தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
யோசுவா
1. மனாசே கோத்திரத்துக்கும் ஒரு பங்கு கிடைத்தது. ஏனெனில், அவன் சூசைக்குத் தலைப்பிள்ளை. மனாசேயின் மூத்த மகனும் கலாத்தின் தந்தையுமான மாக்கீருக்குக் காலாத்தும் பாசானும் உடைமையாய் இருந்தான். அவன் ஒரு படைவீரன்.
2. மனாசேயின் மற்றப் புதல்வர்களாகிய அபியேசரின் புதல்வர்களுக்கும் எலேக்கின் புதல்வர்களுக்கும் எஸ்ரியேலின் புதல்வர்களுக்கும் செக்கேமின் புதல்வர்களுக்கும் ஏப்பரின் புதல்வர்களுக்கும் சேமிதாவின் புதல்வர்களுக்கும் அவரவருடைய வம்ச முறைப்படி பங்கு கொடுக்கப்பட்டது. தங்கள் வம்சங்களுக்குள்ளே இவர்களே சூசையின் மகனான மனாசேயின் ஆண் மக்களாவர்.
3. ஆனால் மனாசேயின் மகன் மாக்கிருக்குப் பிறந்த காலாதின் புதல்வனான எப்பரின் மகன் சல்பாத்துக்குப் புதல்வர்களே இல்லை. புதல்விகள் மட்டுமே இருந்தனர். மாலா, நோவா, ஏகிலா, மெல்கா, தெர்சா, என்பன அவர்களின் பெயர்களாம்.
4. அவர்கள் குருவாகிய எலெயசாருக்கும் நூனின் மகன் யோசுவாவுக்கும் மக்கட் தலைவர்களுக்கும் முன்பாக வந்து, "எங்கள் சகோதரர் நடுவே எங்களுக்கும் சொத்துக் கொடுக்கவேண்டும் என்று மோயீசன் மூலமாய் ஆண்டவர் கட்டளையிட்டிருக்கிறார்" என்றனர். (யோசுவா) ஆண்டவருடைய கட்டளைக்கிணங்க அவர்களுக்குச் சொத்து கொடுத்தார்.
5. ஆகையால், யோர்தானுக்கு அப்புறத்திலிருக்கும் காலாத் பாசான் என்ற நாடுகளைத் தவிர மனாசேய்க்குத் திருவுளச் சீட்டு விழுந்த படி பத்துப் பங்குகள் கிடைத்தன.
6. ஏனெனில், மனாசேயின் புதல்வியர் அவனுடைய புதல்வர்களுக்குள் சொத்து பெற்றனர். ஆனால், காலாத் நாடு மனாசேயின் மற்றப் புதல்வர்களுக்கு விழுந்த திருவுளச் சீட்டின்படி கிடைத்தது.
7. ஆகையால் மனாசேயின் எல்லை ஆசேர் துவக்கிச் சிக்கேமுக்கு எதிரிலிருக்கிற மக்மேத்தாத் வரை சென்று அங்கிருந்து வடக்கே திரும்பித் தப்புவா ஊற்று என்ற ஊருக்குச் செல்கின்றது.
8. உண்மையில் தப்புவாவின் நாடு மனாசேய்க்குக் கிடைத்தது. தப்புவா என்கிற ஊரோ எபிராயீம் புதல்வரின் கைவசமாயிருந்தது.
9. பிறகு நாணல் பள்ளத்தாக்கின் எல்லை மனாசேயின் நகர்களின் நடுவேயுள்ள எபிராயீம் நகர்களுக்கு அடுத்த ஆற்றுக்குத் தென்திசையில் இறங்கிப் போகின்றது. மனாசேயின் எல்லையோ ஆற்றுக்கு வடக்கேயிருந்து கடல் வரைச் செல்லும்.
10. இவ்வாறு தென்னாடு எபிராயீமுக்குச் சொந்தம், வடநாடு மனாசேய்க்குச் சொந்தம். இரண்டுக்கும் கடலே இறுதி எல்லை. அவ்விரண்டும் கிழக்கே போனால் இசாக்காரின் கோத்திரத்தாரோடும், வடக்கே போனால் ஆசேர் கோத்திரத்தாரோடும் கூடிச் சேரும்.
11. இசாக்காரிலும் ஆசேரிலும் இருந்த மனாசேயின் உடைமையாவது: பெத்சானும் அதைச் சார்ந்த ஊர்களும், ஜெபிலாமும் அதன் ஊர்களும், தோரின் குடிகளும் அவர்களின் ஊர்களும், எந்தோரின் குடிகளும் அவர்களின் ஊர்களும், மகெத்தோவின் குடிகளும் அவர்களின் சிற்றூர்களும், நோப்பேத் நகரின் மூன்றில் ஒரு பகுதியும் ஆகும்.
12. மனாசேயின் புதல்வர் அந்நகர்களை அழிக்க முடியவில்லை. கானானையரோ அவர்களுடைய நாட்டில் குடியேறத் தொடங்கினர்.
13. இஸ்ராயேல் மக்கள் வலிமை பெற்ற பின்னரும் கானானையரைத் தங்களுக்குக் கப்பம் கட்டும் படி செய்தார்களேயொழிய அவர்களைக் கொன்றொழித்து விடவேயில்லை.
14. சூசையின், புதல்வர் யோசுவாவை நோக்கி, "நாங்கள் பலுகிப் பெருகி ஆண்டவரால் ஆசீர்வதிக்கப் பட்டவர்களாய் இருக்க, நீர் எங்களுக்குச் சொந்தமாக ஒரே ஒரு பங்கையும் ஒரே வீதத்தையும் கொடுத்துள்ளது. ஏன்?" என்றனர்.
15. அதற்கு யோசுவா "நீங்கள் பலுகிப் பெருகியிருப்பதாலும், உங்களுக்குரிய எபிராயீம் மலைநாட்டில் நீங்கள் நெருங்கி வாழ்ந்து வருவதாலும், பெரேசையர், இரபாயீமர் வாழும் காட்டுப் பகுதியில் மரங்களை வெட்டி விட்டு உங்களுக்கு இடம் தேடிக்கொள்ளுங்கள்" என்றார்.
16. அதற்கு சூசையின் புதல்வர், "மலைகளுக்கு எப்படிப் போகக்கூடும்? சமவெளியிலிருக்கிற பெத்தாசினிலும் அதன் ஊர்களிலும் பள்ளத்தாக்கின் நடுவே இருக்கிற ஜெஸ்ராயேலிலும் குடியிருக்கும் கானானையர் இருப்பாயுதங்களுடன் தேர்களைப் பயன்படுத்தி வருகிறார்களே" என்றனர்.
17. யோசுவா சூசையுடைய வம்சத்தாராகிய எபிராயீரையும் மனாசேயரையும் நோக்கி, "நீங்கள் பலுகிப் பெருகிவிட்டீர்கள். உங்களுக்கு மிக்க வலிமையும் உண்டு. ஒரு பங்கு உங்களுக்குப் போதாதாதலால்,
18. (17b) நீங்கள் மலை நாட்டுக்குப் போய் மரங்களை வெட்டி நீங்கள் தங்குவதற்கு இடம் தேடிக் கொள்ள வேண்டும். கானானையர் வலிமையுள்ளவர்களாய் இருக்கிறார்கள்; அவர்களுக்கு இருப்பாயுதம் பொருத்தப்பட்ட தேர்களும் உண்டு என்று சொல்லுகிறீர்களே; இருந்த போதிலும் நீங்கள் அவர்களை அங்கிருந்து துரத்தி விட்டால், அவர்கள் நாட்டையும், அதன் அண்டை நாடுகளையும் நீங்கள் உரிமையாக்கிக் கொள்ளலாம்" என்று மறுமொழி சொன்னார்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 24 Chapters, Current Chapter 17 of Total Chapters 24
யோசுவா 17:11

×

Alert

×

tamil Letters Keypad References