தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
யோபு
1. அதற்கு யோபு கூறிய மறுமொழி இதுவே:
2. நீ சொல்வது உண்மை தான், எனக்கும் தெரியும்; ஆனால் கடவுள் முன்னிலையில் மனிதன் எப்படி நீதிமானாகத் தோன்றக் கூடும்?
3. அவரோடு வழக்காட எவனாவது துணிவானாயின், ஆயிரத்தில் ஒன்றுக்குக் கூட அவனால் பதில் சொல்ல முடியாதே!
4. அவரோ உள்ளத்தில் ஞானமிக்கவர், ஆற்றலில் வல்லவர்; அவரை எதிர்த்து நின்று வெற்றி கண்டவன் யார்?- அவர் மலைகளைப் பெயர்க்கிறார்,
5. அவை அதை அறியமாட்டா; சினமுற்ற போது அவர் அவற்றை விழத்தாட்டுகிறார்.
6. மண்ணுலகை அதனிடத்தினின்று அசைக்கிறார், அதன் தூண்கள் அதிர்கின்றன.
7. அவர் ஆணையிட்டால் கதிரவன் எழமாட்டான், விண்மீன்களையும் அவரே முத்திரையிடுகிறார்.
8. அவர் ஒருவரே வான்வெளியை விரித்தார், கடலின் பேரலைகளைக் காலால் மிதித்தார்,
9. சப்தரிஷிகணம், மிருகசீரிடம், கார்த்திகை விண்மீன்களையும், தென்திசை மண்டல விண்மீன் குழுக்களையும் அவரே படைத்தார்.
10. ஆராய்ச்சியறிவுக்கு எட்டாத அரிய செயல்களையும் கணக்கற்ற விந்தைகளையும் அவர் செய்கிறார்.
11. அவர் என்னைக் கடந்து போனாலும் நான் காண்கிறதில்லை, அவர் அசைந்து போவதுகூட எனக்குப் புலப்படுகிறதில்லை.
12. அவர் ஒன்றைப் பறித்துச் சென்றால், அவரை மறிப்பவன் யார்? 'என்ன செய்கிறீர்?' என அவரைக் கேட்பவன் யார்?
13. கடவுள் தம் சினம் ஆறமாட்டார், ராகாபின் துணைவர்கள் அவர் காலடியில் கிடக்கின்றனர்.
14. அப்படியிருக்க, அவருக்கு நான் மறுமொழி கூறுவதெப்படி? அவரோடு வழக்காட எவ்வாறு சொற்களைத் தேர்ந்தெடுப்பேன்?
15. நான் குற்றமற்றவனே என்றாலும், வழக்காடுவதால் பயனென்ன? என் நீதிபதியையே நான் கெஞ்சி மன்றாடுவேன்.
16. நான் அழைக்கும் போது மறுமொழி கூற அவர் வந்தாலும், என் கூக்குரலைக் கேட்பாரென நான் நம்புவதெப்படி?
17. ஏனெனில் கடும் புயலால் என்னை நசுக்குகிறார், காரணமின்றி என் காயங்களைப் பலுகச்செய்கிறார்.
18. மூச்சு விடவும் என்னை விடாதபடி மனக் கசப்பினால் என்னை நிரப்புகிறார்.
19. வலிமையைப் பயன்படுத்தலாமா? அவரோ ஒப்பற்ற வலிமையுள்ளவர். நீதி மன்றத்திற்குப் போகலாமா? அவருக்கு அழைப்பாணை விடுப்பவன் யார்?
20. நான் குற்றமற்றவன் என எண்பிக்க முயன்றால், என் வாயே என் மேல் குற்றம் சுமத்துகிறது; நான் மாசற்றவன் எனக் காட்டினால் எதிர்மாறானதை அவர் எண்பிக்கிறார்.
21. ஆனால் நான் மாசற்றவனா? எனக்கே தெரியாதே! வாழ்க்கையை நான் வெறுக்கிறேன்.
22. எல்லாம் ஒன்றுதான்; ஆதலால் நான் சொல்கிறேன். மாசற்றவனையும் கொடியவனையும் அவர் ஒருங்கே அழிக்கிறார்.
23. திடீரெனப் பேரிடர் சாகடித்தாலும் அவர் மாசற்றவர்களின் துன்பத்தைக் கண்டு நகைக்கிறாரே!
24. மாநிலம் கொடியவன் கையில் விடப்பட்டுள்ளது, அதன் நீதிபதிகளின் முகங்களை அவன் மூடிவிடுகிறான், அவனில்லை என்றால் வேறெவன் அதைச் செய்யக்கூடும்?
25. அஞ்சற்காரனிலும் விரைவாய் என் நாட்கள் ஓடுகின்றன, அவை பறக்கின்றன, நன்மையைக் காண்பதில்லை.
26. நாணற் படகு போல் அவை விரைந்தோடுகின்றன, இரை மேல் பாயும் கழுகு போல் பறந்து போகின்றன.
27. என் முறையீட்டை மறந்து விடுவேன், வருத்தம் நிறைந்த என் முகத்தை மாற்றிக் கொண்டு முகமலர்ச்சியோடு இருப்பேன்' என்று நான் சொல்வேனாகில்,
28. என் துன்பங்களையெல்லாம் கண்டு அஞ்சுகிறேன்; ஏனெனில் என்னை மாசற்றவன் என்று நீர் ஏற்றுக் கொள்ள மாட்டீர் என அறிவேன்.
29. எனக்குத் தண்டனைத் தீர்ப்பு கிடைக்கப் போகிறது, நான் எதற்கு வீணாக வாதாட வேண்டும்?
30. வெண்பனியால் என்னைக் கழுவினாலும், கடும் காரத்தில் என் கைகளைக் கழுவித் தூய்மைப்படுத்தினாலும்,
31. நீர் என்னைச் சேற்றுப் பள்ளத்தில் அமிழ்த்துவீர், என் சொந்த உடைகளே என்னை அருவருக்கும்.
32. அவருக்கு நான் பதில் சொல்லவும், இருவரும் சேர்ந்து வழக்காடவும், அவர் என்னைப் போல் ஒரு மனிதன் அல்லரே!
33. எங்களிருவர் மேலும் தன் கைகளை வைத்து, இடை நின்று வழக்குத் தீர்ப்பவன் எவனுமில்லையே!
34. தம் கோலால் என்னை அடிக்காமல் அவர் நிறுத்தட்டும், அவரைப் பற்றிய அச்சம் எனக்கு நடுக்கம் தராதிருக்கட்டும்.
35. அப்போது நான் அவருக்கு அஞ்சாமல் பேசுவேன், ஏனெனில் அஞ்சுவதற்கு என்னில் ஒன்றும் இல்லை.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 9 / 42
யோபு 9:34
1 அதற்கு யோபு கூறிய மறுமொழி இதுவே: 2 நீ சொல்வது உண்மை தான், எனக்கும் தெரியும்; ஆனால் கடவுள் முன்னிலையில் மனிதன் எப்படி நீதிமானாகத் தோன்றக் கூடும்? 3 அவரோடு வழக்காட எவனாவது துணிவானாயின், ஆயிரத்தில் ஒன்றுக்குக் கூட அவனால் பதில் சொல்ல முடியாதே! 4 அவரோ உள்ளத்தில் ஞானமிக்கவர், ஆற்றலில் வல்லவர்; அவரை எதிர்த்து நின்று வெற்றி கண்டவன் யார்?- அவர் மலைகளைப் பெயர்க்கிறார், 5 அவை அதை அறியமாட்டா; சினமுற்ற போது அவர் அவற்றை விழத்தாட்டுகிறார். 6 மண்ணுலகை அதனிடத்தினின்று அசைக்கிறார், அதன் தூண்கள் அதிர்கின்றன. 7 அவர் ஆணையிட்டால் கதிரவன் எழமாட்டான், விண்மீன்களையும் அவரே முத்திரையிடுகிறார். 8 அவர் ஒருவரே வான்வெளியை விரித்தார், கடலின் பேரலைகளைக் காலால் மிதித்தார், 9 சப்தரிஷிகணம், மிருகசீரிடம், கார்த்திகை விண்மீன்களையும், தென்திசை மண்டல விண்மீன் குழுக்களையும் அவரே படைத்தார். 10 ஆராய்ச்சியறிவுக்கு எட்டாத அரிய செயல்களையும் கணக்கற்ற விந்தைகளையும் அவர் செய்கிறார். 11 அவர் என்னைக் கடந்து போனாலும் நான் காண்கிறதில்லை, அவர் அசைந்து போவதுகூட எனக்குப் புலப்படுகிறதில்லை. 12 அவர் ஒன்றைப் பறித்துச் சென்றால், அவரை மறிப்பவன் யார்? 'என்ன செய்கிறீர்?' என அவரைக் கேட்பவன் யார்? 13 கடவுள் தம் சினம் ஆறமாட்டார், ராகாபின் துணைவர்கள் அவர் காலடியில் கிடக்கின்றனர். 14 அப்படியிருக்க, அவருக்கு நான் மறுமொழி கூறுவதெப்படி? அவரோடு வழக்காட எவ்வாறு சொற்களைத் தேர்ந்தெடுப்பேன்? 15 நான் குற்றமற்றவனே என்றாலும், வழக்காடுவதால் பயனென்ன? என் நீதிபதியையே நான் கெஞ்சி மன்றாடுவேன். 16 நான் அழைக்கும் போது மறுமொழி கூற அவர் வந்தாலும், என் கூக்குரலைக் கேட்பாரென நான் நம்புவதெப்படி? 17 ஏனெனில் கடும் புயலால் என்னை நசுக்குகிறார், காரணமின்றி என் காயங்களைப் பலுகச்செய்கிறார். 18 மூச்சு விடவும் என்னை விடாதபடி மனக் கசப்பினால் என்னை நிரப்புகிறார். 19 வலிமையைப் பயன்படுத்தலாமா? அவரோ ஒப்பற்ற வலிமையுள்ளவர். நீதி மன்றத்திற்குப் போகலாமா? அவருக்கு அழைப்பாணை விடுப்பவன் யார்? 20 நான் குற்றமற்றவன் என எண்பிக்க முயன்றால், என் வாயே என் மேல் குற்றம் சுமத்துகிறது; நான் மாசற்றவன் எனக் காட்டினால் எதிர்மாறானதை அவர் எண்பிக்கிறார். 21 ஆனால் நான் மாசற்றவனா? எனக்கே தெரியாதே! வாழ்க்கையை நான் வெறுக்கிறேன். 22 எல்லாம் ஒன்றுதான்; ஆதலால் நான் சொல்கிறேன். மாசற்றவனையும் கொடியவனையும் அவர் ஒருங்கே அழிக்கிறார். 23 திடீரெனப் பேரிடர் சாகடித்தாலும் அவர் மாசற்றவர்களின் துன்பத்தைக் கண்டு நகைக்கிறாரே! 24 மாநிலம் கொடியவன் கையில் விடப்பட்டுள்ளது, அதன் நீதிபதிகளின் முகங்களை அவன் மூடிவிடுகிறான், அவனில்லை என்றால் வேறெவன் அதைச் செய்யக்கூடும்? 25 அஞ்சற்காரனிலும் விரைவாய் என் நாட்கள் ஓடுகின்றன, அவை பறக்கின்றன, நன்மையைக் காண்பதில்லை. 26 நாணற் படகு போல் அவை விரைந்தோடுகின்றன, இரை மேல் பாயும் கழுகு போல் பறந்து போகின்றன. 27 என் முறையீட்டை மறந்து விடுவேன், வருத்தம் நிறைந்த என் முகத்தை மாற்றிக் கொண்டு முகமலர்ச்சியோடு இருப்பேன்' என்று நான் சொல்வேனாகில், 28 என் துன்பங்களையெல்லாம் கண்டு அஞ்சுகிறேன்; ஏனெனில் என்னை மாசற்றவன் என்று நீர் ஏற்றுக் கொள்ள மாட்டீர் என அறிவேன். 29 எனக்குத் தண்டனைத் தீர்ப்பு கிடைக்கப் போகிறது, நான் எதற்கு வீணாக வாதாட வேண்டும்? 30 வெண்பனியால் என்னைக் கழுவினாலும், கடும் காரத்தில் என் கைகளைக் கழுவித் தூய்மைப்படுத்தினாலும், 31 நீர் என்னைச் சேற்றுப் பள்ளத்தில் அமிழ்த்துவீர், என் சொந்த உடைகளே என்னை அருவருக்கும். 32 அவருக்கு நான் பதில் சொல்லவும், இருவரும் சேர்ந்து வழக்காடவும், அவர் என்னைப் போல் ஒரு மனிதன் அல்லரே! 33 எங்களிருவர் மேலும் தன் கைகளை வைத்து, இடை நின்று வழக்குத் தீர்ப்பவன் எவனுமில்லையே! 34 தம் கோலால் என்னை அடிக்காமல் அவர் நிறுத்தட்டும், அவரைப் பற்றிய அச்சம் எனக்கு நடுக்கம் தராதிருக்கட்டும். 35 அப்போது நான் அவருக்கு அஞ்சாமல் பேசுவேன், ஏனெனில் அஞ்சுவதற்கு என்னில் ஒன்றும் இல்லை.
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 9 / 42
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References