தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
யோசுவா
1. யோர்தானின் அக்கரைப் பகுதிக்குக் கிழக்கே ஆர்னோன் ஆறு துவக்கி ஏர்மோன் மலைநாடு வரையிலும், கிழக்கே பாலைவனத்தை நோக்கியிருக்கும் எல்லா நாட்டையும், அதுவரை உள்ள எல்லைக்குள் இருந்த அரசர்களையும் இஸ்ராயேல் மக்கள் முறியடித்து அவர்களுடைய நாடுகளையும் உரிமையாக்கிக் கொண்டார்கள். அவ்வரசர்கள் விவரம் பின்வருமாறு:
2. அமோறையரின் அரசனான செகோன் எசெபோனில் வாழ்ந்து வந்தான். இவனுடைய அரசு ஆர்னோன் ஆற்றங்கரையிலிருந்த ஆரோயேர் நகர் துவக்கி ஆற்றங்கரை நடுவிலுள்ள பள்ளத்தாக்கிலும், பாதிக் கலயாத்திலும், அம்மோன் மக்களுடைய எல்லையாகிய ஜாபோக் என்ற ஆறுவரையும் பரவியிருந்தது.
3. (மற்றொரு பக்கம்) பாலைவனம் முதல் கிழக்கேயுள்ள கெனரோத் கடல் வரையும், பெத்சிமோத்துக்குப் போகும் வழியாய்க் கீழ்த்திசையிலிருக்கிற பாலைவனக் கடலாகிய உப்புக் கடல் வரையும், தென்புறத்தில் அசெரோத் பஸ்காவுக்குத் தணிவாக உள்ள நாடு வரையும் பரவியிருந்தது.
4. பாசானின் அரசன் ஓகு. இவன் இராபாயீம் இனத்தவன். அஸ்தரோத்திலும் எதிராயிலும் வாழ்ந்து வந்தான். இவன் எர்மோன் மலையிலும் சலோக்காவிலும்,
5. ஜெசூரி, மாக்காத்தி, ஏசேபோனின் அரசனான செகோனுடைய எல்லையாகிய பாதிக் கலயாத் வரை ஆண்டு வந்தான்.
6. இவ்விரு அரசர்களை ஆண்டவரின் அடியானான மோயீசனும் இஸ்ராயேல் மக்களும் அவர்கள் நாட்டை ரூபானியருக்கும், காதியருக்கும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும் சொந்தமாகக் கொடுத்திருந்தார்.
7. யோர்தானுக்கு இப்புறத்தில் மேற்றிசையிலுள்ள லிபானின் நாட்டிலிருக்கும் பால்காத் முதல் செயீருக்குப்போகும் வழியாகிய மலைப்பகுதி வரையுள்ள நாட்டை யோசுவாவும் இஸ்ராயேல் மக்களும் கைப்பற்றிய பின், யோசுவா கோத்திரங்களின் படி அதைப் பங்குப் பங்காய்ப் பிரித்து இஸ்ராயேலருக்குச் சொந்தமாகக் கொடுத்துவிட்டார்.
8. அந்த நாட்டிலும், அதன் மலைகளிலும் சமவெளிகளிலும் வெளிநிலங்களிலும் அசெரோத்திலும் பாலைவனத்திலும், தென்புறத்திலும் ஏத்தையர், அமோறையர், கானானையர், பெரேசையர், ஏவையர், ஏபுசேயர் குடியிருந்த நாட்டிலும், யோசுவாவால் தோற்கடிக்கப்பட்ட அரசர்கள் விவரம் பின்வருமாறு:
9. எரிக்கோவின் அரசன் ஒருவன்; பேத்தலுக்குச் சமீபமான ஆயியின் அரசன் ஒருவன்.
10. யெருசலேமின் அரசன் ஒருவன்; எபிரோனின் அரசன் ஒருவன்.
11. யெரிமோத்தின் அரசன் ஒருவன்; லாக்கீசின் அரசன் ஒருவன்.
12. ஏகிலோனின் அரசன் ஒருவன்; காஜேரின் அரசன் ஒருவன்.
13. தாபீரின் அரசன் ஒருவன்; காதேரின் அரசன் ஒருவன்.
14. ஏர்மாவின் அரசன் ஒருவன்; ஏரோத் அரசன் ஒருவன்.
15. லெப்னாவின் அரசன் ஒருவன்; ஓதுலாமின் அரசன் ஒருவன்.
16. மசேதாவின் அரசன் ஒருவன்; பேத்தலின் அரசன் ஒருவன்.
17. தாபுவாவின் அரசன் ஒருவன்; ஓபேரின் அரசன் ஒருவன்.
18. ஆப்போக்கின் அரசன் ஒருவன்; சாரோனின் அரசன் ஒருவன்.
19. மாதொனின் அரசன் ஒருவன்; ஆஜோரின் அரசன் ஒருவன்.
20. செமேரோனின் அரசன் ஒருவன்; ஆக்சாபின் அரசன் ஒருவன்.
21. தேனாக்கின் அரசன் ஒருவன்; மகெதோவின் அரசன் ஒருவன்.
22. காதேசின் அரசன் ஒருவன்; கர்மேலுக்கடுத்த யக்கனானின் அரசன் ஒருவன்.
23. தோர் நகரிலும், தோர் என்னும் நாட்டிலும் ஆண்ட அரசன் ஒருவன்; கல்காவின் இனத்தாருடைய அரசன் ஒருவன்.
24. தேர்சாவின் அரசன் ஒருவன். ஆக இவர்கள் எல்லாரும் முப்பத்தொரு அரசர்களாம்.
மொத்தம் 24 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 24
1 யோர்தானின் அக்கரைப் பகுதிக்குக் கிழக்கே ஆர்னோன் ஆறு துவக்கி ஏர்மோன் மலைநாடு வரையிலும், கிழக்கே பாலைவனத்தை நோக்கியிருக்கும் எல்லா நாட்டையும், அதுவரை உள்ள எல்லைக்குள் இருந்த அரசர்களையும் இஸ்ராயேல் மக்கள் முறியடித்து அவர்களுடைய நாடுகளையும் உரிமையாக்கிக் கொண்டார்கள். அவ்வரசர்கள் விவரம் பின்வருமாறு: 2 அமோறையரின் அரசனான செகோன் எசெபோனில் வாழ்ந்து வந்தான். இவனுடைய அரசு ஆர்னோன் ஆற்றங்கரையிலிருந்த ஆரோயேர் நகர் துவக்கி ஆற்றங்கரை நடுவிலுள்ள பள்ளத்தாக்கிலும், பாதிக் கலயாத்திலும், அம்மோன் மக்களுடைய எல்லையாகிய ஜாபோக் என்ற ஆறுவரையும் பரவியிருந்தது. 3 (மற்றொரு பக்கம்) பாலைவனம் முதல் கிழக்கேயுள்ள கெனரோத் கடல் வரையும், பெத்சிமோத்துக்குப் போகும் வழியாய்க் கீழ்த்திசையிலிருக்கிற பாலைவனக் கடலாகிய உப்புக் கடல் வரையும், தென்புறத்தில் அசெரோத் பஸ்காவுக்குத் தணிவாக உள்ள நாடு வரையும் பரவியிருந்தது. 4 பாசானின் அரசன் ஓகு. இவன் இராபாயீம் இனத்தவன். அஸ்தரோத்திலும் எதிராயிலும் வாழ்ந்து வந்தான். இவன் எர்மோன் மலையிலும் சலோக்காவிலும், 5 ஜெசூரி, மாக்காத்தி, ஏசேபோனின் அரசனான செகோனுடைய எல்லையாகிய பாதிக் கலயாத் வரை ஆண்டு வந்தான். 6 இவ்விரு அரசர்களை ஆண்டவரின் அடியானான மோயீசனும் இஸ்ராயேல் மக்களும் அவர்கள் நாட்டை ரூபானியருக்கும், காதியருக்கும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும் சொந்தமாகக் கொடுத்திருந்தார். 7 யோர்தானுக்கு இப்புறத்தில் மேற்றிசையிலுள்ள லிபானின் நாட்டிலிருக்கும் பால்காத் முதல் செயீருக்குப்போகும் வழியாகிய மலைப்பகுதி வரையுள்ள நாட்டை யோசுவாவும் இஸ்ராயேல் மக்களும் கைப்பற்றிய பின், யோசுவா கோத்திரங்களின் படி அதைப் பங்குப் பங்காய்ப் பிரித்து இஸ்ராயேலருக்குச் சொந்தமாகக் கொடுத்துவிட்டார். 8 அந்த நாட்டிலும், அதன் மலைகளிலும் சமவெளிகளிலும் வெளிநிலங்களிலும் அசெரோத்திலும் பாலைவனத்திலும், தென்புறத்திலும் ஏத்தையர், அமோறையர், கானானையர், பெரேசையர், ஏவையர், ஏபுசேயர் குடியிருந்த நாட்டிலும், யோசுவாவால் தோற்கடிக்கப்பட்ட அரசர்கள் விவரம் பின்வருமாறு: 9 எரிக்கோவின் அரசன் ஒருவன்; பேத்தலுக்குச் சமீபமான ஆயியின் அரசன் ஒருவன். 10 யெருசலேமின் அரசன் ஒருவன்; எபிரோனின் அரசன் ஒருவன். 11 யெரிமோத்தின் அரசன் ஒருவன்; லாக்கீசின் அரசன் ஒருவன். 12 ஏகிலோனின் அரசன் ஒருவன்; காஜேரின் அரசன் ஒருவன். 13 தாபீரின் அரசன் ஒருவன்; காதேரின் அரசன் ஒருவன். 14 ஏர்மாவின் அரசன் ஒருவன்; ஏரோத் அரசன் ஒருவன். 15 லெப்னாவின் அரசன் ஒருவன்; ஓதுலாமின் அரசன் ஒருவன். 16 மசேதாவின் அரசன் ஒருவன்; பேத்தலின் அரசன் ஒருவன். 17 தாபுவாவின் அரசன் ஒருவன்; ஓபேரின் அரசன் ஒருவன். 18 ஆப்போக்கின் அரசன் ஒருவன்; சாரோனின் அரசன் ஒருவன். 19 மாதொனின் அரசன் ஒருவன்; ஆஜோரின் அரசன் ஒருவன். 20 செமேரோனின் அரசன் ஒருவன்; ஆக்சாபின் அரசன் ஒருவன். 21 தேனாக்கின் அரசன் ஒருவன்; மகெதோவின் அரசன் ஒருவன். 22 காதேசின் அரசன் ஒருவன்; கர்மேலுக்கடுத்த யக்கனானின் அரசன் ஒருவன். 23 தோர் நகரிலும், தோர் என்னும் நாட்டிலும் ஆண்ட அரசன் ஒருவன்; கல்காவின் இனத்தாருடைய அரசன் ஒருவன். 24 தேர்சாவின் அரசன் ஒருவன். ஆக இவர்கள் எல்லாரும் முப்பத்தொரு அரசர்களாம்.
மொத்தம் 24 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 24
×

Alert

×

Tamil Letters Keypad References