தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
யோபு
1. இதனால் என் இதயம் திகிலுறுகின்றது, தன் இடம் பெயர்ந்து துடிக்கிறது.
2. அவரது குரலின் இடியோசையைக் கவனியுங்கள், அவர் வாயிலிருந்து புறப்படும் முழக்கத்தைக் கேளுங்கள்.
3. வானத்தின் கீழ் எங்கணும் அது முழங்கும்படி விடுகிறார், உலகின் மூலைகளுக்கெல்லாம் அவரது மின்னல் செல்கிறது.
4. அதை தொடர்ந்து அவர் குரல் முழங்குகிறது; ஆற்றல் வாய்ந்த தம் குரலால் இடியோசை குமுறச் செய்கிறார். அவர் குரல் முழங்கும் போது, மின்னல்களைக் கட்டுப்படுத்துகிறதில்லை.
5. கடவுள் தம் குரலால் வியத்தகு வகையில் முழங்குகிறார், நாம் கண்டுபிடிக்க முடியாத பெரிய காரியங்களையும் செய்கிறார்.
6. அவர் உறைபனிக்கு, 'மண்மீது விழு' என்றும், தூறலுக்கும் மழைக்கும், 'கடுமையாய்ப் பெய்யுங்கள்' என்றும் கட்டளையிடும் போது,
7. மனிதர் அனைவரும் தங்கள் வேலையை நிறுத்திவிட்டு, தம்முடைய வேலையை அறியும்படி செய்கிறார்.
8. அப்பொழுது, மிருகங்கள் தங்கள் மறைவிடங்களுக்குப் போகின்றன, தங்கள் குகைகளில் தங்கியிருக்கின்றன.
9. தன் உறைவிடத்திலிருந்து சுழற்காற்று வெளிப்படுகிறது, வடக்கிலிருந்து குளிர் வருகிறது.
10. கடவுளின் மூச்சால் தண்ணீர் பனிக்கட்டியாகிறது, நீர்ப் பரப்பு உறுதியாய் உறைந்துபோகிறது.
11. நீர்த்துளியால் கார்மேகங்களை நிரப்புகிறார், மேகங்களோ அவரது மின்னலைச் சிதறுகின்றன.
12. மாநிலமேங்கும் அவர் கட்டளையிடுவதை எல்லாம் நிறைவேற்றும்படிக்கு அவர் காட்டும் பக்கமெல்லாம் அவை சுற்றிச் சுற்றித் திரும்புகின்றன.
13. உலகத்தின் மக்களினங்களைத் திருத்தவோ, இரக்கத்தைக் காட்டவோ அவற்றை அவர் அனுப்புகிறார்.
14. யோபுவே, இதையெல்லாம் நீர் கேளும்; கடவுளின் வியத்தகு செயல்களைச் சற்று ஆழ்ந்து சிந்தியும்.
15. கடவுள் எவ்வாறு அவரது மேகத்தை மின்னச் செய்கிறார் என்றும் உமக்குத் தெரியுமோ?
16. மேகங்கள் சமநிலையில் மிதப்பது எப்படி என்பது உமக்குத் தெரியுமா? அறிவு நிறைந்தவரின் வியத்தகு செயல்களை நீர் அறிவீரோ?
17. உம் ஆடைகள் உம் உடலில் வெப்பமாயிருக்கும் போது, மண்ணுலகம் வெப்பக் காற்றால் அசைவோ சந்தடியோ இல்லாதிருக்கும் போது,
18. வார்க்கப்பட்டு இறுகிய கண்ணாடி போன்ற வான் வெளியை அவரைப் போல் உம்மால் விரிக்க முடியுமோ ?
19. அவருக்குச் சொல்ல வேண்டியதை எங்களுக்குக் கற்பியும், நம்மையோ இருள் சூழ்ந்து கொண்டது.
20. நான் பேசுவது அவருக்கு அறிவிக்கப்படுகிறதா? மனிதன் சொல்வது அவருக்குத் தெரிவிக்கப்படுகிறதா?
21. காற்று வான்வெளியைத் தூய்மைப்படுத்தி விட்டபின், வானத்தில் ஒளியானது மிகுதியாய்ச் சுடரும் போது, மனிதர்களால் ஒளியை உற்று நோக்க முடியாது.
22. வடக்கிலிருந்து பொன்னொளி சுடர் வீசுகிறது, அச்சம் தரும் மகிமையைக் கடவுள் உடுத்தியுள்ளார்.
23. அவர் எல்லாம் வல்லவர், அவரை நாம் கண்டுபிடிக்க முடியாது; வல்லமையிலும் நேர்மையிலும் அவர் பெரியவர், நீதி நிறைந்த அவர் யாரையும் ஒடுக்க மாட்டார்.
24. ஆதலால் தான் மனிதர் அவருக்கு அஞ்சுகின்றனர், தாங்கள் ஞானிகள் என்று நினைக்கின்ற எவரையும் அவர் பொருட்படுத்துகிறதில்லை" என்று எலியூ கூறி முடித்தான்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 42 Chapters, Current Chapter 37 of Total Chapters 42
யோபு 37:39

×

Alert

×

tamil Letters Keypad References