தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
யோபு
1. மனிதனின் வாழ்நாள் உலகில் போர்ச்சேவை நாள் அன்றோ? அவனுடைய நாட்கள் கூலியாளின் நாட்கள் போன்றவை அல்லவா?
2. அடிமை ஊழியன் நிழலுக்கு ஏங்குவது போலும், கூலியாள் தன் கூலியையே எதிர்பார்ப்பது போலும்,
3. எனக்கு எத்தனையோ மாதங்கள் வீணாயின, வேதனை மிக்க இரவுகள் என் பங்காயின.
4. படுக்கப் போகையில், 'எப்போது விடியுமோ!' என்கிறேன், இரவோ நீண்டதாயிருக்கிறது, விடியும் வரை படுக்கையில் புரண்டு புரண்டு சலிப்புறுகிறேன்.
5. என் சதை புழுவாலும் புழுதியாலும் மூடியுள்ளது, என் தோல் வெடிக்கிறது, சீழ்வடிகிறது.
6. நெசவுத்தறி நாடாவிலும் விரைவாக என் நாட்கள் ஓடி, நம்பிக்கைக்கு இடமே இன்றி முடிவடைகின்றன.
7. என் உயிர் வெறும் காற்றே என்பதை நினைவு கூரும். என் கண் இனி ஒருபோதும் நன்மையைக் காணாது.
8. என்னைப் பார்ப்பவனின் கண்ணும் இனி என்னைக் காணாது, உம் பார்வை என்மேல் இருக்கையில் நான் இல்லாமற் போவேன்.
9. கார்மேகம் கலைந்து மறைவது எவ்வாறே, அவ்வாறே பாதாளத்தில் இறங்கினவன் இனி ஏறிவரான் .
10. இனி அவன் தன் வீட்டிற்குத் திரும்புவதுமில்லை, அவனுக்குரிய இடமும் இனி அவனைக் கண்டறியாது.
11. ஆதலால் நான் என் வாயை அடக்கி வைக்கமாட்டேன், என் ஆவியின் வேதனையை வெளியிடுவேன், என் ஆன்மாவின் கசப்பில் நான் முறையிடுவேன்.
12. நான் என்ன கடலா? அல்லது கடல்வாழ் திமிங்கிலமா? பின்னர் ஏன் என் மேல் காவல் வைக்கிறீர்?
13. என் படுக்கை எனக்கு ஆறுதல் அளிக்கும், என் மெத்தை என் முறையீட்டைத் தணிக்கும்' என்று சொல்லி நான் உறங்கச் சென்றால்,
14. கனவுகளால் என்னை நீர் கலங்கச் செய்கிறீர், காட்சிகளால் என்னை நீர் திகிலடையச் செய்கிறீர்.
15. ஆதலால் குரல்வளை நெறிக்கப்படுவதை என்னுள்ளம் விரும்புகிறது. இவ் வேதனைகளை விடச் சாவை நான் வரவேற்கிறேன்.
16. வாழ்க்கையை நான் வெறுக்கிறேன், என்றென்றைக்கும் வாழ நான் விரும்பவில்லை, ஆதலால் என்னை விட்டுவிடும்; என் வாழ்நாட்கள் வெறும் காற்றே.
17. மனிதனை இவ்வளவு நீர் மதிப்பதற்கும், உம் சிந்தையை அவன்மேல் வைப்பதற்கும் அவன் எம்மாத்திரம்?
18. காலை தோறும் நீர் அவனைச் சந்தித்து, வினாடி தோறும் அவனைப் பரிசோதிப்பானேன்?
19. எத்துணைக் காலம் உம் பார்வை என்னை விட்டு அகலாதிருக்கும்? உமிழ் நீரை விழுங்கக் கூட என்னை விடமாட்டீரோ?
20. மனிதரைக் காவல் செய்பவரே, அப்படியே நான் பாவஞ் செய்திருப்பின், உமக்கு நான் என்ன செய்தேன்? என்னை உம்முடைய இலக்காக ஆக்கியது ஏன்? உமக்கு நான் ஒரு சுமையாகியது ஏன்?
21. என்னுடைய பாவத்தை நீர் ஏன் மன்னிக்கவில்லை? எனது அக்கிரமத்தை நீர் ஏன் அகற்றவில்லை? இதோ, இப்பொழுது நான் புழுதியில் கிடந்து உறங்குவேன், நாளைக் காலையில் நீர் தேடும் போது நான் இருக்கமாட்டேன்."

பதிவுகள்

மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 7 / 42
1 மனிதனின் வாழ்நாள் உலகில் போர்ச்சேவை நாள் அன்றோ? அவனுடைய நாட்கள் கூலியாளின் நாட்கள் போன்றவை அல்லவா? 2 அடிமை ஊழியன் நிழலுக்கு ஏங்குவது போலும், கூலியாள் தன் கூலியையே எதிர்பார்ப்பது போலும், 3 எனக்கு எத்தனையோ மாதங்கள் வீணாயின, வேதனை மிக்க இரவுகள் என் பங்காயின. 4 படுக்கப் போகையில், 'எப்போது விடியுமோ!' என்கிறேன், இரவோ நீண்டதாயிருக்கிறது, விடியும் வரை படுக்கையில் புரண்டு புரண்டு சலிப்புறுகிறேன். 5 என் சதை புழுவாலும் புழுதியாலும் மூடியுள்ளது, என் தோல் வெடிக்கிறது, சீழ்வடிகிறது. 6 நெசவுத்தறி நாடாவிலும் விரைவாக என் நாட்கள் ஓடி, நம்பிக்கைக்கு இடமே இன்றி முடிவடைகின்றன. 7 என் உயிர் வெறும் காற்றே என்பதை நினைவு கூரும். என் கண் இனி ஒருபோதும் நன்மையைக் காணாது. 8 என்னைப் பார்ப்பவனின் கண்ணும் இனி என்னைக் காணாது, உம் பார்வை என்மேல் இருக்கையில் நான் இல்லாமற் போவேன். 9 கார்மேகம் கலைந்து மறைவது எவ்வாறே, அவ்வாறே பாதாளத்தில் இறங்கினவன் இனி ஏறிவரான் . 10 இனி அவன் தன் வீட்டிற்குத் திரும்புவதுமில்லை, அவனுக்குரிய இடமும் இனி அவனைக் கண்டறியாது. 11 ஆதலால் நான் என் வாயை அடக்கி வைக்கமாட்டேன், என் ஆவியின் வேதனையை வெளியிடுவேன், என் ஆன்மாவின் கசப்பில் நான் முறையிடுவேன். 12 நான் என்ன கடலா? அல்லது கடல்வாழ் திமிங்கிலமா? பின்னர் ஏன் என் மேல் காவல் வைக்கிறீர்? 13 என் படுக்கை எனக்கு ஆறுதல் அளிக்கும், என் மெத்தை என் முறையீட்டைத் தணிக்கும்' என்று சொல்லி நான் உறங்கச் சென்றால், 14 கனவுகளால் என்னை நீர் கலங்கச் செய்கிறீர், காட்சிகளால் என்னை நீர் திகிலடையச் செய்கிறீர். 15 ஆதலால் குரல்வளை நெறிக்கப்படுவதை என்னுள்ளம் விரும்புகிறது. இவ் வேதனைகளை விடச் சாவை நான் வரவேற்கிறேன். 16 வாழ்க்கையை நான் வெறுக்கிறேன், என்றென்றைக்கும் வாழ நான் விரும்பவில்லை, ஆதலால் என்னை விட்டுவிடும்; என் வாழ்நாட்கள் வெறும் காற்றே. 17 மனிதனை இவ்வளவு நீர் மதிப்பதற்கும், உம் சிந்தையை அவன்மேல் வைப்பதற்கும் அவன் எம்மாத்திரம்? 18 காலை தோறும் நீர் அவனைச் சந்தித்து, வினாடி தோறும் அவனைப் பரிசோதிப்பானேன்? 19 எத்துணைக் காலம் உம் பார்வை என்னை விட்டு அகலாதிருக்கும்? உமிழ் நீரை விழுங்கக் கூட என்னை விடமாட்டீரோ? 20 மனிதரைக் காவல் செய்பவரே, அப்படியே நான் பாவஞ் செய்திருப்பின், உமக்கு நான் என்ன செய்தேன்? என்னை உம்முடைய இலக்காக ஆக்கியது ஏன்? உமக்கு நான் ஒரு சுமையாகியது ஏன்? 21 என்னுடைய பாவத்தை நீர் ஏன் மன்னிக்கவில்லை? எனது அக்கிரமத்தை நீர் ஏன் அகற்றவில்லை? இதோ, இப்பொழுது நான் புழுதியில் கிடந்து உறங்குவேன், நாளைக் காலையில் நீர் தேடும் போது நான் இருக்கமாட்டேன்."
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 7 / 42
×

Alert

×

Tamil Letters Keypad References