தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
யோசுவா
1. இஸ்ராயேல் மக்கள் எல்லாரும் சீலோவில் ஒன்று கூடி, அங்கே சாட்சியக் கூடாரத்தை நிறுவினார்கள். நாடு அவர்கள் கைவசமாயிற்று.
2. இஸ்ராயேல் மக்களுள் தங்கள் பங்கை இன்னும் பெறாத ஏழு கோத்திரங்கள் இருந்தன.
3. யோசுவா அவர்களை நோக்கி, "உங்கள் முன்னோரின் ஆண்டவராகிய கடவுள் உங்களுக்கு அளித்துள்ள நாட்டைச் சொந்தமாக்கிக் கொள்ளாது இன்னும் எவ்வளவு காலம் தான் வீணில் கழிப்பீர்கள்?
4. உங்கள் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் மும்மூன்று மனிதரைத் தேர்ந்து கொள்ளுங்கள். நான் அவர்களை அனுப்புவேன். அவர்கள் புறப்பட்டுப்போய் அந்நாட்டைச் சுற்றிப்பார்த்த பின் அதை ஒவ்வொரு கோத்திரத்து மக்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி பகிர்ந்து எழுதி, கண்டதையும் கேட்டதையும் என்னிடம் விவரமாய் எடுத்துச் சொல்வார்கள்.
5. நாட்டை ஏழு பாகமாக உங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ளுங்கள். யூதா வம்சத்தார் தெற்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும், சூசை வம்சத்தார் வடக்கே இருக்கிற தங்கள் எல்லையிலும் இருக்க,
6. அவர்களின் நடுவே இருக்கிற நாட்டை ஏழு பங்காக்கிய பின்பு நீங்கள் இங்கே என்னிடம் வாருங்கள். அப்பொழுது நான் உங்கள் ஆண்டவராகிய கடவுள் திருமுன் உங்களுக்காகத் திருவுளச் சீட்டுப் போடுவேன்.
7. லேவியருக்கு உங்கள் நடுவே பங்கு கிடையாது. ஏனெனில் ஆண்டவருடைய குருக்களாய் இருப்பதே அவர்களுடைய சொத்து. காத்தும் ரூபனும் மனாசேயின் பாதிக்கோத்திரமும் யோர்தானுக்கு அப்பக்கத்திலுள்ள கீழ்ப்புறத்திலே ஆண்டவருடைய அடியானான மோயீசன் தங்களுக்குக் கொடுத்திருந்த தங்கள் பங்கைப் பெற்றாயிற்று" என்றார்.
8. அப்பொழுது அம்மனிதர் எழுந்து புறப்படத் தயாராயிருக்கையில், யோசுவா அவர்களை நோக்கி, "நீங்கள் போய் நாட்டைச் சுற்றிப் பார்த்து அதன் விவரத்தை எழுதிக் கொண்டு என்னிடம் திரும்பி வாருங்கள். அப்பொழுது நான் சீலோவில் ஆண்டவர் திருமுன் உங்களுக்காகத் திருவுளச் சீட்டுப் போடுவேன்" என்று சொல்லி அனுப்பினார்.
9. அம்மனிதர் போய் அந்நாட்டைக் கவனமாய்ச் சுற்றிப் பார்வையிட்ட பின்னர், அதனை ஏழு பங்காக்கி ஒரு நூலில் எழுதிக்கொண்டு சீலோவிலுள்ள பாளையத்தில் இருந்த யோசுவாவிடம் திரும்பி வந்தனர்.
10. அப்பொழுது யோசுவா சீலோவிலேயே ஆண்டவர் திருமுன் திருவுளச்சீட்டுப் போட்டு, இஸ்ராயேல் மக்களுக்கு நாட்டை ஏழு பங்காகப் பிரித்துக் கொடுத்தார்.
11. பெஞ்சமின் புதல்வருக்கு அவர்களின் வம்சங்களின்படியே முதல் சீட்டு விழுந்தது. அவர்கள் சொந்தமாக்கிக் கொண்ட நாடு, யூதா புதல்வருக்கும் சூசையின் புதல்வருக்கும் நடுவில் இருந்தது.
12. அவர்களுடைய வட எல்லை யோர்தானிலிருந்து புறப்பட்டு எரிக்கோவுக்குச் சமீபமாக வடபக்கமாய்ச் சென்று பிறகு மேற்கே மலையேறிப் பேத்தாவென் பாலைவனத்தை அடைந்து,
13. அங்கிருந்து பேத்தல் எனும் லூசாவுக்கு வந்து கீழே பெத்தானுக்குத் தெற்கே இருக்கிற மலையில் அமைந்திருக்கும் அதரோத் ஆதாருக்கு இறங்கிப் போகிறது.
14. அவ்விடமிருந்து எல்லை பெத்தரோனை நோக்கும் ஆபிரிக்குசுக்கு எதிரே இருக்கிற மலைக்குத் தென்புறத்திலே கடலை நோக்கித் திரும்பும்; பிறகு கரியத்பால் என்ற கரியாத்தியாரீமாகிய யூதா புதல்வரின் நகர் அருகே போய் முடியும். இது மேற்கு நோக்கிக் கடல் ஓரமாக அமைந்துள்ளது.
15. தென் எல்லை கரியாத்தியாரீம் அருகிலுலிருந்து கடலை நோக்கிப் போகும். அங்கிருந்து நெப்துவா என்ற நீரூற்றுக்குச் செல்லும்.
16. அங்கிருந்து என்னோம் புதல்வரின் பள்ளத்தாக்கை நோக்கும் மலைப்பாகத்திற்கு இறங்கும். அது வட திசையில் இராபாயீம் பள்ளத்தாக்கின் கடைசியில் இருக்கும். அங்கிருந்து மேற்கே திரும்பி தெற்கே ஜெபுசையருக்குப் பக்கமான கேயென்னம் என்ற என்னோம் பள்ளத்தாக்கிலே போய் ரோகேல் என்ற நீரூற்றிற்கு வந்து சேரும்.
17. அங்கிருந்து வடக்கே போய்ச் சூரிய நீரூற்று எனப்படும் என்செமஸ் ஊருக்குச் சென்று,
18. அதொமிம் ஏற்றத்துக்கு எதிரே இருக்கும் மேடுகளுக்குப் போய் அபன்போவன் என்ற ரூபனின் மகன் போவனின் பாறைக்கு வந்து வடபக்கமாய் நாட்டுப்புறமாகிய சமவெளிகளிலே வந்து சேரும்.
19. பிறகு எல்லை பெத்தாகிலாவுக்கு வடக்கே சென்று யோர்தானின் முகத்துவாரத்திற்குத் தெற்கேயுள்ள உப்புக் கடலின் வடமுனையோடு முடியும்.
20. கிழக்கு எல்லை யோர்தானேயாம். இது பெஞ்சமின் புதல்வருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலும் இருக்கிற எல்லைகளுக்குள்ளான காணியாட்சி
21. பெஞ்சமினுடைய நகர்கள் வருமாறு எரிக்கோ, பெத்தாகிலா, காசீஸ் பள்ளத்தாக்கு,
22. பெத்தராபா, சமராயீன், பேத்தல்,
23. ஆவிம், ஆப்பரா, ஒப்பேரா,
24. வில்லா எமனா, ஓப்னி, காபே என்ற பன்னிரு நகர்களும் அவற்றின் ஊர்களும்.
25. காபாவோன், இரமா,
26. பேரோத், மெஸ்பே, கபாரா,
27. அமோசா, ரேக்கம், ஜாரெபல், தாரேலா,
28. சேலா, எலேப், ஜெபுஸ், அதாவது யெருசலேம், கபாத், கரியாத் என்ற பதினான்கு நகர்களும் அவற்றின் ஊர்களுமாம். பெஞ்சமின் புதல்வருக்கு அவர்களின் வம்சங்களின்படி கிடைத்த பங்கு இதுவே.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 24 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 18 / 24
யோசுவா 18:39
1 இஸ்ராயேல் மக்கள் எல்லாரும் சீலோவில் ஒன்று கூடி, அங்கே சாட்சியக் கூடாரத்தை நிறுவினார்கள். நாடு அவர்கள் கைவசமாயிற்று. 2 இஸ்ராயேல் மக்களுள் தங்கள் பங்கை இன்னும் பெறாத ஏழு கோத்திரங்கள் இருந்தன. 3 யோசுவா அவர்களை நோக்கி, "உங்கள் முன்னோரின் ஆண்டவராகிய கடவுள் உங்களுக்கு அளித்துள்ள நாட்டைச் சொந்தமாக்கிக் கொள்ளாது இன்னும் எவ்வளவு காலம் தான் வீணில் கழிப்பீர்கள்? 4 உங்கள் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் மும்மூன்று மனிதரைத் தேர்ந்து கொள்ளுங்கள். நான் அவர்களை அனுப்புவேன். அவர்கள் புறப்பட்டுப்போய் அந்நாட்டைச் சுற்றிப்பார்த்த பின் அதை ஒவ்வொரு கோத்திரத்து மக்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி பகிர்ந்து எழுதி, கண்டதையும் கேட்டதையும் என்னிடம் விவரமாய் எடுத்துச் சொல்வார்கள். 5 நாட்டை ஏழு பாகமாக உங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ளுங்கள். யூதா வம்சத்தார் தெற்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும், சூசை வம்சத்தார் வடக்கே இருக்கிற தங்கள் எல்லையிலும் இருக்க, 6 அவர்களின் நடுவே இருக்கிற நாட்டை ஏழு பங்காக்கிய பின்பு நீங்கள் இங்கே என்னிடம் வாருங்கள். அப்பொழுது நான் உங்கள் ஆண்டவராகிய கடவுள் திருமுன் உங்களுக்காகத் திருவுளச் சீட்டுப் போடுவேன். 7 லேவியருக்கு உங்கள் நடுவே பங்கு கிடையாது. ஏனெனில் ஆண்டவருடைய குருக்களாய் இருப்பதே அவர்களுடைய சொத்து. காத்தும் ரூபனும் மனாசேயின் பாதிக்கோத்திரமும் யோர்தானுக்கு அப்பக்கத்திலுள்ள கீழ்ப்புறத்திலே ஆண்டவருடைய அடியானான மோயீசன் தங்களுக்குக் கொடுத்திருந்த தங்கள் பங்கைப் பெற்றாயிற்று" என்றார். 8 அப்பொழுது அம்மனிதர் எழுந்து புறப்படத் தயாராயிருக்கையில், யோசுவா அவர்களை நோக்கி, "நீங்கள் போய் நாட்டைச் சுற்றிப் பார்த்து அதன் விவரத்தை எழுதிக் கொண்டு என்னிடம் திரும்பி வாருங்கள். அப்பொழுது நான் சீலோவில் ஆண்டவர் திருமுன் உங்களுக்காகத் திருவுளச் சீட்டுப் போடுவேன்" என்று சொல்லி அனுப்பினார். 9 அம்மனிதர் போய் அந்நாட்டைக் கவனமாய்ச் சுற்றிப் பார்வையிட்ட பின்னர், அதனை ஏழு பங்காக்கி ஒரு நூலில் எழுதிக்கொண்டு சீலோவிலுள்ள பாளையத்தில் இருந்த யோசுவாவிடம் திரும்பி வந்தனர். 10 அப்பொழுது யோசுவா சீலோவிலேயே ஆண்டவர் திருமுன் திருவுளச்சீட்டுப் போட்டு, இஸ்ராயேல் மக்களுக்கு நாட்டை ஏழு பங்காகப் பிரித்துக் கொடுத்தார். 11 பெஞ்சமின் புதல்வருக்கு அவர்களின் வம்சங்களின்படியே முதல் சீட்டு விழுந்தது. அவர்கள் சொந்தமாக்கிக் கொண்ட நாடு, யூதா புதல்வருக்கும் சூசையின் புதல்வருக்கும் நடுவில் இருந்தது. 12 அவர்களுடைய வட எல்லை யோர்தானிலிருந்து புறப்பட்டு எரிக்கோவுக்குச் சமீபமாக வடபக்கமாய்ச் சென்று பிறகு மேற்கே மலையேறிப் பேத்தாவென் பாலைவனத்தை அடைந்து, 13 அங்கிருந்து பேத்தல் எனும் லூசாவுக்கு வந்து கீழே பெத்தானுக்குத் தெற்கே இருக்கிற மலையில் அமைந்திருக்கும் அதரோத் ஆதாருக்கு இறங்கிப் போகிறது. 14 அவ்விடமிருந்து எல்லை பெத்தரோனை நோக்கும் ஆபிரிக்குசுக்கு எதிரே இருக்கிற மலைக்குத் தென்புறத்திலே கடலை நோக்கித் திரும்பும்; பிறகு கரியத்பால் என்ற கரியாத்தியாரீமாகிய யூதா புதல்வரின் நகர் அருகே போய் முடியும். இது மேற்கு நோக்கிக் கடல் ஓரமாக அமைந்துள்ளது. 15 தென் எல்லை கரியாத்தியாரீம் அருகிலுலிருந்து கடலை நோக்கிப் போகும். அங்கிருந்து நெப்துவா என்ற நீரூற்றுக்குச் செல்லும். 16 அங்கிருந்து என்னோம் புதல்வரின் பள்ளத்தாக்கை நோக்கும் மலைப்பாகத்திற்கு இறங்கும். அது வட திசையில் இராபாயீம் பள்ளத்தாக்கின் கடைசியில் இருக்கும். அங்கிருந்து மேற்கே திரும்பி தெற்கே ஜெபுசையருக்குப் பக்கமான கேயென்னம் என்ற என்னோம் பள்ளத்தாக்கிலே போய் ரோகேல் என்ற நீரூற்றிற்கு வந்து சேரும். 17 அங்கிருந்து வடக்கே போய்ச் சூரிய நீரூற்று எனப்படும் என்செமஸ் ஊருக்குச் சென்று, 18 அதொமிம் ஏற்றத்துக்கு எதிரே இருக்கும் மேடுகளுக்குப் போய் அபன்போவன் என்ற ரூபனின் மகன் போவனின் பாறைக்கு வந்து வடபக்கமாய் நாட்டுப்புறமாகிய சமவெளிகளிலே வந்து சேரும். 19 பிறகு எல்லை பெத்தாகிலாவுக்கு வடக்கே சென்று யோர்தானின் முகத்துவாரத்திற்குத் தெற்கேயுள்ள உப்புக் கடலின் வடமுனையோடு முடியும். 20 கிழக்கு எல்லை யோர்தானேயாம். இது பெஞ்சமின் புதல்வருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலும் இருக்கிற எல்லைகளுக்குள்ளான காணியாட்சி 21 பெஞ்சமினுடைய நகர்கள் வருமாறு எரிக்கோ, பெத்தாகிலா, காசீஸ் பள்ளத்தாக்கு, 22 பெத்தராபா, சமராயீன், பேத்தல், 23 ஆவிம், ஆப்பரா, ஒப்பேரா, 24 வில்லா எமனா, ஓப்னி, காபே என்ற பன்னிரு நகர்களும் அவற்றின் ஊர்களும். 25 காபாவோன், இரமா, 26 பேரோத், மெஸ்பே, கபாரா, 27 அமோசா, ரேக்கம், ஜாரெபல், தாரேலா, 28 சேலா, எலேப், ஜெபுஸ், அதாவது யெருசலேம், கபாத், கரியாத் என்ற பதினான்கு நகர்களும் அவற்றின் ஊர்களுமாம். பெஞ்சமின் புதல்வருக்கு அவர்களின் வம்சங்களின்படி கிடைத்த பங்கு இதுவே.
மொத்தம் 24 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 18 / 24
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References