தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
யோவான்
1. அருளப்பரைவிட இயேசு மிகுதியான சீடர்களைச் சேர்த்து ஞானஸ்நானம் கொடுக்கிறார் எனப் பரிசேயர் கேள்வியுற்றனர்.
2. இதை அறிந்த ஆண்டவர் யூதேயாவை விட்டு மீண்டும் கலிலேயாவுக்குச் சென்றார். -
3. உண்மையிலே ஞானஸ்நானம் கொடுத்தவர் இயேசு அல்லர், அவருடைய சீடர்களே. -
4. அவர் சமாரியா நாட்டுவழியாகச் செல்லவேண்டியிருந்தது.
5. வழியில் சமாரியா நாட்டிலுள்ள சீக்கார் என்னும் ஊருக்கு வந்தார். அவ்வூருக்கருகே யாக்கோபு தம் மகன் சூசைக்கு அளித்த நிலம் உண்டு.
6. அங்கே யாக்கோபின் கிணறு இருந்தது. பயணத்தால் களைத்திருந்த இயேசு அக்கிணற்றருகே அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல்.
7. சமாரியப்பெண் ஒருத்தி தண்ணீர் மொள்ள வந்தாள். "எனக்குத் தண்ணீர் கொடு" என்று இயேசு அவளிடம் கேட்டார்.
8. அவருடைய சீடரோ உணவு வாங்குவதற்காக ஊருக்குள் சென்றிருந்தனர்.
9. அச் சமாரியப்பெண் அவரைப் பார்த்து, "யூதனாகிய நீர் என்னிடம் தண்ணீர் கேட்பதெப்படி ? நான் சமாரியப்பெண் ஆயிற்றே! " என்றாள். - ஏனெனில், யூதர் சமாரியரோடு பழகுவதில்லை. -
10. இயேசுவோ மறுமொழியாகக் கூறினார்: "கடவுளுடைய கொடை இன்னதென்பதையும், ' தண்ணீர் கொடு ' என்று உன்னிடம் கேட்பவர் இன்னாரென்பதையும் நீ உணர்ந்திருந்தால், ஒருவேளை நீயே அவரிடம் கேட்டிருப்பாய். அவரும் உயிருள்ள தண்ணீரை உனக்களித்திருப்பார்"
11. அவளோ, "ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறோ ஆழமானது. அப்படியிருக்க எங்கிருந்து உமக்கு உயிருள்ள தண்ணீர் கிடைக்கும் ?
12. நம்முடைய தந்தை யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ ? அவரே எங்களுக்கு இந்தக் கிணற்றை வெட்டிக் கொடுத்தார். அவரும் அவர்பிள்ளைகளும் கால்நடைகளும் இதன் தண்ணீரைக் குடித்தார்கள்" என்றாள்.
13. இயேசு அவளை நோக்கிக் கூறியது: "இத்தண்ணீரைக் குடிக்கும் எவனும் மீண்டும் தாகங்கொள்வான்.
14. நான் தரும் தண்ணீரைக் குடிப்பவனோ என்றுமே தாங்கொள்ளான். நான் அவனுக்கு அளிக்கும் தண்ணீரோ, அவன் முடிவில்லா வாழ்வடைய அவனுக்குள் பொங்கியெழும் ஊற்றாகும்"
15. அதற்கு அவள், "ஐயா, அத்தகைய தண்ணீரை எனக்குக் கொடும். அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது, தண்ணீர் மொள்ள இவ்வளவு தொலைவு வரத் தேவையும் இருக்காது" என்றாள்.
16. இயேசு அவளிடம், "போய், உன் கணவனை இங்கு அழைத்துவா" என,
17. அவள், "எனக்குக் கணவனில்லையே" என்றாள். இயேசுவோ, " ' எனக்குக் கணவனில்லை ' என்று நீ சொன்னது சரிதான்.
18. கணவர் உனக்கு ஐவர் இருந்தனர். இப்பொழுது உன்னோடிருப்பவனோ உன் கணவன் அல்லன். நீ சொன்னது உண்மையே" என்றார்.
19. அதற்கு அவள், "ஐயா, நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன்.
20. எங்கள் முன்னோர் இம்மலையில் தொழுதனர். நீங்களோ தொழ வேண்டிய இடம் யெருசலேமிலேதான் என்கிறீர்கள்" என்றாள்.
21. இயேசு அவளை நோக்கிக் கூறினார்: "மாதே, என்னை நம்பு. நேரம் வருகிறது: அப்பொழுது நீங்கள் பரம தந்தையைத் தொழுவது இம்மலையிலுமன்று, யெருசலேமிலுமன்று.
22. நீங்கள் தொழுவது இன்னதென்று உங்களுக்குத் தெரியாது. நாங்கள் தொழுவது இன்னதென்று எங்களுக்குத் தெரியும். ஏனெனில், மீட்பு வருவது யூதர்களிடமிருந்தே.
23. நேரம் வருகின்றது - ஏன், வந்தேவிட்டது; - அப்பொழுது மெய்யடியார்கள் ஆவியிலும் உண்மையிலும் பரம தந்தையைத் தொழுவார்கள். ஏனெனில், தம்மைத் தொழும்படி தந்தை இத்தகையோரையே தேடுகிறார்.
24. கடவுள் ஆவியானவர்; ஆதலால் அவரைத் தொழுபவர்கள் ஆவியிலும் உண்மையிலும்தான் அவரைத் தொழுதல் வேண்டும்."
25. அதற்கு அவள், "மெசியா - அதாவது, கிறிஸ்து - வருவார் என்று எனக்குத் தெரியும், அவர் வரும்பொழுது எங்களுக்கு அனைத்தையும் அறிவிப்பார்" என,
26. இயேசு, "உன்னோடு பேசும் நானே அவர்" என்றார்.
27. அதற்குள் அவருடைய சீடர் வந்து, அவர் ஒரு பெண்ணோடு பேசுவதைக் கண்டு வியப்படைந்தனர். ஆயினும், "என்ன வேண்டும் ?" என்றோ, "அவளோடு என்ன பேசுகிறீர் ?" என்றோ எவரும் கேட்கவில்லை.
28. அப்பெண் குடத்தை அங்கேயே விட்டுவிட்டு ஊருக்குச் சென்று,
29. "நான் செய்ததெல்லாம் ஒருவர் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ ?" என்று எல்லாரிடமும் சொன்னாள்.
30. அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு, அவரைப் பார்க்கப் போனார்கள்.
31. இதற்கிடையில் அவருடைய சீடர், "ராபி, உண்ணும்" என்று அவரைக் கேட்டுக்கொண்டனர்.
32. அவரோ, "உங்களுக்குத் தெரியாத உணவு ஒன்று எனக்குள்ளது" என்றார்.
33. அதைக் கேட்டுச் சீடர்கள், "யாராகிலும் அவருக்கு உணவு கொண்டுவந்திருப்பார்களோ ?" என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
34. இயேசுவோ: "என்னை அனுப்பினவரின் விருப்பத்தின்படி நடந்து, அவரது வேலையைச் செய்து முடிப்பதே என் உணவு.
35. அறுவடைக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றன என்று நீங்கள் சொல்லுவது உண்டன்றோ ? இதோ! உங்களுக்குச் சொல்லுகிறேன்: கண்களை ஏறெடுத்து வயல்களைப் பாருங்கள்; பயிர் அறுவடைக்கு முற்றியிருக்கின்றது!
36. அறுப்பவன் இப்பொழுதே கூலி பெற்றுவருகிறான். விளைச்சலை முடிவில்லா வாழ்வுக்குச் சேகரிக்கிறான். இதனால் விதைப்பவனும் அறுப்பவனும் ஒருமிக்க மகிழ்ச்சியடைகின்றனர்.
37. நீங்கள் வருந்தி உழைக்காததை அறுக்க உங்களை அனுப்பினேன்.
38. மற்றவர்கள் உழைத்தார்கள். அவ்வுழைப்பின் பயனை அடைந்தவர்களோ நீங்கள். ' விதைப்பவன் ஒருவன், அறுத்துக்கொள்பவன் வேறொருவன் ' என்னும் முதுமொழி இவ்வாறு உண்மையாயிற்று."
39. "நான் செய்ததெல்லாம் எனக்குச் சொன்னார்" என்று சாட்சியம் கூறிய பெண்ணுடைய வார்த்தையின்பொருட்டு, அவ்வூரிலேயே சமாரியர் பலர் அவரில் விசுவாசங்கொண்டனர்.
40. சமாரியர் அவரிடம் வந்து, தங்களோடு தங்கும்படி அவரை வேண்டினர். அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார்.
41. அவருடைய வார்த்தையின்பொருட்டு இன்னும் பலர் விசுவாசங்கொண்டனர்.
42. "உன் வார்த்தையின்பொருட்டன்று நாங்கள் விசுவசிப்பது; நாங்களே அவர் சொன்னதைக் கேட்டு, அவர் உண்மையாகவே உலகின் மீட்பர் என அறிந்துகொண்டோம்" என்று அப்பெண்ணிடம் சொன்னார்கள்.
43. அவ்விரண்டு நாளுக்குப்பின், அவர் அங்கிருந்து கலிலேயாவுக்குப் போனார்.
44. இறைவாக்கினருக்குத் தம் சொந்த நாட்டில் மதிப்பில்லை என்று இயேசுவே கூறியிருந்தார்.
45. திருவிழாவின்போது யெருசலேமிலே அவர் செய்ததெல்லாம் கண்டிருந்த கலிலேயர், அவர் கலிலேயாவுக்கு வந்தபொழுது அவரை வரவேற்றனர். ஏனெனில், அவர்களும் திருவிழாவிற்குச் சென்றிருந்தனர்.
46. அவர் கலிலேயாவிலுள்ள கானாவூருக்கு மீண்டும் வந்தார். அங்கேதான் முன்பு தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றிக்கொடுத்தார். கப்பர்நகூம் ஊரில் அரச அலுவலர் ஒருவர் இருந்தார். அவருடைய மகன் பிணியுற்றிருந்தான்.
47. இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவிற்கு வந்திருப்பதைக் கேள்வியுற்ற அவர் அவரிடம் சென்று, தம் மகனைக் குணமாக்கவரும்படி அவரை வேண்டினார்; அவருடைய மகன் சாகக்கிடந்தான்.
48. இயேசுவோ அவரிடம், "அருங்குறிகளையும் அற்புதங்களையும் கண்டாலன்றி நீங்கள் விசுவசிக்கமாட்டீர்கள்" என்றார்.
49. அரச அலுவலர் அவரைப் பார்த்து, "ஆண்டவரே, என் குழந்தை இறந்துபோகுமுன்னே வாரும்" என்றார்.
50. இயேசு அவரிடம், "நீர் போகலாம், உம் மகன் உயிரோடிருக்கிறான்" என்றார். அவர், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டார்.
51. வழியிலேயே அவருடைய ஊழியர் எதிரே வந்து, பிள்ளை பிழைத்துக்கொண்டான் என்று அறிவித்தனர்.
52. எத்தனை மணிக்கு நலமடையலானான் என்று அவர் அவர்களை வினவ, "நேற்றுப் பிற்பகல் ஒருமணிக்குக் காய்ச்சல் விட்டது" என்றனர்.
53. "உம் மகன் உயிரோடிருக்கிறான்" என்று இயேசு சொன்னதும் அதே நேரத்தில்தான் என்பது தந்தையின் நினைவுக்கு வந்தது. ஆகவே, அவரும் அவருடைய குடும்பம் முழுவதும் விசுவாசங்கொண்டனர்.
54. இதுவே இயேசு செய்த அருங்குறிகளில் இரண்டாவது. இதை யூதேயாவிலிருந்து கலிலேயாவிற்கு வந்தபின் செய்தார்.
மொத்தம் 21 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 4 / 21
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
1 அருளப்பரைவிட இயேசு மிகுதியான சீடர்களைச் சேர்த்து ஞானஸ்நானம் கொடுக்கிறார் எனப் பரிசேயர் கேள்வியுற்றனர். 2 இதை அறிந்த ஆண்டவர் யூதேயாவை விட்டு மீண்டும் கலிலேயாவுக்குச் சென்றார். - 3 உண்மையிலே ஞானஸ்நானம் கொடுத்தவர் இயேசு அல்லர், அவருடைய சீடர்களே. - 4 அவர் சமாரியா நாட்டுவழியாகச் செல்லவேண்டியிருந்தது. 5 வழியில் சமாரியா நாட்டிலுள்ள சீக்கார் என்னும் ஊருக்கு வந்தார். அவ்வூருக்கருகே யாக்கோபு தம் மகன் சூசைக்கு அளித்த நிலம் உண்டு. 6 அங்கே யாக்கோபின் கிணறு இருந்தது. பயணத்தால் களைத்திருந்த இயேசு அக்கிணற்றருகே அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல். 7 சமாரியப்பெண் ஒருத்தி தண்ணீர் மொள்ள வந்தாள். "எனக்குத் தண்ணீர் கொடு" என்று இயேசு அவளிடம் கேட்டார். 8 அவருடைய சீடரோ உணவு வாங்குவதற்காக ஊருக்குள் சென்றிருந்தனர். 9 அச் சமாரியப்பெண் அவரைப் பார்த்து, "யூதனாகிய நீர் என்னிடம் தண்ணீர் கேட்பதெப்படி ? நான் சமாரியப்பெண் ஆயிற்றே! " என்றாள். - ஏனெனில், யூதர் சமாரியரோடு பழகுவதில்லை. - 10 இயேசுவோ மறுமொழியாகக் கூறினார்: "கடவுளுடைய கொடை இன்னதென்பதையும், ' தண்ணீர் கொடு ' என்று உன்னிடம் கேட்பவர் இன்னாரென்பதையும் நீ உணர்ந்திருந்தால், ஒருவேளை நீயே அவரிடம் கேட்டிருப்பாய். அவரும் உயிருள்ள தண்ணீரை உனக்களித்திருப்பார்" 11 அவளோ, "ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறோ ஆழமானது. அப்படியிருக்க எங்கிருந்து உமக்கு உயிருள்ள தண்ணீர் கிடைக்கும் ? 12 நம்முடைய தந்தை யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ ? அவரே எங்களுக்கு இந்தக் கிணற்றை வெட்டிக் கொடுத்தார். அவரும் அவர்பிள்ளைகளும் கால்நடைகளும் இதன் தண்ணீரைக் குடித்தார்கள்" என்றாள். 13 இயேசு அவளை நோக்கிக் கூறியது: "இத்தண்ணீரைக் குடிக்கும் எவனும் மீண்டும் தாகங்கொள்வான். 14 நான் தரும் தண்ணீரைக் குடிப்பவனோ என்றுமே தாங்கொள்ளான். நான் அவனுக்கு அளிக்கும் தண்ணீரோ, அவன் முடிவில்லா வாழ்வடைய அவனுக்குள் பொங்கியெழும் ஊற்றாகும்" 15 அதற்கு அவள், "ஐயா, அத்தகைய தண்ணீரை எனக்குக் கொடும். அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது, தண்ணீர் மொள்ள இவ்வளவு தொலைவு வரத் தேவையும் இருக்காது" என்றாள். 16 இயேசு அவளிடம், "போய், உன் கணவனை இங்கு அழைத்துவா" என, 17 அவள், "எனக்குக் கணவனில்லையே" என்றாள். இயேசுவோ, " ' எனக்குக் கணவனில்லை ' என்று நீ சொன்னது சரிதான். 18 கணவர் உனக்கு ஐவர் இருந்தனர். இப்பொழுது உன்னோடிருப்பவனோ உன் கணவன் அல்லன். நீ சொன்னது உண்மையே" என்றார். 19 அதற்கு அவள், "ஐயா, நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன். 20 எங்கள் முன்னோர் இம்மலையில் தொழுதனர். நீங்களோ தொழ வேண்டிய இடம் யெருசலேமிலேதான் என்கிறீர்கள்" என்றாள். 21 இயேசு அவளை நோக்கிக் கூறினார்: "மாதே, என்னை நம்பு. நேரம் வருகிறது: அப்பொழுது நீங்கள் பரம தந்தையைத் தொழுவது இம்மலையிலுமன்று, யெருசலேமிலுமன்று. 22 நீங்கள் தொழுவது இன்னதென்று உங்களுக்குத் தெரியாது. நாங்கள் தொழுவது இன்னதென்று எங்களுக்குத் தெரியும். ஏனெனில், மீட்பு வருவது யூதர்களிடமிருந்தே. 23 நேரம் வருகின்றது - ஏன், வந்தேவிட்டது; - அப்பொழுது மெய்யடியார்கள் ஆவியிலும் உண்மையிலும் பரம தந்தையைத் தொழுவார்கள். ஏனெனில், தம்மைத் தொழும்படி தந்தை இத்தகையோரையே தேடுகிறார். 24 கடவுள் ஆவியானவர்; ஆதலால் அவரைத் தொழுபவர்கள் ஆவியிலும் உண்மையிலும்தான் அவரைத் தொழுதல் வேண்டும்." 25 அதற்கு அவள், "மெசியா - அதாவது, கிறிஸ்து - வருவார் என்று எனக்குத் தெரியும், அவர் வரும்பொழுது எங்களுக்கு அனைத்தையும் அறிவிப்பார்" என, 26 இயேசு, "உன்னோடு பேசும் நானே அவர்" என்றார். 27 அதற்குள் அவருடைய சீடர் வந்து, அவர் ஒரு பெண்ணோடு பேசுவதைக் கண்டு வியப்படைந்தனர். ஆயினும், "என்ன வேண்டும் ?" என்றோ, "அவளோடு என்ன பேசுகிறீர் ?" என்றோ எவரும் கேட்கவில்லை. 28 அப்பெண் குடத்தை அங்கேயே விட்டுவிட்டு ஊருக்குச் சென்று, 29 "நான் செய்ததெல்லாம் ஒருவர் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ ?" என்று எல்லாரிடமும் சொன்னாள். 30 அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு, அவரைப் பார்க்கப் போனார்கள். 31 இதற்கிடையில் அவருடைய சீடர், "ராபி, உண்ணும்" என்று அவரைக் கேட்டுக்கொண்டனர். 32 அவரோ, "உங்களுக்குத் தெரியாத உணவு ஒன்று எனக்குள்ளது" என்றார். 33 அதைக் கேட்டுச் சீடர்கள், "யாராகிலும் அவருக்கு உணவு கொண்டுவந்திருப்பார்களோ ?" என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். 34 இயேசுவோ: "என்னை அனுப்பினவரின் விருப்பத்தின்படி நடந்து, அவரது வேலையைச் செய்து முடிப்பதே என் உணவு. 35 அறுவடைக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றன என்று நீங்கள் சொல்லுவது உண்டன்றோ ? இதோ! உங்களுக்குச் சொல்லுகிறேன்: கண்களை ஏறெடுத்து வயல்களைப் பாருங்கள்; பயிர் அறுவடைக்கு முற்றியிருக்கின்றது! 36 அறுப்பவன் இப்பொழுதே கூலி பெற்றுவருகிறான். விளைச்சலை முடிவில்லா வாழ்வுக்குச் சேகரிக்கிறான். இதனால் விதைப்பவனும் அறுப்பவனும் ஒருமிக்க மகிழ்ச்சியடைகின்றனர். 37 நீங்கள் வருந்தி உழைக்காததை அறுக்க உங்களை அனுப்பினேன். 38 மற்றவர்கள் உழைத்தார்கள். அவ்வுழைப்பின் பயனை அடைந்தவர்களோ நீங்கள். ' விதைப்பவன் ஒருவன், அறுத்துக்கொள்பவன் வேறொருவன் ' என்னும் முதுமொழி இவ்வாறு உண்மையாயிற்று." 39 "நான் செய்ததெல்லாம் எனக்குச் சொன்னார்" என்று சாட்சியம் கூறிய பெண்ணுடைய வார்த்தையின்பொருட்டு, அவ்வூரிலேயே சமாரியர் பலர் அவரில் விசுவாசங்கொண்டனர். 40 சமாரியர் அவரிடம் வந்து, தங்களோடு தங்கும்படி அவரை வேண்டினர். அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார். 41 அவருடைய வார்த்தையின்பொருட்டு இன்னும் பலர் விசுவாசங்கொண்டனர். 42 "உன் வார்த்தையின்பொருட்டன்று நாங்கள் விசுவசிப்பது; நாங்களே அவர் சொன்னதைக் கேட்டு, அவர் உண்மையாகவே உலகின் மீட்பர் என அறிந்துகொண்டோம்" என்று அப்பெண்ணிடம் சொன்னார்கள். 43 அவ்விரண்டு நாளுக்குப்பின், அவர் அங்கிருந்து கலிலேயாவுக்குப் போனார். 44 இறைவாக்கினருக்குத் தம் சொந்த நாட்டில் மதிப்பில்லை என்று இயேசுவே கூறியிருந்தார். 45 திருவிழாவின்போது யெருசலேமிலே அவர் செய்ததெல்லாம் கண்டிருந்த கலிலேயர், அவர் கலிலேயாவுக்கு வந்தபொழுது அவரை வரவேற்றனர். ஏனெனில், அவர்களும் திருவிழாவிற்குச் சென்றிருந்தனர். 46 அவர் கலிலேயாவிலுள்ள கானாவூருக்கு மீண்டும் வந்தார். அங்கேதான் முன்பு தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றிக்கொடுத்தார். கப்பர்நகூம் ஊரில் அரச அலுவலர் ஒருவர் இருந்தார். அவருடைய மகன் பிணியுற்றிருந்தான். 47 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவிற்கு வந்திருப்பதைக் கேள்வியுற்ற அவர் அவரிடம் சென்று, தம் மகனைக் குணமாக்கவரும்படி அவரை வேண்டினார்; அவருடைய மகன் சாகக்கிடந்தான். 48 இயேசுவோ அவரிடம், "அருங்குறிகளையும் அற்புதங்களையும் கண்டாலன்றி நீங்கள் விசுவசிக்கமாட்டீர்கள்" என்றார். 49 அரச அலுவலர் அவரைப் பார்த்து, "ஆண்டவரே, என் குழந்தை இறந்துபோகுமுன்னே வாரும்" என்றார். 50 இயேசு அவரிடம், "நீர் போகலாம், உம் மகன் உயிரோடிருக்கிறான்" என்றார். அவர், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டார். 51 வழியிலேயே அவருடைய ஊழியர் எதிரே வந்து, பிள்ளை பிழைத்துக்கொண்டான் என்று அறிவித்தனர். 52 எத்தனை மணிக்கு நலமடையலானான் என்று அவர் அவர்களை வினவ, "நேற்றுப் பிற்பகல் ஒருமணிக்குக் காய்ச்சல் விட்டது" என்றனர். 53 "உம் மகன் உயிரோடிருக்கிறான்" என்று இயேசு சொன்னதும் அதே நேரத்தில்தான் என்பது தந்தையின் நினைவுக்கு வந்தது. ஆகவே, அவரும் அவருடைய குடும்பம் முழுவதும் விசுவாசங்கொண்டனர். 54 இதுவே இயேசு செய்த அருங்குறிகளில் இரண்டாவது. இதை யூதேயாவிலிருந்து கலிலேயாவிற்கு வந்தபின் செய்தார்.
மொத்தம் 21 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 4 / 21
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
×

Alert

×

Tamil Letters Keypad References