தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
யோவான்
1. பாஸ்காத் திருவிழா தொடங்கவிருந்தது. தாம் இவ்வுலகினின்று தந்தையிடம் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டதென்று இயேசு அறிந்திருந்தார். உலகிலிருந்த தம்மவர்மேல் அன்புகூர்ந்திருந்த அவர், இறுதிவரை அவர்கள்மேல் அன்புகூரலானார்.
2. இராவுணவு நடைபெறலாயிற்று. இயேசுவைக் காட்டிக்கொடுக்குமாறு சீமோனின் மகனான யூதாஸ் இஸ்காரியோத்தை ஏற்கனவே அலகை தூண்டியிருந்தான்.
3. தந்தை தம் கையில் அனைத்தையும் ஒப்படைத்துள்ளார் என்றும், தாம் கடவுளிடமிருந்து வந்ததுபோல கடவுளிடம் திரும்பிச் செல்லவேண்டும் என்றும் அறிந்தவராய்,
4. இயேசு பந்தியிலிருந்து எழுந்து, மேலாடையைக் களைந்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார்.
5. பின்னர், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சீடர்களுடைய பாதங்களைக் கழுவி, இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.
6. சீமோன் இராயப்பரிடம் வந்தார்; அவர் இயேசுவிடம், "ஆண்டவரே, நீரா என் பாதங்களைக் கழுவுவது ?" என்றார்.
7. அதற்கு இயேசு, "நான் செய்வது இன்னதென்று உனக்கு இப்போது தெரியாது, பின்னரே விளங்கும்" என்றார்.
8. இராயப்பரோ, "நீர் என் பாதங்களை ஒருபோதும் கழுவ விடமாட்டேன்! " என, இயேசு, "நான் உன்னைக் கழுவாவிடில், உனக்கு என்னோடு பங்கில்லை" என்றார்.
9. அப்போது சீமோன் இராயப்பர், "அப்படியானால், ஆண்டவரே, என் பாதங்களை மட்டுமன்று, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவும்!" என்றார்.
10. இயேசு அவரை நோக்கி, "குளித்துவிட்டவன் தன் பாதங்களைமட்டும் கழுவினால் போதும்; மற்றப்படி அவன் முழுவதும் தூய்மையாயிருக்கிறான். நீங்களும் தூய்மையாயிருக்கிறீர்கள். ஆனால் எல்லோரும் தூய்மையாயில்லை" என்றார்.
11. தம்மைக் காட்டிக்கொடுப்பவன் எவனென்று அவருக்குத் தெரிந்திருந்ததால், "நீங்கள் எல்லோரும் தூய்மையாய் இல்லை" என்றார்.
12. அவர்களுடைய பாதங்களைக் கழுவியபின், அவர் தம் மேலாடையை அணிந்துகொண்டு, மீண்டும் பந்தியில் அமர்ந்து, அவர்களை நோக்கிக் கூறினார்: "நான் உங்களுக்குச் செய்தது இன்னதென்று விளங்கிற்றா ?
13. நீங்கள் என்னைப் போதகர் என்றும், ஆண்டவர் என்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுவது சரியே; நான் அவர்தாம்.
14. ஆகவே, ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் பாதங்களைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவர் ஒருவருடைய பாதங்களைக் கழுவவேண்டும்.
15. நான் உங்களுக்கு மாதிரி காட்டினேன்: நான் செய்ததுபோல நீங்களும் செய்யுங்கள்.
16. "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஊழியன் தலைவனுக்கு மேற்பட்டவன் அல்லன்; அப்போஸ்தலனும் தன்னை அனுப்பியவருக்கு மேற்பட்டவன் அல்லன்.
17. "இதையெல்லாம் அறிந்து அதன்படி நடப்பீர்களாகில் நீங்கள் பேறுபெற்றவர்கள்.
18. நான் சொல்வது உங்கள் எல்லோரையும்பற்றி அன்றி; நான் தேர்ந்துகொண்டவர்கள் எனக்குத் தெரியும். ஆனால், ' என்னோடு உண்பவனே என்மேல் பாய்ந்தான் ' என்ற மறைநூல் வாக்கு நிறைவேற வேண்டும்.
19. "அப்படி நிகழும்போது, நானே இருக்கிறேன் என்று நீங்கள் விசுவசிக்கும்பொருட்டு, நிகழ்வதற்கு முன்னதாக, இப்பொழுதே உங்களுக்குக் கூறுகிறேன்.
20. உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்பவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்; என்னை ஏற்றுக்கொள்பவனோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறான்."
21. இப்படிச் சொன்னபின், இயேசு மனக்கலக்கத்தோடு, "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்" என்று வெளிப்படையாகக் கூறினார்.
22. இப்படிக் கூறியது யாரைப்பற்றி என்று சீடர் அறியாமல் திகைப்புற்று ஒருவரையொருவர் பார்த்தனர்.
23. இயேசுவுடைய சீடர்களுள் ஒருவர் அவருடைய மார்புபக்கமாய் அமர்ந்திருந்தார். அவர்மேல்தான் இயேசு அன்புகொண்டிருந்தார்.
24. சீமோன் இராயப்பர் அவருக்குச் சைகை காட்டி, "யாரைப்பற்றிச் சொல்கிறார் என்று கேள்" என்றார்.
25. அவர் இயேசுவின் மார்பில் சாய்ந்துகொண்டு, "ஆண்டவரே, அவன் எவன் ?" என்று கேட்டார்.
26. இயேசு மறுமொழியாக, "அப்பத்துண்டை நான் எவனுக்குத் தோய்த்துக் கொடுக்கிறேனோ, அவன்தான்" என்றுசொல்லி, அப்பத்தைத் தோய்த்து, சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார்.
27. யூதாஸ் அப்பத்துண்டைப் பெற்றபின், அவனுக்குள் சாத்தான் நுழைந்தான். அப்போது இயேசு அவனிடம், "செய்யவேண்டியதை விரைவில் செய்" என்றார்.
28. எதற்காக அவனிடம் இப்படிச் சொன்னார் என்பதைப் பந்தியில் இருந்த யாரும் கண்டுணரவில்லை.
29. யூதாசிடம் பொதுப்பணம் இருந்ததால், "திருநாளுக்கு வேண்டியதை வாங்கிவா," அல்லது "ஏழைகளுக்கு ஏதாவது கொடு" என்று இயேசு அவனுக்குச் சொல்லியிருக்கலாம் எனச் சிலர் எண்ணிக்கொண்டனர்.
30. அப்பத்துண்டை அவன் பெற்றுக்கொண்டவுடனே வெளியே போனான். அப்பொழுது இரவு.
31. அவன் வெளியே போனபின், இயேசு சொன்னதாவது: "இப்பொழுது மனுமகன் மகிமை பெற்றார், கடவுளும் அவரால் மகிமை பெற்றார்.
32. கடவுள் அவரால் மகிமை பெற்றாரானால், கடவுளும் தம்மில் அவரை மகிமைப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார்.
33. "அன்புச் குழந்தைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். என்னைத் தேடுவீர்கள்; நான் யூதர்களுக்குச் சொன்னதுபோல் உங்களுக்கும் இப்பொழுது சொல்லுகிறேன்: நான் செல்லுமிடத்திற்கு உங்களால் வரமுடியாது.
34. நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளை கொடுக்கிறேன்: நீங்கள் ஒருவருக்கொருவர் அன்புசெய்யுங்கள். நான் உங்களுக்கு அன்புசெய்ததுபோல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்புசெய்யுங்கள்.
35. நீங்கள் ஒருவர் மீதொருவர் அன்புகொண்டிருந்தால் தான், நீங்கள் என் சீடர் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வார்கள்."
36. அப்போது சீமோன் இராயப்பர், "ஆண்டவரே, எங்குச் செல்லுகிறீர் ?" என்றார். இயேசு மறுமொழியாக, "நான் செல்லுமிடத்திற்கு என்னைப் பின்தொடர இப்பொழுது உன்னால் முடியாது; பின்னரே என்னைப் பின்தொடர்வாய்" என்றார்.
37. அதற்கு இராயப்பர், "ஆண்டவரே, ஏன் இப்பொழுது நான் உம்மைப் பின்தொடர முடியாது ? உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்" என்றார்.
38. அதற்கு இயேசு கூறியது: "நீ எனக்காக உன் உயிரைக் கொடுப்பாயோ ? உண்மையிலும் உண்மையாக உனக்குச் சொல்லுகிறேன்: நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன், கோழி கூவாது.

பதிவுகள்

மொத்தம் 21 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 13 / 21
1 2 3 4
5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
1 பாஸ்காத் திருவிழா தொடங்கவிருந்தது. தாம் இவ்வுலகினின்று தந்தையிடம் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டதென்று இயேசு அறிந்திருந்தார். உலகிலிருந்த தம்மவர்மேல் அன்புகூர்ந்திருந்த அவர், இறுதிவரை அவர்கள்மேல் அன்புகூரலானார். 2 இராவுணவு நடைபெறலாயிற்று. இயேசுவைக் காட்டிக்கொடுக்குமாறு சீமோனின் மகனான யூதாஸ் இஸ்காரியோத்தை ஏற்கனவே அலகை தூண்டியிருந்தான். 3 தந்தை தம் கையில் அனைத்தையும் ஒப்படைத்துள்ளார் என்றும், தாம் கடவுளிடமிருந்து வந்ததுபோல கடவுளிடம் திரும்பிச் செல்லவேண்டும் என்றும் அறிந்தவராய், 4 இயேசு பந்தியிலிருந்து எழுந்து, மேலாடையைக் களைந்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். 5 பின்னர், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சீடர்களுடைய பாதங்களைக் கழுவி, இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார். 6 சீமோன் இராயப்பரிடம் வந்தார்; அவர் இயேசுவிடம், "ஆண்டவரே, நீரா என் பாதங்களைக் கழுவுவது ?" என்றார். 7 அதற்கு இயேசு, "நான் செய்வது இன்னதென்று உனக்கு இப்போது தெரியாது, பின்னரே விளங்கும்" என்றார். 8 இராயப்பரோ, "நீர் என் பாதங்களை ஒருபோதும் கழுவ விடமாட்டேன்! " என, இயேசு, "நான் உன்னைக் கழுவாவிடில், உனக்கு என்னோடு பங்கில்லை" என்றார். 9 அப்போது சீமோன் இராயப்பர், "அப்படியானால், ஆண்டவரே, என் பாதங்களை மட்டுமன்று, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவும்!" என்றார். 10 இயேசு அவரை நோக்கி, "குளித்துவிட்டவன் தன் பாதங்களைமட்டும் கழுவினால் போதும்; மற்றப்படி அவன் முழுவதும் தூய்மையாயிருக்கிறான். நீங்களும் தூய்மையாயிருக்கிறீர்கள். ஆனால் எல்லோரும் தூய்மையாயில்லை" என்றார். 11 தம்மைக் காட்டிக்கொடுப்பவன் எவனென்று அவருக்குத் தெரிந்திருந்ததால், "நீங்கள் எல்லோரும் தூய்மையாய் இல்லை" என்றார். 12 அவர்களுடைய பாதங்களைக் கழுவியபின், அவர் தம் மேலாடையை அணிந்துகொண்டு, மீண்டும் பந்தியில் அமர்ந்து, அவர்களை நோக்கிக் கூறினார்: "நான் உங்களுக்குச் செய்தது இன்னதென்று விளங்கிற்றா ? 13 நீங்கள் என்னைப் போதகர் என்றும், ஆண்டவர் என்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுவது சரியே; நான் அவர்தாம். 14 ஆகவே, ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் பாதங்களைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவர் ஒருவருடைய பாதங்களைக் கழுவவேண்டும். 15 நான் உங்களுக்கு மாதிரி காட்டினேன்: நான் செய்ததுபோல நீங்களும் செய்யுங்கள். 16 "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஊழியன் தலைவனுக்கு மேற்பட்டவன் அல்லன்; அப்போஸ்தலனும் தன்னை அனுப்பியவருக்கு மேற்பட்டவன் அல்லன். 17 "இதையெல்லாம் அறிந்து அதன்படி நடப்பீர்களாகில் நீங்கள் பேறுபெற்றவர்கள். 18 நான் சொல்வது உங்கள் எல்லோரையும்பற்றி அன்றி; நான் தேர்ந்துகொண்டவர்கள் எனக்குத் தெரியும். ஆனால், ' என்னோடு உண்பவனே என்மேல் பாய்ந்தான் ' என்ற மறைநூல் வாக்கு நிறைவேற வேண்டும். 19 "அப்படி நிகழும்போது, நானே இருக்கிறேன் என்று நீங்கள் விசுவசிக்கும்பொருட்டு, நிகழ்வதற்கு முன்னதாக, இப்பொழுதே உங்களுக்குக் கூறுகிறேன். 20 உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்பவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்; என்னை ஏற்றுக்கொள்பவனோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறான்." 21 இப்படிச் சொன்னபின், இயேசு மனக்கலக்கத்தோடு, "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்" என்று வெளிப்படையாகக் கூறினார். 22 இப்படிக் கூறியது யாரைப்பற்றி என்று சீடர் அறியாமல் திகைப்புற்று ஒருவரையொருவர் பார்த்தனர். 23 இயேசுவுடைய சீடர்களுள் ஒருவர் அவருடைய மார்புபக்கமாய் அமர்ந்திருந்தார். அவர்மேல்தான் இயேசு அன்புகொண்டிருந்தார். 24 சீமோன் இராயப்பர் அவருக்குச் சைகை காட்டி, "யாரைப்பற்றிச் சொல்கிறார் என்று கேள்" என்றார். 25 அவர் இயேசுவின் மார்பில் சாய்ந்துகொண்டு, "ஆண்டவரே, அவன் எவன் ?" என்று கேட்டார். 26 இயேசு மறுமொழியாக, "அப்பத்துண்டை நான் எவனுக்குத் தோய்த்துக் கொடுக்கிறேனோ, அவன்தான்" என்றுசொல்லி, அப்பத்தைத் தோய்த்து, சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார். 27 யூதாஸ் அப்பத்துண்டைப் பெற்றபின், அவனுக்குள் சாத்தான் நுழைந்தான். அப்போது இயேசு அவனிடம், "செய்யவேண்டியதை விரைவில் செய்" என்றார். 28 எதற்காக அவனிடம் இப்படிச் சொன்னார் என்பதைப் பந்தியில் இருந்த யாரும் கண்டுணரவில்லை. 29 யூதாசிடம் பொதுப்பணம் இருந்ததால், "திருநாளுக்கு வேண்டியதை வாங்கிவா," அல்லது "ஏழைகளுக்கு ஏதாவது கொடு" என்று இயேசு அவனுக்குச் சொல்லியிருக்கலாம் எனச் சிலர் எண்ணிக்கொண்டனர். 30 அப்பத்துண்டை அவன் பெற்றுக்கொண்டவுடனே வெளியே போனான். அப்பொழுது இரவு. 31 அவன் வெளியே போனபின், இயேசு சொன்னதாவது: "இப்பொழுது மனுமகன் மகிமை பெற்றார், கடவுளும் அவரால் மகிமை பெற்றார். 32 கடவுள் அவரால் மகிமை பெற்றாரானால், கடவுளும் தம்மில் அவரை மகிமைப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார். 33 "அன்புச் குழந்தைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். என்னைத் தேடுவீர்கள்; நான் யூதர்களுக்குச் சொன்னதுபோல் உங்களுக்கும் இப்பொழுது சொல்லுகிறேன்: நான் செல்லுமிடத்திற்கு உங்களால் வரமுடியாது. 34 நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளை கொடுக்கிறேன்: நீங்கள் ஒருவருக்கொருவர் அன்புசெய்யுங்கள். நான் உங்களுக்கு அன்புசெய்ததுபோல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்புசெய்யுங்கள். 35 நீங்கள் ஒருவர் மீதொருவர் அன்புகொண்டிருந்தால் தான், நீங்கள் என் சீடர் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வார்கள்." 36 அப்போது சீமோன் இராயப்பர், "ஆண்டவரே, எங்குச் செல்லுகிறீர் ?" என்றார். இயேசு மறுமொழியாக, "நான் செல்லுமிடத்திற்கு என்னைப் பின்தொடர இப்பொழுது உன்னால் முடியாது; பின்னரே என்னைப் பின்தொடர்வாய்" என்றார். 37 அதற்கு இராயப்பர், "ஆண்டவரே, ஏன் இப்பொழுது நான் உம்மைப் பின்தொடர முடியாது ? உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்" என்றார். 38 அதற்கு இயேசு கூறியது: "நீ எனக்காக உன் உயிரைக் கொடுப்பாயோ ? உண்மையிலும் உண்மையாக உனக்குச் சொல்லுகிறேன்: நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன், கோழி கூவாது.
மொத்தம் 21 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 13 / 21
1 2 3 4
5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
×

Alert

×

Tamil Letters Keypad References