தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
யோவான்
1. பாஸ்காவுக்கு ஆறுநாள் இருக்கும்போது, இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். அங்கேதான் அவர் லாசரை இறந்தோரினின்று உயிர்ப்பித்தது.
2. அங்கு அவருக்கு விருந்து அளித்தனர். மார்த்தாள் பணிவிடை செய்தாள். அவரோடு பந்தியமர்ந்தவர்களுள் லாசரும் ஒருவன்.
3. மரியாள் நரந்தம் என்னும் விலையுயர்ந்த நல்ல பரிமளத்தைலம் ஓர் இராத்தல் கொண்டுவந்து, இயேசுவின் பாதங்களில் பூசி அவற்றைக் கூந்தலால் துடைத்தாள். தைலத்தின் நறுமணம் வீடு முழுவதும் பரவியது.
4. அவரைக் காட்டிக்கொடுக்கவிருந்தவனும், அவருடைய சீடருள் ஒருவனுமான யூதாஸ் இஸ்காரியோத்து,
5. "ஏன் இந்தத் தைலத்தை முந்நூறு வெள்ளிக்காசுக்கு விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாது ?" என்றான்.
6. ஏழைகள்மீது கவலையிருந்ததாலன்று அவன் இப்படிக் கூறியது; திருடனாயிருந்ததால்தான். தன்னிடம் ஒப்படைத்திருந்த பொதுப்பணத்திலிருந்து காசை அவன் எடுத்துக்கொள்வதுண்டு.
7. இயேசுவோ, "விட்டுவிடு: எனது அடக்க நாளைக் குறிக்கும்படி இதைச் செய்யட்டும்.
8. ஏனெனில், ஏழைகள் உங்களோடு என்றும் உள்ளனர்; நானோ உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை" என்றார்.
9. அவர் அங்கிருப்பதைக் கேள்வியுற்ற யூதர் பெருங்கூட்டமாக வந்தனர். இயேசுவுக்காக மட்டும் வரவில்லை; இறந்தவர்களிடமிருந்து இயேசு உயிர்ப்பித்த லாசரைக் காண்பதற்காகவும் வந்தனர்.
10. அவன் பொருட்டு யூதருள் பலர் இயேசுவிடம் போய் அவரில் விசுவாசங்கொண்டனர்.
11. ஆதலால், லாசரையும் கொன்றுபோடத் தலைமைக் குருக்கள் முடிவு செய்தனர்.
12. மறுநாள் திருவிழாவுக்கு வந்திருந்த பெருங்கூட்டம் இயேசு யெருசலேமுக்கு வருகிறார் எனக் கேள்வியுற்று,
13. கையில் குருத்தோலைகளோடு அவரை எதிர்கொண்டுபோய், ' ஓசான்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் வாழி! இஸ்ராயேலின் அரசர் வாழி! ' என்று ஆர்ப்பரித்து வரவேற்றனர்.
14. வழியிலிருந்த ஒரு கழுதைக்குட்டியின்மேல் இயேசு அமர்ந்தார்.
15. இதைக் குறித்தே, ' சீயோன் மகளே, அஞ்சவேண்டாம். இதோ! உன் அரசர், கழுதைக்குட்டியின் மேல் ஏறி வருகிறார் ' என்று எழுதியுள்ளது.
16. முதலில் அவருடைய சீடர் இதையெல்லாம் உணரவில்லை. இயேசு மகிமை அடைந்தபொழுது, அவரைப்பற்றி இங்ஙனம் எழுதியிருந்ததென்றும், எழுதியபடியே அவருக்கு நடந்ததென்றும் நினைவுகூர்ந்தனர்.
17. கல்லறையிலிருந்த லாசரை இயேசு அழைத்து இறந்தோரினின்று உயிர்ப்பித்தபொழுது அவரோடிருந்த மக்கள், அந்தப் புதுமையைக் குறித்துச் சாட்சியம் சொல்லி வந்தனர்.
18. அவர் செய்த இவ்வருங்குறியைப்பற்றிக் கேள்வியுற்றதால்தான் மக்கள் கூட்டமாக அவரை எதிர்கொண்டு வந்தார்கள்.
19. இதைக் கண்ட பரிசேயர், "பார்த்தீர்களா! உங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இதோ! உலகமே அவன்பின் ஓடுகிறது! " என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டனர்.
20. வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தவர்களுள் கிரேக்கர் சிலர் இருந்தனர்.
21. கலிலேயா நாட்டு பெத்சாயிதா ஊரினராகிய பிலிப்புவினிடம் இவர்கள் வந்து, "ஐயா! இயேசுவைக் காண விரும்புகிறோம்" என்று கேட்டுக்கொண்டார்கள்.
22. பிலிப்பு வந்து பெலவேந்திரரிடம் சொல்ல, பெலவேந்திரரும் பிலிப்புவும் இயேசுவிடம் சொன்னார்கள்.
23. அதற்கு இயேசு, "மனுமகன் மகிமைபெறும் நேரம் வந்துவிட்டது.
24. உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: கோதுமைமணி மண்ணில் விழுந்து மடிந்தாலொழிய, அது அப்படியே இருக்கும். மடிந்தால்தான், மிகுந்த பலனளிக்கும்.
25. தன் உயிரை நேசிக்கிறவன் அதை இழந்துவிடுகிறான்; இவ்வுலகில் தன் உயிரை வெறுப்பவனோ அதை முடிவில்லா வாழ்வுக்குக் காப்பாற்றிக்கொள்கிறான்.
26. எனக்குப் பணிவிடை செய்பவன் என்னைப் பின்செல்லட்டும்; எங்கே நான் இருக்கிறேனோ, அங்கே என் பணியாளனும் இருப்பான். எவனாவது எனக்குப் பணிவிடைசெய்தால், அவனுக்கு என் தந்தை மதிப்பளிப்பார்.
27. இப்பொழுது எனது ஆன்மா கலக்கமடைந்துள்ளது. நான் என்ன சொல்வேன் ? ' தந்தாய், இந்நேரத்தின் சோதனையிலிருந்து என்னைக் காப்பாற்றும் என்பேனோ ? ' இல்லை, இதற்காகத்தானே இந்நேரம்வரை வாழ்ந்தேன்.
28. தந்தாய், உமது பெயரை மகிமைப்படுத்தும்!" அப்பொழுது வானத்திலிருந்து, "மகிமைப்படுத்தினேன், மீண்டும் மகிமைப்படுத்துவேன்" என்ற குரலொலி வந்தது.
29. சூழ்ந்துநின்ற மக்கள் அதைக் கேட்டு, இடி இடித்தது என்றனர். வேறு சிலரோ, "வானதூதர் ஒருவர் அவரோடு பேசினார்" என்றனர்.
30. ஆனால் இயேசு கூறினார்: "இக்குரலொலி உங்கள்பொருட்டு உண்டானதேயன்றி, என்பொருட்டன்று.
31. "இப்பொழுதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இப்பொழுதே இவ்வுலகின் தலைவன் புறம்பே தள்ளப்படுவான்.
32. நானோ உலகினின்று உயர்த்தப்பெற்றபின் அனைவரையும் என்பால் ஈத்துக்கொள்வேன்."
33. தாம் இறக்கப்போவது எவ்வாறு என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார்.
34. அதற்கு மக்கள், "மெசியா என்றுமே நிலைத்திருப்பார் எனத் திருச்சட்டநூலிலிருந்து நாங்கள் அறிந்திருக்கிறோம். அப்படியிருக்க, ' மனுமகன் உயர்த்தப்பட வேண்டும் ' என்று நீர் சொல்லுவதெங்ஙனம் ? யார் அந்த மனுமகன்?" என்று கேட்டார்கள்.
35. இயேசு அவர்களை நோக்கிக் கூறினார்: "இன்னும் சற்று நேரமே ஒளி உங்களோடு இருக்கும். இருளில் நீங்கள் அகப்படாதபடி ஒளி இருக்கும்பொழுதே நடந்துசெல்லுங்கள். இருளில் நடப்பவனுக்குத் தான் போவது எங்கே என்பது தெரியாது.
36. ஒளி உங்களோடு இருக்கும்பொழுதே, ஒளியின்மீது விசுவாசங்கொள்ளுங்கள்; அப்போது ஒளியின் மக்களாவீர்கள்." இதைச் சொன்னபின், இயேசு அவர்களை விட்டுப் போய் மறைந்துகொண்டார்.
37. அவர்கள் கண்ணுக்கு முன்பாக இத்தனை அருங்குறிகளை இயேசு செய்திருந்தும் அவர்கள் அவரில் விசுவாசங்கொள்ளவில்லை.
38. இவ்வாறு, "ஆண்டவரே நாங்கள் அறிவித்ததைக் கேட்டு எவன் விசுவசித்தான்? ஆண்டவருடைய கைவண்மை யாருக்கு வெளிப்பட்டது ?" என்று இறைவாக்கினர் இசையாஸ் மொழிந்தது நிறைவேறவேண்டியிருந்தது.
39. ஆகையால், அவர்களால் விசுவசிக்க முடியவில்லை.
40. மேலும், "அவர்கள் கண்ணால் காணாமலும் உள்ளத்தால் உணராமலும் மனந்திரும்பாமலும் இருக்கவும், நானும் அவர்களைக் குணமாக்காதிருக்கவும், அவர்களுடைய கண்களைக் குருடாக்கி உள்ளத்தை மழுங்கச்செய்தார்" என்றும் இசையாஸ் கூறியுள்ளார் அன்றோ ?
41. அவருடைய மகிமையைக் கண்டபொழுது இசையாஸ் இதைக் கூறினார்; இப்படிச் சொன்னது அவரைப்பற்றியே.
42. எனினும், தலைவர்களுள்கூடப் பலர் அவரில் விசுவாசம் கொண்டனர். ஆனால் செபக்கூடத்துக்குப் புறம்பாகாதவாறு அதை வெளிப்படையாகக் காட்டவில்லை. ஏனெனில், பரிசேயர்களுக்கு அஞ்சினர்.
43. கடவுள் தரும் மகிமையைவிட மனிதரால் கிடைக்கும் மகிமையையே விரும்பினர்.
44. இயேசு, உரக்கக் கூவிச் சொன்னது: "என்மேல் விசுவாசம் கொள்கிறவன் என்மேல் அன்று, என்னை அனுப்பினவர்மேல்தான் விசுவாசம் கொள்கிறான்.
45. என்னைக் காண்கிறவனும் என்னை அனுப்பினவரையே காண்கிறான்.
46. என்னில் விசுவாசங்கொள்பவன் எவனும் இருளிலேயே இருந்துவிடாதபடி, நான் ஒளியாக இவ்வுலகிற்கு வந்தேன்.
47. நான் சொல்வதை ஒருவன் கேட்டபின் அதன்படி நடவாவிடில், அவனுக்குத் தீர்ப்பிடுவது நானல்லேன்; ஏனெனில், நான் உலகிற்குத் தீர்ப்பிட வரவில்லை, உலகை மீட்கவே வந்தேன்.
48. என்னைப் புறக்கணித்து நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளாதவனுக்குத் தீர்ப்பிடும் ஒன்று உண்டு: நான் கூறிய வார்த்தையே அவனுக்கு இறுதி நாளில் தீர்ப்பிடும்.
49. ஏனெனில், நானாகவே பேசவில்லை; என்னை அனுப்பிய தந்தையே நான் என்ன கூறவேண்டும், என்ன பேசவேண்டும் என்று எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
50. அவருடைய கட்டளையோ முடிவில்லா வாழ்வு என்பது எனக்குத் தெரியும். எனவே, நான் சொல்வதெல்லாம் என் தந்தை எனக்குக் கூறியவாறே சொல்லுகிறேன்."

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 21 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 21
1 2 3
4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
21
யோவான் 12:2
1 பாஸ்காவுக்கு ஆறுநாள் இருக்கும்போது, இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். அங்கேதான் அவர் லாசரை இறந்தோரினின்று உயிர்ப்பித்தது. 2 அங்கு அவருக்கு விருந்து அளித்தனர். மார்த்தாள் பணிவிடை செய்தாள். அவரோடு பந்தியமர்ந்தவர்களுள் லாசரும் ஒருவன். 3 மரியாள் நரந்தம் என்னும் விலையுயர்ந்த நல்ல பரிமளத்தைலம் ஓர் இராத்தல் கொண்டுவந்து, இயேசுவின் பாதங்களில் பூசி அவற்றைக் கூந்தலால் துடைத்தாள். தைலத்தின் நறுமணம் வீடு முழுவதும் பரவியது. 4 அவரைக் காட்டிக்கொடுக்கவிருந்தவனும், அவருடைய சீடருள் ஒருவனுமான யூதாஸ் இஸ்காரியோத்து, 5 "ஏன் இந்தத் தைலத்தை முந்நூறு வெள்ளிக்காசுக்கு விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாது ?" என்றான். 6 ஏழைகள்மீது கவலையிருந்ததாலன்று அவன் இப்படிக் கூறியது; திருடனாயிருந்ததால்தான். தன்னிடம் ஒப்படைத்திருந்த பொதுப்பணத்திலிருந்து காசை அவன் எடுத்துக்கொள்வதுண்டு. 7 இயேசுவோ, "விட்டுவிடு: எனது அடக்க நாளைக் குறிக்கும்படி இதைச் செய்யட்டும். 8 ஏனெனில், ஏழைகள் உங்களோடு என்றும் உள்ளனர்; நானோ உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை" என்றார். 9 அவர் அங்கிருப்பதைக் கேள்வியுற்ற யூதர் பெருங்கூட்டமாக வந்தனர். இயேசுவுக்காக மட்டும் வரவில்லை; இறந்தவர்களிடமிருந்து இயேசு உயிர்ப்பித்த லாசரைக் காண்பதற்காகவும் வந்தனர். 10 அவன் பொருட்டு யூதருள் பலர் இயேசுவிடம் போய் அவரில் விசுவாசங்கொண்டனர். 11 ஆதலால், லாசரையும் கொன்றுபோடத் தலைமைக் குருக்கள் முடிவு செய்தனர். 12 மறுநாள் திருவிழாவுக்கு வந்திருந்த பெருங்கூட்டம் இயேசு யெருசலேமுக்கு வருகிறார் எனக் கேள்வியுற்று, 13 கையில் குருத்தோலைகளோடு அவரை எதிர்கொண்டுபோய், ' ஓசான்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் வாழி! இஸ்ராயேலின் அரசர் வாழி! ' என்று ஆர்ப்பரித்து வரவேற்றனர். 14 வழியிலிருந்த ஒரு கழுதைக்குட்டியின்மேல் இயேசு அமர்ந்தார். 15 இதைக் குறித்தே, ' சீயோன் மகளே, அஞ்சவேண்டாம். இதோ! உன் அரசர், கழுதைக்குட்டியின் மேல் ஏறி வருகிறார் ' என்று எழுதியுள்ளது. 16 முதலில் அவருடைய சீடர் இதையெல்லாம் உணரவில்லை. இயேசு மகிமை அடைந்தபொழுது, அவரைப்பற்றி இங்ஙனம் எழுதியிருந்ததென்றும், எழுதியபடியே அவருக்கு நடந்ததென்றும் நினைவுகூர்ந்தனர். 17 கல்லறையிலிருந்த லாசரை இயேசு அழைத்து இறந்தோரினின்று உயிர்ப்பித்தபொழுது அவரோடிருந்த மக்கள், அந்தப் புதுமையைக் குறித்துச் சாட்சியம் சொல்லி வந்தனர். 18 அவர் செய்த இவ்வருங்குறியைப்பற்றிக் கேள்வியுற்றதால்தான் மக்கள் கூட்டமாக அவரை எதிர்கொண்டு வந்தார்கள். 19 இதைக் கண்ட பரிசேயர், "பார்த்தீர்களா! உங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இதோ! உலகமே அவன்பின் ஓடுகிறது! " என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டனர். 20 வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தவர்களுள் கிரேக்கர் சிலர் இருந்தனர். 21 கலிலேயா நாட்டு பெத்சாயிதா ஊரினராகிய பிலிப்புவினிடம் இவர்கள் வந்து, "ஐயா! இயேசுவைக் காண விரும்புகிறோம்" என்று கேட்டுக்கொண்டார்கள். 22 பிலிப்பு வந்து பெலவேந்திரரிடம் சொல்ல, பெலவேந்திரரும் பிலிப்புவும் இயேசுவிடம் சொன்னார்கள். 23 அதற்கு இயேசு, "மனுமகன் மகிமைபெறும் நேரம் வந்துவிட்டது. 24 உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: கோதுமைமணி மண்ணில் விழுந்து மடிந்தாலொழிய, அது அப்படியே இருக்கும். மடிந்தால்தான், மிகுந்த பலனளிக்கும். 25 தன் உயிரை நேசிக்கிறவன் அதை இழந்துவிடுகிறான்; இவ்வுலகில் தன் உயிரை வெறுப்பவனோ அதை முடிவில்லா வாழ்வுக்குக் காப்பாற்றிக்கொள்கிறான். 26 எனக்குப் பணிவிடை செய்பவன் என்னைப் பின்செல்லட்டும்; எங்கே நான் இருக்கிறேனோ, அங்கே என் பணியாளனும் இருப்பான். எவனாவது எனக்குப் பணிவிடைசெய்தால், அவனுக்கு என் தந்தை மதிப்பளிப்பார். 27 இப்பொழுது எனது ஆன்மா கலக்கமடைந்துள்ளது. நான் என்ன சொல்வேன் ? ' தந்தாய், இந்நேரத்தின் சோதனையிலிருந்து என்னைக் காப்பாற்றும் என்பேனோ ? ' இல்லை, இதற்காகத்தானே இந்நேரம்வரை வாழ்ந்தேன். 28 தந்தாய், உமது பெயரை மகிமைப்படுத்தும்!" அப்பொழுது வானத்திலிருந்து, "மகிமைப்படுத்தினேன், மீண்டும் மகிமைப்படுத்துவேன்" என்ற குரலொலி வந்தது. 29 சூழ்ந்துநின்ற மக்கள் அதைக் கேட்டு, இடி இடித்தது என்றனர். வேறு சிலரோ, "வானதூதர் ஒருவர் அவரோடு பேசினார்" என்றனர். 30 ஆனால் இயேசு கூறினார்: "இக்குரலொலி உங்கள்பொருட்டு உண்டானதேயன்றி, என்பொருட்டன்று. 31 "இப்பொழுதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இப்பொழுதே இவ்வுலகின் தலைவன் புறம்பே தள்ளப்படுவான். 32 நானோ உலகினின்று உயர்த்தப்பெற்றபின் அனைவரையும் என்பால் ஈத்துக்கொள்வேன்." 33 தாம் இறக்கப்போவது எவ்வாறு என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார். 34 அதற்கு மக்கள், "மெசியா என்றுமே நிலைத்திருப்பார் எனத் திருச்சட்டநூலிலிருந்து நாங்கள் அறிந்திருக்கிறோம். அப்படியிருக்க, ' மனுமகன் உயர்த்தப்பட வேண்டும் ' என்று நீர் சொல்லுவதெங்ஙனம் ? யார் அந்த மனுமகன்?" என்று கேட்டார்கள். 35 இயேசு அவர்களை நோக்கிக் கூறினார்: "இன்னும் சற்று நேரமே ஒளி உங்களோடு இருக்கும். இருளில் நீங்கள் அகப்படாதபடி ஒளி இருக்கும்பொழுதே நடந்துசெல்லுங்கள். இருளில் நடப்பவனுக்குத் தான் போவது எங்கே என்பது தெரியாது. 36 ஒளி உங்களோடு இருக்கும்பொழுதே, ஒளியின்மீது விசுவாசங்கொள்ளுங்கள்; அப்போது ஒளியின் மக்களாவீர்கள்." இதைச் சொன்னபின், இயேசு அவர்களை விட்டுப் போய் மறைந்துகொண்டார். 37 அவர்கள் கண்ணுக்கு முன்பாக இத்தனை அருங்குறிகளை இயேசு செய்திருந்தும் அவர்கள் அவரில் விசுவாசங்கொள்ளவில்லை. 38 இவ்வாறு, "ஆண்டவரே நாங்கள் அறிவித்ததைக் கேட்டு எவன் விசுவசித்தான்? ஆண்டவருடைய கைவண்மை யாருக்கு வெளிப்பட்டது ?" என்று இறைவாக்கினர் இசையாஸ் மொழிந்தது நிறைவேறவேண்டியிருந்தது. 39 ஆகையால், அவர்களால் விசுவசிக்க முடியவில்லை. 40 மேலும், "அவர்கள் கண்ணால் காணாமலும் உள்ளத்தால் உணராமலும் மனந்திரும்பாமலும் இருக்கவும், நானும் அவர்களைக் குணமாக்காதிருக்கவும், அவர்களுடைய கண்களைக் குருடாக்கி உள்ளத்தை மழுங்கச்செய்தார்" என்றும் இசையாஸ் கூறியுள்ளார் அன்றோ ? 41 அவருடைய மகிமையைக் கண்டபொழுது இசையாஸ் இதைக் கூறினார்; இப்படிச் சொன்னது அவரைப்பற்றியே. 42 எனினும், தலைவர்களுள்கூடப் பலர் அவரில் விசுவாசம் கொண்டனர். ஆனால் செபக்கூடத்துக்குப் புறம்பாகாதவாறு அதை வெளிப்படையாகக் காட்டவில்லை. ஏனெனில், பரிசேயர்களுக்கு அஞ்சினர். 43 கடவுள் தரும் மகிமையைவிட மனிதரால் கிடைக்கும் மகிமையையே விரும்பினர். 44 இயேசு, உரக்கக் கூவிச் சொன்னது: "என்மேல் விசுவாசம் கொள்கிறவன் என்மேல் அன்று, என்னை அனுப்பினவர்மேல்தான் விசுவாசம் கொள்கிறான். 45 என்னைக் காண்கிறவனும் என்னை அனுப்பினவரையே காண்கிறான். 46 என்னில் விசுவாசங்கொள்பவன் எவனும் இருளிலேயே இருந்துவிடாதபடி, நான் ஒளியாக இவ்வுலகிற்கு வந்தேன். 47 நான் சொல்வதை ஒருவன் கேட்டபின் அதன்படி நடவாவிடில், அவனுக்குத் தீர்ப்பிடுவது நானல்லேன்; ஏனெனில், நான் உலகிற்குத் தீர்ப்பிட வரவில்லை, உலகை மீட்கவே வந்தேன். 48 என்னைப் புறக்கணித்து நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளாதவனுக்குத் தீர்ப்பிடும் ஒன்று உண்டு: நான் கூறிய வார்த்தையே அவனுக்கு இறுதி நாளில் தீர்ப்பிடும். 49 ஏனெனில், நானாகவே பேசவில்லை; என்னை அனுப்பிய தந்தையே நான் என்ன கூறவேண்டும், என்ன பேசவேண்டும் என்று எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். 50 அவருடைய கட்டளையோ முடிவில்லா வாழ்வு என்பது எனக்குத் தெரியும். எனவே, நான் சொல்வதெல்லாம் என் தந்தை எனக்குக் கூறியவாறே சொல்லுகிறேன்."
மொத்தம் 21 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 21
1 2 3
4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
21
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References