தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
யோசுவா
1. யோசுவா இரவில் எழுந்து பாளையத்தை அகற்றினார். பின் அவரும் இஸ்ராயேல் மக்களும் சேத்திமிலிருந்து யோர்தானுக்கு வந்து அக்கரையில் மூன்று நாள் தங்கினார்கள்.
2. மூன்று நாள் சென்ற பிறகு பறையறிவிப்போர் பாளையத்தின் நடுவே சென்று, மக்களை நோக்கி,
3. நீங்கள் உங்கள் ஆண்டவராகிய கடவுளுடைய உடன்படிக்கைப் பெட்டியும், அதைத் தூக்கிச்செல்லும் லேவியராகிய குருக்களும் புறப்படக் கண்டவுடன் நீங்களும் எழுந்து அவர்களைப் பின்செல்லுங்கள்.
4. உங்களுக்கும் உடன் படிக்கைப் பெட்டிக்கும் இடையிலே ஈராயிர முழ தூரம் இருக்கட்டும். அப்பொழுது தான், நீங்கள் அதிக தூரம் பார்க்கவும், நீங்கள் செல்லவேண்டிய வழியைக் கண்டறியவும் முடியும். எனெனில், இதற்கு முன் நீங்கள் இவ்வழியே சென்றது கிடையாது. மேலும், நீங்கள் உடன்படிக்கைப் பெட்டியை நெருங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்" என்றார்கள்.
5. யோசுவாவும் மக்களை நோக்கி, "உங்களைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில், நாளை ஆண்டவர் உங்கள் நடுவில் அரியன புரிவார்" எனறார்.
6. பின்னர் குருக்களைப் பார்த்து, "நீங்கள் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு மக்களுக்கு முன் செல்லுங்கள் என்றார். அவர்கள் அவ்விதமே உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக் கொண்டு மக்களுக்கு முன் சென்றனர்.
7. அப்பொழுது ஆண்டவர் யோசுவாவை நோக்கி, "நாம் மோயீசனோடு இருந்தது போல் உன்னோடும் இருக்கிறோம் என்று இஸ்ராயேலர் எல்லாரும் அறியும்படி, இன்று அவர்கள் முன்னிலையில் உன்னை மேன்மைப்படுத்தத் தொடங்குவோம்.
8. நீ உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிச்செல்லும் குருக்களைக் கண்டு பேசி, 'நீங்கள் யோர்தான் தண்ணீரில் சிறிது தூரம் சென்றதும், அங்கே நில்லுங்கள்' என்று அவர்களுக்குக் கட்டளையிடு" என்றார்.
9. அப்போது யோசுவா இஸ்ராயேல் மக்களைப் பார்த்து, "நீங்கள் அருகில் வந்து உங்கள் ஆண்டவராகிய கடவுள் திருவாக்கைக் கேளுங்கள்" என்றார்.
10. மறுபடியும் அவர்களை நோக்கி, "உயிருள்ள ஆண்டவராகிய கடவுள் உங்கள் நடுவே இருக்கிறார் என்பதையும், அவர் கானானையரையும் ஏத்தையரையும் ஏவையரையும் பெரேசையரையும் கெர்சேயரையும் செபுசேயரையும் அமோறையரையும் உங்கள் முன்னிலையில் அழித்துவிடப் போகிறார் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
11. அதற்கு அடையாளமாக, இதோ, அனைத்துலக ஆண்டவரின் உடன்படிக்கைப் பெட்டி உங்களுக்கு முன் யோர்தானைக் கடந்து செல்லும்.
12. எனவே, இஸ்ராயேல் கோத்திரங்களிலே, கோத்திரத்திற்கு ஒருவராகப் பன்னிருவரைத் தேர்ந்தெடுங்கள்.
13. பிறகு அனைத்துலகின் ஆண்டவராகிய கடவுளின் உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிச் செல்லும் குருக்கள் யோர்தானின் தண்ணீரிலே உள்ளங்கால் வைத்து நடப்பர். உடனே நதியின் அடித்தண்ணீர் மறைந்தோட, மேல் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும்" என்றார்.
14. அதன்படியே மக்கள் யோர்தானைக் கடக்கத் தங்கள் கூடாரங்களிலிருந்து புறப்பட்டார்கள். குருக்களோ உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு, அவர்களுக்குமுன் நடந்து சென்றனர்.
15. யோர்தான் நதியில் கால் வைத்தார்கள். (அது அறுவடைக்காலம்; ஆகவே தண்ணீர் கரைபுரண்டு ஒடிக் கொண்டிருந்தது.) அவர்களின் கால்கள் தண்ணீரில் நனையத் தொடங்கின உடனே,
16. மேலேயிருந்து ஓடிவந்த தண்ணீர் ஒன்றாய் கூடி அதோம் நகர் முதல் சற்தான் என்ற இடம் வரை மலை போல் குவிந்து நிற்பதாகக் காணப்பட்டது. கீழேயுள்ள தண்ணீர் முமுவதும் சாக்கடல் என இப்போது அழைக்கப்படும் பாலைவனக் கடலுக்குள் வடிந்தோடிப் போயிற்று.
17. அதற்குள் மக்கள் நதியைக் கடந்து எரிக்கோவுக்கு நேரே செல்லத் தொடங்கினர். ஆண்டவருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து வந்த குருக்களோ, தயாராக ஆற்றின் நடுவே உலர்ந்த தரையில் காலுன்றி நின்றனர். மக்கள் அனைவரும் வறண்டு போயிருந்த ஆற்றின் வழியே நடந்து சென்றனர்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 24 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 3 / 24
யோசுவா 3:26
1 யோசுவா இரவில் எழுந்து பாளையத்தை அகற்றினார். பின் அவரும் இஸ்ராயேல் மக்களும் சேத்திமிலிருந்து யோர்தானுக்கு வந்து அக்கரையில் மூன்று நாள் தங்கினார்கள். 2 மூன்று நாள் சென்ற பிறகு பறையறிவிப்போர் பாளையத்தின் நடுவே சென்று, மக்களை நோக்கி, 3 நீங்கள் உங்கள் ஆண்டவராகிய கடவுளுடைய உடன்படிக்கைப் பெட்டியும், அதைத் தூக்கிச்செல்லும் லேவியராகிய குருக்களும் புறப்படக் கண்டவுடன் நீங்களும் எழுந்து அவர்களைப் பின்செல்லுங்கள். 4 உங்களுக்கும் உடன் படிக்கைப் பெட்டிக்கும் இடையிலே ஈராயிர முழ தூரம் இருக்கட்டும். அப்பொழுது தான், நீங்கள் அதிக தூரம் பார்க்கவும், நீங்கள் செல்லவேண்டிய வழியைக் கண்டறியவும் முடியும். எனெனில், இதற்கு முன் நீங்கள் இவ்வழியே சென்றது கிடையாது. மேலும், நீங்கள் உடன்படிக்கைப் பெட்டியை நெருங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்" என்றார்கள். 5 யோசுவாவும் மக்களை நோக்கி, "உங்களைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில், நாளை ஆண்டவர் உங்கள் நடுவில் அரியன புரிவார்" எனறார். 6 பின்னர் குருக்களைப் பார்த்து, "நீங்கள் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு மக்களுக்கு முன் செல்லுங்கள் என்றார். அவர்கள் அவ்விதமே உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக் கொண்டு மக்களுக்கு முன் சென்றனர். 7 அப்பொழுது ஆண்டவர் யோசுவாவை நோக்கி, "நாம் மோயீசனோடு இருந்தது போல் உன்னோடும் இருக்கிறோம் என்று இஸ்ராயேலர் எல்லாரும் அறியும்படி, இன்று அவர்கள் முன்னிலையில் உன்னை மேன்மைப்படுத்தத் தொடங்குவோம். 8 நீ உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிச்செல்லும் குருக்களைக் கண்டு பேசி, 'நீங்கள் யோர்தான் தண்ணீரில் சிறிது தூரம் சென்றதும், அங்கே நில்லுங்கள்' என்று அவர்களுக்குக் கட்டளையிடு" என்றார். 9 அப்போது யோசுவா இஸ்ராயேல் மக்களைப் பார்த்து, "நீங்கள் அருகில் வந்து உங்கள் ஆண்டவராகிய கடவுள் திருவாக்கைக் கேளுங்கள்" என்றார். 10 மறுபடியும் அவர்களை நோக்கி, "உயிருள்ள ஆண்டவராகிய கடவுள் உங்கள் நடுவே இருக்கிறார் என்பதையும், அவர் கானானையரையும் ஏத்தையரையும் ஏவையரையும் பெரேசையரையும் கெர்சேயரையும் செபுசேயரையும் அமோறையரையும் உங்கள் முன்னிலையில் அழித்துவிடப் போகிறார் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். 11 அதற்கு அடையாளமாக, இதோ, அனைத்துலக ஆண்டவரின் உடன்படிக்கைப் பெட்டி உங்களுக்கு முன் யோர்தானைக் கடந்து செல்லும். 12 எனவே, இஸ்ராயேல் கோத்திரங்களிலே, கோத்திரத்திற்கு ஒருவராகப் பன்னிருவரைத் தேர்ந்தெடுங்கள். 13 பிறகு அனைத்துலகின் ஆண்டவராகிய கடவுளின் உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிச் செல்லும் குருக்கள் யோர்தானின் தண்ணீரிலே உள்ளங்கால் வைத்து நடப்பர். உடனே நதியின் அடித்தண்ணீர் மறைந்தோட, மேல் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும்" என்றார். 14 அதன்படியே மக்கள் யோர்தானைக் கடக்கத் தங்கள் கூடாரங்களிலிருந்து புறப்பட்டார்கள். குருக்களோ உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு, அவர்களுக்குமுன் நடந்து சென்றனர். 15 யோர்தான் நதியில் கால் வைத்தார்கள். (அது அறுவடைக்காலம்; ஆகவே தண்ணீர் கரைபுரண்டு ஒடிக் கொண்டிருந்தது.) அவர்களின் கால்கள் தண்ணீரில் நனையத் தொடங்கின உடனே, 16 மேலேயிருந்து ஓடிவந்த தண்ணீர் ஒன்றாய் கூடி அதோம் நகர் முதல் சற்தான் என்ற இடம் வரை மலை போல் குவிந்து நிற்பதாகக் காணப்பட்டது. கீழேயுள்ள தண்ணீர் முமுவதும் சாக்கடல் என இப்போது அழைக்கப்படும் பாலைவனக் கடலுக்குள் வடிந்தோடிப் போயிற்று. 17 அதற்குள் மக்கள் நதியைக் கடந்து எரிக்கோவுக்கு நேரே செல்லத் தொடங்கினர். ஆண்டவருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து வந்த குருக்களோ, தயாராக ஆற்றின் நடுவே உலர்ந்த தரையில் காலுன்றி நின்றனர். மக்கள் அனைவரும் வறண்டு போயிருந்த ஆற்றின் வழியே நடந்து சென்றனர்.
மொத்தம் 24 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 3 / 24
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References