தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
யோவான்
1. வாரத்தின் முதல்நாள் விடியற்காலையில் இருட்டாயிருக்கும்பொழுதே, மதலேன் மரியாள் கல்லறைக்கு வந்தாள். கல்லறைவாயிலில் இருந்த கல் எடுபட்டிருப்பதைக் கண்டாள்.
2. கண்டதும், சீமோன் இராயப்பரிடமும், இயேசுவினால் நேசிக்கப்பட்டவராகிய மற்றச் சீடரிடமும் ஓடிவந்து, அவர்களைப் பார்த்து, "ஆண்டவரைக் கல்லறையிலிருந்து எடுத்துவிட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, அறியோம்" என்றாள்.
3. இராயப்பரும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர்.
4. இருவரும் ஒருமிக்க ஓடினார்கள்; மற்றச் சீடரோ இராயப்பரைவிட விரைவாக ஓடி அவருக்குமுன் கல்லறையை அடைந்தார்.
5. குனிந்து உள்ளே பார்த்தபோது, தரையில் துணிகள் கிடக்கக் கண்டார். ஆனால் உள்ளே நுழையவில்லை.
6. அவர் பின்னாலேயே சீமோன் இராயப்பரும் வந்தார். கல்லறைக்குள் நுழைந்து தரையில் கிடந்த துணிகளையும்,
7. இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் தனியாகச் சுருட்டி ஒரு பக்கமாக வைக்கப்பட்டிருந்தது.
8. கல்லறைக்கு முதலில் வந்த மற்றச் சீடரும் உள்ளே நுழைந்து பார்த்தார்; பார்த்து விசுவசித்தார்.
9. இயேசு இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழவேண்டும் என்னும் மறைநூல் வாக்கை இதுவரை அவர்கள் உணரவில்லை.
10. பின்பு சீடர்கள் வீடுதிரும்பினார்கள்.
11. மரியாள் கல்லறைக்கருகில் வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள். அழுதுகொண்டே கல்லறைக்குள் குனிந்துபார்த்தாள்.
12. வெண்ணாடை அணிந்த வானதூதர் இருவரை அங்கே கண்டாள். இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலைமாட்டிலும், மற்றவர் கால்மாட்டிலுமாக அமர்ந்திருந்தனர்.
13. அவர்கள் அவளை நோக்கி, "அம்மா, ஏன் அழுகிறாய் ?" என, அவள், "என் "ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர். எங்கே வைத்தனரோ, தெரியவில்லை" என்றாள்.
14. இப்படிச் சொன்னபின், திரும்பிப் பார்த்தபொழுது இயேசு நிற்பதைக் கண்டாள். ஆனால், அவர் இயேசு என்று அவள் அறிந்துகொள்ளவில்லை.
15. இயேசு அவளை நோக்கி, "அம்மா, ஏன் அழுகிறாய் ? யாரைத் தேடுகிறாய் ?" என்று கேட்டார். அவளோ அவரைத் தோட்டக்காரன் என்றெண்ணி அவரிடம், "ஐயா, நீர் அவரைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால் எங்கு வைத்தீர் ? சொல்லும். நான் அவரை எடுத்துச்செல்வேன்" என்றாள்.
16. இயேசு அவளை நோக்கி, "மரியே! " என்றார். அவர் திரும்பிப்பார்த்து, "ராபூனி!" என்றாள். இந்த எபிரேயச் சொல்லுக்குப் போதகரே என்பது பொருள்.
17. இயேசு அவளை நோக்கிக் கூறியதாவது: "என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே. ஏனெனில், நான் மேலெழும்பி என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. என் சகோதரர்களிடம்போய், ' என் தந்தையும் உங்கள் தந்தையும், என் கடவுளும் உங்கள் கடவுளுமாகியவரிடம் நான் மேலே எழும்பிச் செல்கிறேன் ' என்று அவர்களுக்குச் சொல்."
18. மதலேன் மரியாள் சீடரிடம் வந்து, "ஆண்டவரைக் கண்டேன், அவர் எனக்கு இப்படிச் சொன்னார்" என்று அறிவித்தாள்.
19. வாரத்தின் முதல் நாளாகிய அன்று மாலை, சீடர்கள் தாங்கள் கூடியிருந்த இடத்திலே யூதருக்கு அஞ்சிக் கதவுகளை மூடிவைத்திருக்கையில், இயேசு வந்து அவர்களிடையே நின்று, "உங்களுக்குச் சமாதானம்" என்றார்.
20. இவ்வாறு சொல்லி, அவர்களுக்குத் தம் கைகளையும் விலாவையும் காண்பித்தார். ஆண்டவரைக் கண்டு சீடர்கள் மகிழ்வுற்றார்கள்.
21. இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, "உங்களுக்குச் சமாதானம். "என் தந்தை என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்" என்றார்.
22. பின்பு அவர்கள்மேல் ஊதி, "பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
23. எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்; எவர்களுடைய பாவங்களை மன்னியாது விடுவீர்களோ, அவை மன்னிப்பின்றி விடப்படும்" என்றார்.
24. பன்னிருவருள் ஒருவரான திதிமு என்ற தோமையார் இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை.
25. மற்றச் சீடர்கள் அவரிடம், "ஆண்டவரைக் கண்டோம்" என்றதற்கு அவர், "அவருடைய கைகளில் ஆணியால் உண்டான தழும்பைப் பார்த்து, ஆணிகள் இருந்த இடத்தில் என் விரலையிட்டு, அவர் விலாவில் என் கையையிட்டாலொழிய விசுவசிக்கமாட்டேன்" என்றார்.
26. எட்டு நாளுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் வீட்டில் இருந்தார்கள். தோமையாரும் அவர்களோடிருந்தார். கதவுகள் மூடியிருக்க, இயேசு வந்து அவர்களிடைய நின்று, "உங்களுக்குச் சமாதானம்" என்றார்.
27. பின்பு தோமையாரை நோக்கி, "இங்கே உன் விரலையிடு; இதோ! என் கைகள். உன் கையை நீட்டி என் விலாவில் இடு; விசுவாசம் அற்றவனாயிராதே, விசுவாசங்கொள்" என்றார்.
28. அப்போது தோமையார் அவரை நோக்கி, "என் ஆண்டவரே, என் கடவுளே! " என்றார்.
29. இயேசுவோ, "என்னைக் கண்டதால் நீ விசுவாசங்கொண்டாய்! காணாமலே விசுவசிப்பவர்கள் பேறுபெற்றோர்" என்றார்.
30. இந்நூலில் எழுதப்பெறாத வேறு பல அருங்குறிகளையும் இயேசு தம் சீடர்கள் கண்முன் செய்தார்.
31. இயேசு கடவுளின் மகனாகிய மெசியா என்று நீங்கள் விசுவசிக்கும்படியும், விசுவசித்து அவர் பெயரால் வாழ்வு பெறும்படியும் இந்நூலிலுள்ளவை எழுதப்பெற்றுள்ளன.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 21 Chapters, Current Chapter 20 of Total Chapters 21
1 2 3 4 5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18 19 20 21
யோவான் 20:33

×

Alert

×

tamil Letters Keypad References