தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
யோவான்
1. இந்நிகழ்ச்சிக்குப்பின், இயேசு கலிலேயாவிலே நடமாடி வந்தார். யூதர்கள் அவரைக் கொல்லத் தேடியதால் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை.
2. யூதர்களின் கூடாரத் திருவிழா அண்மையிலிருந்தது.
3. அவருடைய சகோதரர் அவரை நோக்கி, " ' யூதேயாவிலுள்ள உம் சீடரும் நீர் புரியும் செயல்களைக் காணும்படி, இவ்விடத்தைவிட்டு அங்கே செல்லும்.
4. ஏனெனில், பொதுமக்கள் கவனத்தைக் கவர விரும்புகிறவன் எவனும், மறைவில் செயலாற்றுவதில்லை. நீர் இதெல்லாம் செய்துவருவதால், உம்மை உலகிற்கு வெளிப்படுத்தலாமே! " என்றனர்.
5. ஏனெனில், அவருடைய சகோதரர்கள்கூட அவரில் விசுவாசங்கொள்ளவில்லை.
6. இயேசு அவர்களை நோக்கி, "எனக்குக் குறித்த நேரம் இன்னும் வரவில்லை. உங்களுக்கோ எந்த நேரமும் ஏற்ற நேரம்தான்.
7. உலகம் உங்களை வெறுக்கமுடியாது, என்னையோ வெறுக்கிறது. ஏனெனில், அதனுடைய செயல்கள் தீயவை என்பதற்கு நான் சாட்சியாய் நிற்கிறேன்.
8. இத்திருவிழாவிற்கு நீங்கள் போங்கள், நான் வரவில்லை. எனக்குக் குறித்த காலம் இன்னும் நிறைவாகவில்லை" என்றார்.
9. இப்படிச் சொல்லிக் கலிலேயாவிலே தங்கிவிட்டார்.
10. அவருடைய சகோதரர் திருவிழாவுக்குப் போனபின், அவர் வெளிப்படையாகப் போகாமல் மறைவாகச் சென்றார்.
11. திருவிழாவின்போது யூதர், "அவர் எங்கே ?" என்று அவரைத் தேடினர்.
12. சிலர், "அவர் நல்லவர்" என்றனர். சிலரோ, "இல்லை, அவன் மக்களை ஏமாற்றுகிறான்" என்றனர். மக்கள் கூடியிருந்த இடங்களிலெல்லாம் இப்படி அவரைப்பற்றி முணுமுணுவென்று பேசிக்கொண்டனர்.
13. யூதர்களுக்கு அஞ்சி அவரைப்பற்றி எவனும் வெளிப்படையாகப் பேசவில்லை.
14. பாதித் திருவிழா முடிந்தபின், இயேசு கோயிலுக்குச் சென்று போதிக்கத் தொடங்கினார்.
15. அதைக் கேட்ட யூதர்கள், "யாரிடமும் பாடம் கேட்காத இவனுக்கு இவ்வளவு அறிவு எப்படி வந்தது ?" என்று வியந்தார்கள்.
16. இயேசுவோ, "என் போதனை என்னுடையதன்று, என்னை அனுப்பினவருடையதே.
17. அவருடைய விருப்பத்தின்படி நடக்க விரும்புகிறவன் இப்போதனை கடவுளிடமிருந்து வருகிறதா, நானாகவே இதைச் சொல்லுகிறேனா என்பதை அறிந்துகொள்வான்.
18. தானாகவே பேசுகிறவன் தன் சொந்த மகிமையைத் தேடுகிறான். தன்னை அனுப்பினவருடைய மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவன்; அவனிடத்தில் அநீதியில்லை.
19. மோயீசனிடமிருந்து வந்த திருச்சட்டம் உங்களுக்கில்லையா ? இருப்பினும், உங்களுள் யாரும் அச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்லை!
20. "நீங்கள் என்னைக் கொல்லத் தேடுவானேன் ?" என்றார். அதற்கு மக்கள், "உனக்குப் பேய்பிடித்துவிட்டதா! எவன் உன்னைக் கொல்லத்தேடுகிறான் ?" என்றனர்.
21. அதற்கு இயேசு மறுமொழியாக, "ஓய்வுநாளில் நான் செய்த ஒரே ஒரு செயலுக்காக நீங்கள் அனைவரும் வியப்புறுகிறீர்கள்.
22. மோயீசன் உங்களுக்கு விருத்தசேதனக் கட்டளை தந்தாரே. - உண்மையில், அதைத் தந்தவர் மோயீசன் அல்லர்; அது நம் முன்னோர் காலத்திலிருந்தே உள்ளது. - அந்த விருத்தசேதனத்தை நீங்கள் ஓய்வுநாளில்கூடச் செய்கிறதில்லையா ?
23. மோயீசன் தந்த அச்சட்டத்தை மீறாதிருக்கும்படி ஓய்வுநாளிலும் நீங்கள் விருத்தசேதனம் செய்திருக்கிறீர்களென்றால், அதே ஓய்வு நாளில் நான் முழு மனிதனையும் குணமாக்கினேன் என்பதற்காக என்மேல் நீங்கள் கோபம் கொள்வதேன் ?
24. வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பிடாதீர்கள்; நீதியின்படியே தீர்ப்பிடுங்கள்" என்றார்.
25. யெருசலேம் நகரத்தார் சிலர், "இவரையன்றோ கொல்லத் தேடுகின்றனர் ?
26. இதோ! இவர் வெளிப்படையாய்ப் பேசுகிறார். யாரும் ஒன்றும் சொல்லக் காணோமே! இவர் மெசியாவென்று தலைவர்கள் உண்மையிலே அறிந்துகொண்டார்களோ ?
27. மெசியா தோன்றும்பொழுதோ, அவர் எங்கிருந்து வருவார் என்பது ஒருவனுக்கும் தெரியாது. ஆனால், இவர் எங்கிருந்து வருகிறார் என்பது நமக்குத் தெரியுமே" என்றனர்.
28. ஆகவே, இயேசு கோயிலிலே போதிக்கையில் உரக்கச் சொன்னதாவது: "ஆம், ஆம், என்னை அறிவீர்கள்தான். நான் எங்கிருந்து வருகிறேன் என்பதையும் அறிவீர்கள். ஆயினும், நானாகவே வரவில்லை: என்னை அனுப்பினவரோ உண்மையுள்ளவர். நீங்கள் அவரை அறியவில்லை.
29. நானோ அவரை அறிவேன். ஏனெனில், நான் அவரிடமிருந்து வருகிறேன்; என்னை அனுப்பியவரும் அவரே."
30. இதைக் கேட்டு, யூதர்கள் அவரைப் பிடிக்க நினைத்தனர். ஆனால், அவருடைய நேரம் இன்னும் வராததால், எவனும் அவரைத் தொடவில்லை.
31. கூட்டத்தில் பலர், "மெசியா வரும்பொழுது இவர் செய்வதைவிட அதிக அருங்குறிகளைச் செய்வாரா ?" என்று சொல்லிக்கொண்டு, அவரில் விசுவாசங்கொண்டனர்.
32. அவரைப்பற்றி மக்கள் இவ்வாறு முணுமுணுத்துப் பேசுவதைப் பரிசேயர்கள் கேள்வியுற்றனர். ஆகையால் அவர்களும் தலைமைக் குருக்களும் அவரைப் பிடிக்கக் காவலர்களை அனுப்பினர்.
33. இயேசுவோ: "இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். பின், என்னை அனுப்பியவரிடம் செல்வேன்.
34. என்னைத் தேடுவீர்கள், ஆனால் காணமாட்டீர்கள். நானிருக்கும் இடத்திற்கு உங்களால் வர முடியாது" என்றார்.
35. அப்போது யூதர்கள், "நாம் அவனைக் காணமுடியாதவாறு எங்கே செல்லப்போகிறான்? கிரேக்கர்களிடையே சிதறிவாழ்வோரிடம் போய், கிரேக்கர்களுக்குப் போதிக்கப் போகிறானோ?
36. ' என்னைத் தேடுவீர்கள், ஆனால் காணமாட்டீர்கள். நான் இருக்குமிடத்திற்கு, உங்களால் வரமுடியாது ' என்று சொன்னானே; இதற்குப் பொருள் என்ன ?" என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டனர்.
37. திருவிழாவின் இறுதியான பெருநாளிலே, இயேசு எழுந்துநின்று உரத்த குரலில், "யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும்! என்னில் விசுவாசங்கொள்பவன் குடிக்கட்டும்!
38. மறைநூல் கூறுவதுபோல், ''அவனுடைய உள்ளத்திலிருந்து உயிருள்ள நீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்" என்றார்.
39. தம்மில் விசுவாசங்கொள்வோர் பெறப்போகும் ஆவியானவரைக்குறித்து, அவர் இவ்வாறு சொன்னார். ஆவியானவரோ இன்னும் அருளப்படவில்லை. ஏனெனில், இயேசு இன்னும் மகிமைபெறவில்லை.
40. கூட்டத்தில் சிலர் இந்த வார்த்தைகளைக் கேட்டு, ' உண்மையாகவே இவர்தான் வரப்போகும் இறைவாக்கினர் ' என்றனர்.
41. சிலர், ' இவர் மெசியா ' என்றனர். வேறு சிலரோ, ' கலிலேயா நாட்டிலிருந்தா மெசியா வருவார் ?
42. தாவீதின் மரபிலிருந்தும், தாவீது குடியிருந்த பெத்லெகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என மறைநூல் கூறவில்லையா ? ' என்றனர்.
43. இப்படி அவரைக்குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது.
44. அவர்களுள் சிலர் அவரைப் பிடிக்க விரும்பினர். ஆனால், எவனும் அவரைத் தொடவில்லை.
45. தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அனுப்பிய காவலர்கள் திரும்பி வந்தார்கள். அவர்கள் காவலரிடம், "அவனை ஏன் பிடித்துக்கொண்டு வரவில்லை?" என்று கேட்டனர்.
46. காவலரோ, "எவரும் அவரைப்போல் என்றுமே பேசினதில்லை! என்றனர்.
47. அதற்குப் பரிசேயர்கள், "நீங்களும் ஏமாந்துபோனீர்களோ ?
48. தலைவர்களிலாவது பரிசேயர்களிலாவது அவனை விசுவசித்தவர்கள் யாரேனும் உண்டா ?
49. திருச்சட்டமறியாத இக்கூட்டமோ சாபத்துக்குள்ளானது" என்றார்கள்.
50. அவர்களுள் ஒருவர் நிக்கொதேமு. - அவரே முன்னொரு நாள் இயேசுவிடம் வந்தவர். - அவர் அவர்களைப் பார்த்து,
51. "ஒருவன் செய்கிறது இன்னதென்று முதலில் அவனது வாக்குமூலத்தைக் கேட்டு அறிந்துகொள்ளாமல், நம் சட்டம் அவனுக்குத் தீர்ப்பளிக்குமா ?" என்றார்.
52. அவர்களோ அவரிடம், "நீரும் கலிலேயரோ? மறைநூலை ஆராய்ந்துபாரும். கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் எவரும் தோன்றுவதில்லை என்பது தெரியவரும்" என்றனர்.
53. அனைவரும் வீடு திரும்பினர்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 21 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 7 / 21
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
யோவான் 7:54
1 இந்நிகழ்ச்சிக்குப்பின், இயேசு கலிலேயாவிலே நடமாடி வந்தார். யூதர்கள் அவரைக் கொல்லத் தேடியதால் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை. 2 யூதர்களின் கூடாரத் திருவிழா அண்மையிலிருந்தது. 3 அவருடைய சகோதரர் அவரை நோக்கி, " ' யூதேயாவிலுள்ள உம் சீடரும் நீர் புரியும் செயல்களைக் காணும்படி, இவ்விடத்தைவிட்டு அங்கே செல்லும். 4 ஏனெனில், பொதுமக்கள் கவனத்தைக் கவர விரும்புகிறவன் எவனும், மறைவில் செயலாற்றுவதில்லை. நீர் இதெல்லாம் செய்துவருவதால், உம்மை உலகிற்கு வெளிப்படுத்தலாமே! " என்றனர். 5 ஏனெனில், அவருடைய சகோதரர்கள்கூட அவரில் விசுவாசங்கொள்ளவில்லை. 6 இயேசு அவர்களை நோக்கி, "எனக்குக் குறித்த நேரம் இன்னும் வரவில்லை. உங்களுக்கோ எந்த நேரமும் ஏற்ற நேரம்தான். 7 உலகம் உங்களை வெறுக்கமுடியாது, என்னையோ வெறுக்கிறது. ஏனெனில், அதனுடைய செயல்கள் தீயவை என்பதற்கு நான் சாட்சியாய் நிற்கிறேன். 8 இத்திருவிழாவிற்கு நீங்கள் போங்கள், நான் வரவில்லை. எனக்குக் குறித்த காலம் இன்னும் நிறைவாகவில்லை" என்றார். 9 இப்படிச் சொல்லிக் கலிலேயாவிலே தங்கிவிட்டார். 10 அவருடைய சகோதரர் திருவிழாவுக்குப் போனபின், அவர் வெளிப்படையாகப் போகாமல் மறைவாகச் சென்றார். 11 திருவிழாவின்போது யூதர், "அவர் எங்கே ?" என்று அவரைத் தேடினர். 12 சிலர், "அவர் நல்லவர்" என்றனர். சிலரோ, "இல்லை, அவன் மக்களை ஏமாற்றுகிறான்" என்றனர். மக்கள் கூடியிருந்த இடங்களிலெல்லாம் இப்படி அவரைப்பற்றி முணுமுணுவென்று பேசிக்கொண்டனர். 13 யூதர்களுக்கு அஞ்சி அவரைப்பற்றி எவனும் வெளிப்படையாகப் பேசவில்லை. 14 பாதித் திருவிழா முடிந்தபின், இயேசு கோயிலுக்குச் சென்று போதிக்கத் தொடங்கினார். 15 அதைக் கேட்ட யூதர்கள், "யாரிடமும் பாடம் கேட்காத இவனுக்கு இவ்வளவு அறிவு எப்படி வந்தது ?" என்று வியந்தார்கள். 16 இயேசுவோ, "என் போதனை என்னுடையதன்று, என்னை அனுப்பினவருடையதே. 17 அவருடைய விருப்பத்தின்படி நடக்க விரும்புகிறவன் இப்போதனை கடவுளிடமிருந்து வருகிறதா, நானாகவே இதைச் சொல்லுகிறேனா என்பதை அறிந்துகொள்வான். 18 தானாகவே பேசுகிறவன் தன் சொந்த மகிமையைத் தேடுகிறான். தன்னை அனுப்பினவருடைய மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவன்; அவனிடத்தில் அநீதியில்லை. 19 மோயீசனிடமிருந்து வந்த திருச்சட்டம் உங்களுக்கில்லையா ? இருப்பினும், உங்களுள் யாரும் அச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்லை! 20 "நீங்கள் என்னைக் கொல்லத் தேடுவானேன் ?" என்றார். அதற்கு மக்கள், "உனக்குப் பேய்பிடித்துவிட்டதா! எவன் உன்னைக் கொல்லத்தேடுகிறான் ?" என்றனர். 21 அதற்கு இயேசு மறுமொழியாக, "ஓய்வுநாளில் நான் செய்த ஒரே ஒரு செயலுக்காக நீங்கள் அனைவரும் வியப்புறுகிறீர்கள். 22 மோயீசன் உங்களுக்கு விருத்தசேதனக் கட்டளை தந்தாரே. - உண்மையில், அதைத் தந்தவர் மோயீசன் அல்லர்; அது நம் முன்னோர் காலத்திலிருந்தே உள்ளது. - அந்த விருத்தசேதனத்தை நீங்கள் ஓய்வுநாளில்கூடச் செய்கிறதில்லையா ? 23 மோயீசன் தந்த அச்சட்டத்தை மீறாதிருக்கும்படி ஓய்வுநாளிலும் நீங்கள் விருத்தசேதனம் செய்திருக்கிறீர்களென்றால், அதே ஓய்வு நாளில் நான் முழு மனிதனையும் குணமாக்கினேன் என்பதற்காக என்மேல் நீங்கள் கோபம் கொள்வதேன் ? 24 வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பிடாதீர்கள்; நீதியின்படியே தீர்ப்பிடுங்கள்" என்றார். 25 யெருசலேம் நகரத்தார் சிலர், "இவரையன்றோ கொல்லத் தேடுகின்றனர் ? 26 இதோ! இவர் வெளிப்படையாய்ப் பேசுகிறார். யாரும் ஒன்றும் சொல்லக் காணோமே! இவர் மெசியாவென்று தலைவர்கள் உண்மையிலே அறிந்துகொண்டார்களோ ? 27 மெசியா தோன்றும்பொழுதோ, அவர் எங்கிருந்து வருவார் என்பது ஒருவனுக்கும் தெரியாது. ஆனால், இவர் எங்கிருந்து வருகிறார் என்பது நமக்குத் தெரியுமே" என்றனர். 28 ஆகவே, இயேசு கோயிலிலே போதிக்கையில் உரக்கச் சொன்னதாவது: "ஆம், ஆம், என்னை அறிவீர்கள்தான். நான் எங்கிருந்து வருகிறேன் என்பதையும் அறிவீர்கள். ஆயினும், நானாகவே வரவில்லை: என்னை அனுப்பினவரோ உண்மையுள்ளவர். நீங்கள் அவரை அறியவில்லை. 29 நானோ அவரை அறிவேன். ஏனெனில், நான் அவரிடமிருந்து வருகிறேன்; என்னை அனுப்பியவரும் அவரே." 30 இதைக் கேட்டு, யூதர்கள் அவரைப் பிடிக்க நினைத்தனர். ஆனால், அவருடைய நேரம் இன்னும் வராததால், எவனும் அவரைத் தொடவில்லை. 31 கூட்டத்தில் பலர், "மெசியா வரும்பொழுது இவர் செய்வதைவிட அதிக அருங்குறிகளைச் செய்வாரா ?" என்று சொல்லிக்கொண்டு, அவரில் விசுவாசங்கொண்டனர். 32 அவரைப்பற்றி மக்கள் இவ்வாறு முணுமுணுத்துப் பேசுவதைப் பரிசேயர்கள் கேள்வியுற்றனர். ஆகையால் அவர்களும் தலைமைக் குருக்களும் அவரைப் பிடிக்கக் காவலர்களை அனுப்பினர். 33 இயேசுவோ: "இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். பின், என்னை அனுப்பியவரிடம் செல்வேன். 34 என்னைத் தேடுவீர்கள், ஆனால் காணமாட்டீர்கள். நானிருக்கும் இடத்திற்கு உங்களால் வர முடியாது" என்றார். 35 அப்போது யூதர்கள், "நாம் அவனைக் காணமுடியாதவாறு எங்கே செல்லப்போகிறான்? கிரேக்கர்களிடையே சிதறிவாழ்வோரிடம் போய், கிரேக்கர்களுக்குப் போதிக்கப் போகிறானோ? 36 ' என்னைத் தேடுவீர்கள், ஆனால் காணமாட்டீர்கள். நான் இருக்குமிடத்திற்கு, உங்களால் வரமுடியாது ' என்று சொன்னானே; இதற்குப் பொருள் என்ன ?" என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டனர். 37 திருவிழாவின் இறுதியான பெருநாளிலே, இயேசு எழுந்துநின்று உரத்த குரலில், "யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும்! என்னில் விசுவாசங்கொள்பவன் குடிக்கட்டும்! 38 மறைநூல் கூறுவதுபோல், ''அவனுடைய உள்ளத்திலிருந்து உயிருள்ள நீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்" என்றார். 39 தம்மில் விசுவாசங்கொள்வோர் பெறப்போகும் ஆவியானவரைக்குறித்து, அவர் இவ்வாறு சொன்னார். ஆவியானவரோ இன்னும் அருளப்படவில்லை. ஏனெனில், இயேசு இன்னும் மகிமைபெறவில்லை. 40 கூட்டத்தில் சிலர் இந்த வார்த்தைகளைக் கேட்டு, ' உண்மையாகவே இவர்தான் வரப்போகும் இறைவாக்கினர் ' என்றனர். 41 சிலர், ' இவர் மெசியா ' என்றனர். வேறு சிலரோ, ' கலிலேயா நாட்டிலிருந்தா மெசியா வருவார் ? 42 தாவீதின் மரபிலிருந்தும், தாவீது குடியிருந்த பெத்லெகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என மறைநூல் கூறவில்லையா ? ' என்றனர். 43 இப்படி அவரைக்குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது. 44 அவர்களுள் சிலர் அவரைப் பிடிக்க விரும்பினர். ஆனால், எவனும் அவரைத் தொடவில்லை. 45 தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அனுப்பிய காவலர்கள் திரும்பி வந்தார்கள். அவர்கள் காவலரிடம், "அவனை ஏன் பிடித்துக்கொண்டு வரவில்லை?" என்று கேட்டனர். 46 காவலரோ, "எவரும் அவரைப்போல் என்றுமே பேசினதில்லை! என்றனர். 47 அதற்குப் பரிசேயர்கள், "நீங்களும் ஏமாந்துபோனீர்களோ ? 48 தலைவர்களிலாவது பரிசேயர்களிலாவது அவனை விசுவசித்தவர்கள் யாரேனும் உண்டா ? 49 திருச்சட்டமறியாத இக்கூட்டமோ சாபத்துக்குள்ளானது" என்றார்கள். 50 அவர்களுள் ஒருவர் நிக்கொதேமு. - அவரே முன்னொரு நாள் இயேசுவிடம் வந்தவர். - அவர் அவர்களைப் பார்த்து, 51 "ஒருவன் செய்கிறது இன்னதென்று முதலில் அவனது வாக்குமூலத்தைக் கேட்டு அறிந்துகொள்ளாமல், நம் சட்டம் அவனுக்குத் தீர்ப்பளிக்குமா ?" என்றார். 52 அவர்களோ அவரிடம், "நீரும் கலிலேயரோ? மறைநூலை ஆராய்ந்துபாரும். கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் எவரும் தோன்றுவதில்லை என்பது தெரியவரும்" என்றனர். 53 அனைவரும் வீடு திரும்பினர்.
மொத்தம் 21 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 7 / 21
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References