தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
யோசுவா
1. ஆசோரிலிருந்த அரசன் யாபின் அவற்றையெல்லாம் கேள்விப்பட்ட போது, மாதோனின் அரசன் ஜொபாவுக்கும் செமேரோனின் அரசனுக்கும் அக்சாபின் அரசனுக்கும்,
2. வடக்கேயிருந்த மலைகளிலும் கெனெரோத்துக்குத் தென்புறத்துச் சமவெளியிலும் கடற்புறத்துத் தோர் நாட்டிலுமிருந்த அரசர்களுக்கும்,
3. கிழக்கேயும் மேற்கேயும் குடியிருந்த கனானையருக்கும் மலைநாட்டிலிருந்த அமோறையர், ஏத்தையர், பெரேசையர், எபுசேயருக்கும், மாஸ்பா நாட்டிலுள்ள எர்மோன் மலையின் அடியிலே குடியிருந்த ஏவையருக்கும் ஆட்களை அனுப்பினான்.
4. அவர்கள் எல்லாரும் தங்கள் நாட்டை விட்டுக் கடற்கரை மணலைப்போன்று கணக்கற்றவரைக் கொண்ட சேனைகளோடும் குதிரைகளோடும் தேர்களோடும் புறப்பட்டனர்.
5. இவ்வரசர்கள் எல்லாரும் இஸ்ராயேலருடன் போர்புரிய மேரோம் என்ற ஏரிக்கு அருகே ஒன்று கூடினர்.
6. அப்பொழுது ஆண்டவர் யோசுவாவை நோக்கி, "நீ அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். நாளை இந்நேரத்திலே நாம் அவர்களை எல்லாம் இஸ்ராயேலர் முன்பாக வெட்டுண்டு போகும் படி கையளிப்போம். நீ அவர்களுடைய குதிரைகளின் குதிங்கால் நரம்புகளை அறுத்து அவர்களுடைய தேர்களைச் சுட்டெரிக்கக்கடவாய்" என்றார்.
7. யோசுவாவும் அவரோடு எல்லாப் போர் வீரர்களும் மேரோம் என்ற ஏரிக்கு அருகில் திடீரென வந்து அவர்கள்மேல் பாய்ந்தனர்.
8. ஆண்டவர் இஸ்ராயேலின் கையில் அவர்களை ஒப்படைத்தார். இஸ்ராயேலர் அவர்களை முறியடித்துப் பெரிய சீதோன் வரையும், இதன் கீழ்ப்புறத்திலிருந்த மஸ்பே சமவெளி வரையும் அவர்களைத் துரத்திக்கொண்டு வந்தனர். யோசுவா அவர்களில் ஒருவரும் உயிரோடு இராதபடி எல்லாரையுமே வெட்டி வீழ்த்தினார்.
9. அவர் ஆண்டவரின் கட்டளைப்படி செய்து குதிரைகளின் குதிங்கால் நரம்புகளை அறுத்து அவர்களுடைய தேர்களைத் தீயில் சுட்டெரித்தார்.
10. பிறகு திடீரெனத் திரும்பி, ஆசோர் நகரைப் பிடித்த அதன் அரசனை வாளால் வெட்டினார். ஆசோர் பண்டுதொட்டே அந்த அரசர்களுக்கெல்லாம் தலைநகராக விளங்கி வந்ததது.
11. அதில் இருந்த எல்லா உயிர்களையும் அவர் வாளினால் வெட்டி வீழ்த்தினார். மீதியானது ஒன்றுமில்லை என்று கண்டோர் சொல்லும்படி, ஒருவரையும் உயிரோடிருக்க விடாது யாவற்றையும் அழித்துக் கொன்று குவித்து நகரையும் நெருப்பால் அழித்தார்.
12. சுற்றுப்புறத்திலுமுள்ள எல்லா நகர்களையும் அவற்றின் அரசர்களையும் பிடித்து, ஆண்டவருடைய அடியானான மோயீசன் தமக்குக் கட்டளையிட்டிருந்தபடியே கொன்று குவித்தார்.
13. இப்படியெல்லாம் பாழாக்கினாலும், குன்றுகளிலும் மேடுகளிலும் இருந்த நகர்களை இஸ்ராயேலர் சுட்டெரிக்காமல் காப்பாற்றினர். மிக்க உறுதியாய் அரணிக்கப்பட்டிருந்த ஆசோர் நகருக்கு மட்டும் தீ வைத்து அழித்து விட்டனர்.
14. அந்நகர்களிலுள்ள எல்லா மனிதர்களையும் கொன்றபின் கொள்ளைப் பொருட்களையும் விலங்கினங்களையும் இஸ்ராயேல் மக்கள் தங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொண்டார்கள்.
15. ஆண்டவர் தம் அடியானான மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே, மோயீசனும் யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்தார். யோசுவா அவற்றையெல்லாம் நிறைவேற்றி வந்தார். ஆண்டவர் மோயீசனுக்குச் சொல்லியிருந்தவற்றிலும் கட்டளையிட்டிருந்தவற்றிலும் யோசுவா ஒன்றையும் செய்யாமல் விட்டு விடவில்லை.
16. அதன்படியே அவர் நடந்து மலைநாட்டையும் தென்நாட்டையும் கோசன் என்ற நாட்டையும் சமவெளிகளையும் மேனாட்டையும் இஸ்ராயேல் மலையையும் அதன் வெளிநிலங்களையும்,
17. லீபான் சமவெளியாகச் செயீர் துவக்கி எர்மோன் மலையடியில் இருந்த பாகால்காத் வரையுள்ள மலைகள் செறிந்த நாட்டின் ஒரு பகுதியையும் பிடித்துப் பாழாக்கினார்.
18. யோசுவா நெடுநாளாய் இவ்வரசர்களோடு போர்புரிந்து வந்தார்.
19. கபாவோனில் குடியிருந்த ஏவையரைத் தவிர வேறெந்த நகரும் வலிய இஸ்ராயேலர் கையில் தன்னை ஒப்படைக்கவில்லை. மற்ற எல்லா நகர்களையும் அவர்கள் போர் புரிந்து தான் பிடித்தார்கள்.
20. ஏனெனில் அவ்வூரார் கடின மனதுள்ளவர்களாகி இஸ்ராயேலுக்கு எதிராகப் போர் புரிந்து மடியவேண்டும் என்பதும், இரக்கத்துக்குத் தகுதியற்றவர்களாய் ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடி அழிந்தொழிய வேண்டும் என்பதும் ஆண்டவருடைய திருவுளம்.
21. அக்காலத்தில் யோசுவா வந்து, ஏனாக் புதல்வரைக் கொன்று குவித்தார். அவர்கள் எபிரோனின் மலைகளிலும் தாபீரின் மலைகளிலும் ஆனாபின் மலைகளிலும் யூதாவின் மலைகளிலும் இஸ்ராயேலின் மலைகளிலும் குடியிருந்தார்கள். அவர் அவர்களுடைய நகர்களை அழித்து,
22. இஸ்ராயேல் மக்களின் நாட்டில் ஏனாக்கியரில் ஒருவரை முதலாய் உயிரோடு விட்டு வைக்கவில்லை. ஆயினும், காஜா, கேத், அஜோத் என்ற நகர் மக்களை உயிரோடு விட்டு வைத்தார்.
23. ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டருந்தபடியே யோசுவா நாடு அனைத்தையும் பிடித்து அதை அந்தந்தக் கோத்திரத்திற்கு அமைந்த மக்களின்படியே இஸ்ராயேலருக்குச் சொந்தமாகக் கொடுத்தார். போரின்றி நாடு அமைதியாய் இருந்தது.

பதிவுகள்

மொத்தம் 24 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 11 / 24
1 ஆசோரிலிருந்த அரசன் யாபின் அவற்றையெல்லாம் கேள்விப்பட்ட போது, மாதோனின் அரசன் ஜொபாவுக்கும் செமேரோனின் அரசனுக்கும் அக்சாபின் அரசனுக்கும், 2 வடக்கேயிருந்த மலைகளிலும் கெனெரோத்துக்குத் தென்புறத்துச் சமவெளியிலும் கடற்புறத்துத் தோர் நாட்டிலுமிருந்த அரசர்களுக்கும், 3 கிழக்கேயும் மேற்கேயும் குடியிருந்த கனானையருக்கும் மலைநாட்டிலிருந்த அமோறையர், ஏத்தையர், பெரேசையர், எபுசேயருக்கும், மாஸ்பா நாட்டிலுள்ள எர்மோன் மலையின் அடியிலே குடியிருந்த ஏவையருக்கும் ஆட்களை அனுப்பினான். 4 அவர்கள் எல்லாரும் தங்கள் நாட்டை விட்டுக் கடற்கரை மணலைப்போன்று கணக்கற்றவரைக் கொண்ட சேனைகளோடும் குதிரைகளோடும் தேர்களோடும் புறப்பட்டனர். 5 இவ்வரசர்கள் எல்லாரும் இஸ்ராயேலருடன் போர்புரிய மேரோம் என்ற ஏரிக்கு அருகே ஒன்று கூடினர். 6 அப்பொழுது ஆண்டவர் யோசுவாவை நோக்கி, "நீ அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். நாளை இந்நேரத்திலே நாம் அவர்களை எல்லாம் இஸ்ராயேலர் முன்பாக வெட்டுண்டு போகும் படி கையளிப்போம். நீ அவர்களுடைய குதிரைகளின் குதிங்கால் நரம்புகளை அறுத்து அவர்களுடைய தேர்களைச் சுட்டெரிக்கக்கடவாய்" என்றார். 7 யோசுவாவும் அவரோடு எல்லாப் போர் வீரர்களும் மேரோம் என்ற ஏரிக்கு அருகில் திடீரென வந்து அவர்கள்மேல் பாய்ந்தனர். 8 ஆண்டவர் இஸ்ராயேலின் கையில் அவர்களை ஒப்படைத்தார். இஸ்ராயேலர் அவர்களை முறியடித்துப் பெரிய சீதோன் வரையும், இதன் கீழ்ப்புறத்திலிருந்த மஸ்பே சமவெளி வரையும் அவர்களைத் துரத்திக்கொண்டு வந்தனர். யோசுவா அவர்களில் ஒருவரும் உயிரோடு இராதபடி எல்லாரையுமே வெட்டி வீழ்த்தினார். 9 அவர் ஆண்டவரின் கட்டளைப்படி செய்து குதிரைகளின் குதிங்கால் நரம்புகளை அறுத்து அவர்களுடைய தேர்களைத் தீயில் சுட்டெரித்தார். 10 பிறகு திடீரெனத் திரும்பி, ஆசோர் நகரைப் பிடித்த அதன் அரசனை வாளால் வெட்டினார். ஆசோர் பண்டுதொட்டே அந்த அரசர்களுக்கெல்லாம் தலைநகராக விளங்கி வந்ததது. 11 அதில் இருந்த எல்லா உயிர்களையும் அவர் வாளினால் வெட்டி வீழ்த்தினார். மீதியானது ஒன்றுமில்லை என்று கண்டோர் சொல்லும்படி, ஒருவரையும் உயிரோடிருக்க விடாது யாவற்றையும் அழித்துக் கொன்று குவித்து நகரையும் நெருப்பால் அழித்தார். 12 சுற்றுப்புறத்திலுமுள்ள எல்லா நகர்களையும் அவற்றின் அரசர்களையும் பிடித்து, ஆண்டவருடைய அடியானான மோயீசன் தமக்குக் கட்டளையிட்டிருந்தபடியே கொன்று குவித்தார். 13 இப்படியெல்லாம் பாழாக்கினாலும், குன்றுகளிலும் மேடுகளிலும் இருந்த நகர்களை இஸ்ராயேலர் சுட்டெரிக்காமல் காப்பாற்றினர். மிக்க உறுதியாய் அரணிக்கப்பட்டிருந்த ஆசோர் நகருக்கு மட்டும் தீ வைத்து அழித்து விட்டனர். 14 அந்நகர்களிலுள்ள எல்லா மனிதர்களையும் கொன்றபின் கொள்ளைப் பொருட்களையும் விலங்கினங்களையும் இஸ்ராயேல் மக்கள் தங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொண்டார்கள். 15 ஆண்டவர் தம் அடியானான மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே, மோயீசனும் யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்தார். யோசுவா அவற்றையெல்லாம் நிறைவேற்றி வந்தார். ஆண்டவர் மோயீசனுக்குச் சொல்லியிருந்தவற்றிலும் கட்டளையிட்டிருந்தவற்றிலும் யோசுவா ஒன்றையும் செய்யாமல் விட்டு விடவில்லை. 16 அதன்படியே அவர் நடந்து மலைநாட்டையும் தென்நாட்டையும் கோசன் என்ற நாட்டையும் சமவெளிகளையும் மேனாட்டையும் இஸ்ராயேல் மலையையும் அதன் வெளிநிலங்களையும், 17 லீபான் சமவெளியாகச் செயீர் துவக்கி எர்மோன் மலையடியில் இருந்த பாகால்காத் வரையுள்ள மலைகள் செறிந்த நாட்டின் ஒரு பகுதியையும் பிடித்துப் பாழாக்கினார். 18 யோசுவா நெடுநாளாய் இவ்வரசர்களோடு போர்புரிந்து வந்தார். 19 கபாவோனில் குடியிருந்த ஏவையரைத் தவிர வேறெந்த நகரும் வலிய இஸ்ராயேலர் கையில் தன்னை ஒப்படைக்கவில்லை. மற்ற எல்லா நகர்களையும் அவர்கள் போர் புரிந்து தான் பிடித்தார்கள். 20 ஏனெனில் அவ்வூரார் கடின மனதுள்ளவர்களாகி இஸ்ராயேலுக்கு எதிராகப் போர் புரிந்து மடியவேண்டும் என்பதும், இரக்கத்துக்குத் தகுதியற்றவர்களாய் ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடி அழிந்தொழிய வேண்டும் என்பதும் ஆண்டவருடைய திருவுளம். 21 அக்காலத்தில் யோசுவா வந்து, ஏனாக் புதல்வரைக் கொன்று குவித்தார். அவர்கள் எபிரோனின் மலைகளிலும் தாபீரின் மலைகளிலும் ஆனாபின் மலைகளிலும் யூதாவின் மலைகளிலும் இஸ்ராயேலின் மலைகளிலும் குடியிருந்தார்கள். அவர் அவர்களுடைய நகர்களை அழித்து, 22 இஸ்ராயேல் மக்களின் நாட்டில் ஏனாக்கியரில் ஒருவரை முதலாய் உயிரோடு விட்டு வைக்கவில்லை. ஆயினும், காஜா, கேத், அஜோத் என்ற நகர் மக்களை உயிரோடு விட்டு வைத்தார். 23 ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டருந்தபடியே யோசுவா நாடு அனைத்தையும் பிடித்து அதை அந்தந்தக் கோத்திரத்திற்கு அமைந்த மக்களின்படியே இஸ்ராயேலருக்குச் சொந்தமாகக் கொடுத்தார். போரின்றி நாடு அமைதியாய் இருந்தது.
மொத்தம் 24 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 11 / 24
×

Alert

×

Tamil Letters Keypad References