தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
யோவேல்
1. பத்துவேல் என்பவனின் மகனாகிய யோவேல் என்பவருக்கு அருளப்பட்ட ஆண்டவருடைய திருவாக்கு:
2. முதியோரே, இதைக் கேளுங்கள், நாட்டுமக்களே, நீங்கள் அனைவரும் செவிகொடுங்கள்; உங்கள் நாட்களிலோ, உங்கள் தந்தையரின் நாட்களிலோ இதைப் போன்றதொன்று நடந்ததுண்டோ?
3. உங்கள் பிள்ளைகளுக்கு இதைப்பற்றிச் சொல்லுங்கள்; உங்கள் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லட்டும். அவர்கள் பிள்ளைகள் அடுத்த தலைமுறைக்குக் கூறட்டும்.
4. கம்பளிப் புழுவுக்குத் தப்பியதை வெட்டுக்கிளி தின்றது, வெட்டுக்கிளிக்குத் தப்பியதை பச்சைப் புழு தின்றது, பச்சைப் புழுவுக்குத் தப்பியதை பயிர்ப் புழு தின்றது.
5. எழுங்கள், குடிவெறியர்களே, எழுந்து அழுங்கள்; இனிய மதுவருந்துகிறவர்களே, அனைவரும் புலம்புங்கள்; ஏனெனில் இனிமேல் அவ்வினிய மது உங்கள் வாய்க்கு எட்டாமல் போகும்.
6. ஆற்றல் மிக்கதும், எண்ணிக்கையில் அடங்காததுமான மக்கள் இனமொன்று நம் நாட்டுக்கு எதிராய் வருகின்றது; அதன் பற்கள் சிங்கத்தின் பற்களைப் போன்றவை, அதன் கடைவாய்ப் பற்கள் பெண் சிங்கத்தின் கடைவாய்ப் பற்கள் போன்றவை.
7. நம் திராட்சைக் கொடிகளை அது பாழாக்கிற்று, நம் அத்திமரங்களைப் பிளந்தெறிந்தது; அவற்றின் பட்டைகளை உரித்து விட்டுக் கீழே வீழ்த்தியது, அதன் கிளைகள் உலர்ந்து வெளிறிப் போயின.
8. இளமையிலேயே கணவனை இழந்த கன்னிப் பெண்ணைப் போல, கோணியுடுத்திக் கொண்டு கதறி அழுங்கள்.
9. ஆண்டவருடைய கோயிலில் உணவுப் பலியும் பானப் பலியும் இல்லாமல் ஒழிந்து போயின. ஆண்டவருடைய ஊழியர்களாகிய அர்ச்சகர்கள் அழுகின்றார்கள்.
10. வயல்வெளிகள் பாழாகின, நிலமும் புலம்புகின்றது; ஏனெனில் கோதுமை விளைச்சல் அழிவுற்றது, திராட்சை இரசம் வற்றிற்று, எண்ணெய் வறண்டு போயிற்று.
11. உழவர்களே, கலங்கி நில்லுங்கள், திராட்சைத் தோட்டக்காரர்களே, புலம்புங்கள்; ஏனெனில் கோதுமையும் வாற்கோதுமையும் இல்லாமல் போயின; வயலின் விளைச்சல் அழிந்து போயிற்று.
12. திராட்சைக் கொடி வாடிப்போயிற்று, அத்திமரம் உலர்ந்து போனது; மாதுளை, பேரீந்து, பேரிலந்தை முதலிய வயல் வெளி மரங்கள் யாவும் வதங்கி விட்டன; மகிழ்ச்சியும் மனிதர்களை விட்டு அகன்று விட்டது.
13. அர்ச்சகர்களே, கோணியுடுத்திக் கொண்டு அழுங்கள், பீடத்தில் பணிசெய்வோரே, புலம்புங்கள்; என் கடவுளின் ஊழியர்களே, கோணியுடை அணிந்து இரவைக் கழியுங்கள்; ஏனெனில் உங்கள் கடவுளின் கோயிலில் உணவுப்பலியும் பானப்பலியும் இல்லாதாகின.
14. உண்ணா நோன்புக்கெனக் காலத்தைக் குறிப்பிடுங்கள், வழிபாட்டுக் கூட்டத்தைக் கூட்டுங்கள்; உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கோயிலுக்கு மூப்பர்களையும், நாட்டு மக்கள் அனைவரையும் வரவழைத்து, ஆண்டவரை நோக்கிக் கதறுங்கள்.
15. இந்த நாளுக்கு ஐயோ கேடு! ஏனெனில் ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது, எல்லாம் வல்லவரிடமிருந்து அழிவைப் போல் அது வருகிறது.
16. நம் கண் முன்னாலேயே உணவுப் பொருளெல்லாம் அழியவில்லையா? நம் கடவுளின் வீட்டிலிருந்து அகமகிழ்ச்சியும் அக்களிப்பும் அகன்று போயினவன்றோ?
17. விதைகள் மண்கட்டிகளின் கீழ் மக்கிப்போயின, பண்டகச்சாலைகள் வெறுமையாய் கிடக்கின்றன, களஞ்சியங்கள் பாழடைந்து போயின; ஏனெனில் கோதுமை விளைச்சல் இல்லாமல் போயிற்று.
18. மிருகங்கள் தவிப்பதை என்னென்பது! மாட்டு மந்தைகள் திகைத்து நிற்கின்றன; ஏனெனில் அவற்றிற்கு மேய்ச்சல் கிடையாது; ஆட்டு மந்தைகளும் இன்னலுறுகின்றன.
19. ஆண்டவரே, உம்மை நோக்கிக் கதறுகின்றேன்; ஏனெனில் காட்டிலிருந்த மேய்ச்சல் இடங்களை நெருப்பு பாழ்படுத்தி விட்டது. வயல் வெளியில் இருந்த மரங்களை எல்லாம் தீயானது சுட்டெரித்து விட்டது.
20. காட்டு மிருகங்கள் கூட உம்மை நோக்கிக் கதறுகின்றன. ஏனெனில் நீரோடைகள் வற்றிப் போய்விட்டன; காட்டிலிருந்த மேய்ச்சல் இடங்களை நெருப்பு சுட்டெரித்தது.
மொத்தம் 3 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 1 / 3
1 2 3
1 பத்துவேல் என்பவனின் மகனாகிய யோவேல் என்பவருக்கு அருளப்பட்ட ஆண்டவருடைய திருவாக்கு: 2 முதியோரே, இதைக் கேளுங்கள், நாட்டுமக்களே, நீங்கள் அனைவரும் செவிகொடுங்கள்; உங்கள் நாட்களிலோ, உங்கள் தந்தையரின் நாட்களிலோ இதைப் போன்றதொன்று நடந்ததுண்டோ? 3 உங்கள் பிள்ளைகளுக்கு இதைப்பற்றிச் சொல்லுங்கள்; உங்கள் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லட்டும். அவர்கள் பிள்ளைகள் அடுத்த தலைமுறைக்குக் கூறட்டும். 4 கம்பளிப் புழுவுக்குத் தப்பியதை வெட்டுக்கிளி தின்றது, வெட்டுக்கிளிக்குத் தப்பியதை பச்சைப் புழு தின்றது, பச்சைப் புழுவுக்குத் தப்பியதை பயிர்ப் புழு தின்றது. 5 எழுங்கள், குடிவெறியர்களே, எழுந்து அழுங்கள்; இனிய மதுவருந்துகிறவர்களே, அனைவரும் புலம்புங்கள்; ஏனெனில் இனிமேல் அவ்வினிய மது உங்கள் வாய்க்கு எட்டாமல் போகும். 6 ஆற்றல் மிக்கதும், எண்ணிக்கையில் அடங்காததுமான மக்கள் இனமொன்று நம் நாட்டுக்கு எதிராய் வருகின்றது; அதன் பற்கள் சிங்கத்தின் பற்களைப் போன்றவை, அதன் கடைவாய்ப் பற்கள் பெண் சிங்கத்தின் கடைவாய்ப் பற்கள் போன்றவை. 7 நம் திராட்சைக் கொடிகளை அது பாழாக்கிற்று, நம் அத்திமரங்களைப் பிளந்தெறிந்தது; அவற்றின் பட்டைகளை உரித்து விட்டுக் கீழே வீழ்த்தியது, அதன் கிளைகள் உலர்ந்து வெளிறிப் போயின. 8 இளமையிலேயே கணவனை இழந்த கன்னிப் பெண்ணைப் போல, கோணியுடுத்திக் கொண்டு கதறி அழுங்கள். 9 ஆண்டவருடைய கோயிலில் உணவுப் பலியும் பானப் பலியும் இல்லாமல் ஒழிந்து போயின. ஆண்டவருடைய ஊழியர்களாகிய அர்ச்சகர்கள் அழுகின்றார்கள். 10 வயல்வெளிகள் பாழாகின, நிலமும் புலம்புகின்றது; ஏனெனில் கோதுமை விளைச்சல் அழிவுற்றது, திராட்சை இரசம் வற்றிற்று, எண்ணெய் வறண்டு போயிற்று. 11 உழவர்களே, கலங்கி நில்லுங்கள், திராட்சைத் தோட்டக்காரர்களே, புலம்புங்கள்; ஏனெனில் கோதுமையும் வாற்கோதுமையும் இல்லாமல் போயின; வயலின் விளைச்சல் அழிந்து போயிற்று. 12 திராட்சைக் கொடி வாடிப்போயிற்று, அத்திமரம் உலர்ந்து போனது; மாதுளை, பேரீந்து, பேரிலந்தை முதலிய வயல் வெளி மரங்கள் யாவும் வதங்கி விட்டன; மகிழ்ச்சியும் மனிதர்களை விட்டு அகன்று விட்டது. 13 அர்ச்சகர்களே, கோணியுடுத்திக் கொண்டு அழுங்கள், பீடத்தில் பணிசெய்வோரே, புலம்புங்கள்; என் கடவுளின் ஊழியர்களே, கோணியுடை அணிந்து இரவைக் கழியுங்கள்; ஏனெனில் உங்கள் கடவுளின் கோயிலில் உணவுப்பலியும் பானப்பலியும் இல்லாதாகின. 14 உண்ணா நோன்புக்கெனக் காலத்தைக் குறிப்பிடுங்கள், வழிபாட்டுக் கூட்டத்தைக் கூட்டுங்கள்; உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கோயிலுக்கு மூப்பர்களையும், நாட்டு மக்கள் அனைவரையும் வரவழைத்து, ஆண்டவரை நோக்கிக் கதறுங்கள். 15 இந்த நாளுக்கு ஐயோ கேடு! ஏனெனில் ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது, எல்லாம் வல்லவரிடமிருந்து அழிவைப் போல் அது வருகிறது. 16 நம் கண் முன்னாலேயே உணவுப் பொருளெல்லாம் அழியவில்லையா? நம் கடவுளின் வீட்டிலிருந்து அகமகிழ்ச்சியும் அக்களிப்பும் அகன்று போயினவன்றோ? 17 விதைகள் மண்கட்டிகளின் கீழ் மக்கிப்போயின, பண்டகச்சாலைகள் வெறுமையாய் கிடக்கின்றன, களஞ்சியங்கள் பாழடைந்து போயின; ஏனெனில் கோதுமை விளைச்சல் இல்லாமல் போயிற்று. 18 மிருகங்கள் தவிப்பதை என்னென்பது! மாட்டு மந்தைகள் திகைத்து நிற்கின்றன; ஏனெனில் அவற்றிற்கு மேய்ச்சல் கிடையாது; ஆட்டு மந்தைகளும் இன்னலுறுகின்றன. 19 ஆண்டவரே, உம்மை நோக்கிக் கதறுகின்றேன்; ஏனெனில் காட்டிலிருந்த மேய்ச்சல் இடங்களை நெருப்பு பாழ்படுத்தி விட்டது. வயல் வெளியில் இருந்த மரங்களை எல்லாம் தீயானது சுட்டெரித்து விட்டது. 20 காட்டு மிருகங்கள் கூட உம்மை நோக்கிக் கதறுகின்றன. ஏனெனில் நீரோடைகள் வற்றிப் போய்விட்டன; காட்டிலிருந்த மேய்ச்சல் இடங்களை நெருப்பு சுட்டெரித்தது.
மொத்தம் 3 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 1 / 3
1 2 3
×

Alert

×

Tamil Letters Keypad References