறு, முதல் மாதம் பத்தாம் நாளன்று மக்கள் யோர்தான் நதியைக் கடந்து எரிக்கோவுக்குக் கிழக்கே கல்கலாவில் பாளையம் இறங்கினார்கள்.
20. அவர்கள் யோர்தானிலிருந்து கொணர்ந்திருந்த பன்னிரு கற்களையும் யோசுவா கல்கலாவில் நாட்டினார்.
21. பின்னார் இஸ்ராயேல் மக்களை நோக்கி, "நாளை உங்கள் பிள்ளைகள் 'இந்தக் கற்கள் எதற்கு?' என்று தங்கள் தந்தையரைக் கேட்கும் போது,
22. நீங்கள் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டியதாவது: 'இஸ்ராயேலர் காய்ந்த தரை வழியாய் இந்த யோர்தானைக் கடந்து வந்தார்கள்.
23. ஏனென்றால், ஆண்டவரின் கை எல்லாவற்றினும் வலுத்தது என்று உலக மக்கள் அனைவரும் அறியும் பொருட்டும், நீங்கள் எப்பொழுதுமே உங்கள் ஆண்டவராகிய கடவுளுக்கு அஞ்சி நடக்கும் பொருட்டும்,
24. உங்கள் ஆண்டவராகிய கடவுள் முன்பு செங்கடலின் நீரை நாங்கள் கடக்கும் வரை எங்களுக்கு முன்பாக வற்றச் செய்தது போல், (25) யோர்தானின் நீரையும் நீங்கள் அதைக் கடக்கும் வரை உங்களுக்கு முன்பாக வற்றச் செய்தார்" என்றார்.

பதிவுகள்

மொத்தம் 24 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 4 / 24
1 மக்கள் கடந்து சென்ற பிறகு ஆண்டவர் யோசுவாவை நோக்கி, 2 நீ கோத்திரத்திற்கு ஒருவராகப் பன்னிருவரைத் தேர்ந்தெடு. 3 யோர்தானின் நடுவிலே குருக்களின் கால்கள் நிலையாய் நின்ற இடத்திலிருந்து பன்னிரு உறுதியான கற்களை எடுத்து வருமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டு, நீங்கள் இன்றிரவு தங்கியிருக்கும் இடத்திலே அவற்றை நாட்டி வையுங்கள்" என்றார். 4 அதன்படி யோசுவா, இஸ்ராயேல் மக்களிலே கோத்திரத்திற்கு ஒருவராகத் தாம் தேர்ந்து கொண்ட பன்னிருவரையும் அழைத்தார். 5 நீங்கள் யோர்தானின் நடுவில் உங்கள் ஆண்டவராகிய கடவுளின் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன் சென்று இஸ்ராயேல் மக்களின் எண்ணிக்கைக்குச் சரியாக உங்களில் ஒவ்வொருவனும் ஒவ்வொரு கல்லைத் தன் தோள் மேல் தூக்கிக் கொண்டு வரக்கடவான். அது உங்களுக்குள் நினைவுச் சின்னமாக விளங்கும். 6 'இந்தக் கற்களின் பொருள் என்ன?' என்று நாளை உங்கள் பிள்ளைகள் உங்களைக் கேட்கும்போது, நீங்கள் 'யோர்தான் நதியைக் கடந்து சென்ற நாளில் ஆண்டவரின் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாகத் தண்ணீர் வற்றிப் போயிற்று. 7 ஆதலால் இஸ்ராயேல் மக்களுக்கு அதை என்றென்றும் மனத்தில் இருத்தும் நினைவுச் சின்னமாக இக்கற்கள் வைக்கப்பட்டுள்ளன' என்று மறுமொழி சொல்வீர்கள்" என்றார். 8 யோசுவா சொன்னபடி இஸ்ராயேல் மக்கள் செய்தார்கள்; அவருக்கு ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி யோர்தான் நதியின் அடிநடுவிலிருந்து இஸ்ராயேல் மக்களுடைய எண்ணிக்கைக்குச் சரியாகப் பன்னிரு கற்களை எடுத்து வந்தார்கள்; தாங்கள் பாளையம் இறங்கியிருந்த இடத்திற்குக் கொண்டு வந்து அங்கு அவற்றை வைத்தார்கள். 9 மேலும் யோர்தானின் நடுவில் உடன் படிக்கைப் பெட்டியைத் தூக்கிச் சென்ற குருக்கள் நின்று கொண்டிருந்த இடத்திலும் யோசுவா வேறு பன்னிரு கற்களை நாட்டி வைத்தார். அவை இன்று வரை அங்கேயே இருக்கின்றன. 10 நிற்க, யோசுவாவிடம் மோயிசன் கூறியிருந்ததும், ஆண்டவர் மக்களுக்குச் சொல்லக் கட்டளையிட்டிருந்ததுமான எல்லாம் நிறைவேறும் வரை உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கி வந்த குருக்கள் யோர்தானின் நடுவே நின்று கொண்டிருந்தனர். மக்கள் விரைவாய் நதியைக் கடந்தனர். 11 மக்கள் எல்லாரும் அக்கரைக்குச் சென்றபின், ஆண்டவருடைய உடன் படிக்கைப் பெட்டியும் கடந்து சென்றது. குருக்களோ மக்களுக்கு முன் சென்றனர். 12 மேலும், ரூபன் புதல்வரும் காத் புதல்வரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் மோயீசன் தங்களுக்குக் கட்டளையிட்டிருந்த படி ஆயுதம் தாங்கியவராய் இஸ்ராயேல் மக்களுக்கு முன்பாகவே சென்றனர். 13 நாற்பதினாயிரம் வீரர் கூட்டம் கூட்டமாயும் அணி அணியாகவும் எரிக்கோவின் சமவெளிகளிலும் நாட்டுப் புறங்களிலும் நடந்து சென்றனர். 14 அன்று இஸ்ராயேலர் அனைவரின் முன்னிலையில் ஆண்டவர் யோசுவாவை மேன்மைப்படுத்தினார். அதாவது அவர்கள் மோயீசனுக்கு அஞ்சி நடக்க வேண்டும் என்பதே. 15 ஆண்டவர் அவரை நோக்கி, 16 உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிச் செல்லும் ஊருக்குள் யோர்தானிலிருந்து கரை ஏறக் கட்டளையிடு" என்றார். 17 அதன்படி அவரும், "யோர்தானிலிருந்து கரை ஏறுங்கள்" என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். 18 அவர்கள் அதன் படி ஆண்டவரின் உடன்படிக்கைப பெட்டியைத் தூக்கிக்கொண்டு கரை ஏரிக் காய்ந்த தரையில் மிதித்தனர். உடனே யோர்தானின் தண்ணீர் தன் இடத்திருக்குத் திரும்பி வந்து முன் போல் ஓடத் தொடங்கினது. 19 இவ்வாறு, முதல் மாதம் பத்தாம் நாளன்று மக்கள் யோர்தான் நதியைக் கடந்து எரிக்கோவுக்குக் கிழக்கே கல்கலாவில் பாளையம் இறங்கினார்கள். 20 அவர்கள் யோர்தானிலிருந்து கொணர்ந்திருந்த பன்னிரு கற்களையும் யோசுவா கல்கலாவில் நாட்டினார். 21 பின்னார் இஸ்ராயேல் மக்களை நோக்கி, "நாளை உங்கள் பிள்ளைகள் 'இந்தக் கற்கள் எதற்கு?' என்று தங்கள் தந்தையரைக் கேட்கும் போது, 22 நீங்கள் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டியதாவது: 'இஸ்ராயேலர் காய்ந்த தரை வழியாய் இந்த யோர்தானைக் கடந்து வந்தார்கள். 23 ஏனென்றால், ஆண்டவரின் கை எல்லாவற்றினும் வலுத்தது என்று உலக மக்கள் அனைவரும் அறியும் பொருட்டும், நீங்கள் எப்பொழுதுமே உங்கள் ஆண்டவராகிய கடவுளுக்கு அஞ்சி நடக்கும் பொருட்டும், 24 உங்கள் ஆண்டவராகிய கடவுள் முன்பு செங்கடலின் நீரை நாங்கள் கடக்கும் வரை எங்களுக்கு முன்பாக வற்றச் செய்தது போல், (25) யோர்தானின் நீரையும் நீங்கள் அதைக் கடக்கும் வரை உங்களுக்கு முன்பாக வற்றச் செய்தார்" என்றார்.
மொத்தம் 24 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 4 / 24
×

Alert

×

Tamil Letters Keypad References