தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
யோவான்
1. "நீங்கள் இடறல்படாதவாறு, இவையெல்லாம் நான் உங்களுக்குச் சொன்னேன்.
2. உங்களைச் செபக்கூடத்திற்குப் புறம்பாக்குவார்கள்; இதோ! நேரம் வருகிறது, அப்போது உங்களைக் கொல்லுபவர்கள் கடவுளுக்குப் பலி செலுத்துவதாக எண்ணிக்கொள்வார்கள்.
3. தந்தையையோ என்னையோ அறியாதிருப்பதால்தான், உங்களை இப்படி நடத்துவார்கள்.
4. அந்நேரம் வரும்பொழுது, முன்பே நான் இப்படி உங்களுக்குச் சொன்னதாக நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்; இதற்காகத்தான் இதெல்லாம் உங்களுக்குக் கூறினேன். "தொடக்கத்திலேயே இவற்றை உங்களுக்குச் சொல்லவில்லை; ஏனெனில், உங்களோடு இருந்தேன்;
5. இப்பொழுதோ என்னை அனுப்பியவரிடம் போகிறேன். ஆயினும் ' எங்கே போகிறீர் ? ' என்று உங்களுள் யாரும் என்னைக் கேட்கவில்லை.
6. ஆனால், நான் இதை உங்களுக்குக் கூறியதால், உங்கள் உள்ளத்தில் வருத்தம் நிறைந்துள்ளது.
7. எனினும் நான் உங்களுக்குச் சொல்வது உண்மை: நான் போவதே உங்களுக்கு நல்லது; போகாவிடில், துணையாளர் உங்களிடம் வரமாட்டார்; போனால்தான் அவரை உங்களிடம் அனுப்புவேன்.
8. பாவம் யாரைச் சாரும், நியாயம் யார்பக்கம் உள்ளது, இறைவனின் தீர்ப்பு எத்தகையது என்பதை அவர் வந்தபின் எடுத்துக்காட்டி, உலகினர் செய்த தவற்றை மெய்ப்பிப்பார்.
9. பாவம் உலகினரையே சாரும் என்று காட்டுவார்: ஏனெனில், அவர்கள் என்னில் விசுவாசம் கொள்ளவில்லை.
10. நியாயம் என் பக்கம் உள்ளது என்று காட்டுவார்: ஏனெனில், நான் தந்தையிடம் செல்கிறேன்; இனிமேல் நீங்கள் என்னைப் பார்க்கமுடியாது.
11. இறைவனின் தீர்ப்பு எத்தகையது என்று காட்டுவார்: ஏனெனில், இவ்வுலகின் தலைவன் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டான்.
12. நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியவை இன்னும் பல உண்டு; ஆனால் அவற்றை இப்பொழுது உங்களால் தாங்கமுடியாது.
13. உண்மையின் ஆவியானவர் வந்தபின், நிறைஉண்மையை நோக்கி உங்களை வழி நடத்துவார்; அவர் பேசுவதைக் தாமாகப் பேசுவதில்லை; கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.
14. உங்களுக்கு அறிவிப்பதை எனக்குள்ளதிலிருந்தே பெற்றுக்கொள்வதால், அவர் என்னை மகிமைப்படுத்துவார்.
15. தந்தையுடையதெல்லாம் என்னுடையதே; எனவேதான், உங்களுக்கு அறிவிப்பதை எனக்குள்ளதிலிருந்து பெற்றுக்கொள்கிறார் என்றேன்.
16. "இன்னும் சிறிதுகாலத்தில் என்னைக் காணமாட்டீர்கள், பின்னும் சிறிது காலத்தில் மீண்டும் என்னைக் காண்பீர்கள்."
17. இதைக் கேட்டு அவருடைய சீடர், "இன்னும் சிறிது காலத்தில் என்னைக் காணமாட்டீர்கள். பின்னும் சிறிது காலத்தில் மீண்டும் என்னைக் காண்பீர்கள் ' என்றும், ' தந்தையிடம் செல்கிறேன் ' என்றும் இவர் சொல்வதின் பொருள் என்ன?" என்று தங்களிடையே பேசிக்கொண்டனர்.
18. "இந்தச் 'சிறிது காலம்' என்பது என்ன ? அவர் சொல்வது நமக்கு விளங்கவில்லையே! " என்றனர்.
19. அவர்கள் தம்மை வினவ விரும்புவதை இயேசு அறிந்து, அவர்களை நோக்கி, "'இன்னும் சிறிது காலத்தில் என்னை காணமாட்டீர்கள், பின்னும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்' என்று நான் சொன்னதைப்பற்றி உங்களுக்குள் உசாவுகிறீர்கள் அல்லவா ?
20. "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள், உலகமோ மகிழும்; நீங்கள் துன்புறுவீர்கள், ஆனால் உங்கள் துன்பம் இன்பமாக மாறும்.
21. குழந்தை பிறக்கும்போது தாயானவள் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் துன்புறுகிறாள்; குழந்தையைப் பெற்றெடுத்த பின்போ, உலகில் மனிதன் ஒருவன் தோன்றினான் என்ற மகிழ்ச்சியால் தன் வேதனையை மறந்துவிடுகிறாள்.
22. அதுபோலவே, இப்பொழுது நீங்களும் துன்புறுகிறீர்கள்; ஆனால் நான் உங்களை மீண்டும் காணும்பொழுது உங்கள் உள்ளம் மகிழ்வுறும்; உங்கள் மகிழ்ச்சியை உங்களிடமிருந்து எவனும் பறித்துவிடமாட்டான்.
23. அந்நாளில் என்னிடம் எதுவும் கேட்கமாட்டீர்கள். உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் தந்தையிடம் எதைக் கேட்டாலும், அதை என் பெயரால் உங்களுக்குத் தருவார்.
24. இதுவரையில் என் பெயரால் நீங்கள் எதையும் கேட்டதில்லை. கேளுங்கள், பெற்றுக்கொள்வீர்கள்; அப்போது உங்கள் மகிழ்ச்சி நிறைவுபெறும்.
25. இவையெல்லாம் நான் உங்களிடம் உருவகமாய்ப் பேசினேன். இதோ! நேரம் வருகிறது; அப்போது உருவகமாய் உங்களிடம் பேசேன்; என் தந்தையைப்பற்றித் தெளிவாய் எடுத்துச்சொல்வேன்.
26. அந்நாளில் என் பெயரால் நீங்கள் வேண்டுவீர்கள்; ஆயினும், உங்களுக்காகத் தந்தையிடம் மன்றாடுவேன் என்று நான் சொல்லவில்லை.
27. தந்தையே உங்களை நேசிக்கிறார்; ஏனெனில், நீங்கள் என்னை நேசித்து நான் கடவுளிடமிருந்து வந்தேன் என்று விசுவசித்தீர்கள்.
28. தந்தையிடமிருந்து புறப்பட்டு உலகிற்கு வந்தேன். இப்பொழுது உலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்கின்றேன்" என்றார்.
29. அப்பொழுது அவருடைய சீடர்கள், "இப்பொழுதுதான் தெளிவாகப் பேசுகிறீர்; உருவகம் ஒன்றும் இல்லை!
30. உமக்கு எல்லாம் தெரியும், யாரும் உம்மைக் கேள்விகேட்கத் தேவையில்லை என்று இப்பொழுது தெரிகிறது. கடவுளிடமிருந்து நீர் வந்தீர் என்று இதனால் விசுவசிக்கிறோம்" என்றார்கள்.
31. அதற்கு இயேசு "இப்பொழுது நீங்கள் விசுவசிக்கிறீர்களா ?
32. இதோ! நேரம் வருகிறது, வந்தேவிட்டது; அப்பொழுது நீங்கள் சிதறுண்டு, ஒவ்வொருவரும் தத்தம் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள்; என்னைத் தனியாய் விட்டுவிடுவீர்கள். ஆயினும் நான் தனியாய் இருப்பதில்லை; தந்தை என்னோடு இருக்கிறார்.
33. என்னில் நீங்கள் சமாதானத்தைக் கண்டடையும்படி இதையெல்லாம் நான் உங்களுக்குச் சொன்னேன். உலகில் உங்களுக்கு வேதனை உண்டு; ஆயினும் தைரியமாயிருங்கள்: நான் உலகை வென்றுவிட்டேன்" என்றார்.
மொத்தம் 21 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 16 / 21
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
1 "நீங்கள் இடறல்படாதவாறு, இவையெல்லாம் நான் உங்களுக்குச் சொன்னேன். 2 உங்களைச் செபக்கூடத்திற்குப் புறம்பாக்குவார்கள்; இதோ! நேரம் வருகிறது, அப்போது உங்களைக் கொல்லுபவர்கள் கடவுளுக்குப் பலி செலுத்துவதாக எண்ணிக்கொள்வார்கள். 3 தந்தையையோ என்னையோ அறியாதிருப்பதால்தான், உங்களை இப்படி நடத்துவார்கள். 4 அந்நேரம் வரும்பொழுது, முன்பே நான் இப்படி உங்களுக்குச் சொன்னதாக நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்; இதற்காகத்தான் இதெல்லாம் உங்களுக்குக் கூறினேன். "தொடக்கத்திலேயே இவற்றை உங்களுக்குச் சொல்லவில்லை; ஏனெனில், உங்களோடு இருந்தேன்; 5 இப்பொழுதோ என்னை அனுப்பியவரிடம் போகிறேன். ஆயினும் ' எங்கே போகிறீர் ? ' என்று உங்களுள் யாரும் என்னைக் கேட்கவில்லை. 6 ஆனால், நான் இதை உங்களுக்குக் கூறியதால், உங்கள் உள்ளத்தில் வருத்தம் நிறைந்துள்ளது. 7 எனினும் நான் உங்களுக்குச் சொல்வது உண்மை: நான் போவதே உங்களுக்கு நல்லது; போகாவிடில், துணையாளர் உங்களிடம் வரமாட்டார்; போனால்தான் அவரை உங்களிடம் அனுப்புவேன். 8 பாவம் யாரைச் சாரும், நியாயம் யார்பக்கம் உள்ளது, இறைவனின் தீர்ப்பு எத்தகையது என்பதை அவர் வந்தபின் எடுத்துக்காட்டி, உலகினர் செய்த தவற்றை மெய்ப்பிப்பார். 9 பாவம் உலகினரையே சாரும் என்று காட்டுவார்: ஏனெனில், அவர்கள் என்னில் விசுவாசம் கொள்ளவில்லை. 10 நியாயம் என் பக்கம் உள்ளது என்று காட்டுவார்: ஏனெனில், நான் தந்தையிடம் செல்கிறேன்; இனிமேல் நீங்கள் என்னைப் பார்க்கமுடியாது. 11 இறைவனின் தீர்ப்பு எத்தகையது என்று காட்டுவார்: ஏனெனில், இவ்வுலகின் தலைவன் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டான். 12 நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியவை இன்னும் பல உண்டு; ஆனால் அவற்றை இப்பொழுது உங்களால் தாங்கமுடியாது. 13 உண்மையின் ஆவியானவர் வந்தபின், நிறைஉண்மையை நோக்கி உங்களை வழி நடத்துவார்; அவர் பேசுவதைக் தாமாகப் பேசுவதில்லை; கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். 14 உங்களுக்கு அறிவிப்பதை எனக்குள்ளதிலிருந்தே பெற்றுக்கொள்வதால், அவர் என்னை மகிமைப்படுத்துவார். 15 தந்தையுடையதெல்லாம் என்னுடையதே; எனவேதான், உங்களுக்கு அறிவிப்பதை எனக்குள்ளதிலிருந்து பெற்றுக்கொள்கிறார் என்றேன். 16 "இன்னும் சிறிதுகாலத்தில் என்னைக் காணமாட்டீர்கள், பின்னும் சிறிது காலத்தில் மீண்டும் என்னைக் காண்பீர்கள்." 17 இதைக் கேட்டு அவருடைய சீடர், "இன்னும் சிறிது காலத்தில் என்னைக் காணமாட்டீர்கள். பின்னும் சிறிது காலத்தில் மீண்டும் என்னைக் காண்பீர்கள் ' என்றும், ' தந்தையிடம் செல்கிறேன் ' என்றும் இவர் சொல்வதின் பொருள் என்ன?" என்று தங்களிடையே பேசிக்கொண்டனர். 18 "இந்தச் 'சிறிது காலம்' என்பது என்ன ? அவர் சொல்வது நமக்கு விளங்கவில்லையே! " என்றனர். 19 அவர்கள் தம்மை வினவ விரும்புவதை இயேசு அறிந்து, அவர்களை நோக்கி, "'இன்னும் சிறிது காலத்தில் என்னை காணமாட்டீர்கள், பின்னும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்' என்று நான் சொன்னதைப்பற்றி உங்களுக்குள் உசாவுகிறீர்கள் அல்லவா ? 20 "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள், உலகமோ மகிழும்; நீங்கள் துன்புறுவீர்கள், ஆனால் உங்கள் துன்பம் இன்பமாக மாறும். 21 குழந்தை பிறக்கும்போது தாயானவள் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் துன்புறுகிறாள்; குழந்தையைப் பெற்றெடுத்த பின்போ, உலகில் மனிதன் ஒருவன் தோன்றினான் என்ற மகிழ்ச்சியால் தன் வேதனையை மறந்துவிடுகிறாள். 22 அதுபோலவே, இப்பொழுது நீங்களும் துன்புறுகிறீர்கள்; ஆனால் நான் உங்களை மீண்டும் காணும்பொழுது உங்கள் உள்ளம் மகிழ்வுறும்; உங்கள் மகிழ்ச்சியை உங்களிடமிருந்து எவனும் பறித்துவிடமாட்டான். 23 அந்நாளில் என்னிடம் எதுவும் கேட்கமாட்டீர்கள். உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் தந்தையிடம் எதைக் கேட்டாலும், அதை என் பெயரால் உங்களுக்குத் தருவார். 24 இதுவரையில் என் பெயரால் நீங்கள் எதையும் கேட்டதில்லை. கேளுங்கள், பெற்றுக்கொள்வீர்கள்; அப்போது உங்கள் மகிழ்ச்சி நிறைவுபெறும். 25 இவையெல்லாம் நான் உங்களிடம் உருவகமாய்ப் பேசினேன். இதோ! நேரம் வருகிறது; அப்போது உருவகமாய் உங்களிடம் பேசேன்; என் தந்தையைப்பற்றித் தெளிவாய் எடுத்துச்சொல்வேன். 26 அந்நாளில் என் பெயரால் நீங்கள் வேண்டுவீர்கள்; ஆயினும், உங்களுக்காகத் தந்தையிடம் மன்றாடுவேன் என்று நான் சொல்லவில்லை. 27 தந்தையே உங்களை நேசிக்கிறார்; ஏனெனில், நீங்கள் என்னை நேசித்து நான் கடவுளிடமிருந்து வந்தேன் என்று விசுவசித்தீர்கள். 28 தந்தையிடமிருந்து புறப்பட்டு உலகிற்கு வந்தேன். இப்பொழுது உலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்கின்றேன்" என்றார். 29 அப்பொழுது அவருடைய சீடர்கள், "இப்பொழுதுதான் தெளிவாகப் பேசுகிறீர்; உருவகம் ஒன்றும் இல்லை! 30 உமக்கு எல்லாம் தெரியும், யாரும் உம்மைக் கேள்விகேட்கத் தேவையில்லை என்று இப்பொழுது தெரிகிறது. கடவுளிடமிருந்து நீர் வந்தீர் என்று இதனால் விசுவசிக்கிறோம்" என்றார்கள். 31 அதற்கு இயேசு "இப்பொழுது நீங்கள் விசுவசிக்கிறீர்களா ? 32 இதோ! நேரம் வருகிறது, வந்தேவிட்டது; அப்பொழுது நீங்கள் சிதறுண்டு, ஒவ்வொருவரும் தத்தம் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள்; என்னைத் தனியாய் விட்டுவிடுவீர்கள். ஆயினும் நான் தனியாய் இருப்பதில்லை; தந்தை என்னோடு இருக்கிறார். 33 என்னில் நீங்கள் சமாதானத்தைக் கண்டடையும்படி இதையெல்லாம் நான் உங்களுக்குச் சொன்னேன். உலகில் உங்களுக்கு வேதனை உண்டு; ஆயினும் தைரியமாயிருங்கள்: நான் உலகை வென்றுவிட்டேன்" என்றார்.
மொத்தம் 21 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 16 / 21
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
×

Alert

×

Tamil Letters Keypad References