தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
யோபு
1. அப்பொழுது தேமானியனாகிய ஏலிப்பாஸ் பேசத்தொடங்கினான். அவன் சொன்னது:
2. உம்மிடம் எவனாவது பேசத் துணிந்தால், அது உம் மனத்தைப் புண்படுத்துமோ? ஆயினும் யார்தான் பேசாமல் இருக்கமுடியும்?
3. ஒருகாலத்தில் நீர் பலருக்குக் கற்பித்தீர், தளர்ந்த கைகளுக்கு வலிமையூட்டினீர்.
4. தத்தளித்தவர்களை உம் சொற்களால் உறுதிப்படுத்தினீர், தள்ளாடிய கால்களைத் திடப்படுத்தினீர்.
5. ஆனால் துன்பம் இப்பொழுது உமக்கு வந்துற்றது, நீரோ தைரியமற்றுப்போனீர்; உம்மைத் தொடவே நீர் மனங்கலங்குகிறீர்.
6. உமது இறைப்பற்று உமக்கு நம்பிக்கை தரவில்லையா? உம் நெறிகளின் நேர்மை உமக்கு நம்பிக்கை அளிக்கவில்லையா?
7. மாசற்றவன் எவனாவது அழிந்து போனதுண்டா? நேர்மையானவர்கள் எங்கேனும் வதைக்கப் பட்டதுண்டா? சிந்தித்துப் பாரும்.
8. நான் பார்த்த வரையில், அக்கிரமத்தை உழுது தீமையை விதைக்கிறவர்கள் அதையே அறுக்கிறார்கள்.
9. கடவுளின் மூச்சு அவர்களை அழிக்கிறது. அவரது கோபத்தின் சீற்றம் அவர்களை நாசமாக்குகிறது.
10. சிங்கத்தின் கர்ச்சனையும், வெகுண்ட சிங்கத்தின் முழக்கமும் அடங்குகிறது; சிங்கக் குட்டிகளின் பற்களும் தகர்க்கப்படுகின்றன.
11. இரையில்லாமல் சிங்கம் இறந்து போகிறது; சிங்கக் குட்டிகள் சிதறுண்டு போகின்றன.
12. மறைபொருள் ஒன்று எனக்குச் சொல்லப்பட்டது, அதன் மெல்லிய ஓசை என் காதில் மெதுவாய் விழுந்தது.
13. மனிதர்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது இரவில் காட்சிகள் சிந்தையை ஆட்கொள்ளுகையில்,
14. திகிலும் நடுக்கமும் என்னைப் பீடித்தன; என் எலும்புகளெல்லாம் நடுநடுங்கின.
15. அப்பொழுது ஆவியொன்று என்முன்னால் கடந்து போயிற்று, என் உடல் மயிர் கூச்செறிந்தது.
16. அந்த ஆவி அப்படியே நின்றது, ஆனால் அதன் தோற்றம் எனக்கு அடையாளம் தெரியவில்லை; என் கண்களுக்கு முன்னால் ஓர் உருவம் தென்பட்டது; அமைதி நிலவிற்று; அப்போது ஒரு குரல் கேட்டது:
17. கடவுள் முன்னிலையில் மனிதன் நீதிமானாய் இருக்கக் கூடுமோ? தன்னைப் படைத்தவர் முன் எவனாவது பரிசுத்தனாய் இருக்கக் கூடுமோ?
18. தம் சொந்த ஊழியர்கள் மேலும் அவர் நம்பிக்கை வைப்பதில்லை, அவருடைய தூதர்களிடமும் அவர் குறை காண்கிறார்.
19. அப்படியானால், புழுதியில் அடிப்படை நாட்டி, களிமண் குடிசைகளில் குடியிருக்கும் மனிதன் எம்மாத்திரம்? அந்துப் பூச்சி போல் அவன் நசுக்கப்படுவான்.
20. காலையில் இருக்கும் அவர்கள் மாலைக்குள் அழிக்கப்படுவர், பொருட்படுத்துவாரின்றி என்றென்றைக்கும் அழிந்து போவர்.
21. அவர்களுடைய கூடார முளைகள் பிடுங்கப்படும், அவர்களோ ஞானமின்மையால் மாண்டு போவார்கள்.'
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 4 / 42
1 அப்பொழுது தேமானியனாகிய ஏலிப்பாஸ் பேசத்தொடங்கினான். அவன் சொன்னது: 2 உம்மிடம் எவனாவது பேசத் துணிந்தால், அது உம் மனத்தைப் புண்படுத்துமோ? ஆயினும் யார்தான் பேசாமல் இருக்கமுடியும்? 3 ஒருகாலத்தில் நீர் பலருக்குக் கற்பித்தீர், தளர்ந்த கைகளுக்கு வலிமையூட்டினீர். 4 தத்தளித்தவர்களை உம் சொற்களால் உறுதிப்படுத்தினீர், தள்ளாடிய கால்களைத் திடப்படுத்தினீர். 5 ஆனால் துன்பம் இப்பொழுது உமக்கு வந்துற்றது, நீரோ தைரியமற்றுப்போனீர்; உம்மைத் தொடவே நீர் மனங்கலங்குகிறீர். 6 உமது இறைப்பற்று உமக்கு நம்பிக்கை தரவில்லையா? உம் நெறிகளின் நேர்மை உமக்கு நம்பிக்கை அளிக்கவில்லையா? 7 மாசற்றவன் எவனாவது அழிந்து போனதுண்டா? நேர்மையானவர்கள் எங்கேனும் வதைக்கப் பட்டதுண்டா? சிந்தித்துப் பாரும். 8 நான் பார்த்த வரையில், அக்கிரமத்தை உழுது தீமையை விதைக்கிறவர்கள் அதையே அறுக்கிறார்கள். 9 கடவுளின் மூச்சு அவர்களை அழிக்கிறது. அவரது கோபத்தின் சீற்றம் அவர்களை நாசமாக்குகிறது. 10 சிங்கத்தின் கர்ச்சனையும், வெகுண்ட சிங்கத்தின் முழக்கமும் அடங்குகிறது; சிங்கக் குட்டிகளின் பற்களும் தகர்க்கப்படுகின்றன. 11 இரையில்லாமல் சிங்கம் இறந்து போகிறது; சிங்கக் குட்டிகள் சிதறுண்டு போகின்றன. 12 மறைபொருள் ஒன்று எனக்குச் சொல்லப்பட்டது, அதன் மெல்லிய ஓசை என் காதில் மெதுவாய் விழுந்தது. 13 மனிதர்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது இரவில் காட்சிகள் சிந்தையை ஆட்கொள்ளுகையில், 14 திகிலும் நடுக்கமும் என்னைப் பீடித்தன; என் எலும்புகளெல்லாம் நடுநடுங்கின. 15 அப்பொழுது ஆவியொன்று என்முன்னால் கடந்து போயிற்று, என் உடல் மயிர் கூச்செறிந்தது. 16 அந்த ஆவி அப்படியே நின்றது, ஆனால் அதன் தோற்றம் எனக்கு அடையாளம் தெரியவில்லை; என் கண்களுக்கு முன்னால் ஓர் உருவம் தென்பட்டது; அமைதி நிலவிற்று; அப்போது ஒரு குரல் கேட்டது: 17 கடவுள் முன்னிலையில் மனிதன் நீதிமானாய் இருக்கக் கூடுமோ? தன்னைப் படைத்தவர் முன் எவனாவது பரிசுத்தனாய் இருக்கக் கூடுமோ? 18 தம் சொந்த ஊழியர்கள் மேலும் அவர் நம்பிக்கை வைப்பதில்லை, அவருடைய தூதர்களிடமும் அவர் குறை காண்கிறார். 19 அப்படியானால், புழுதியில் அடிப்படை நாட்டி, களிமண் குடிசைகளில் குடியிருக்கும் மனிதன் எம்மாத்திரம்? அந்துப் பூச்சி போல் அவன் நசுக்கப்படுவான். 20 காலையில் இருக்கும் அவர்கள் மாலைக்குள் அழிக்கப்படுவர், பொருட்படுத்துவாரின்றி என்றென்றைக்கும் அழிந்து போவர். 21 அவர்களுடைய கூடார முளைகள் பிடுங்கப்படும், அவர்களோ ஞானமின்மையால் மாண்டு போவார்கள்.'
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 4 / 42
×

Alert

×

Tamil Letters Keypad References