தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
யோவான்
1. இதன்பின் யூதர்களின் திருவிழா வந்தது. இயேசுவும் யெருசலேமுக்குச் சென்றார்.
2. யெருசலேமில் ' ஆட்டுக்குள ' த்தைச் சுற்றி ஐந்து மண்டபங்கள் அமைந்த ஒரு கட்டடம் உண்டு. அதற்கு எபிரேய மொழியில் பெத்சாயிதா என்பது பெயர்.
3. இம்மண்டபங்களில் - குருடர்கள், நொண்டிகள், வாதநோயாளிகள் முதலிய - பிணியாளிகள் எல்லாரும் கூட்டமாய்ப் படுத்துக்கிடப்பர். இவர்கள் குளத்து நீர் கலங்குவதற்காகக் காத்திருப்பார்கள்.
4. ஏனெனில், ஆண்டவரின் தூதர் அக்குளத்தினுள் சிலவேளைகளில் இறங்கித் தண்ணீரைக் கலக்குவார். தண்ணீர் கலங்கியபின் முதலில் இறங்குபவன், எவ்வித நோயுற்றிருந்தாலும் குணமடைவான்.
5. முப்பத்தெட்டு ஆண்டுகளாகப் பிணியுற்றிருந்த ஒருவன் அங்கே படுத்துக்கிடந்தான்.
6. இயேசு அவனைக் கண்டு, அவன் வெகுகாலமாக அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து, "குணமாக விரும்புகிறாயா ?" என்று அவனைக் கேட்டார்.
7. பிணியாளி, "ஆண்டவரே, தண்ணீர் கலங்கும்போது, என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆளில்லை; நான் போவதற்குமுன் வேறொருவன் இறங்கிவிடுகிறான்" என்றான்.
8. இயேசு அவனை நோக்கி, "எழுந்து, படுக்கையைத் தூக்கிக்கொண்டு நட" என்றார்.
9. உடனே அவன் குணமடைந்து, தன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு நடக்கலானான்.
10. அன்று ஓய்வுநாள். குணம்பெற்றவனை யூதர்கள் நோக்கி, "இன்று ஓய்வுநாள், படுக்கையைத் தூக்கிச்செல்வது முறையன்று" என்றார்கள்.
11. அவன் மறுமொழியாக, "என்னைக் குணமாக்கியவரே படுக்கையைத் தூக்கிக்கொண்டு நடக்கச்சொன்னார்" என்றான்.
12. அவர்கள் அவனிடம், " படுக்கையைத் தூக்கிக்கொண்டு நடக்கச்சொன்னவர் யார்? " என்று வினவினர்.
13. குணமானவனுக்கோ அவர் யாரென்று தெரியவில்லை. ஏனெனில் அவ்விடத்தில் கூட்டமாயிருந்ததால், இயேசு அங்கிருந்து ஏற்கெனவே நழுவிப் போய்விட்டார்.
14. பின்பு இயேசு அவனைக் கோயிலில் கண்டு, "இதோ! குணம் அடைந்துள்ளாய்; இதிலும் கேடானதெதுவும் உனக்கு நேராதபடி இனி பாவம் செய்யாதே" என்றார்.
15. அவன் போய், தன்னைக் குணமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான்.
16. இயேசு இதை ஓய்வுநாளில் செய்ததற்காக யூதர்கள் அவருக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கினர்.
17. இயேசு அவர்களிடம், "என் தந்தை இந்நேரம்வரை செயலாற்றுகிறார். நானும் செயலாற்றுகிறேன்" என்றார்.
18. இப்படிச் சொன்னதால், யூதர்கள் அவரைக் கொல்ல வேண்டுமென்று மேலும் உறுதிபூண்டனர். ஏனெனில், ஓய்வுநாள் சட்டத்தை மீறுவதோடு கடவுளைத் தம் சொந்தத் தந்தை என்று சொல்லி, தம்மைக் கடவுளுக்குச் சமமாக்கிவந்தார்.
19. இயேசு அவர்களை நோக்கிக் கூறியதாவது: "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: மகன் தாமாகவே ஒன்றும் செய்ய முடியாது. தந்தை செய்யக் காண்கிறதையே செய்வார். எதெதை அவர் செய்கிறாரோ, அதையெல்லாம் மகனும் அவ்வாறே செய்கிறார்.
20. தந்தை மகனை நேசித்து, தாம் செய்வதெல்லாம் அவருக்குக் காட்டுகிறார். இவற்றிலும் பெரிய செயல்களை அவருக்குக் காட்டுவார்; அவற்றைக் கண்டு நீங்களும் வியப்புறுவீர்கள்.
21. தந்தை இறந்தவர்களை எழுப்பி, அவர்களுக்கு உயிரளிப்பதுபோல மகனும் தாம் விரும்பியவர்க்கு உயிரளிக்கின்றார்.
22. தந்தை எவனுக்கும் தீர்ப்பிடுவதில்லை.
23. எல்லாரும் தம்மை மதிப்பதுபோல மகனையும் மதிக்கவேண்டுமென்று, தீர்ப்பிடும் உரிமை முழுவதையும் தந்தை மகனுக்கு அளித்துள்ளார். மகனை மதியாதவன் அவரை அனுப்பிய தந்தையையும் மதிப்பதில்லை.
24. உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: எனது வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரிடத்தில் விசுவாசம் கொள்பவன், முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான். அவன் தீர்ப்புக்குள்ளாகாமல், சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்துசென்றுவிட்டான்.
25. உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: நேரம் வருகின்றது, - ஏன், வந்தேவிட்டது. - அப்பொழுது கடவுளுடைய மகனின் குரலை இறந்தோர் கேட்பர்; அதைக் கேட்போர் வாழ்வர்.
26. ஏனெனில், தந்தை தம்மிலே உயிர்கொண்டுள்ளதுபோல மகனும் தம்மிலே உயிர்கொண்டிருக்கும்படி அவருக்கு அளித்துள்ளார்.
27. தீர்ப்பிடும் அதிகாரத்தையும் அவருக்கு அளித்துள்ளார்; ஏனெனில், அவர் மனுமகன்.
28. இதைக்குறித்து வியப்புறாதீர்கள்; இதோ! நேரம் வருகிறது. அப்போது கல்லறையில் இருப்பவர்கள் எல்லாரும் அவருடைய குரலைக் கேட்டு வெளியே வருவர்.
29. அப்போது நல்லது செய்தவர் வாழ்வுபெற உயிர்த்தெழுவர். பொல்லாது செய்தவர் தண்டனைத்தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர்.
30. நானாகவே ஒன்றும் செய்ய முடியாது; தந்தை சொற்படியே தீர்ப்பிடுகிறேன். என் தீர்ப்பு நீதியானது. ஏனெனில், என் விருப்பத்தை நாடாமல், என்னை அனுப்பியவர் விருப்பத்தையே நாடுகிறேன்.
31. "என்னைப்பற்றி நானே சாட்சியம் கூறினால், எனது சாட்சியம் செல்லாது.
32. என்னைப்பற்றிச் சாட்சியங்கூற வேறொருவர் இருக்கிறார். அவர் என்னைப்பற்றிச் கூறும் சாட்சியம் செல்லும்; இதை நானறிவேன்.
33. நீங்கள் அருளப்பரிடம் ஆள் அனுப்பினீர்கள், அவரும் உண்மைக்குச் சாட்சியம் கூறினார்.
34. எனக்கோ மனிதன் தரும் சாட்சியம் தேவையில்லை. ஆனால் நீங்கள் மீட்புப்பெறும்படி இதை நினைவூட்டுகிறேன்.
35. அருளப்பர் எரிந்து சுடர்விடும் விளக்கு; அவருடைய ஒளியில் நீங்கள் சற்றுநேரமே களிப்புற விரும்பினீர்கள்.
36. அருளப்பருடைய சாட்சியத்திலும் மேலான சாட்சியம் எனக்கு உண்டு: நான் செய்துமுடிக்க தந்தை எனக்கு அருளியுள்ள செயல்களே, நான் செய்துவரும் அச்செயல்களே, தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்குச் சான்று.
37. இங்ஙனம், என்னை அனுப்பின தந்தையே என்னைப்பற்றிச் சாட்சியம் தந்துள்ளார். ஆயினும் நீங்கள் ஒருபோதும் அவருடைய குரலைக் கேட்டதுமில்லை, அவர் உருவத்தைக் கண்டதுமில்லை;
38. அவருடைய வார்த்தை உங்களிடத்தில் நிலைத்திருப்பதாயில்லை. ஏனெனில், அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவசிப்பதில்லை.
39. "மறைநூலை ஆய்ந்துபார்க்கிறீர்கள், அதில் முடிவில்லா வாழ்வு கிடைப்பதாக நினைக்கிறீர்கள் அல்லவா! அதுவே என்னைப்பற்றிச் சாட்சியம் தருகிறது.
40. இருப்பினும், வாழ்வு பெறும்படி என்னிடம் வர உங்களுக்கு விருப்பமில்லை.
41. மனிதர் தரும் மகிமை எனக்குத் தேவையில்லை.
42. உங்களைப்பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்: கடவுளன்பு உங்களிடம் இல்லை.
43. நான் என் தந்தையின் பெயரால் வந்துள்ளேன்; நீங்களோ என்னை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், இன்னொருவன் தன் பெயராலேயே வருவானாகில், அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.
44. ஒரே கடவுள் தரும் மகிமையை நாடாது, ஒருவருக்கொருவர் தரும் மகிமையைத் தேடிக்கொள்கிறீர்களே; நீங்கள் எப்படி விசுவசிக்கக் கூடும் ?
45. தந்தையிடத்தில் உங்களைக் குற்றஞ்சாட்டுபவன் நான் என்று எண்ணாதீர்கள்: உங்களைக் குற்றஞ்சாட்டுபவர் ஒருவர் உண்டு; அவர்தாம் நீங்கள் நம்பியிருக்கிற மோயீசன்.
46. மோயீசனை நீங்கள் விசுவசித்தால், என்னையும் விசுவசிப்பீர்கள். ஏனெனில், அவர் என்னைப்பற்றித்தான் எழுதினார்.
47. அவர் எழுதியதை விசுவசியாவிட்டால், என் வார்த்தைகளை எவ்வாறு விசுவசிப்பீர்கள் ?"

குறிப்பேடுகள்

No Verse Added

Total 21 Chapters, Current Chapter 5 of Total Chapters 21
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
யோவான் 5:6

×

Alert

×

tamil Letters Keypad References